சமூக ஊடகங்களில் வெறுப்பூட்டும் பேச்சின் பயன்படுத்தலும் அதன் சவால்களும்
ஐ.கே. பிரபா
“எந்தவொரு தனிநபரின் ஜனநாயக சுதந்திரமும் மற்றொருவரின் மூக்கு நுனிவரை” என பிரபலமான கருத்து ஒன்றுண்டு. மேலும் தனிநபர் மற்றும் தனிநபர்ககளை உள்ளடக்கிய குழுக்களுக்கிடையிலான மனநிலையானது சமூகத்துடன் தொடர்புபடும் பொழுது அதற்கேற்ப மாறுபடும். மற்றொரு நபரின் முன்னேற்றத்தை நீங்கள் பாராட்ட முடியாவிட்டாலும், அந்நபரை புகழ்ந்து பேசவோ அல்லது மகிழ்ச்சிப் படுத்தவோ முடியாவிட்டாலும் பரவாயில்லை. அனால் ஒரு நபரை அவமதிக்க உங்களுக்கு உரிமையில்லை என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். வெறுக்கத்தக்க பேச்சு என்பது சமூகத்தில் நீண்ட காலமாக விவாதிக்கப்படும் ஒரு தலைப்பாகும். இனம், மதம், மொழி, நிறம்,மதநம்பிக்கைகள் பாலினம், பாலியல் நோக்கு நிலை, அரசியல் நம்பிக்கைகள், சமூகநிலை, நிதி ஸ்திரத்தன்மை, பிறப்பு, வயது, மனஆரோக்கியம், துன்பம் மற்றும் அதிர்ச்சிகரமான பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய அல்லது சர்வதேச அளவில் தனிநபர்கள் அல்லது தனிநபர்களை உள்ளடக்கிய குழுக்கள் மீது பாகுபாடு காட்டப்படும் இடத்தில் வெறுக்கத்தக்க பேச்சு உள்ளடக்கங்களை அடையாளம் காணலாம்.
(https.//dictionary.cambridge.org/us/dictionary/English/hate-speech)
இலங்கை வரலாற்றைப் பொறுத்த வரையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பேச்சுக்களானது பல்வேறு சந்தர்ப்பங்களில், தனித்துவமான வழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பாடல் உத்திகளில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளன. 20 ஆம் நூற்றாண்டு காலப்பகுதி முதல் “இலங்கையில் பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை என்றழைக்கப்படும் “அனகரிகா தர்மபாலாவின் மத அடிப்படையிலான சிந்தனைகள், பிரசங்கங்கள் போன்ற சிறிய குழு கூட்டங்களில் அவர் பயன்படுத்திய வாய்மொழி வார்த்தை பிரயோகங்கள் சில நேரங்களில் வெறுப்புணர்வை ஏற்படுத்துபவைகளாக இருந்து வந்தமை இரகசியமல்ல.” அவை தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
(https://theconversation.com/violent-buddhist-extremists-are-targeting-muslims-in-sri-lanka-92951)
2009 ல் போருக்குப் பின்னரான காலத்தில் பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்ற பிரதான செய்தி ஊடகங்கள் செய்த வெறுக்கத்தக்க உரைகள, கலாச்சார ஒத்துழைப்பு மற்றும் அரசியல் கருத்துகளை உருவாக்குதல் ஆகியவற்றில் ஆழமான விளைவைக் கொண்டிருந்ததோடு, பொதுமக்களின் கருத்துக்களை வளர்க்கவும் உதவியது. சமீபத்திய தசாப்தங்களிலிருந்து பூகோளமயமாக்கல் கருத்தின் விளைவாக, முஸ்லீம் சமூகம் பல்வேறு இன குழுக்களிடம் இருந்தும் சில சந்தர்ப்பங்களில் ஒட்டுமொத்த இலங்கை சமூகத்திடம் இருந்தும் கூட நேரடி பாதிப்புக்களுக்கு ஆளானது. குறிப்பாக புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சமூக ஊடகங்கள் எவ்வாறு குறிவைக்கப்படுகின்றன என்பதையும், பொழுதுபோக்கு மற்றும் ஆக்கபூர்வமான அணுகு முறைகளை பயன்படுத்தி சமூக ஊடக இடைவெளிகளை எவ்வாறு நுட்பமாகப் பயன்படுத்துகின்றன என்பதையும் நாம் அடையாளம் காணலாம்.
“இன மற்றும் மத கொந்தளிப்பு காரணமாக ஆரம்ப நாட்களில் பரவலாக இருந்த வெறுக்கத்தக்க பேச்சு, இப்போது அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளை குறிவைத்து தவறான மற்றும் சிதைந்த தகவல்களுடன் எந்த கண்ணியமும் இல்லாமல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. படித்த, அறிவற்ற மற்றும் தீவிர போக்கு சிந்தனைவாதிகள் தங்கள் கருத்துக்களை சமூக ஊடகங்களில் தீங்கிழைக்கும் வகையில் முன்வைக்க முயற்சிக்கின்றனர், இது சமூக நலனுக்கு தேவையற்ற சோதனையையும் உருவாக்குகிறது. எனவே, இப்போதெல்லாம் சமூக ஊடகங்கள் வெறுக்கத்தக்க பேச்சு பரவலாக உள்ளது” என களனி பல்கலைக்கழக வெகுஜன தொடர்பாடல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் கலாநிதி. மா.பா.திலகரத்ன தெரிவித்தார்.
“தற்போது இலங்கையில் இருக்கும் சிலர் “மோட்சத்தின் உச்ச பயனை நீங்கள் அடைவீர்களாக!”, “கண்ணீர் அஞ்சலி” போன்ற தலைப்புகளுடன் உயிருடன் இருக்கும் நடிகர், நடிகைகளுக்கு போலியான செய்திகளை உருவாக்குகிறார்கள். சமூக ஊடகங்களில் வழங்கப்பட்ட கருத்துச் சுதந்திரமும், சமூக ஊடகங்களின் தன்னிச்சையான பயன்பாடும் இதுபோன்ற தவறான வதந்திகளை பரப்பும் மக்களின் கீழ்த்தரமான எண்ணங்களுக்கும் நடத்தைகளும் வழிவகுத்தது.”என கலாநிதி. மா.பா. திலகரத்ன தெரிவித்தார். மேலும் அவர் ஒரு முறை இந்தியாவின் கல்கத்தாவில் நடந்த மூன்று நாள் சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டிருந்த போது, மாநாட்டின் இறுதி அமர்வில் கலந்துகொண்ட இந்தியர்களும் மாநாட்டின் எந்த புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று பங்கேற்பாளர்களிடம் கேட்டுக் கொண்டனர். மேலும் அவ்வாறு செய்வது ஒரு இரண்டாந்தர செயல் என்றும் கூறினார். கடந்த காலங்களில் ஊடகங்களால் “சூடான செய்தி” என்ற கருத்து உருவாக்கப் பட்டிருந்தாலும், அது இப்போது பல மேற்கத்திய நாடுகளில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சூடான செய்தி எனும் போர்வையில் போலியான தகவல்களினால் மக்கள் பதற்றமடைவதைக்கொண்டு வெறுக்கத்தக்க பேச்சினை சமூக ஊடகங்கள் பலமடையச் செய்கின்றன.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வழிகளைப் பயன்படுத்தி இணையம் வழியாக உருவாக்கப்படும் எந்தவிதமான போலியான தகவல்களின் மூலமும் ஒரு தனிநபருக்கோ அல்லது ஒரு குழுவினருக்கு அவதூறாக அல்லது அவமதிக்கும் வகையில் தகவல்களை அல்லது செய்திகளை வெளியிடுவது தற்போதைய புதியதொரு போக்காகும். இது ‘சைபர்வெறுப்பு’ என்று அழைக்கப்படுகிறது. அதற்காக பயன்படும் பிரதான சமூக தளங்களாவன:-
1.இணையதளம்(internet)
2.வலைத்தளங்கள்(websites)
3.சமூக வலைப்பின்னல் தளங்கள்(Social Network Sites)
4.வலை 2.0 திசையன்(Web 2.0 Vector)
5.டேட்டிங் தளங்கள்(Dating Sites)
6.இணைய விளையாட்டுத் தளங்கள்(Internet Gaming)
7.இமோ(Imo)
8.மின்னஞ்சல்(E-mail)
9.ட்விட்டர்(Twitter)
11.பகிரி(Whatsapp)
12.முகநூல்(Facebook)
13.YouTube
14.Bloggerதனி நபர் பக்கங்கள்
போன்றவையாகும்.
மேற்கண்ட ஊடக தளங்கள் எல்லையற்ற அளவில் பரவலாக இருந்தாலும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கூடிய செய்தி உள்ளடக்கங்கள் மிகவும் வரையறுக்கப்பட்ட இணையதளங்கள் ஊடாக எவ்வாறு பரவுகின்றன என்பதை அடையாளம் காணமுடியும். இத்தகைய நோக்கங்களுக்காக சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. இருப்பினும், உண்மைககு புறம்பான தகவல்கள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சைக் கட்டுப்படுத்துவதற்கும், சமூகத்தில் இத்தகைய நடவடிக்கைகளின் சாத்தியமான தாக்கத்தைக் குறைப்பதற்கும், சமூக ஊடகதள உரிமையாளர்கள் சமூகம் சார்ந்த விதிமுறைகளையும், தனியுரிமை மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பான வழிகாட்டுதல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். தகவல்களின்படி இது ஒரு பெயரளவிலான சந்தர்ப்பமாக இருந்தாலும், இதன்மீதான சமூக தாக்கம் காரணமாக தற்போது இவ்வாறான சூழ்நிலைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தொழில்நுட்ப முறைகளை உருவாக்கி வருகின்றன. இதன் விளைவினால் தான் போலி செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கு முன்னுரிமை கொடுக்கும் சில சமூக ஊடக கணக்குகள் திடீரென முடக்கப்படுகின்றன. கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும், இது போன்ற சூழ்நிலைகளில் நடவடிக்கை எடுப்பதற்கும், குடிமக்களின் பாதுகாப்பிற்காகவும் உலகின் பல பகுதிகளிலும் சட்டவிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
(https://www.intel.com/content/www/us/en/artificial-intelligence/posts/nlp-techniques-to-intervene-in-online-hate-speech.html)
சமூக ஊடகங்கள் வழியாக சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களால் பரப்பப்படும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் குறிப்பாக இளைஞர்களை இலக்காகக் கொண்டது. மேலும் அவை விரைவாக குழுக்களாக ஒன்றிணைந்து வெறுக்கத்தக்க பேச்சினை அதன் உள்ளடக்கத்தைப் பொருட்படுத்தாமல் பரப்புகின்றன. படங்கள் அல்லது கடவுச் சொற்களை இரகசியமாகவும், தந்திரோபாயமான முறைகளிலும் பயன்படுத்தப்படுவது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களைக் குறிவைத்தாகும். அதேபோல் இந்த போலி செய்திகளை உருவாக்கி பரப்ப கூடியவர்களின் உண்மையான அடையாளத்தை கண்டு பிடிப்பதும் கடினமானதாகும். இத்தகைய செயற்பாடுகள் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படுத்துவதோடு பொதுமக்கள் அபிப்பிரயங்களை
கட்டியெழுப்புவதாகவும் உளள்ன. மிக நுட்பமான வெறுக்கத்தக்க பேச்சானது மனித உணர்வுகளையும், பொருளாதாரத்தையும் பாதிக்கக் கூடியதாக உளள்ன. மேலும் சமூக ஊடகத்தை பயன்படுத்தக்கூடியவர்கள் தமக்குள்ளேயே சுய தனிக்கை முயையொன்றை கடைபிடிப்பதன் மூலம் மற்றவர்களின்; சுய கௌரவம் மற்றும் சுய மரியாதையை பாதுகாக்கும் வகையில் செயலாற்ற முடியும். அதுவே சமூக ஊடக செயற்பாட்டின் மூலமான சமூக முன்னேற்றத்திறகான வழியாகும்.