வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

சமூக ஊடகங்களில் போலி செய்திகளும், அரசியல் நிகழ்ச்சி நிரல்களை உருவாக்குவதற்கான அதன் செயல்முறையும்

ஐ.கே. பிரபா

“சுனாத்த, தரேத்த, சராத்த தம்மே – தம்ம” ஒரு விடயத்தை செவிமடுக்கும் போது முழுமையான கவனத்துடன் கேட்க வேண்டும் என்பது புத்தரின் போதனைகளில் ஒன்றாகும். “பேசுபவர்; சொல்வதைக் கேட்பவர் துள்ளியமாக் கேட்க வேண்டும்” என்ற சொற்றொடர் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர். சரியான நேரத்தில் அரசியல் தகவல்

தொடர்பாடல் செயல்பாட்டில் கவனம் செலுத்தும் போது, போலி செய்திகள் உண்மையான செய்திகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் சிதைத்து புனையப்படுவதோடு,  ஊடக ஒழுங்கு விதிகள் மற்றும் தணிக்கை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், பிரபலமான ஊடக கலாச்சாரத்தில்

தனிநபர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் படங்களையும் உருவாக்குகின்றன. போலி செய்தி அறிக்கையின் முக்கிய நோக்கம் ஒருதனி நபரை அல்லது ஒரு இனத்தை இலக்கு வைத்து தவறான தகவல்களை பரப்புவதாகும்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அனுசரணையில் “டாக்டர் சண்டர் வான் டெர் லினன்” வெளியிட்ட“ஜர்னல் ஒஃப் எக்ஸ்பரிமென்டல் சைக்காலஜி” பரிசோதனை உளவியல் சஞ்சிகை என்ற புத்தகத்தில் “கோ வைரல” என்ற கருத்தை அறிமுகப்படுத்தி, போலி செய்திகள் சமூகத்தில் வைரஸ் போல பரவிவருவதை சுட்டிக்காட்டுகின்றார். மேலும் போலிச் செய்திகளின் விலகல், தகவல்களை வகைப்படுத்த உதவுகிறது என்றும், அவற்றில் பெரும்பாலானவை  ஒரு தனிநபரின் அல்லது ஒரு நிறுவனத்தின் நற்பெயரை மோசமாக பாதிக்கின்றன என்றும் அந்த நூலில் சுட்டிக்காட்டப்படுகிறது.

(https: / /blog.hubspot.com/marketing/viral-campaigns)

சமூக ஊடகங்களில் பரவியிருக்கும் போலி செய்திகள் குறித்து கேள்வி எழுப்பியபோது, மூத்த ஊடகவியலாளர் “அமந்த விஜேயசூரியா”, “போலி செய்தி உருவாக்கம் 1990 ல் இருந்து வெளிவந்துள்ளது, இது 2004 முதல் இலங்கை சமூகத்தில் பரவலாக உள்ளது, இப்போது நாம் உண்மையை

வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை மற்றும் தவறான செய்தி இப்போது சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் மூலம் பரவுகிறது” எனவும் “பிரதான ஊடகங்களின் உச்சக் கட்டமாக வெளிவந்த புதிய ஊடகங்கள், ஐரோப்பாவில் பரவுவதற்கு முன்பே இலங்கையில் பரவியுள்ளதால் இலங்கை மக்களுக்கு அது இன்னும் ஒரு முழுமையான தகவல் தொடர்பு ஊடகமாகவே உள்ளது. அரங்கம் தனித்துவமானது என்பதால், இது ஒருபெரிய இடத்தை மிகக் குறைந்த தகவல்களுடன் மறைக்கக் கூடும். மேலும் மக்களின் பொதுக் கருத்தை உருவாக்கவும், அதிருப்தியைப் பெறவும் பயன்படுத்தலாம். முக்கிய ஊடகங்களில் முன்னிலைப்படுத்த கடினமாக இருக்கும் பல விஷயங்கள் உதாரணமாக  இன வெறி மற்றும் மத பிரச்சினைகளை சமூக ஊடகத்தளங்கள் விரைவாக தூண்டும்.” என்று அவர் வலியுறுத்தினார்.

“ஊடக ஒழுங்கு முறை மற்றும் கருத்து சுதந்திரத்தில் கவனம் செலுத்தும் போது, சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை என்றும், பிரதான ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த இடம், முதிர்ச்சி தேவைப்படாத நபர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த செல்லும் போது சமூக ஊடகங்களின் மதிப்பு குறைகிறது.” என்றும் திரு.விஜேசூரிய மேலும் கூறினார்.

“சமூ கஊடகங்கள் என்பது புவியியலைக் கடந்த ஒன்று. இன வெறி போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் அல்லது சிங்களவர்கள் தேவையில்லாத நிலையில் சீனா, கியூபா மற்றும் வடகொரியா போன்ற நாடுகளைத் தவிர, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கையர்கள் இப்பிரச்சினைகளைத் தூண்டி விடுகிறார்கள்.” என அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சூழலில், “20 வது திருத்தம் போன்ற முக்கியமான விடயங்கள் குறித்து பல்வேறு குழுக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியதன் மூலம் சமூக ஊடகங்களின் மதிப்பு குறைந்து வருகிறது. மேலும் அனைவரும் தங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிய கருத்துக்களை

தெரிவிப்பதும் தேவையற்றது.” எனவும் அவர் கூறினார். போலியான செய்திகள் பரவுவதைத் தடுக்க சமூக ஊடக வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளைப் பயன்படுத்துவதன் நடைமுறை குறித்து கருத்துத்தெரிவித்த அவர், “சமூக ஊடகங்களில் உள்ள அனைத்தும் கண்ணுக்குத் தெரியாமல் தொடர்கின்றன”. உதாரணமாக ரத்தம், கொலைகள், காயங்கள் மற்றும் தற்கொலைகள் போன்ற தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விஷயங்கள் ஊடகங்களிலும், செய்திகளிலும் தெரிவிக்கப்படக்கூடாது. ஏனெனில் “அத்தகைய சூழலில், சமூக ஊடகங்களில் ஒரு நேரான போக்கை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. பெற்றோர்கள் கூட தங்கள் குழந்தையின் சமூக ஊடக பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாது. சமூக ஊடகங்களில் தனி நபரின் சுய தணிக்கை அல்லது சுய கட்டுப்பாட்டை அமுல்படுத்தா விட்டால் சமூக ஊடகங்களில் நெறிமுறைகள் அல்லது வழிகாட்டுதல்களை அமுல்படுத்த முடியாது.” என திரு. விஜயசூரிய வலியுறுத்தினார்.

“சமூக ஊடகங்களில் பரவும் போலி செய்திகள், இலங்கை அரசியல் கலாச்சாரம் மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரலை உருவாக்கும் பணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கம் செலுத்துகின்றன. கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இரு அரசியல் கட்சிகள் அவற்றின் தேர்தல் பிரச்சாரங்களை நடைமுறைப்படுத்த, அதிகமாகவோ, குறைவாகவோ போலி செய்திகளை தயாரித்து பரப்புவதில் ஈடுபட்டன. மேலும் 2009 இல் சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் மக்கள் மத்தியில் குறைந்த பிரபலத்தைப் பெற்ற கோதபய ராஜபக்ஷ, குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் 69 லட்சம் வாக்குகளைப் பெற்று நாட்டின் தற்போதைய முதல் குடிமகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னணியில் உள்ள சூழலிலும் மிகவும் தந்திரோபாயமான முறைகளில் போலி செய்திகள் பயன்படுத்தப்பட்டு இந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை உருவாக்கும் பணி கட்டமைக்கப்பட்டுள்ளன.” எனஅவர் இறுதியாக குறிப்பிட்டார்.

2017 ஜனவரியில் இங்கிலாந்து நாடாளுமன்றம் நடத்திய ஆய்வில் போலியான செய்திகளின் உள்ளடக்க வலிமையால் உண்மையான செய்திகளின் உள்ளடக்கத்தின் பெருமானம் குறைந்து வருவதைக் கண்டறிந்தது. மேலும் மகக்ள் மத்தியில் தொழில்நுட்ப முன்னேற்றம் சமூக ஊடகங்களின் பயன்பாட்டை மேலும் அதிகரித்துள்ளமை சமூக ஊடக இடை வெளிகளில் அனாமதேய போலி செய்திகளைப் பரப்புவதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும் பணம் சம்பாதிப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயற்படும் போக்குகள் அதிகரித்திருப்பதால் அதன் காரணமாக சமூகத்தோடு எப்போதும் முரண்படும் போக்கை அவதானிக்க கூடியதாக இருப்பதை இந்த ஆய்வு மேலும் வெளிப்ப டுத்துவதாக இருக்கின்றது.

அரசியலில் ஈடுபடும் இலங்கையர்களை அடிப்படையாக வைத்து நோக்கினால் இந்த நிலைமை மிகவும் மாறுபட்ட வடிவத்தை காட்டுவதாக அமைகின்றது. அரசியல் நடவடிக்கைகளில் உயர் மட்டம் முதல் அடிமட்டம் வரையில் அவர்களை ஆதரிப்பவர்களை இங்கு நாம் அடையாளம் காணலாம். குறிப்பாக தனிப்பட்ட இயலாமைகள், அதேபோல் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் சகவாசிகளும் போலி செய்திகளையும், எதிர்மறையான பிரச்சாரங்களை ஆக்க பூர்வமாக உருவாக்கக் கூடியவர்களாக இருக்கும் அதேவேளை இவ்வாறான செய்திகளை உருவாக்கிய உண்மையான உரிமையாளரின் அடையாளத்தை வெளிப்படுத்த முன்வராதவர்களாகவும் இருக்கின்றனர். இத்தகைய மக்கள் வாழும் சூழலில் தகவல்களின் உண்மை தன்மையை போலியான தகவல்களில் இருந்து வேறுபடுத்தி அறிவது பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலைமையை மாற்ற, தகவல்களின் துல்லியத்தை எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில் பாடசாலை மாணவர்களை தயார் படுத்தும் வகையில் அவர்களது பாடத்திட்டத்தில் விடயங்கள் உட்படுத்தப்பட வேண்டும். அத்துடன் இது தொடர்பாக ஆசிரியர்களுக்குபயிற்சிகளை வழங்க திட்டங்களும் செயல்படுத்தப்பட வேண்டும். ஒட்டு மொத்த சமூகத்தின் ஊடக கல்வியறிவை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அரசியல், சிவில், ஊடக அதிகாரிகள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பாகும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts