சமாதானம் மற்றும் நல்லிணக்கம் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் நல்லிணக்கத்திற்கு இடையூறான ஒரு காரணியாக மாறியுள்ளது கொரோனா தொற்றுநோய்

கொவிட்-19 வைரஸ் அல்லது கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவி வருகிறது, அத்தோடு இனவெறி, பிராந்தியவாதம், நாடுகடந்த மற்றும் உள்நாட்டு போட்டி, தவறான தகவல்கள் மற்றும் மூடநம்பிக்கை ஆகியவையும் கொரோனா சூழ்நிலையால் உருவாக்கப்பட்ட மேலும் சில பிரச்சினைகளாகும். மற்றும் இது கொவிட்-9 தொற்றுநோயுடன் கைகோர்த்து, ஏறத்தாழ உலகம் முழுவதும் பரவி வருகிறது.

சீனாவின் வூஹான் பிரதேசத்தில், கொவிட்-19 தொற்றுநோய் ஆரம்பித்த உடன், சில நாடுகள் சீனா உலகிற்கு ஒரு தொற்றுநோயாக மாறியுள்ளது என சீன எதிர்ப்பு மனப்பான்மையுடன் விமர்சித்தன. இது சீனாவில் ஒரு உயிரியல் ஆயுதத்தின் தோல்வியுற்ற முயற்சியாக இருக்குமோ என்றும் உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டது.

அந்த நேரத்தில், சீனா மீதான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கடுமையான கொள்கை உலக சுகாதார அமைப்பின் பணிகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் சீனாவுக்கு ஆதரவு கொள்கையை பின்பற்றி வருவதாகவும், உலக சுகாதார அமைப்பின் பங்களிப்பிலிருந்து தனது நாடு விலகுவதாகவும் டொனால்ட் ட்ரம்ப் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக கூறியுள்ளார். சீனாவுக்கும் அதிபர் ட்ரம்பிற்கும் இடையிலான வார்த்தை போர் சற்று தீவிரமடைந்தது. இந்த நிலைமை அமெரிக்க மற்றும் சீன ஊடகங்களிலும் பிரதிபலித்தது. இறுதியில், ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பத்திரிகையாளரான பின் பெர்டில்ஸையும், செப்ஜாஸ்காருடாசா செய்தித்தாளின் பத்திரிகையாளரான மைக் ஸ்மித்தையும் சீனா விசாரித்து அவர்களை சீனாவிலிருந்து நாடு கடத்தியது. கொவிட்-19 வைரஸ், அல்லது கொரோனா தொற்றுநோய் நாடுகளிடையே பிரச்சினைகளுடனேயே ஆரம்பிக்கின்றது.

இறுதியில், வார்த்தைகளின் போர் உலக சுகாதார அமைப்பு வரை நீடித்தது. இந்த விமர்சனம் பின்னர் உலக சுகாதார அமைப்பின் தலைவரும் கிழக்கு ஆபிரிக்க நாட்டவருமான தியோடர் அடினம் கேப்ரியராஸினால் ஓரளவு தணிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், டொனால்ட் ட்ரம்ப் ஆப்பிரிக்கர்களை சீனாவுக்கு ஆதரவு வெளிப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

படிப்படியாக, இது சீனர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் கறுப்பர்கள் உட்பட பிற இனத்தவர்களை குறிவைத்து உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது. கொவிட்-19 வைரஸ் உலகெங்கிலும் ஒரு தொற்றுநோயாக பரவியது மட்டுமல்லாமல், உலகளாவிய அரசியல் நிலப்பரப்பையும் வெப்பமாக்கி உள்ளது.

இந்த தொற்றுநோய் வெறுப்பு பேச்சு மற்றும் இனவெறி மற்றும் மத வெறுப்பு பிரசாரத்தை ஆசீர்வதிக்கும் அரசியல் நடைமுறைகளுக்கு வாய்ப்புகளை திறந்து வருகிறது என்பதோடு இந்த நடவடிக்கைகள் நாடுகளுக்குள்ளும் இன நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறது.

கொவிட்-19 இன் முதல் அலை இலங்கையில் பரவியதும், இஸ்லாமிய சமூகமும் தமிழ் மக்களும் சந்தேகத்துக்குரியவர்களாக இலக்கு வைக்கப்பட்டனர். அப்போதைய ஊடக செயல்பாடுகள் அதை இன்னும் அதிகப்படுத்தியது. சடலங்களை அடக்கம் செய்வது குறித்து தற்போது எழுந்துள்ள விவாதத்தில் அது இன்று மீண்டும் மேற்பரப்புக்கு வந்துள்ளது.

எனவே, கொரோனா தொற்றுநோயை தோற்கடிக்க, அதன் இரட்டை சகோதரர்களாக உருவெடுத்துள்ள இனவாதம், மதவெறுப்பு, வகுப்புவாதம், நிறவெறி மற்றும் பேரினவாதம் ஆகிய அனைத்தும் ஒன்றாக தோற்கடிக்கப்பட வேண்டும். மனித உரிமைகள் மற்றும் மனித குணங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். அத்தகைய ஒரு முயற்சியால் மட்டுமே எதிர்காலத்தில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு வழி வகுக்க முடியும் என்பது திண்ணம்.

 

 

 

 

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts