வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

பாகுபாடு காட்டுவது நிறுவனமயப்படுத்தப்பட்ட வைரஸாகும் (பகுதி 1)

நெவில் உதித வீரசிங்க

யுத்தத்திற்குப் பின்னரான சமீபத்திய வரலாற்றினுள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக எழுந்த இனப் பதற்றங்கள் தொடர்பாக  மூன்று முக்கிய திருப்புமுனைகளை நாம் அடையாளம் காண முடியும். 2014 யூன் 15 ஆம் திகதியன்று அளுத்கம  பகுதியில் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறை வெடித்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டில் கண்டியிலுள்ள திகன பகுதியில் நடந்த முஸ்லிம்-விரோத கலவரங்கள் மற்றும் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று  உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் நடந்த முஸ்லிம் எதிர்ப்பு வன்முறைகள் ஆகியவற்றை இந்த முக்கிய திருப்புமுனைகளாக அடையாளம் காட்டலாம். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது, சிங்கள சமுதாயத்தின் அந்நியராக பௌத்த தீவிரவாதப் பிரிவினரால் தமிழ் மக்கள் அடையாளம் காணப்பட்டனர் என்பதும், அது யுத்தம் முடிவடைந்த பின்னர் இது படிப்படியாக முஸ்லிம் மக்களுக்கு மாற்றப்பட்டது என்பதும் மேற்கண்ட சம்பவங்களிலிருந்து தெளிவாகிறது. இலங்கையில் கொவிட் -19 வைரஸ் பரவுவதில் கூட, சிங்கள சமுதாயத்தின் தீவிரவாத குழுக்கள் முஸ்லிம் சமூகத்தை எவ்வாறு தமது அந்நியன் அல்லது தமது எதிரியாக உருவாக்கியுள்ளன என்பதை நாம் அவதானிக்கலாம். கொவிட் -19 இன் முதல் அலையுடன் இலங்கையின் முஸ்லிம்கள் எவ்வாறு அந்நியர்களாக உருவாக்கப்பட்டார்கள் என்பதை இந்தக் கட்டுரை கலந்துரையாடுகின்றது.

2020 மார்ச் மாதத்தினுள் இலங்கையில் முதலாவது கொவிட் -19 அலை எழுந்ததன் மூலம், கொவிட் -19 நிலைமை தொடர்பான முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு வெளிப்படுத்தப்பட்ட முறையை சமூக ஊடகங்களிலும், முக்கிய ஊடகங்களிலும் நாம் அவதானிக்கலாம். இந்த நிலைமையை சர்வதேச அளவிலும் நாங்கள் அவதானிக்க முடிந்தது.

இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட முதலாவது கொவிட்-19  நோயாளி 2020 மார்ச் 2 ஆம் திகதி பதிவாகியதுடன் 2020 மார்ச் 14 ஆம் திகதி  “பொலிஸ் ஊரடங்கு உத்தரவு”  விதிக்கப்பட்டது. கொவிட் -19 பரவிய ஆரம்ப நாட்களிலிருந்தே, இலங்கையில் சிவில் சமூகம் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வையும் விரோதத்தையும் பிரதான நீரோட்டத்திலும் சமூக ஊடகங்களிலும் பரவலாகப் பயன்படுத்துவது குறித்தும், சமீபத்தில் கொவிட் -19 தொற்று அல்லது வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர்களின் மத அடையாளம் தொடர்பாக பொதுமக்கள் கவனம் செலுத்தியமை 

காரணமாகவும்  கொரோனா வைரஸ் பரப்புபவர்களாக அவர்கள் குற்றம் சாட்டப்பட்டதன் காரணமாகவுமே கவனத்திற் கொள்ளப்பட்டது (CPA).  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மிச்சேல் பெச்லெட், இலங்கையில் முஸ்லிம்கள் அவமரியாதைக்குட்படுத்தப்படுவதாக  வெளியான அறிக்கைகளால் தான் ஏமாற்றமடைந்ததாகக் குறிப்பிட்டார். 

“இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள முஸ்லிம் சமூகத்தின் உறுப்பினர்கள் கொவிட் -19 தொடர்பில் அவதூறு மற்றும் வெறுக்கத்தக்க பேச்சு மூலம் குறிவைக்கப்படுகிறார்கள்” என்று ஐக்கிய நாடுகளின் பிரதானி தமது உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான நிலைமை மற்றும் கொவிட் -19 தொற்றுநோயின் தாக்கம் குறித்து விளக்கமளிக்கும் போது தெரிவித்தார். 

2020 ஆம் ஆண்டில் மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் சகிப்பின்மை மற்றும் பாகுபாட்டை ஒழிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியின் அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர்  அம்னெஸ்டி இன்டர்நெஷனல் அமைப்பானது  இலங்கையில் முஸ்லிம்கள்  தொடர்ந்தும் துன்புறுத்தப்படுவது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது(Tamil Guardian). 2020 யூன் 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கை மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறை மற்றும் பாகுபாடுகளையும், கொவிட் -19 தொற்றுநோயின் போது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரபட்சம் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் முகவராண்மையினால்  2020 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட கொவிட் – 19 நிலைமையிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான மூலோபாயங்களினுள் ‘முஸ்லிம் மக்களை அவர்களின் வழிகாட்டல்களிலிருந்து மாறுபாடுவதாக’ அடையாளம் காட்டுவதுடன்  ‘முஸ்லிம் மக்களை அதிக ஆபத்துள்ள சமூகமாகவும்” அடையாளம் காட்டுகிறது.  அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப முகவராண்மையின் அறிக்கையினுள் காணப்படும் முஸ்லிம் சமூகம் தொடர்பான  இனவெறி மனப்பான்மை அணுகுமுறை தொடர்பாக  வாட்ச்டோக் அமைப்பு அவர்களைக் குற்றஞ் சாட்டியது. அதுபோன்றே, இந்த அறிக்கை சமூக ஊடகங்களில் செயலில் உள்ள முற்போக்கு பிரிவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது .

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts