நல்லிணக்கம்: மீளக் கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்கு!
உபுல் தம்மிதா இந்த நாடு மத அடிப்படையிலான தீவிவரவாத பலத்தால் ஆளப்படுவதாக இருக்குமாயின் அதன் மோசமான விளைவுகளை நாம் அனுபவிக்க நேரிடலாம். சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய எல்லா இனத்தவர்களும் ஒன்றிணைந்து ‘சர்வதேச பிரசைகள் அமைப்பை’ ஏற்படுத்த முன்வர வேண்டும். சிறுபான்மையினர் என்ற மனநிலையில் இருந்து விடுபட்டவர்களாக நாம் சிறந்த புத்தாக்க சிந்தனை உடையவர்களாக நாட்டின் அபிவிருத்தி சுபீட்சம் என்பவற்றை இலக்காகக் கொண்டு முன்னோக்கி நகர வேண்டியிருக்கின்றது… உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நாட்டில் மக்கள் மத்தியில் நிச்சயமற்ற ஒரு எதிர்காலம் பற்றிய நெருக்கடியான நிலையை தோற்றுவித்திருக்கின்றது. ஒரு சிறிய குழுவினர் தீவிவரவாத சிந்தனைகளுடன் செயற்பட்டதன் விளைவாக 30 வருடங்களாக இலங்கையில் நடைபெற்ற சிவில் யுத்தத்தின் போது அனுபவித்த அதே போன்ற மிக மோசமான இன முரண்பாட்டை சந்திக்க நேரிட்டது. பல்லினங்கள் வாழுகின்ற நாடு என்ற வகையில் இளைஞர்களை நாட்டின சமாதானம், சகவாழ்வு என்பவற்றை இலக்காகக் கொண்ட பொறுப்புணர்வுடனான செயற்பாட்டுடன் கூடிய மீள்கட்டுமானப் பணிகளை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைக்கக் கூடிய வகையில் நாட்டின் எதிர்கால இளைஞர்கள் மத்தியில் இணைப்பை ஏற்படுத்துவதற்கு பாலமாக செயற்படக்கூடிய வகையில் சமூகத்தில் அபிப்பிரயாங்களை கட்டியெழுப்புவதற்கு ஆற்றல் கொண்ட சிவில் சமூக தலைவர்கள், மதகுருமார்கள் உட்பட பலதரப்பட்டவர்களையும் த கட்டமரன் சந்தித்து கருத்துக்களைப் பெற்றுக்கொண்டது. ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி விகாரை பிரதம சங்கநாயக்கரும் வடக்கு மற்றும் வட மத்திய மத்தியஸ்த பிக்குவுமான சங்கைக்குரிய நுகேதென்ன பஞ்ஞானந்த தோரர் உணர்வுகளுக்கு முன்னர் விவேகமே பிரதானமானதாகும். “நாங்கள் சுதந்திரம் அடைந்து 71 ஒருடங்கள் கடந்துவிட்டன. இலங்கையின் வரலாற்றை எடுத்து நோக்கினால் ஒவ்வொரு 10 அல்லது 12 வருடங்களுக்கு ஒருமுறை மனித கொலைகள், இரத்தக்கறை படிந்த நிகழ்வுகள் மற்றும் வன்முறைகளை சந்திக்க நேரிடுகின்றது” என்று இளைஞர் அபிவிருத்தி மன்றத்தில் இணைந்த தேசிய அமைப்பாளர் சமிந்த ஜயசேகர குறிப்பிடுகின்றார். தீவிவரவாதமும் இனவாதமும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒன்றாகவே செயற்படுகின்றன. இந்த நிலைமைகளானது ஒன்றாக வாழ்ந்த மக்கள் மத்தியில் பதற்றத்தையும் நெருக்கடியையும் தோற்றுவித்திருக்கின்றது என்றும் அவர் தெரிவிக்கின்றார். “இந்தகைய மோசமான நிலைமைகளானது மேலும் எதிர்கால சந்ததியினரை வழிநடத்தக்கூடிய தலைவர்கள் மீது மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தவதாக அமைகின்றது. எமது நாட்டில் எல்லா இனங்களிலும் தீவிவாதிகள் இருப்பதால் அத்தகைய தீவிவரவாத சிந்தனைகளை விதைப்பவர்களை தடுப்பதற்கும் கட்டுப்படுத்தவும் என சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே எமது எதிர்கால சந்ததியினரை சரியான பாதையில் நெறிப்படுத்த முடியும். எங்களை தீவிவரவாதமும் அடிப்படைவாதமும் வழிப்படுத்தி ஆக்கிரமித்து ஆட்சி செய்வதற்கு முன்னர் நாங்கள் விவேகமான முறையில் அறிவு பூர்வமாக சிந்தித்து செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று நான் இளைஞர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்” என அவர் வலியுறுத்துகின்றார். பௌத்தபிக்குமார் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது காலத்திற்கு பொருத்தமானதல்ல. “தற்போதைய சூழ்நிலையில் பௌத்த பிக்குமாரின் நடவடிக்கைகளானது நாட்டில் எரிந்து கொண்டிருக்கின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக இருக்கின்றது. இதுபோன்ற நிலைமைகள் இந்நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோhக்கியமானதாக இல்லை” என்று ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி விகாரை பிரதம சங்கநாயக்கரும் வடக்கு மற்றும் வட மத்திய மத்தியஸ்த பிக்குவுமான சங்கைக்குரிய நுகேதென்ன பஞ்ஞானந்த தோரர் தெரிவித்துள்ளார். கட்டுமரனுக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது : மாற்றம் மிகவும் முக்கியமானதாகும். எமது தலைமுறையினர் மனித உரிமைகளுடன் விளையாடக்கூடிய சதிகாரர்களுக்கும் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கக் கூடியவர்களுக்கும் சிக்காமல் செயலாற்றுவது மிகவும் முக்கியமானதாகும். இந்நாட்டில் வாழும் எல்லா மக்களுக்கும் அவர்கள் சுதந்திரமாக வாழவும் அவர்களைச் சார்ந்துள்ள தலைவர்களால் அவர்களது உரிமைகளை பேணிப்பாதுகாத்து உறுதிப்படுத்தவும் உரிமை பெற்றவர்களாக உள்ளனர். “தற்போதைய சூழ்நிலை முஸ்லிம்களை உதவியற்ற சமூகமாக அநாதரவான நிலைக்கு தள்ளி இருக்கின்றது. அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அந்த நிலையில் இருந்து பாதுகாத்து மீட்கும் நடவடிக்கைகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியல்வாதிகள் தேர்தலை மட்டுமே இலக்காக கொண்டு செயற்படுகின்றனர். நாட்டில் மிகவும் விரைவாக தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றது” என்று தெரிவித்த அவர் மேலும் தொடர்கையில் “ பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற நாட்டில் ஐக்கியமும் சகவாழ்வும் மிகவும் அவசரமாக தேவையானதாகும். முஸ்லிம் தலைவராக இருந்த டி.பி.ஜாயா இலங்கையின் சுதந்திரத்திற்காக மிகவும் பாடுபட்ட ஒரு தலைவராவார். தேசிய அபிவிருத்தியை குறிக்கோளாகக் கொண்டு முஸ்லிம்கள் இந்நாட்டிற்கு அளபப்றிய பங்களிப்பை செய்துள்ளனர். முஸ்லிம்களை பல்லின சமூகம் என்ற வரையறைக்குள் இருந்து வெளியேற்றிய நிலையில் மலைநாட்டு தோட்டத் தொழிலாளர்களின் தலைவர்களும் வடக்கை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் தலைவர்களும் இந்த வட்டத்திற்குள் இருந்து ஒதுங்கும் போது அங்கே இயல்பாகவே இன முரண்பாடான சூழ்நிலை உருவாகின்றது. இன நல்லிணக்கம் எல்லா இனங்களையும் பிரதானமாகக் கொண்டு மீள கட்டியெழுப்பப்பட வேண்டும். அத்துடன் இனங்களுக்கிடையில் பிரிவினையை தூண்டும் சக்திகள் புறக்கணிக்கப்பட வேண்டும். மகா நாயக்க தேரர்கள், பேராயர்கள், மௌலவிமார் உட்பட அனைத்து தரப்பினரும் அரசியல் தலைவர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கி வழிகாட்ட தயாராக இருக்கின்றனர். தற்போதைய நிலையில் மாற்றம் ஏற்படும் என்பதோடு மக்களை ஒன்றிணைத்து நிலைமைகளை வழமைக்கு கொண்டுவருவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது” என்றார். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சர்வதேச பிரசைகள் கோட்பாடு. சிவில் சமூக செயற்பாட்டாளரான ஜயலத் பண்டார என்பவரது கருத்தின்படி உலகில் இனங்க ளுக்கிடையில் அடிக்கடி நிகழும் இன ரீதியான முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சிந்த மாற்று நடவடிக்கையாக சர்வதேச பிரசைகள் அமைப்பு என்ற கோட்பாட்டை இலங்கையிலும் முன்வைப்பது பயனுடையதாகும் என்று குறிப்பிடுகின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் சில குழுக்கள் 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கருப்பு ஜூலை இனக்கலவரங்கள் போன்ற ஒரு அசாதாரண சூழ்நிலையைத் தோற்றுவிக்க முயற்சி செய்தனர். தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அந்த கறுப்பு ஜூலையின் விளைவே இலங்கை கடந்த 30 வருடங்களாக அனுபவித்த பாரிய இழப்புக்களைச் சந்தித்த அகோரமான சிவில் யுத்த சூழ்நிலையாகும். தொடர்ச்சியான நல்லிணக்க செயற்பாடுகளினூடாக அவ்வாறான ஒரு துர்ப்பாக்கிய நிலை இந்த நாட்டில் மீண்டும் ஏற்படுவதை தடுக்க முடியும். “பல்லின சமூகங்களைக் கொண்ட பலவிதமான கலாச்சார அடையாளங்களை உடைய இந்நாட்டில் மக்கள் சுதந்திரமான முறையில் அமைதியாக வாழும் வகையிலான அரசியல் அமைப்பு ஏற்பாடுகளை இதுவரையில் நம்மால் ஏற்படுத்த முடியவில்லை. எமது ஜனநாயக நடைமுறைகளானது இன, மத அடிப்படையிலான வேறுபாடுகளற்ற சமூக அமைப்பை கட்டியெழுப்புவதற்கு போதுமான பலத்தை வழங்கவில்லை. அதன் பிரதிபலனாக இலங்கையில் மிக மோசமான சிவில் யுத்த நிலையை கடந்த 27 வருடங்களாக அனுபவித்தோம். அதன் காரணமாக முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். துன்பங்களை அனுபவிக்கின்றனர். காத்தான்குடியில் பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இதற்கு சிறந்த உதாரணமாகும். இந்த யுத்தத்தின் விளைவாக உருவாகியவைகளே புதிய அரசியல் கட்சிகளாகும். இளைஞர்கள் மற்றுமொரு ஆயுத முரண்பாட்டில் சிக்காமல் தடுப்பதற்காகவே அரசியல் கட்சிகள் உருவாகியதாக அக்கட்சிகளின் சில தலைவர்கள் கூறி வருகின்றனர். பேருவளை, தர்கா நகர் போன்ற இடங்களில் இடம்பெற்ற வன்முறைகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அவையே நாட்டில் தீவிவரவாதம் மேnழுவதற்கு காரணமாகின. இந்த நிலைமைகள் மக்களது இணக்கப்பாடின்றியே அரசியலும் மதமும் ஒன்றிணைவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதாக அமைந்தது” என்று அவர் தெரிவித்தார். அரசாங்கம் மக்களின் குரலை செவிமடுப்பதாக இருந்தால் மக்கள் ஜனநாயக செயற்பாடுகளை நம்புபவர்களாக இருப்பார்கள். அண்மைய உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலையில் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி இருக்கின்றது. அரசாங்கத்தின் போக்கை ஆட்சியாளர்கள் சமூகத்திற்கு வெளிப்படுத்துபவர்களாக உள்ளனர். இந்த நாடு மத அடிப்படையிலான தீவிவரவாத பலத்தால் ஆளப்படுவதாக இருக்குமாயின் அதன் மோசமான விளைவுகளை நாம் அனுபவிக்க நேரிடலாம். சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய எல்லா இனத்தவர்களும் ஒன்றிணைந்து ‘சர்வதேச பிரசைகள் அமைப்பை’ ஏற்படுத்த முன்வர வேண்டும். சிறுபான்மையினர் என்ற மனநிலையில் இருந்து விடுபட்டவர்களாக நாம் சிறந்த புத்தாக்க சிந்தனை உடையவர்களாக நாட்டின் அபிவிருத்தி சுபீட்சம் என்பவற்றை இலக்காகக் கொண்டு முன்னோக்கி நகர வேண்டியிருக்கின்றது. பரந்துபட்ட உணர்வின் அடிப்படையிலான மனநிலை பிரிவினை உணர்வை ஏற்படுத்தாது. மதம் அல்லது இனம் என்ற வேறுபாடுகளைப் புறந்தள்ளி சர்வதேச பிரசைகள் அல்லது சர்வதேசத்துடன் இணைந்த சமூகம் என்ற உணர்வு ஏற்பட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஜனநாயகம் என்பது பன்மைத்துவமாக கருதப்படுகின்றது. பெரும்பான்மை இனம் தவறாக செயற்படுமானால் தீர்மானம் எடுக்கும் இயந்திரமும் நாட்டிற்கு பாதகமானதாகவே அமைகின்றது. இன்றைய சூழ்நிலையில் இவ்வாறான சிக்கலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சமூகங்கள் என்ற நிலையில் நாம் சர்வதேச பிரசைகள் என்ற நிலையை கட்டியெழுப்புவதற்கு தேவையான அடித்தளத்தை இட வேண்டும். This article was originally published on the catamaran.com
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.