ஜனநாயகம் மற்றும் அரசியல் மீதான கருத்தியல் மன நிலையின் தாக்கம்
சச்சினி டி பெரேரா
ஒரு மனிதன் இயல்பாகவே தங்கள் சொந்த அரசியல் சித்தாந்தங்களுக்கும் நிகழ்ச்சி நிரல்களுக்கும் எதிராக செயல்படுபவர்களை எதிர்த்து செயல்படும் அரசியல் நடத்தையை கொண்டிருப்பது வழக்கமானதாகும். மனித சமுதாயத்தில் விரைவான சமூக – அரசியல் மாற்றங்களுக்கு இது முக்கிய தூண்டு சக்தியாகும். இங்கே இரண்டு முக்கிய சவால்கள் உள்ளன. ஒன்று, புதிய ஊடகங்கள் விரைவான, உலகளாவிய செய்திகளை அடைய உதவியாக இருக்கின்றது. இரண்டாவது சவால் என்னவென்றால் அந்தச் செய்திகளில் பெரும்பகுதி தவறானது மற்றும் /அல்லது முழுமையற்றவைகளாக உள்ளன. இது தவறான தகவல்களைப் பரப்புவதற்கு வழிவகுக்கிறது. பெரும்பாலான மக்கள் தாங்கள் பார்ப்பது, கேட்பது மற்றும் அனுபவிப்பதை நம்புவதால், இந்த இரண்டு சவால்களும் வன்முறை மற்றும் மோதல்களுக்கு வழிவகுக்கும். அவை அரசியலையும் கடுமையாக பாதிக்கின்றன. வெறுமனே, ஒரு ஜனநாயக அரசியல் மக்களை உன்னத செயல்கள், மகிழ்ச்சி மற்றும் மன அமைதிக்கு இட்டுச் செல்லவேண்டும். எவ்வாறாயினும், இந்த சவால்கள் அவ்வாறானதாக இல்லை.
இலங்கையில் தற்போதைய சமூக-அரசியல் மாற்றம் மேலும் அரசியல் குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக தேசிய அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான சிந்தனா ரீதியான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இன்றைய சூழலில், தீவிரவாதம், இனவாதம், பயங்கரவாதம், சிறுபான்மை மற்றும் மத பாகுபாடு போன்ற தலைப்புகளில் பல மக்கள் வெறுக்கத்தக்க தகவல்களை பகிர்ந்து கொள்வதைக் காண்கிறோம். அவற்றிற்கு உண்மையான அடிப்படை இல்லை. அனால் முக்கியமாக அரசியல் தாக்கங்களுண்டு. பல சமூக ஊடக பயன்படுத்துனர்கள் தங்கள் அரசியல் சார்புகளை நோக்கி கருத்துப் பதிவுகள், வீடியோக்கள், மீம்ஸ், தலைப்புகள், கார்ட்டூன்கள் மற்றும் மெய்நிகர் தளங்களில் பரவும் கட்டுரைகள் மூலம் பிரச்சாரம் செய்வதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. எவ்வழியிலாவது வேற்றுமையை உருவாக்கும் போக்கு மனிதர்களுக்கு ஏன் உள்ளது? “வெளிப்படைத் தன்மை, மனித உரிமைகள், சமூகநீதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றுடன் வாழும் ஒரு சமூகத்தை மக்கள் சந்திக்காதவரை, அரசியல் ஒழுக்கத்தின் தேவையை அவர்கள் காணமாட்டார்கள்.” என வெகுஜன ஊடகங்கள் மற்றும் தகவல் தொடர்பு ஆய்வுகளுக்கான வருகை விரிவுரையாளர் தர்ஷன அசோககுமார கூறினார்.
பௌதீக அடிப்படையிலான மோதல்களுக்குப் பதிலாக, இந்த நாட்களில் மக்கள் மெய்நிகர் போர்களில் ஈடுபடுகிறார்கள், அவர்கள் வெறுக்கத்தக்க பேச்சைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்வதோடு சமூக ஊடகங்கள் வழியாக தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். திரு தர்ஷன அசோக குமாரவின் கூற்றுப்படி, சமூக ஊடகங்கள் அரசியல் வன்முறைக்கு ஒரு நல்ல அடித்தளத்தை இடும் கருவியாகும். முக்கிய சமூக ஊடக தளங்களான முகப்புத்தகம், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவை இலங்கையில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற சமூக ஊடகங்களாகும். இந்த தளங்களில் அரசியல்-தீவிரவாத ஆர்வலர்களின் நீண்டகால திட்டமிடலின் அடிப்படையிலான நடவடிக்கைகளை காண்கிறோம்.போலியான மற்றும் தவறானத கவல்களை பரப்புவதற்கும், நாட்டின் முக்கிய அரசியல் சம்பவங்கள் மற்றும் பிரபலமான அரசியல் கட்சிகள் தொடர்பாக வெறுப்புணர்வைப் தூண்டுவதற்கும் தன்னிச்சையான அரசியல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் இருக்கின்றனர். உதாரணமாக, யாசித் தில்ஷன், நடுன் சமீரா விதனா, கமகே-பாவெல், அதுல தர்மதாச, தசுன் வனகுரு, ரேகா கஹண்டகம, பீச்சன் மகாத்தயா, ஸ்ரீலங்கன் பிளட், ஸ்ரீ லங்கன் பொலிடிகல் போன்றவை இவ்வாறான பிரபலமான சமூக ஊடக பக்கங்களாகும். திட்டமிட்ட அடிப்படையில் போலியானதும் ஆதாரமறற உண்மைக்கு புறம்பானதுமான தகவல்களை இத்தகைய பெயர்களிலான பக்கங்களின் மூலம் பரப்பப்பட்டு வருகின்றன. இவற்றின் சமூக ஊடக சூழல்களை நாம் குறிப்பிடும் போது, அது இலங்கை சமூகத்தில் அரசியல் ஒழுக்கத்தின் பலவீனத்தையும் குறைப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைகின்றது.
உலகின் பெரும்பாலான பிராந்தியங்களும் இதே போன்ற நெருக்கடிகளை அனுபவிக்கின்றன, ஏனெனில் சமூக ஊடகங்கள் ஒரு தேசத்தின் திறனை வெவ்வேறு வடிவங்களிலும் அளவிலும் நிர்வகிக்கின்றன. மேல் குறிப்பிட்டபடி, நாங்கள் தற்போதும் இரண்டு பெரிய சவால்களை எதிர் கொள்கிறோம். தகவல் தொடர்பு இயக்கிகளின் விரைவான தொழிற்பாடு மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் தகவல்களின் விரிவாக்கம் ஆகியவையாகும். ஆனாலும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை சமூகத்திலிருந்து அகற்றுவது கடினமானதாக இருந்தாலும் அதனை ஓரளவிற்காவது குறைக்க அல்லது கட்டுப்படுத்த முடியும்.
திரு தர்ஷனவின் கருத்துப்படி அரசியல் சார்புடைய மற்றும் வெறுக்கத்தக்க மொழி அடிப்படையிலான தகவல் பரிமாற்ற நடவடிக்கைகள் ஒரே மாதிரியான அல்லது பகுத்தறிவற்ற சென்றடையும் போது அரசியல் வன்முறையை ஊக்குவிப்பதாகவும் தூண்டுவதாகவும் அமைகின்றது. திகன – தெல்தெனிய, அலுத்கம, பேருவளை ஆகிய இடங்களில் சிறுபான்மை இனமான முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளை இதற்கு சிறந்த உதாரணங்களாக குறிப்பிடலாம். சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த காடையர்களால் சமூக ஊடகங்களை பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தூண்டும் கருத்துக்களை பரப்பியதன் விளைவே இத்தகைய வன்முறைகளாக அமைந்தன. இது நாட்டின் சமூக -அரசியல் நிலையை கடுமையாக பாதித்தது. எவ்வாறாயினும் அவசர கால நிலையை பயன்படுத்தி அப்போதைய சூழ்நிலையில் சமூக ஊடக செயற்பாடுகள் முடக்கப்பட்டதால் வன்முறை பரவாமல் ஓரளவிற்கு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அதன் மூலம் அரசியல் சார்பான பிரச்சாரங்களை மேலும் பரப்புவதும் தடுக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு, அரசியல் அமைப்பிற்கான 20 வதுதிருத்தம், கோவிட் -19 முதல் அலை முடக்கம், அண்மைக்கால காடழிப்பு சம்பவங்கள், புவனேகபாகு ரோயல் பெவிலியன் இடிப்பு போன்றவை அரசியல் வன்முறைக்கு சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் நடத்தைகளை தூண்டிய காரணிகளாகவும் கூறமுடிகின்றது.
“பேச்சு சுதந்திரத்திற்கு” பொறுப்பான பாதுகாப்பு சட்டங்களும் இந்த விஷயத்தில் அணைக்கப்பட்டுள்ளன என்று தர்ஷன குமார கூறினார். ஆயினும் கூட, தற்போதைய அரசாங்கமோ அல்லது முந்தைய அரசாங்கங்களோ ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் உலகில் அரசியல் ரீதியாக வன்முறை வழக்குகள் குறித்த நியாயமான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனம் (ICCPR) இது போன்ற விடயங்கள் தொடர்பாக தெளிவான சட்டங்களை குறிப்பிடுகின்றது. வெளிப்படையான அரசியல் வன்முறை தொடர்பான பல சந்தர்ப்பங்களில், பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்தை பெருமளவில் கட்டுப்படுத்த ICCPR சாசனம் தெளிவாக பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இலங்கை அரசியல் பிரமுகர்கள் தங்கள் அதிகாரத்தை தன்னிச்சையாக ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈபடுத்துகின்றார்கள், ஆனாலும் வெளிப்படையில் ஜனநாயக அரசியல் பற்றி பகிரங்கமாக பேசுகிறார்கள் என்று அவர் மேலும் விளக்கினார்.நல்ல அரசியல் தாக்கங்ஏற்படுத்த போதுமான சமூக ஊடக கல்வியறிவு எங்களிடம் இல்லை. அறிவுபூர்வமான தளங்களில் மட்டுமல்லாமல் உண்மையான அல்லது மறைமுகமான நடவடிக்கைகளிலும் அரசியல் வன்முறை நிகழ்வுகளை முறியடிக்கவும் குறைக்கவும் நீதித்துறை நடவடிக்கை மற்றும் சட்டத்தில் பொருத்தமான நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று தர்ஷன அசோக கூறினார். அரசியல் என்பது ஒரு சட்டவாக்க விஞ்ஞானமாகும், இது உலகளாவிய இணையத்தள (www) மற்றும் சமூக ஊடகங்களில் கவனமாகவும் புத்திசாதுர்யமாகவும் நிர்வகிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதனால் உலகளாவிய அரசியலைக் நடத்தையை மாற்றியமைக்க அல்லது தீர்மானிக்க முடியும். இது இலங்கையின் சமூக ஆரோக்கியத்திற்கு நச்சுத் தன்மைவாய்ந்த ஒரு நெருக்கடியாக மாறக்கூடும். சமாதானம் என்பது குறுகிய காலத்திலோ அல்லது நீண்டகாலத்திலோ மகிழ்ச்சியாக வாழ வடிவமைக்கப்பட்டது. பொதுமக்களின் பார்வையில் சகிப்புத் தன்மை மற்றும் சகவாழ்வு மனித அமைதிக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக விளங்குகிறது. எனவே, ஜனநாயக விரோத வெறுப்பை நோக்கி நமது மெய்நிகர் கல்வியறிவை இட்டுச் செல்வதாக அமையக் கூடாது.