Uncategorized

சிறைக்கைதிகளுக்கு சமூகம் திறந்தவெளி முகாமல்ல

தீபா குமுது

சட்டவிரோத செயற்பாடுகளினால்  சிறைச்சாலைகளில்

சந்தேக நபர்களாகவும்,அல்லது குற்றவாளியாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சிறைக் கைதிகள் என்று

அழைக்கப்படுவார்கள். சிறைப்படுத்தப்பட்டதன் பின்னர்

அவர்களின் மனநிலை, ஆரோக்கியம் சமூக கொள்கையுடனான உரிமை பாதுகாப்பு, மீண்டும் சமூகமயப்படுத்தப்படும் போது தோற்றம் பெறும் பாதிப்புக்களை குறைத்தல்

தடுத்தல் , மற்றும் அமைதியான சூழலை ஏற்படுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்துவது கட்டாயமானதாகும்.

சிறைக்கைதிகளின் நலன்புரி மற்றும் அரசாங்கம்

எடுத்துள்ள நடவடிக்கைகள்

1-சுகாதார வசதிகள்

சிறைக்கைதிகளின் உளவியல் மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.2022 ஆம் ஆண்டு சிறைக்கைதிகளில்

82 சதவீதமானோர் தனிப்பட்ட முறையில் சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக

குறிப்பிடப்பட்டுள்ளது.(சுகாதார சேவை திணைக்களம் -2022)

2- கல்வி மற்றும் தொழிற்றுறை பயிற்சி

சிறைக்கைதிகளுக்கு தொழிற்றுறை சார்ந்த பயிற்சிகளை வழங்குவது அவர்களின் புதிய வாழ்க்கைக்குக்கு ஒத்துழைப்பளிக்கும்.

2021 ஆம் ஆண்டு 3500 சிறைக்கைதிகளுக்கு சிறந்த முறையில் தொழிற்றுறை சாரந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.(நீதி அமைச்சின் அறிக்கை -2021)

3- சமூகமயப்படுத்தல்,நலன்புரி செயற்திட்டங்கள்

சிறைக்கைதிகளை சமூகமயப்படுத்தும் போது அவர்களுக்கு உளவியல்சார்ந்த ஆலோசனைகளை வழங்க

வேண்டும்.குடும்பம் மற்றும் சமூகத்துடனான உறவுகளை பலப்படுத்தும் வகையிலான ஆலோசனைகள் வழங்குவது கட்டாயமானது.

சமூகமயப்படுத்தப்படும் போது சிறைக்கைதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

சிறையில் இருந்த நபர் தண்டனை காலம் நிறைவடைந்து  சமூகமயப்படுத்தும் போது பல்வேறு எதிர்ப்புக்களையும் புறக்கணிப்புக்களையும் எதிர்க்கொள்ள நேரிடும்.

இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்வது

ஒட்டுமொத்த சமூகத்தினதும் கடப்பாடாகும்.

2021 ஆம் ஆண்டு முன்னெடுத்த சமூக ஆய்வுக்கமைய, 65 சதவீதமானோர் சமூகத்தில் பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளனர் ( சமூக விஞ்ஞான பிரதிநிதித்துவ

அறிக்கை -2021)

சிறைப்படுத்தப்பட்டவர்களின் சுய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவது கடினமானதாக காணப்படுவதாக அரசாங்கம்

சுட்டிக்காட்டியுள்ளது. மொத்த சிறைக்கைதிகளில் 45

சதவீதமானோர் தமது குடும்பத்தின் பொருளாதார

பிரதானியாக செயற்பட்டுள்ளனர்.சிறைச்சாலைக்குள் ஏற்படும் அழுத்தம்பாரதூரமான உளவியல் தாக்கங்களுக்கு

பிரதான காரணியாக அமைகின்றன.

இவ்வாறான  நிலைகளை  குறைத்துக் கொள்வதற்காக

சிறைக்கைதிகளின் உளவியல் மற்றும் சுகாதார நிலைமையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உளவியல்

சிகிச்சை மற்றும் விசேட ஆலோசனை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.அத்துடன் சிறைக்கைதிகளுக்கு தொழிற்றுறை சார்ந்த பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை மேம்படுத்தும் செயற்திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.சமூகத்துடன் ஒன்றிணைந்து சிறைக்கைதிகளின் பொருளாதாரம் மற்றும் உளவியல் நிலைமையை மேம்படுத்தும் வகையில் புனர்வாழ்வுக்காக விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் போதைப்பொருள் பாவனை அல்லது போதைப்பொருளை தம்வசம் வைத்திருத்தல் போன்ற

குற்றத்துக்காக  சிறையில் இருந்தவர், விடுதலையாகும் போது அவருக்கு முறையான புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதா என்பது சிக்கலானதாக உள்ளது. ஏனெனில் அவர்கள் சமூகமயப்படுத்தப்பட்டதன் பின்னரும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதால் பல பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன.

சிறைக்கைதிகளை போன்று அவர்களின் குடும்ப

உறுப்பினர்களும் உளவியல் ரீதியிலும், சமூக ரீதியிலும் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.குடும்பத்துக்குள் பொருளாதார நெருக்கடி ஏற்படும். சமூகத்தால்

புறக்கணிக்கப்படுவார்கள். சமூகத்தின் மத்தியில் தலைகுனிதலுடன் பாரதூரமான உளவியல் தாக்கங்களுக்கும்

முகங்கொடுக்க நேரிடும்.

தீர்வு

சிறைக்கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளுக்கு அவர்கள் அடிபணிய வேண்டும்.அத்துடன் அடுத்து தோற்றம் பெறும்  பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சவாலானது. சிறைக்கைதிகளின் நலன்புரி மற்றும் அவர்களை

சமூகமயப்படுத்தும் போது பொதுவான கொள்கைகளை செயற்படுத்த வேண்டும்.சமூகமும், அரசாங்கமும் ஒன்றிணைந்து செயற்பட்டால் எதிர்கால சமூதாயத்துக்கு

அமைதியான வழி பிறக்கும்.

பரிசீலனை

1.சுகாதார சேவை திணைக்களம் (2021) சிறைக்கைதிகளின் சுகாதார கொள்கை

2- நீதி அமைச்சு அறிக்கை (2021) – சிறைக்கைதிகள் தொடர்பான விசேட அறிக்கை

3- சமூக விஞ்ஞான பிரதிநிதித்துவ அறிக்கை (2021) – சிறைக்கைதிகளை மீண்டும் சமூகமயப்படுத்தும் போது எழும் சிக்கல்

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts