முரண்பாட்டு சூழல் தகவல்களை அறிக்கையிடும் போது ஊடகவியலாளர்கள் நடுநிலையாக நடந்துகொள்ள வேண்டும் என்பது ஊடகவியலின் அடிப்படை கோட்பாடாகும். தேசியாவத அல்லது நாட்டின் வாத காய்ச்சல் காரணமாக அவர்கள் அடிக்கடி ஒரு பக்க சார்பாக நடந்து கொள்கின்றனர். ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களில் அல்லது சர்வாதிகாரத்திற்கு எதிரான சூழ்நிலைகளில் இத்தகைய பக்கசார்பு போக்கு பாதகமானதாக அமைவதில்லை. 1991 ஆம் ஆண்டு மற்றும் 2003 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஈராக்கிற்கு எதிரான யுத்த சூழ்நிலையில் இவ்வாறான சார்பு போக்கு ஊடகவியல் இங்கிலாந்து மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் மிக உயர்வான நிலையில் தேசியவாத உணர்வை வெளிப்படுத்துவதாக நோக்கப்பட்டது. யுத்தத்திற்கு தள்ளப்பட்ட பின்னர் அதன் விளைவுகள் அடிக்கடி முன் பக்கத்தில் பெரிய கொட்டை எழுத்தில் இடம் பிடிப்பதாகவும் அடிக்கடி யுத்தத்தின் முன்னேற்றங்கள் பற்றிய குறுஞ் செய்திகளாகவும் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றதோடு ஆசிரியர்களும் அதன் நம்பகத்தன்மை பற்றி அவ்வளவாக உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. 1991 ஆம் ஆண்டு வளைகுடா யுத்தத்தின் போது HBO மற்றும் CNN ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகளில் நைரா என்ற இளம் பெண் தாதி தோன்றி ஈராக்கிய படைகள் ஆஸ்பத்திரிக்குள் பலவந்தமாக புகுந்து குழந்தைகளுக்கு ஏற்றி இருந்த மருந்து மற்றும் சுவாச உபகரணங்களை அபகரித்துக்கொண்டு குழந்தைகளை தூக்கி எரிந்துவிட்டு சென்றதாக தெரிவித்திருந்தார்.  பின்னர் தெரிய வந்த விடயம்தான் அந்த யுவதி அப்போது குவைத்தில் கடமையில் இருந்த குவைத்திற்கான அமெரிக்க தூதுவரின் மகள் என்பதும் அவள் ஒரு பொது சன கம்பனியால் தூண்டப்பட்டு அமெரிக்கா குவைத்தை ஈராக்கிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதற்காக நடத்திய அமெரிக்க ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த பொதுமக்கள் ஆதரவை பெற சொன்ன பொய்யான கதை என்பது பின்னர் தெரிய வந்தது.

 

ஊடகவியல் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் இருந்து செயற்படக்கூடியதும் என்ற நியாய தர்மம் இரண்டாவது வளைகுடா யுத்த காலப்பகுதியிலும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளால் புறம் தள்ளப்பட்டது. அப்போது லண்டன் ஈவ்னிஹ் ஸ்டார் பத்திரிகை வெளியிட்ட ஒரு செய்தியில் சதாம் ஹுசைன் அவரது ஏவுகணையை 45 நிமிடங்களில் பிரிட்டனை தாக்கி அழிக்கும் வகையில் தயார்படுத்தி இருப்பதாக செய்தி வெளியிட்டது. புலனாய்வு அறிக்கை என்ற அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டதோடு பத்திரிகை இரண்டு முறை குறித்த செய்தி தொடர்பாக பரிசீலனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ளவில்லை. பின்னர் அது தொடர்பாக பிரிடிஷ் புலனாய்வாளர்கள் புலனாய்வு செய்த போது பல்கலைக்கழக மாணவர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட ஆய்வு அறிக்கை ஒன்றை தழுவி எழுதப்பட்ட செய்தியே தவிர உண்மையான ஆதாரபூர்வமான தகவல் அல்ல என்பது புலனாகியது. அதே போன்று ஈராக்கில் பாரிய அழிவு தரும் ஆயுதங்கள் களஞ்சிப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது என்ற பெயரில் அமெரிக்க ஈராக் மீது பாரிய ஆக்கிரமிப்பை செய்து தாக்கி அழித்த பின்னரும் அங்கு எந்தவிதமான அழிவு தரும் அயுதங்களையும் கண்டு பிடிக்க முடியவில்லை. அவை அனைத்தும் ஊடகங்கள் வெளிப்படுத்திய ஆதாரமற்ற பொய் செயதிகளாகவே இருந்தன. இவ்வாறு பார்க்கும் போது ஊடகத்தில் கட்டுக்கதைகள் மற்றும் புனைக் கதைகள் முக்கிய இடத்தை பிடிக்கச் செய்வதானது ஊடக தர்மத்தை விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்துவது போன்றாகும்.

 

விருது வென்ற ஊடகவியலாளரும் நிகழ்ச்சி தயாரிப்பாளருமான ஜோன் பில்கர் அமெரிக்காவின் புகழ் பெற்ற புலனாய்வு ஊடகவியலாளரான சார்ல்ஸ் லுவிஸ் இடம் “உண்மையாகவே உலகில் சுதந்திர ஊடகம் என்பது என்ன” என்று வினவியபோது அமெரிக்க ஊடகங்கள் மிக மோசமான சவாலுக்கு முகம் கொடுத்து வந்த விடயமும் இதுவாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஜோஜ் புஷ் (அப்போதைய பாதுகாப்பு செயலாளர்) மற்றும் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் ஆகியோரின் கருத்துப்படி ஊடகத்தில் நிகழ்ச்சி நிரல் செல்வாக்கு செலுத்துவதாக பதிலளிக்கப்பட்டது. இது குறித்து லுவிஸ் பதிலளிக்கையில் ஊடகவியலாளர்கள் அவர்களது பணியை சரியான முறையில் செய்திருந்தால் நாங்கள் ஈராக் மீது போர் தொடுப்பதற்கான வாய்ப்பே இருந்திருக்காது என்பதாகும்.

 

இலங்கையிலும் ஊடகங்கள் விரும்பியோ விரும்பாமலோ அல்லது நிர்ப்பந்தத்தின் காரணமாகவோ 2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் போர்ச் செய்திகளுக்கு முன்னுரிமையளிக்கும் போக்கு எற்பட்டது. இலங்கையின் தேசியவாத ஊடகவியலானது யுத்தத்தை காரணமாக தெரிவு செய்து கொண்டதோடு அதன் மூலமாக குறுகிய நோக்கத்தை அடைவதற்கான வழிமுறையாக நாட்டினவாத ஊடகவியலை முன்னிலைப்படுத்தின. நாட்டில் நல்லிணக்கத்தை ஊக்கப்படுத்தும் அதே நேரம் இவ்வாறான போக்கும் ஊடகவியலில் மிகவும் பின்னடைவான நிலையை தோற்றுவித்திருக்கின்றன. 

 

சிவில் யுத்தம் முடிவடைந்து 11 வருடங்களுக்கு மேலான காலம் கடந்த நிலையிலும் இலங்கையின் ஊடகவியலின் ஒரு பிரிவு மிக மோசமான தேசியவாத மற்றும் நாட்டினவாத உணர்வுகளால் உந்தப்பட்ட நிலையில் இனவாத போக்கை கடைபிடிப்பதாக மாறி உள்ளன. இது ஊடகவியல் அல்ல. இலங்கை ஊடகவியலில் இருந்து போலியானதும் இனவாத போக்கை கொண்டதுமான ஊடக நடத்தையை முற்றாக இல்லாதொழிப்பதற்காக உண்மையான நோக்கில் இயங்கும் ஊடக செயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts