சமூகம்

நீர்கொழும்பு மனித நேயக்குரல் குண்டுகளால் எங்களது பிணைப்பை அழிக்க முடியாது!

பிரசாத் பூர்ணாமல் ஜெயமன்னா
மதத் தலைவர்களால் சமூகம் சார்பாக சரியான தீர்மானங்களை எடுக்க முடியாது. நாட்டின் ஆட்சி யாளர்கள் மற்றும் நிர்வாகிகளே இந்த நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டும் தூர நோக்கில் சிந்தித்து அத்தகைய தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதற்காகவே நாங்கள் தேர்தல் மூலம் அரசியல்வாதிகளை தெரிவு செய்து…
இன அடிப்படையிலான கல்வி முறையே இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு இனவாத போக்கிலான சிந்தனைகள் வலுவடைய காரணம் என்று இலங்கையர்களால் நம்பப்படுகின்றது. இந்த இடைவெளியானது தற்போதைய சமூக அமைதியின்மைக்கான காரணம் என்று கூறலாம். இனங்களுக்கிடையிலான உறவையும் இணக்கத்தையும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஒருபோதும் அழித்து விட முடியது என்று நீர்கொழும்பு மக்கள் கருதுகின்றனர்.
“சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பறங்கியர் ஆகிய எல்லா இனங்களையும் சேர்ந்தவர்கள் கல்வி கற்கக் கூடிய கலவன் பாடசாலையில் நாங்கள் கல்வி கற்றோம். ஹனிபா, ஹக்கீம், நடேசன் ஆகிய பல்லினங்களையும் சேர்ந்தவர்கள் அனைவரும் இன்றும் எங்களை சகோதரர்களாகவே கருதி உரையாடுகின்றனர்”
இவை ராமஞ்ஞ நியகாயவின் சங்கைக்குரிய பதிவாளர் காரக்குளியே பியதஸ்ஸி தேரரின் வார்த்தைகளாகும். “நாம் நாளைய மனித நேயத்திற்காக இன்று எல்லா வகையான தீவிவரவாத செயற்பாடுகளையும் எதிர்ப்போம்” என்று அவர் பகிரங்க கூட்டம் ஒன்றில் பேசும் போது தெரிவித்தார். இந்த கூட்டத்தை நீர்கொழும்பு சிவில் சமூக பிரசைகள் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். பலவிதமான துறைகளில் கடமையாற்றும் சிவில் சமூக தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோர் இந்த கூட்டத்திற்கு சமூகமளித் திருந்தனர்.


வேறுபாடு மற்றும் பிளவின் பிரதிபலன்கள்
சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பிரிவினையின் வரலாற்று ரீதியான தாக்கம் நீண்ட காலமாகவே இருந்து வருவதாக பியதஸ்ஸி தேரர் குறிப்பிட்டார்.
“பிரிவினையானது மிருகத்தனத்தை வெளிப்படுத்தவதாக இருக்கின்றது. கிராம மக்கள் மத்தியில் வேறுபாடுகள் இல்லை. ஆனால் ஒரு முஸ்லிம் கிரமத்திற்கு போனால் அங்கு ஒரு வேறுபாட்டை காணலாம். அந்த கிராமத்தின் பெயர்ப்; பலகை அரபி மொழியில் இருக்கின்றது. நட்புறவின் அடையாளத்தை காண முடியவில்லை. நாங்கள் ஐக்கியமாக வாழ்ந்தாலும் கிராமங்களிலான வேறுபாடுகள் பலமானதாக இருந்து வருகின்றன. அது எமது இதயங்களை காயப்படுத்துகின்றன”.
தற்போதைய சூழ்நிலையில் நிலைமை இவ்வாறாக இருந்தாலும் ஐக்கியம் சமாதானம் பற்றிய எதிர்பாhப்பு இன்னும் இருந்துகொண்டே இருக்கின்றது. என்று சமூக செயற்பாட்டாளரான முஹம்மத் அர்சாத் கூட்டத்தில் பேசும் போது தெரிவித்தார்.
“ எங்களுக்கிடையில் தெளிவாகவே வேறுபாடுகள் நிலவுகின்றன. அவையானது பிளவின் அடிப்படையிலேயொழிய மத ரீதியாக அல்ல. ஆனாலும் தற்போதைய சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு ஒருவிதமான இடைவெளி ஏற்பட்டுள்ளது. நான் சிங்கள மொழிமூல பாடசாலைக்கே சென்றேன். எனது நண்பர்கள் அனைவரும் சிங்களவர்களாக இருக்கின்ற நிலையில் தற்போதைய சூழ்நிலையில் அந்த உறவானது பாதிக்கப்பட்டிருக்கின்றது”.
கிராமங்களுக்குள் நல்லிணக்கம் இன ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான சரியான சூழ்நி லையில் நாம் இருப்பதாக கருதினாலும் அங்கே அமைதியின்மையையும் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் சந்தேகங்களையும் அவதானிக்க முடிகின்றது. இந்த நிலையை போக்க நாம் கடுமையாக பணியாற்ற வேண்டி இருக்கின்றது. நாம் மம்மலே மரிக்கார் மற்றும் சூர சரதியல் போன்று இணக்கமாக, ஒன்றாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமானால் தற்போதைய பிரச்சினைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மூலம் சிறந்த பாடத்தை கற்க வேண்டும்.
 

ven Piyadassi,  Father satyaweil and Mohomad Arshad

1956 ஆம் ஆண்டு குண்டு தாக்குதல்
மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ஆயர் எம். சக்திவேல் இந்த கூட்டத்தில் பேசும் போது தெரிவித்ததாவது : – 
                      தேரர் பியதஸ்ஸி மற்றும் முஸ்லிம் செயற்பாட்டாளர் முஹம்மத் அர்சாத் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதாகவும் உடன்படுவதாகவும் கூறிய அவர் 1956 ஆம் ஆண்டும் நடைபெற்ற நிலைமைகளை நாம் மீண்டும் ஒருமுறை மீட்டுப் பார்த்து அதனை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
“அதுவரையில் இருந்து வந்த இனங்களுக்கிடையிலான நல்லிணகத்திற்கு 1956 ஆம் ஆண்டு குண்டு போடப்பட்டது. இன்றைய சமூகம் பிளவுபட காரணம் அன்று நிறைவேற்றப்பட்ட ‘சிங்களம் மட்டும்’ என்ற தமிழர்களைப் புறக்கணித்த சட்டமாகும். அதன் காரணமாகவே சமூகம் வேறுபட்டதாக மாறியது. 1956 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சிங்களம் மட்டும் தான் என்ற சட்டம் காரணமாக ஒரு சமூகம் மீதான மேலாதிக்க நிலை ஏற்பட்டது. அந்தச் சட்டம் பற்றிய தகவல் ஒலிபரப்பப்பட்டவுடன் மக்கள் நினைத்தார்கள் இனி அவர்களுக்கான பாதுகாப்பு இல்லை என்று. 1972 ஆம் ஆண்டு மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட அரசியல் யாப்புகள் மூலம் அவர்கள் அவர்களது சொந்த பாதுகாப்பு மற்றும் அவர்களது சொந்த மொழி மற்றும் கலாச்சாரம் பற்றி சிந்திக்க துண்டியது.”
தமிழ் சமூகம் 30 வருட காலமாக முகம் கொடுத்த சிவில் யுத்தத்தின் பின்னர் தற்போது அமைதியாக இருந்து வருகின்றது. இப்போது ஆட்சியாளர்களுக்கு முஸ்லிம் சமூகத்தையும் அந்த நிலைக்கு தள்ள வேண்டும என்ற உணர்வும் தேவையும் ஏற்பட்டிருக்கின்றது. இனப்பிரச்சினைக்கு பின்னர் கடந்த சில வருடங்களாக மத யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. அதன் பின்னர் கிறிஸ்தவர்கள் மீதான நசுக்குதல்களும் தொடர்கின்றன.

மதத் தலைவர்களது பொறுப்புணர்வுகள் பற்றி கிறிஸ்தவ சகோதரி உரையாற்றுகையில் கூறியதாவது : –
             தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளின் அடிப்படையில் தூர நோக்கில் சிந்தித்து செயலாற்றவேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தலைவர்கள் இந்த தேசம், சமூகம் குறித்து சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும். எதுவானாலும் மதத் தலைவர்கள் நாட்டின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் எங்களது பேராயர் மக்களை சரியான திசைக்கு நெறிப்படுத்துவதற்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதன் பின்னர் ஏனைய பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் கிறிஸ்தவ பாடசாலைகள் திறக்கப்படவில்லை. மதத் தலைவர்களால் சமூகம் சார்பாக சரியான தீர்மானங்களை எடுக்க முடியாது. நாட்டின் ஆட்சி யாளர்கள் மற்றும் நிர்வாகிகளே இந்த நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டும் தூர நோக்கில் சிந்தித்து அத்தகைய தீர்மானங்களை எடுக்க வேண்டும். அதற்காகவே நாங்கள் தேர்தல் மூலம் அரசியல்வாதிகளை தெரிவு செய்து அவர்களை எங்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளோம்.

நீர்கொழும்பின் குரல்
உயிர்த்த ஞாயிறு தாற்கொலைத் தாக்குதலால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் சேதங்கள் காரணமாக நீர்கொழும்பு மக்கள் இனி இதுபோன்று வேண்டாம் என்ற நிலைக்கு போதுமான அனுபவத்தை பெற்றுக்கொண்டார்கள். கட்டுவாபிட்டிய கிராமம் இன்னும் மரண வீடாகவே காட்சி தருகின்றது. நீர்கொழும்பு மக்களது ஒரே எதிர்பார்ப்பாக இருந்து வருவது அவர்களது கிராமங்கள் மீண்டும் முன்னர் இருந்ததுபோல், உற்சாகம் பொங்க, அலங்காரமாக, குதூகலமாக காட்சி தர வேண்டும் என்பதாகும். ஹேர்மன் குமார என்ற சமூகத்தலைவர் குறிப்பிடுகையில் மக்கள் மீள் எழுச்சிக்காக முயற்சிகளை மேற்கொள்வதாக கூறுகின்றார். ‘நாம் எப்போதும் பயங்கரவாதத்தை எதிர்க்கின்றோம். தொடர்ந்தும் அNது நிலைப்பாட்டில் இருக்கின்றோம். எங்களை இன்னும் ஆயிரம் குண்டுகள் தாக்கினாலும் எங்களுக்கிடையில் இருந்து வந்த பிணைப்பை எவராலும் சிதைக்கவோ அழித்துவிடவோ முடியாது என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்’ என்றும் அவர் கூறினார்.

This article was originally published on the catamaran.com
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts