சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சமாதான ஊடகவியலின் முக்கியத்துவம்

யுத்தத்தின் முடிந்த பின்னர் இலட்சியமாக இருந்தது சமாதானமாகும். அதன் முடிவாக அமைந்தது நல்லிணக்கமாகும். யுத்தம் இல்லாததால் சமாதானம் என்பதல்ல. ஆனாலும் விவசாயிகள் பயிர் செய்துவிட்டு அறுவடையை எதிர்பார்ப்பது போன்று  நிலையான அபிவிருத்தி, முன்னேற்றம் மக்களது வாழ்விலான மாற்றம் என்பதற்கான அடிப்படையாகும்.

யுத்தம் ஒன்றில் எதிரி தோற்கடிக்கப்படலாம். ஆனாலும் கோட்பாடானது அவர்களிடம் இருந்து ஆயுதங்களை மீட்டெடுப்பதானது எதிரியை கூட வாழவைப்பதற்காகும். யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையில் வேறுபட்ட சமூகங்களுக்கு மத்தியில் நல்லிணக்க மற்றும் ஐக்கியத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகள் மூலமாக இனங்களுக்கு இடையில் சகவாழ்வை பலப்படுத்தவது குறிக்கோளாகும். நல்லிணக் செயற்பாட்டை உறுதி செய்யவும் அதன் இலக்கை அடையவும் அரசியல் தலைமைத்துவம் மாத்திரமன்றி சிவில் சமூகம் மற்றும் ஊடகவியலாளர்களின் பெறுப்புணர்ச்சியும் அவசியமாகின்றது.

இலங்கையின் நிலையில் 30 வருட காலமாக நடைபெற்ற இனவாத யுத்தத்தின் பின்னரும் கூட ஊடகங்கள் இன அடிப்படையில் வேறுபட்டதாக வெவ்வேறான அடிப்படையில் இனவாத போக்கை ஊக்குவிப்பதாக இயங்கி வருகின்றன. யுத்தம் தொடர்பாக அறிக்கையிடல் செய்த போது சிங்கள மற்றும் தமிழ் ஊடகங்களுக்கிடையில் இந்த வேறுபாட்டை தெளிவாக காண முடிந்தது. அண்மைய நிகழ்வின் அடிப்படையில் கூட பொத்துவிலில் இடம்பெறும் எதிர்ப்பு ஊர்வலத்தை சிங்கள மற்றும் தமிழ் ஊடகங்கள் செய்தி மற்றும் தகவல்களாக அறிக்கையிடல் செய்த போது இதனை தெளிவான உதாரணமாக அவதானிக்க முடிந்தது. இந்த ஊர்வலத்திற்கு போதுமான முக்கியத்துவம் வழங்கி அவ்வப்போதான நிகழ்வுகளை நேரடி ஒலிபரப்பு போன்று தமிழ் ஊடகங்கள் வெளிப்படுத்திய அதே நேரம் சிங்கள ஊடகங்களில் அல்லது சொல்லப்பட்ட தேசிய ஊடகங்களில் அதற்கான முக்கியத்துவம் மிகவும் அரிதான அளவிலே வழங்கப்பட்டன அல்லது விமர்சிக்கப்பட்டன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற இலங்கை விவகாரம் பற்றிய அறிக்கையிடலை இதே ஊடகங்கள் இன அடிப்படையிலான வேறுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் முன்வைப்பதை மற்றுமொரு உதாரணமாக காட்டலாம். 

ஊடகங்கள் இவ்வாறாக பிரிந்து செயற்படுகின்ற நிலையில் இலங்கையில் நல்லிணக்கமானது சாத்தியமற்றதாகும். சிவில் யுத்தம் முற்றுப்பெற்ற ஆரம்ப நாட்களில் யுத்தத்தின் பின்னரான அறிக்கையிடல் தொடர்பாக வழி நடத்தலுக்கென்று சில அமைப்புக்கள் இயங்கி வந்தன. ஆனாலும் தற்போதைய ஊடக செயற்பாட்டின் அடிப்படையில் அது பற்றி மிகவும் குறைந்த மட்டங்களிலே பேசப்பட்டன. இனவாத ஊடகவியலின் நடவடிக்கையில் “லகுணா” என்ற இனவாத ஊடக நடத்தையே சமாதான ஊடகவியல் பற்றி ஜோன் கல்டங் என்பவர் மிகவும் பெருத்த சப்தத்துடன் குரல் எழுப்ப காரணமாக அமைகின்றது.

பல்வேறுபட்ட இனங்களுக்கிடையில் சமாதானத்தை கட்டி எழுப்பும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், பத்திரிகை ஆசிரியர்கள் சமாஜம் மற்றும் பத்திரிகை வெளியீட்டாளர்கள் அமைப்பு ஆகியன சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் பாடுபடும் ஊடகவியலாளர்களுக்கு வருடாந்தம் சமாதான ஊடகவியலுக்கான விருதுகளை வழங்கி ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையில் ஊடக நிறுவனங்களை சமாதானத்தை நோக்கி நகர்த்த முடியும். பொருளாதார அபிவிருத்திக்கு சமாதானம் அவசியமானதாக இருப்பதால் வெவ்வேறான இனங்களுக்கு மத்தியில் சமாதானத்தை பலப்படுத்தும் நோக்கில் இத்தகைய ஊடக நடத்தையை நெறிப்படுத்த தனியார் துறையினரும் போதுமான பங்களிப்பை செய்ய முன்வர வேண்டும்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts