தந்தையின்போதைப்பொருள்பாவனையால்பிளவடையும்குடும்பம்
வசந்தி சதுராணி
தந்தையின் போதைப்பொருள் பாவனையால் பிளவடையும் குடும்பம்
குடும்பம் ஒரு கோயில் என்பது கிராமபுறங்களில் குறிப்பிடப்படும் ஒரு வழக்காகும். சமூக விஞ்ஞான அடிப்படையில் எடுத்துக் கொண்டால் குடும்பம் என்பது சமூகத்தின் பிரதான அலகாகும். கோயிலாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கும் குடும்பம் பிளவடைந்தால் என்ன நடக்கும்? பின்னணி, குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் மனநிலை, உடல் மற்றும் உள ஆரோக்கியம். நில மற்றும் வீட்டு உரிமைகள் உட்பட அனைத்தும் மாற்றமடையும். தந்தையின் போதைப்பொருள் பாவனை குறிப்பாக பிளவடைந்த குடும்ப பின்னணி, பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கிடையிலான உறவு, சமூகத்துடனான உறவுகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தந்தையின் போதைப்பொருள் பாவனை
தந்தையின் போதைப்பொருள் பாவனையானது அக்குடும்பத்தின் நன்மை, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்புக்கும் தாக்கம் செலுத்தும். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளவர்களில் 80 சதவீதமான குடும்பங்களின் பிள்ளைகள் அல்லது பெற்றோரின் மனநிலை, உடல் மற்றும் உள ரீதியில் பாதிப்பு ஏற்படுவதுடன், பொருளாதாரம் மற்றும் சுகாதார மட்டங்களிலும் பாதிப்பு ஏற்படும் என சமூக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர் .(தேசிய போதைப்பொருள் ஒழிப்பு மத்திய நிலையம் -2022)
தோற்றம் பெறும் பாதிப்புக்கள்
1-உளவியல் மற்றும் உள ஆரோக்கியம்
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான தந்தையின் செயற்பாடுகள் மற்றும் சிந்தனைகள் இளம் தலைமுறையினருக்கு இலக்கற்றதாக காணப்படும். அத்துடன் தூரநோக்கமற்ற எடுத்துக்காட்டாக அமையும். இவ்வாறான பின்னணியில் கல்வி கற்பதற்கான சூழல் மற்றும் சமூக குணவியல்புகள் பாதிக்கப்படும். 2021 ஆம் ஆண்டு உளவியல் சார் மதிப்பீடுகளுக்கமைய, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாள தந்தையர்களின் பிள்ளைகளில் 45 சதவீதமானோர் பிற்பட்ட காலங்களில் உளவியல் ரீதியிலான சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது கவனத்திற் கொள்ளாமல் புறக்கணிக்க கூடிய விடயமல்ல.
2– பொருளாதார மற்றும் சமூக உறுதிப்பாடு
போதைப்பொருள் பாவனைக்காக குடும்பத்தின் வருமானத்தின் பெருமளவான தொகையை தந்தை செலவு செய்வது அந்த குடும்பத்தின் பொருளாதார உறுதிப்பாடு பலமினக்கப்படுவதற்கு பிரதான காரணியாக அமையும். இதனால் பொருளாதார சுமையை தாய்மார்கள் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் பிள்ளைகளின் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை விடயங்களும் பாதிக்கப்படும். நடைமுறை விடயங்களை ஆராய்ந்து பார்த்தால் இதனை விளங்கிக் கொள்ளலாம்.
3- குடும்ப உறவுநிலை பிளவு
போதைப்பொருள் பாவனை, தவறான வார்த்தை பிரயோகம் மற்றும் உடல் ரீதியிலான சித்திரவதை மற்றும் திருமணம் தொடர்பான அழுத்தங்களும் ஏற்படும். 2020 ஆம் ஆண்டு அறிக்கைக்கையில், தந்தையின் போதைப்பொருள் பாவனையின் காரணமாக 25 சதவீதமான பிள்ளைகள் குடும்ப வன்முறை, சித்திரவதைகளுக்கு முகங்கொடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.( இலங்கை பொலிஸ் அறிக்கை -2020)
பிள்ளைகளின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புக்கள்
1-கல்வி நிலை பின்னடைவு
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள பெற்றோரின் பிள்ளைகளின் கல்விநிலை வீழ்ச்சியடைந்துள்ளமை இயல்பானதாக காணப்படுகிறது. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள பெற்றோரின் 35 சதவீதமான பிள்ளைகளின் கல்வி நிலை தோல்வியடைந்துள்ளதாக உலக சுகாதார தாபனம் தொடர்ச்சியாக அறிக்கை வெளியிட்டுள்ளது கவனத்திற்குரியது.
2-மாறுப்பட்ட நடத்தை
போதையில் செயற்படும் தந்தையின் நடத்தைகளை பிள்ளைகள் ஏற்றுக்கொள்வதுடன், அதற்கு இணங்க செயற்பட வேண்டிய நிலையும் ஏற்படுவதுடன், அவர்களும் போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்படுவதற்கும் வாய்ப்புண்டு
3-உளவியல் மற்றும் உடலியல் ரீதியிலான அழுத்தம்
தந்தையின் போதைப்பொருள் பாவனையால் தாய் அழுத்தங்களுக்குள்ளாகுவதுடன்; அது பிள்ளைகளின் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் பாதுகாப்பற்ற சூழல் தோற்றம் பெறும்.
மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகள்
1-போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கை
போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் விசேட புனர்வாழ்வு மத்திய நிலையங்களையும். நிவாரண மத்திய நிலையங்களையும் ஸ்தாபிக்க வேண்டும்.
2-குடும்ப உளவியல் ஆலோசனை செயற்திட்டங்கள்.
குடும்ப பின்னணியை உறுதிப்படுத்துவதற்கு உளவியல் ஆலோசனைகள் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குதல்
3-பிள்ளைகளுக்கு பாதுகாப்பான மற்றும் முன்மாதிரியான சூழலை ஏற்படுத்தல்.
பொருளாதாரம் மற்றும் நிவாரணங்களை வழங்குவதன் ஊடாக பிள்ளைகளுக்கு பாதுகாப்பான மற்றும் முன்மாதிரியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
தந்தையின் போதைப்பொருள் பாவனையானது குடும்பத்தின் பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் சமூக நிலைமைகளில் மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும். இருப்பினும் அரசாங்கம் , சமூகம் அல்லது நபர்கள் ஒன்றிணைந்து
கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தால் குடும்பங்கள் பிளவடையாமல், சிறந்த சமூகத்தையும், ஒழுக்கத்தை மதிக்கும் குடும்பத்தை உருவாக்கலாம்.
மூலம்
1-இலங்கை பொலிஸ் அறிக்கை (2020) குடும்ப சித்திரவதை மற்றும் போதைப்பொருள் பாவனை
2-தேசிய போதைப்பொருள் ஒழிப்பு மத்திய நிலையம் -(2022) போதைப்பொருள்; பாவனையின் மறுசீரமைப்பு
3-உலக சுகாதார தாபனம் -(2021) போதைப்பொருள் பாவனை மற்றும் பிள்ளைகளின் சுகாதாரம்
வசந்தி சதுராணி