ஜனாதிபதி தேர்தல்களில் வடக்கில் வீழும் வாக்களிப்பு சதவீதம்: காரணம் என்ன?
ஆர்.ராம்
எந்தவொரு ஜனாதிபதியும் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஏழுபது வருடங்களாக போராடுகின்றோம். நாங்கள் தென்னிலங்கை தலைவர்களை தெரிவு செய்வதால் எமக்கென்ன நன்மைகள் நிகழ்ந்துவிடப்போகின்றனவா என்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குணரூபா தீபன் என்ற இளம் குடும்பப் பெண்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கேள்வியெழுப்பினார்.
இதேநேரம், ஒவ்வொரு தரப்பினரும் பொதுவேட்பாளர் என்றார்கள், ரணில் என்றார்கள், சஜித் என்றார்கள் யாருக்கு வாக்களிப்பதென்பதே பெரும்பாடாக இருந்தது. இதுவொரு வேண்டாத அழுத்தத்தினை வழங்கியது அதனால் நான் வாக்கெடுப்பில் ஒதுங்கியே இருந்துவிட்டேன் என்று குறிப்பிட்டார் வன்னியில் வாழும் அண்மித்திருக்கும் நகாராசா சண்முகநாதன்.
மாற்றத்துக்கான நாங்கள் வாக்களித்தோம், பொருளாதாரத்தினை ஓரளவு நிமிர்த்தி சுவாசிக்க வைத்த தலைவருக்கு வாக்களித்தோம், தமிழரசுக்கட்சி சொன்னதால் சஜித்துக்கு வாக்களித்தோம் என்று பல்வேறு கருத்துக்களைக் கொண்டிருப்பவர்களும் அங்கு இல்லாமலில்லை.
2024ஆம் ஆண்டு நடைபெற்று நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை வழிநடத்துகின்ற தமிழ் அரசியல் தலைமைக் கட்சிகளில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும், இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள் சிறிதரன் தலைமையிலான அணியினரும் தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்தது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் தலைமையிலான அணியினரும், சமத்துவக் கட்சியும் சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்தன.
இதனைவிடவும் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய மக்கள் சக்தி ஆகியன நேரடியாகவே களத்தில் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தன என்பதும் முக்கியமாகின்றது.
தமிழ் மக்களை வழிநடத்துகின்ற தலைமைக்கட்சிகளின் மேற்கண்டவாறான முடிவுகளால் பல்வேறு அதிருப்தியான சூழல் கடந்த ஜனாதிபதி தேர்திலில் தமிழ் வாக்களர்கள் மத்தியில் காணப்பட்டிருந்தமை வெளிப்படையானது.
இதனால், வாக்களிப்பில் ஈடுபாடு காண்பிக்கப்படாத நிலைமைகள் இருந்திருக்கலாம். எனினும், நிராகரிக்கப்பட்ட வாக்குகளும் அதிகமாக காணப்பட்டமையானது, வாக்காளர்களால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடா என்ற பார்வைக்கோணத்திலும் சிந்திக்க வேண்டியுள்ளது.
எவ்வாறாயினும் 2010,2015,2019ஆகிய வருடங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் இவ்விதமான நிலைமைகளே வடக்கில் நீடிக்கின்றமையானது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகின்றது.
2010 ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தோதல் அந்த வகையில் உள்நாட்டுப் போர் நிறைவுக்கு வந்ததன் பின்னரான சூழலில் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதியன்று ஆறாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இதன்போது போர் வெற்றி நாயகனான மஹிந்த ராஜபக்ஷவும், சமர்கள நாயகனான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவும் பிரதான போட்டியாளர்களாக காணப்பட்டார்கள்.
அந்த வகையில் தேர்தல்கள் திணைக்களத்தின் புள்ளி விபரங்களின் பிரகாரம், யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 721, 359 வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டவர்களாக இருந்தபோதும் 185,132வாக்காளர்களே வாக்கெடுப்பில் பங்கெடுத்திருந்தனர். 536,227வாக்காளர்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்திருக்கவில்லை.
அத்துடன் அளிக்கப்பட்ட வாக்குகளில் 178,369வாக்குகளே செல்லுபடியானவையாக இருந்ததோடு, 6,763வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக உள்ளன.
இதனடிப்படையில் யாழ்;.தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில் 25.66சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதோடு 96.35சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 3.65சதவீதமான வாக்குகள் செல்லுபடியற்றவையாக காணப்பட்டன.
அதேநேரம் தபால் மூலமான வாக்களிப்பை பார்க்கின்றபோது, 4,737வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 4,526வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர். அவர்களின் 4,410வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 116வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக காணப்பட்டன.
இதனடிப்படையில் யாழ்;.தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்காளர்கள் எண்ணிக்கையில் 95.56சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதோடு 97.44சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 2.56சதவீதமான வாக்குகள் செல்லுபடியற்றவையாக காணப்பட்டன.
அதேநேரம், போரினால் முழுமையாக சீர்குலைந்திருந்த வன்னி தேர்தல் மாவட்டத்தில் 266,975பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்த நிலையில், 113,766பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர். அந்தவகையில் 153,209வாக்குகள் அளிக்கப்படவில்லை. அவ்வாறு அளிக்கப்பட்ட வாக்குகளில் 111,263வாக்குகள் செல்லுபடியாகியிருந்தன.
இதனடிப்படையில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில் 42.61சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்ததோடு அவற்றில் 97.8சதவீதமான வாக்குகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. 2.2சதவீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக இருக்கின்றன.
வன்னி தேர்தல் மாவட்டத்தின் தபால் மூலமான வாக்களிப்பை பார்க்கின்றபோது, 4,069வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 3,991வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர். அவர்களின் 3,946வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 45வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக காணப்பட்டன.
இதனடிப்படையில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்காளர்கள் எண்ணிக்கையில் 98.87சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதோடு 98.87சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 1.13சதவீதமான வாக்குகள் செல்லுபடியற்றவையாக காணப்பட்டன.
அதேவேளை, இத்தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த முகாம்களை மையப்படுத்திய வாக்குகளாக 15,602வாக்குகாளர்கள் பதிவுசெய்யப்பட்டிருந்ததோடு 10,147வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 9,786வாக்குகள் அங்கீகரிக்கப்பட்டதோடு 361வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
அதேபோன்று வன்னித்தேர்தல் மாவட்டத்திலும் 29,940வாக்குகாளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்ததோடு 21,480வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 21,070வாக்குகள் செல்லுபடியாகியிருந்ததோடு 410வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.
ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது, 15,992,096வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 13,252,499வாக்காளர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தனர். இதில் 13,387,951வாக்குகள் செல்லுபடியாகிருந்த நிலையில் 135,452வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக உள்ளன.
அந்த வகையில் 83.72சதவீதமான வாக்களிப்பு இடம்பெற்றிருந்ததோடு 82.87சதவீதமான வாக்குகள் செல்லுபடியற்றவையாகவும் 0.85சதவீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாகவும் உள்ளன.
2015 ஜனாதிபதி தேர்தல்
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஏழாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 19வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தபோதும் அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவருடைய கட்சியிலிருந்து வெளியேறி ஒன்றிணைந்த எதிரணிகளின் வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலேயே பிரதான போட்டி காணப்பட்டிருந்தது.
அந்தவகையில், தேர்தல்கள் திணைக்களத்தின் புள்ளி விபரங்களின் பிரகாரம், யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 529, 239 வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டவர்களாக இருந்தபோதும் 350,789வாக்காளர்களே வாக்கெடுப்பில் பங்கெடுத்திருந்தனர். 178,450வாக்காளர்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்திருக்கவில்லை.
அத்துடன் அளிக்கப்பட்ட வாக்குகளில் 340,751வாக்குகளே செல்லுபடியானவையாக இருந்ததோடு, 10,038வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக உள்ளன.
இதனடிப்படையில் யாழ்;.தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில் 66.28சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதோடு 97.14சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 2.86சதவீதமான வாக்குகள் செல்லுபடியற்றவையாக காணப்பட்டன.
அதேநேரம் தபால் மூலமான வாக்களிப்பை பார்க்கின்றபோது, 17,026வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 16,191வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர். அவர்களின் 15,737வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 454வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக காணப்பட்டன.
இதனடிப்படையில் யாழ்;.தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்காளர்கள் எண்ணிக்கையில் 95.10சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதோடு 97.20சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 2.80சதவீதமான வாக்குகள் செல்லுபடியற்றவையாக காணப்பட்டன.
இதேநேரம், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 253,058பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்த நிலையில், 183,641பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர். அந்தவகையில் 69,417வாக்குகள் அளிக்கப்படவில்லை. அவ்வாறு அளிக்கப்பட்ட வாக்குகளில் 180,225வாக்குகள் செல்லுபடியாகியிருந்தன.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில் 72.57சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்ததோடு அவற்றில் 98.14சதவீதமான வாக்குகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. 1.86சதவீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக இருக்கின்றன.
வன்னித் தேர்தல் மாவட்டத்தின் தபால் மூலமான வாக்களிப்பை பார்க்கின்றபோது, 8,364வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 7,756வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர். அவர்களின் 4,418வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 98வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக காணப்பட்டன.
இதனடிப்படையில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்காளர்கள் எண்ணிக்கையில் 98.75சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதோடு 93.90சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 1.13சதவீதமான வாக்குகள் செல்லுபடியற்றவையாக காணப்பட்டன.
ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது, 15,044,490வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 12,264,377வாக்காளர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தனர். இதில் 12,123,452வாக்குகள் செல்லுபடியாகிருந்த நிலையில் 140,925வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக உள்ளன.
அந்த வகையில் 81.52சதவீதமான வாக்களிப்பு இடம்பெற்றிருந்ததோடு 98.85சதவீதமான வாக்குகள் செல்லுபடியற்றவையாகவும் 1.15சதவீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாகவும் உள்ளன.
2019 ஜனாதிபதி தேர்தல்
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 35பேர் போட்டியிட்டிருந்தபோதும் கோட்டாபய ராஜபக்ஷவும், சஜித் பிரேமதாசவும் பிரதான போட்டியாளர்களாக இருந்தனர்.
தேர்தல்கள் திணைக்களத்தின் புள்ளி விபரங்களின் பிரகாரம், யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 564, 714வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டவர்களாக இருந்தபோதும் 384,164வாக்காளர்களே வாக்கெடுப்பில் பங்கெடுத்திருந்தனர். 180,550வாக்காளர்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்திருக்கவில்லை.
அத்துடன் அளிக்கப்பட்ட வாக்குகளில் 372,751வாக்குகளே செல்லுபடியானவையாக இருந்ததோடு, 11,251வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக உள்ளன.
இதனடிப்படையில் யாழ்;.தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில் 68.03சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதோடு 66.04சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 1.99சதவீதமான வாக்குகள் செல்லுபடியற்றவையாக காணப்பட்டன.
அதேநேரம் தபால் மூலமான வாக்களிப்பை பார்க்கின்றபோது, 22,041வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 21,766வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர். அவர்களின் 21,209வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 557வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக காணப்பட்டன.
இதனடிப்படையில் யாழ்;.தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்காளர்கள் எண்ணிக்கையில் 98.75சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதோடு 97.44சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 2.56சதவீதமான வாக்குகள் செல்லுபடியற்றவையாக காணப்பட்டன.
இதேநேரம், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 282,119பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்த நிலையில், 216,072பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர். அந்தவகையில் 66,047வாக்குகள் அளிக்கப்படவில்லை. அவ்வாறு அளிக்கப்பட்ட வாக்குகளில் 212,778வாக்குகள் செல்லுபடியாகியிருந்தன.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில் 76.59சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்ததோடு அவற்றில் 75.42சதவீதமான வாக்குகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. 1.17சதவீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக இருக்கின்றன.
வன்னித் தேர்தல் மாவட்டத்தின் தபால் மூலமான வாக்களிப்பை பார்க்கின்றபோது, 10,994வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 10,742வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர். அவர்களின் 10,595வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 147வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக காணப்பட்டன.
இதனடிப்படையில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்காளர்கள் எண்ணிக்கையில் 97.71சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதோடு 96.37சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 1.34சதவீதமான வாக்குகள் செல்லுபடியற்றவையாக காணப்பட்டன.
ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது, 15,992,096வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 13,252,499வாக்காளர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தனர். இதில் 13,387,951வாக்குகள் செல்லுபடியாகிருந்த நிலையில் 135,452வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக உள்ளன.
அந்த வகையில் 83.72சதவீதமான வாக்களிப்பு இடம்பெற்றிருந்ததோடு 82.87சதவீதமான வாக்குகள் செல்லுபடியற்றவையாகவும் 0.85சதவீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாகவும் உள்ளன.
2024 ஜனாதிபதி தேர்தல்
2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 38பேர் போட்டியிட்டிருந்தபோதும் அநுரகுமார திசாநாயக்க, சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, நாமல் ராஜபக்ஷ ஆகிய நால்வர் பிரதான போட்டியாளர்களாக இருந்தனர்.
தேர்தல்கள் திணைக்களத்தின் புள்ளி விபரங்களின் பிரகாரம், யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 593,187வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டவர்களாக இருந்தபோதும் 397,041வாக்காளர்களே வாக்கெடுப்பில் பங்கெடுத்திருந்தனர். 196,146வாக்காளர்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்திருக்கவில்லை.
அத்துடன் அளிக்கப்பட்ட வாக்குகளில் 371,688வாக்குகளே செல்லுபடியானவையாக இருந்ததோடு, 25,353வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக உள்ளன.
இதனடிப்படையில் யாழ்;.தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில் 66.93சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதோடு 93.61சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 6.39சதவீதமான வாக்குகள் செல்லுபடியற்றவையாக காணப்பட்டன.
அதேநேரம் தபால் மூலமான வாக்களிப்பை பார்க்கின்றபோது, 25,429வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 25,150வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர். அவர்களின் 24,061வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 1,089வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக காணப்பட்டன.
இதனடிப்படையில் யாழ்;.தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்காளர்கள் எண்ணிக்கையில் 98.90சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதோடு 95.67சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 4.33சதவீதமான வாக்குகள் செல்லுபடியற்றவையாக காணப்பட்டன.
இதேநேரம், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 306,081பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்த நிலையில், 226,650பேர் வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர். அந்தவகையில் 88,269வாக்குகள் அளிக்கப்படவில்லை. அவ்வாறு அளிக்கப்பட்ட வாக்குகளில் 217,269வாக்குகள் செல்லுபடியாகியிருந்தன.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில் 74.05சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்ததோடு அவற்றில் 95.86சதவீதமான வாக்குகள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. 4.14சதவீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக இருக்கின்றன.
வன்னித் தேர்தல் மாவட்டத்தின் தபால் மூலமான வாக்களிப்பை பார்க்கின்றபோது, 13,389வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 13,108வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்றிருந்தனர். அவர்களின் 12,764வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 344வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக காணப்பட்டன.
இதனடிப்படையில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட தபால் மூல வாக்காளர்கள் எண்ணிக்கையில் 97.90சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதோடு 97.38சதவீதமான வாக்குகள் செல்லுபடியானவையாக இருந்ததோடு 2.62சதவீதமான வாக்குகள் செல்லுபடியற்றவையாக காணப்பட்டன.
ஒட்டுமொத்தமாக பார்க்கின்றபோது, 17,140,354வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில் 13,619,916வாக்காளர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தனர். இதில் 13,319,616வாக்குகள் செல்லுபடியாகிருந்த நிலையில் 300,300வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாக உள்ளன.
அந்த வகையில் 89.46சதவீதமான வாக்களிப்பு இடம்பெற்றிருந்ததோடு 97.80சதவீதமான வாக்குகள் செல்லுபடியற்றவையாகவும் 2.2சதவீதமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டவையாகவும் உள்ளன.
மேற்படி தரவுகளின் அடிப்படையில் வடக்கில் நிராகரிக்கப்படுகின்ற வாக்குகள் அதிகரித்து வந்துள்ளன. அதேபோன்று வாக்களிப்பில் பங்கெடுக்காத தன்மையும் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தவிர்ந்து ஏனையவற்றில் அதிகரித்தே உள்ளது.
இவ்வாறான நிலைமைக்கு காரணம் என்னவாக இருக்கும் என்ற ஆராய்கின்றபோது, அரசியல் ஆய்வாளரும் பொருளாதார நிபுணரமான செல்வின் இரேனியஸ் மரியாம்பிள்ளை சில முக்கியமான விடயங்களை சுட்டிக்காட்டுகின்றார்.
முதலாவதாக, ஜனாதிபதி தேர்தல்கள் மறுபட்ட தளங்களில் நடைபெற்றிருக்கின்றன. குறிப்பாக போர் முடிவுற்ற வேளையுடன் நடைபெற்ற தேர்தல்ல் தமிழ் மக்களின் பங்களிப்பு முகாம்களில் தங்கியிருந்தபோது தான் காணப்பட்டுள்ளது. அதற்குப் பின்னரான தேர்தல் அத்தகைய நிலைமைகளை ஒத்ததாக இருக்காதபோதும் தேவைகளும், உரிமைகளும் நிறைவேறான சூழலில் நடைபெற்றது.
இரண்டாவதாக, தமிழ் மக்களுக்கு தென்னிலங்கைத் தலைவர்கள் மீதான நம்பிக்கையின்மை பிரதான விடயமாக இருக்கின்றது. எழுபது ஆண்டுகளாக தென்னிலங்கை தலைவர்கள் மாறிமாறி தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூரணப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்காமையால் அவர்களை ஏற்றுக்கொள்வதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை.
மூன்றாவதாக, தமிழ் மக்களை வழிநடத்த வேண்டிய அரசியல்கட்சிகள் பிளவுகளைச் சந்தித்து தமக்குள் முட்டி மோதிக்கொண்டிருப்பதால் ஏற்பட்டுள்ள அதிருப்தியான நிலைமையும் காரணமாகின்றது.
நான்காவதாக, மாற்றத்தினை தொடர்ச்சியாக எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு எவ்விதமான மாற்றங்களும் நிகழாது தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதிருக்கின்ற நிலைமைகளும் வாக்கெடுப்பில் பங்கேற்பதில் சலிப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
ஐந்தாவதாக, வாக்களர்களிடத்தில் சின்னங்கள், அரசியல்கட்சிகள், மற்றும் வாக்களிப்பு முறைமை சம்பந்தமாக தொடர்ச்சியாக காணப்படுகின்ற தெளிவற்ற நிலைமைகளும், புதிய வாக்காளர்களின் வருகையும் காரணமாக இருக்கின்றது. இதற்கு பொருத்தமான வாக்காளர் கல்வி திட்டங்கள் அவசியமாகின்றன.
மக்களின் பங்கேற்பு ஜனநாயகம் என்பது தேர்தல் ஊடாகவே வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆகவே அவர்களின் முழுமையான பங்கேற்பினை உறுதி செய்ய வேண்டியது ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் அனைத்து சக்திகளினதும் கடமையாகின்றது.
தேர்தல்கள் ஆணைக்குழுவும், தேர்தல்கள் கண்காணிப்புக்குழுக்களும், அரசியல் கட்சிகளும், தேர்தலை மையப்படுத்திச் செயற்படும் உள்நாட்டு வெளிநாட்டு அரசசார்பற்ற அமைப்புக்களும் இந்த விடயத்தில் தீவிரமான கவனம் கொள்வது அவசியமாகின்றது.