புகையிரத திணைக்கள நட்டத்தை குறைப்பதுவெற்றிக் கொள்ள முடியாத சவாலா ?
ஹர்ஷா சுகததாச
இலங்கை புகையிரத திணைக்களத்தின் செலவுகளை கடந்த ஆண்டு குறைத்து வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடிந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ஓரிரு மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.அவர் குறிப்பிட்டதற்கமைய புகையிரத திணைக்களத்தின் செலவுகளை 48 பில்லியன் ரூபாவில் இருந்து 42 பில்லியன் ரூபா வரை குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது. 2.6 பில்லியன் ரூபாவில் இருந்து 11.6 பில்லியன் ரூபா வரை வருமானம் உயர்வடைந்துள்ளது.மேலும் புகையிரத திணைக்களத்தின் வருமானம் மற்றும் செலவுக்கு இடையிலான பற்றாக்குறை 30 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கும் வகையில் உயர்வான வளர்ச்சியடைந்துள்ளமை எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றமாகும்.
புகையிரத சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகரித்ததால் புகையிரத திணைக்களத்தின் வருமானம் உயர்வடைந்துள்ளது.புகையிரத சேவை பிரதி அதிகாரி (வர்த்தகம் மற்றும் விநியோகம்) ஐ.எல்.டி.சி.குணசேகர தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட தகவல்களுக்கு அமைய இவ்விடயம் புலப்பட்டுள்ளது.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுக்கொண்ட புள்ளிவிபரங்களுக்கு அமைய 2022 ஆம் ஆண்டு புகையிரத பயணிகள் ஊடாக பெற்றுக்கொண்ட வருமானம் 8 486 241 020.72 ரூபாவாக காணப்பட்டது.இந்த தொகை 2023 ஆம் ஆண்டு 12 927 195 248 48 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.ஆகவே வருமானம் 52.33 சதவீதமளவில் உயர்வடைந்துள்ளது.புகையிரத பயணிகள் ஊடாக வருமானம் உயர்வடைந்துள்ளமை தொடர்பில் ஆராய்ந்து பார்க்கையில்,2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் நிலவிய எரிபொருள் தட்டுபாடு,பேருந்து கட்டணம் மற்றும் முச்சக்கர வண்டி கட்டணம் மூன்று மடங்காக உயர்வடைந்தமை உள்ளிட்ட காரணிகளால் அதிகளவிலானோர் புகையிரத சேவையை பயன்படுத்தியுள்ளனர்.
‘இன்று அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளன.உணவு, ஆடைகள், மின்சார கட்டணம், நீர் கட்டணம், பிள்ளைகளின் பாடசாலை வேன் கட்டணம், மருந்து பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் மூன்று மடங்காக உயர்வடைந்துள்ளன.ஆகவே நாங்கள் எவ்வாறு உயிர் வாழ்வது ? அதனால் சகல வழிகளிலும் செலவுகளை குறைத்துக் கொள்ள பார்க்கிறோம்.நாங்கள் வேலைக்கு சென்று வர மாத்திரமல்ல வேறு அனைத்து பயணங்களுக்கும் புகையிரதத்தை தெரிவு செய்துள்ளோம்.புகையிரதத்தில் சென்றால் பேருந்து கட்டணத்தில் அரைவாசியை சேமித்துக் கொள்ளலாம்’ என்று ராகம பகுதியை வசிப்பிடமாக கொண்டுள்ள நிர்மலா தமயந்தி பெரேரா குறிப்பிடுகிறார்.
ஒரு சிலரின் கருத்து,புகையிரதத்தில் பயணம் செய்பவர்களில் பெருமளவானோர் மாத பருவகால அட்டையை பெற்றுக் கொண்டவர்கள்.தகவலறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட புள்ளிவிபரங்களுக்கு அமைய , 2023 ஆம் ஆண்டு புகையிரதத்தில் பயணம் செய்த பயணிகளில் 48, 217, 408 பேர் பருவகால அட்டையை பயன்படுத்துபவர்கள். 60 ,828 ,059 பேர் பற்றுச்சீட்டு பெற்றுக்கொண்டுள்ளனர்.இதற்கமைய பருவகால சீட்டு பெற்றுக் கொண்டவர்களின் வீதம் 44.22 ஆக காணப்படுகிறது.அத்துடன் 2022 ஆம் ஆண்டு புகையிரத கட்டணமும் உயர்வடைந்தது.அது பேருந்து கட்டணத்தை காட்டிலும் குறைவானது.இதனால் தான் புகையிரத கட்டணத்தை அதிகரித்தும் மக்கள் பேருந்து சேவையை பெருமளவில் பயன்படுத்தவில்லை.இவ்வாறான காரணிகளால் 2022 ஆம் ஆண்டுக்கு ஒப்பீடாக 2023ஆம் ஆண்டு புகையிரத சேவையை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை உயர்வடைந்தது.
ஜா-எல பகுதியை வசிப்பிடமாக கொண்ட நமுது அதிக காலம் புகையிரத சேவையை பயன்படுத்தி விட்டு தற்போது பேருந்து சேவையில் பயணம் செய்யும் இளைஞர். அது குறித்து அவர் குறிப்பிடுகையில்,
‘நான் புகையிரதத்தில் களனி பல்கலைக்கழகத்திற்கு சென்றேன்.. ஜா –எல பகுதியில் இருந்து களனிக்கு புகையிரதத்தில் செல்வது இலகுவானது என்பதால் புகையிரதத்தை தெரிவு செய்தேன்.இலங்கை தர நிர்ணய நிறுவனதுக்கு தொழிலுக்கு வந்ததன் பின்னர் சிறிது காலம் புகையிரதத்தில் சேவைக்கு சென்றேன்.ஆனால் தற்போது புகையிரதத்தில் ஏற முடியாத அளவுக்கு சன நெரிசல்.அத்துடன் நான் ஜா – எல புகையிரத நிலையத்தில் இருந்து புகையிரதத்தில் ஏறுவேன்.புகையிரதம் ஜா –எல புகையிரத நிலையத்துக்கு வரும் போது தேங்காய்களை ஏற்றியது போல் நிரம்பியிருக்கும்.அமர்வதற்கு ஆசனங்கள் கிடைத்ததே இல்லை, ஆசனங்களுக்கு இடையிலும் பயணிகள் இருப்பார்கள்.அத்துடன் அதிக சந்தர்ப்பங்களில் புகையிரதம் தாமதமடையும் ஆகவே நான் தற்போது பேருந்தில் தான் வேலைக்கு செல்கிறேன்.
ஜா –எல பகுதியில் இருந்து பேருந்தில் அமர்ந்து செல்ல முடியும்.புகையிரதங்களில் பெட்டிகளை அதிகளவில் இணைத்து,இரண்டாம் வகுப்பு பெட்டிகளையும் சேர்த்தால் என்னை போன்று பலர் புகையிரதத்தில் செல்வார்கள்.பயணிகள் நெருக்கடிக்குள்ளாகாமல்,வசதியாக சென்று வர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.அலுவலக சேவைக்கு செல்பவர்களுக்காக கடுகதி புகையிரதங்களை சேவையில் இணைத்தால் அதிகளவானோர் புகையிரதத்துக்கு வருவார்கள்.அப்போது வாகன நெரிசலும் குறைவடையும்’புகையிரத சேவையை மேம்படுத்துவதற்கு அவதானம் செலுத்தும் அதிகாரிகள் பசிந்து உடபொலவின் யோசனைகளை கருத்திற் கொள்ள வேண்டும்.
யக்கல வீரகுல பகுதியை வசிப்பிடமாகக் கொண்டுள்ள ரொஷான் கருணாநாயக்க கொழும்பு மத்திய தபால் பரிவர்தனையில் சேவையாற்றுபவர்.யக்கலவில் எந்த நெடுந்தூர பேருந்தில் ஏறினாலும் அவருக்கு கொழும்புக்கு வர முடியும்.ஆனால் அவர் புகையிரதத்தில் தான் பணிக்கு வருவார்.
‘எனக்கு யக்கலவில் இருந்து கொழும்புக்கு வருவதற்கு பேருந்துக்கு 150 ரூபா செலவாகும்.இருப்பினும் கம்பஹாவில் புகையிரதத்தில் ஏறினால் 80 ரூபா செலவாகும். வருவதற்கும் ,செல்வதற்கும் 160 ரூபாவே செலவாகும்.ஆகவே நான் மோட்டார் சைக்கிளில் கம்பஹா வரை வந்து புகையிரதத்தில் ஏறுவேன்.அத்துடன் புகையிரதத்தில் தான் விரைவாக செல்ல முடியும். பேருந்தில் செல்வதென்றால் ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் செல்லும்.கம்பஹாவில் மெதுவாக செல்லும் புகையிரதத்தில் ஏறினால் 45 அல்லது 50 நிமிடங்களில் கொழும்புக்கு செல்ல முடியும்.கடுகதி புகையிரத்தில் ஏறினால் 35 நிமிடங்களில் கொழும்பில். பயணச் செலவு குறைதல் மற்றும் விரைவாக செல்ல முடியும் என்பதால் நான் கொழும்பு- கண்டி பிரதான வீதியில் இருந்து கம்பஹாவுக்கு வருவேன்’ என ரொஷான் கருணாநாயக்க புகையிரத பயணம் குறித்து அவ்வாறு தெளிவுப்படுத்தினார்.
ஆண்டு – புகையிரதத்தில் பயணம் செய்த பயணிகள் எண்ணிக்கை
2018 -137 ,524,452
2019 -128,476 ,224
2020 – 65,080 ,012
2021 – 35, 962 ,456
2022 – 102 ,732 ,133
2023- 109, 045,457
இந்த புள்ளிவிபரங்களை ஆராய்ந்து பார்க்கையில்; 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள், 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொவிட் -19 பெருந்தொற்றுத் தாக்கம் ஆகிய காரணிகளால் புகையிரத சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்தது என்பதை மறக்க முடியாது.புகையிரதத்தில் வேலைக்கு செல்பவர்கள், பயணங்கள் செல்பவர்களும், பாடசாலை மாணவர்களும் இருப்பார்கள்.
கே.எஸ்.தக்ஷித தாரநாத் கிருஷ்த்து ராஜ பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்.
‘நான் ராகமையில் இருந்து பாடசாலைக்கு வருவது பேருந்தில் , வருவதாயின் 30 ரூபா செலுத்தி மஹபாகேவுக்கு வந்து அங்கிருந்து துடுல்லவுக்கு 60 ரூபா கொடுத்து வர வேண்டும். ஆனால் ராகமைவில் இருந்து துடுல்லவுக்கு 20 ரூபாய் .வருவதற்கும், செல்வதற்கும் 40 ரூபாவே செலவாகும். பாடசாலை மாணவர்களுக்கு பருவகால அட்டைக்கு மாதம் 250 ரூபாவே செலவாகும். ஆகவே நாங்கள் புகையிரதத்தில் பாடசாலைக்கு வருவது அம்மாக்களின் பொருளாதாரத்துக்கு சாதகமாக இருக்கும். புகையிரதத்தில் 20 நிமிடங்கள் செல்லும் பயணம் பேருந்தில் 40 நிமிடங்களாகும். காலத்தை செலவழிப்பது வீண்விரயமாகும.
சாதாரண தினங்களில் 346 புகையிரத பயணங்கள் சேவையில் ஈடுபடும். தகவலறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட தகவல்களுக்கு அமைய பிரதான பாதையில் 115, கரையோர பாதையில் 102, புத்தளம் பாதையில் 30, களனிவெளி பாதையில் 18 என்ற அடிப்படையில் புகையிரத பயணங்கள் சேவையில் ஈடுபடும். இதற்கு மேலதிகமாக தமிழ் – சிங்கள புத்தாண்டு, தலவில மங்கள காலம், கண்டி பெரஹரா, ஸ்ரீபாத மலை யாத்திரை காலப்பகுதிகளில் பொது மக்களின் கோரிக்கைக்கு அமைய விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்பதை மறக்க கூடாது. இன்று இந்த புகையிரதங்களும் செறிச்சோடி போன நிலையில் இருப்பதில்லை.
‘நான் 28 வருடங்களாக புகையிரதத்தில் வேலைக்கு செல்கிறேன். நான் அரச ஊழியர் என்பதால் அரச ஊழியர்களுக்கு கிடைக்கும் மாத பருவகால அட்டை கிடைக்கப்பெறும். அதனால் தான் வேலைக்கு செல்வதற்கு புகையிரதத்தை தெரிவு செய்தேன். அத்துடன் புகையிரத சேவை விரைவானது. பேருந்தில் செல்வதாயின் ஒரு 1 மணித்தியாலமும், 45 நிமிடங்கள் செலவாகும்.
மெதுவாக செல்லும் புகையிரதத்தில் ஏறினால் 1 மணித்தியாலமும் 10 நிமிடங்களிலும் செல்ல முடியும். புகையிரதத்தில் பயணம் செய்யும் போது பணத்துடன் , நேரத்தையும் சேமிக்க முடியும். அத்துடன் புகையிரத பயணம் விநோதமானது. நான் செல்லும் புகையிரதத்தில் பெண்களுக்கான வகுப்பு இருந்தது. இருப்பினும் நான் ஒருபோதும் அதில் சென்றது இல்லை’ என்று தெற்கு களுத்துறையில் இருந்து வரும் கொழும்பு மாநகர சபையில் தொழில்நுட்ப உத்தியோகஸ்தராக சேவையாற்றும் சுஜீவனி புஞ்சிஹோ குறிப்பிடுகிறார்.
இலங்கை புகையிரத சேவையின் மகளிர் வகுப்பு பற்றி பேசுகையில் அலுவலக புகையிரங்களில் பெண்களுக்கு என்று பிரத்தியேகமான வகுப்புகள் ஒதுக்கப்பட்டிருந்தன. காலியில் இருந்து கொழும்பு நோக்கி செல்லும் சமுத்ர தேவி, மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் றுஹுணு குமாரி, மஹவ –கொழும்பு வரையான அலுவலக புகையிரதங்கள் மற்றும் புத்தளம் – கொழும்பு அலுவலக புகையிரதங்களில் பெண்களுக்கு என்று பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட வகுப்புக்களை காண முடியும். இருப்பினும் இந்த மகளிர் வகுப்புக்கள் வெறுமனே இருக்கும்.ஆண்களும், பெண்களும் ஒரே வகுப்பில் பயணம் செய்வதால் புத்தளம் மற்றும் மஹவ புகையிரதங்களில் பெண்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் நீக்கப்பட்டமை ஆச்சரியமல்ல,
அது தொடர்பில் வினவிய போது பெண்கள் குறிப்பிட்டதாவது , காலையிலும், இரவிலும் பிரத்தியேக வகுப்பில் தனியாக பயணம் செய்வதை காட்டிலும் ஆண்களுடன் இணைந்து பயணம் செய்வது பாதுகாப்பானது என்று கருதுகின்றனர். இதற்கிடையில் 2019.மார்ச் 08 ஆம் திகதி அப்போதைய அரசாங்கம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு என மீண்டும் மகளிர் பிரத்தியேக வகுப்புக்களை புகையிரதங்களில் ஒதுக்கியது. மீரிகம- கொழும்பு, றம்புக்கனை இ மஹவ – கொழும்பு, புத்தளம் – கொழும்பு, பெலியத்தயில் இருந்து வரும் சாஹரிகா புகையிரதம் மற்றும் காலியில் இருந்து வருகை தரும் சமுத்ர தேவி ஆகிய புகையிரதங்களில் மகளிருக்கான பிரத்தியேக வகுப்புக்கள் ஒதுக்கப்பட்டன.இந்த மகளிர் வகுப்புக்களில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இந்த வகுப்புக்களில் ஏறும் ஆண்களை பிறிதொரு வகுப்புக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.இருப்பினும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இல்லாத நிலையில் மகளிர் வகுப்புக்களில் ஆண்கள் பயணம் செய்வார்கள்.பெண்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது, ‘ஏனைய வகுப்புக்களில் பயணம் செய்யும் பெண்களை அதில் இருந்து நீக்கி,மகளிர் வகுப்புக்களில் பயணிக்க அறிவுறுத்த வேண்டும்’ என ஆண்கள் தமது தர்க்கங்களை முன்வைக்கின்றனர்.
புகையிரத பெட்டிகளின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாது பெண்களுக்கு மாத்திரம் பிரத்தியேக வகுப்புக்களை (பெட்டிகளை) ஒதுக்குவது நியாயமற்றது. ஆகவே புகையிரதத்திற்கு மேலதிகமாக பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று ஒருசிலர் சுட்டிக்காட்டுகின்றனர். எவ்வாறாயினும் 2020 மார்ச் மாதம் கொவிட் பெருந்தொற்று மற்றும் ஆட்சி மாற்றம் ஆகிய காரணிகளால் மகளிருக்கான பிரத்தியேக வகுப்புக்கள் இல்லாமல் போயின. இதனால் புகையிரதத்தில் பயணம் செய்வதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. விசேடமாக அலுவலக புகையிரதத்தில் அவர்கள் விநோதமாக பயணம் செய்கிறார்கள்.யாழ் தேவி,மீனகயா புகையிரதங்களில் தமிழர்களுடன் சிங்களர்கள் சுதந்திரமாக பயணம் செய்கிறார்கள். அதேபோல் றுஹுணு குமாரி உடரட்ட மெனிக்கே புகையிரதங்களில் சிங்களவர்களுடன் தமிழ், முஸ்லிம் பயணிகள் சுதந்திரமாக பயணம் செய்கிறார்கள்.
30 வருட கால யுத்தம் இடம்பெற்ற காலத்திலும், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போதிலும் தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகியோர் ஒன்றாகவே பயணம் செய்தார்கள் .
‘புகையிரதத்தில் வேலைக்கு செல்வது இலகுவானது, சலுகையானது,விநோதமானது. பணிப்புறக்கணிப்பால் இவையனைத்தும் இல்லாமல் போகும். காலையில் புகையிரதத்தில் வேலைக்கு வருவோம்.மாலை வீடு செல்லும் போது அனைவரும் பணிப்புறக்கணிப்பு காலி உட்பட தூர பகுதியில் இருந்து வேலைக்கு வரும் எனக்கு தெரிந்தவர்கள் பலர் உள்ளனர்.அவர்கள் பருவகால அட்டை வைத்திருப்பதால் பெருமளவிலான பணத்தை கைவசம் வைத்திருப்பதில்லை.ஆகவே பேருந்தில் பயணம் செய்ய அவர்களிடம் பணம் இருக்காது.எத்தனை மணிக்காவது புகையிரதம் வரும் என்று புகையிரத நிலையத்தில் காலத்திருந்து தாமதமாக புகையிரதத்தில் மிதிபலகையில் பயணம் செய்வார்கள்.
பதுளை , மட்டக்களப்பு உள்ளிட்ட தூர பிரதேச புகையிரதங்களில் ஆசனம் ஒதுக்கியவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை கண்கூடாக கண்டுள்ளேன். பயணிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் பணிப்புறக்கணிப்பை நிறுத்தினால் சிறந்ததாக அமையும்’ என்று யக்கல வீரகுல பகுதியை சேர்ந்த ரொஷான் கருணாநாயக்க குறிப்பிட்டார்.
புகையிரத சேவை இரத்து, புகையிரதம் தடம் புரள்தல் ஆகியன வழமையாக இடம்பெறுவதால் புகையிரத பயணிகளுக்கு புகையிரதம் வெறுப்புக்குள்ளாகவில்லை. பணம் சேமிப்பு, நேரத்தை சேமித்தல், நண்பர் கூட்டம் மற்றும் ஏனைய காரணிகளால் இன்றும் புகையிரத பயணிகள் தனி பாதத்திலாவது தொங்கிக் கொண்டு புகையிரதத்தில் பயணம் செய்கிறார்கள். தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கி வரும் புகையிரத திணைக்களம் அதிகரித்துள்ள புகையிரத பயணிகள் மற்றும் வருமானத்தை பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.திடீர் புகையிரத பணிப்புறக்கணிப்பு, புகையிரதம் இரத்து, புகையிரதம் தடம் புரள்தல் ஆகிய காரணிகளால் புகையிரத சேவையை பயணிகள் வெறுக்க மாட்டார்கள் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.