கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக உள்ளதா?

விஸ்வாஜித் கொடிகர

பல இலங்கையர்கள் வைகாசி மாதத்தை வெசாக் காலமாக அறிமுகப்படுத்துகிறார்கள், ஏனெனில் அந்த மாதத்தின் பௌர்ணமி நாள் புத்தரின் பிறப்பு, பரிநிர்வாணம் மற்றும் முக்தியை குறிக்கிறது. பாரம்பரியமாக, பௌத்தர்கள் இந்த காலத்தில் அக மற்றும் புறத் தானங்களை   மேற்கொள்கிறார்கள். அதனைத் தவிர, வைகாசி மாதம் தென்மேற்கு பருவமழையின் மூலமாக கனமழையைக் கொண்டு வருகின்றது. 

வைகாசி மாதத்தில் அந்த வழக்கமான சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளன. செய்தி அறிக்கைகளிலிருந்து பெறப்பட்டவையின் சுருக்கம் பின்வருமாறு.

செய்தி இல 01: மே 13 அன்று, கொலை மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான சந்தேக நபரின் மரணம் குறித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்த நபர் மெலன் மபுலா எனப்படும் உரு ஜுவா என்று அறியப்பட்டவராவார். அவர் பல ஆண்டுகளாக தடுப்புக் காவலில் இருந்ததுடன் மே 10 அன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அவர் பல குற்றங்களுக்காக சந்தேகிக்கப்பட்டார். நவகமுவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு விசேட போலீஸ் குழு அவரை அதே நாளில் கைது செய்தது. அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் வெளிப்படுத்தியதாகவும், அவற்றை கண்டுபிடிப்பதற்காக ஒரு போலீஸ் குழுவை வான்துரமுல்லவில் உள்ள தனியான வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் பொலிசார் கூறுகின்றனர். பொலிஸ் குழு மீது சந்தேக நபர் கையெறி குண்டை வீச முயன்றதாகவும், தற்காப்புக்காக பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

https://www.hirunews.lk/english/271122/police-inventate-reagrding-urujuwas-death-ween-in-police-custody-video

செய்தி இல 02: மே 14 அன்று சில ஊடகங்களின் முக்கிய செய்தி என்னவென்றால், கொஸ்கொடவைச் சேர்ந்த தாரக என்று அறியப்பட்ட மற்றொரு பாதாள உலக  குழு நபர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்துவிட்டார் என்பதாகும். தர்மகீர்த்தி தாரக பெரேரா விஜேசேகர எனப்படும் கொஸ்கொட தாரக (34) பேலியகொட குற்றவியல் புலனாய்வு பிரிவுக்கு தடுப்புக் காவல் மூலம் ஒப்படைக்கப்பட்டார். கொலை மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான விசாரணையின்போது அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் வெளிப்படுத்தியதாகவும், அவற்றை கண்டுபிடிப்பதற்காக ஒரு பொலீஸ் குழுவை மிரிகமவின் ரெண்டபொலவில் உள்ள வலவ்வத்தையில் உள்ள தனியான வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். அங்கு பொலிஸ் அதிகாரியிடமிருந்த ஆயுதத்தை கைப்பற்ற சந்தேகநபர் முயன்றதாகவும், தற்காப்புக்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் அவர் இறந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

https://www.facebook.com/adaderana/videos/225507642247652/

செய்தி இல 03: தண்டனை பெற்ற கைதியை கொலை செய்ய ஒரு திட்டம் இருப்பதாக கூறி அவரது தாயாரால் அளிக்கப்பட்ட மனு தொடர்பானது. மனுதாரர் போதைப்பொருள் மோசடி கும்பலின்  தலைவனான கம்பளை விதானகே சமந்த குமாரா எனப்படும் வெலி சுதாவின் தாயாராகும். சந்தேக நபரின் தாயாரான ஆர்.ஜி. மலனி தனது மகனை படுகொலை செய்வதற்கான சந்தேகத்திற்குரிய முயற்சியை தலையிட்டு தடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் வலியுறுத்தினார். இந்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மே 17 அன்று பூசா சிறைச்சாலை அத்தியட்சகருக்கு சந்தேகநபர் 24 ஆம் திகதி வரை அழைத்துச் செல்லப்படுவதைத் தடுத்து தடை உத்தரவை பிறப்பித்தது.

https://www.dailynews.lk/2021/05/18/local/249570/ca-orders-not-remove-wele-suda-boossa-prison

செய்தி இல 04: இந்த தலைப்புச் செய்தியின் விடயம் என்னவென்றால், ஜனித் மதுசங்க எனப்படும் பொடி லசியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சட்டமா அதிபர் ஒப்புக் கொண்டார் என்பதாகும். மே 20 அன்று தடுப்புக் காவலில் உள்ள ஒரு கைதியின் பாதுகாப்பு தொடர்பான மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலித்தபோது, ​​சட்டமா அதிபர் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸ் மா அதிபருக்கு அறிவிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

https://www.dailynews.lk/2021/05/18/local/249570/ca-orders-not-remove-wele-suda-boossa-prison

கொஸ்கொட தாரக தொடர்பான சம்பவத்தைப் பொறுத்தவரை, அவரது வழக்கறிஞர் தனது கட்சிக்காரரின் உயிருக்கு உள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இந்த ஊடக அறிக்கைகளை பகுப்பாய்வு செய்வது இந்த கட்டுரையின் நோக்கமல்ல. இந்தக் கட்டுரை சட்டத்தின் ஆட்சி, அமைதி மற்றும் ஒழுங்கு குறித்த நிலைமை முன்வைக்கும் சவாலில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

போதைப்பொருள் மோசடியாளர்கள் மற்றும் பாதாள உலக குற்றவாளிகளால் ஏற்படும் சமூக சேதங்களுக்கு எதிராக எந்த வாதமும் இருக்கவில்லை என்பதுடன், அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அனைவரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாகரிகமடைந்த குடிமக்களின் உணர்வுப்படி, அனைத்து போதைப்பொருள் கடத்தல்காரர்களும் குற்றவாளிகளும் சட்டவிரோதமாக அல்லாமல் சட்டப்படி அடக்கப்பட வேண்டும். இந்த பின்னணியில், நீதிமன்றம் பொலிஸிற்கு வழங்கிய உத்தரவுகள் முரண்பாடாகத் தோன்றுகின்றன. அத்தகைய நீதிமன்ற உத்தரவுகளால் உருவாக்கப்பட்ட சட்ட ஆட்சியின் சித்தரிப்பு இருண்டதாகும்.

இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம் (BASL), தங்களது காவலில் உள்ள நபர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டது.

ஏனெனில் மேலே விவரிக்கப்பட்ட சம்பவங்கள் நீதித்துறைக்கு புறம்பான கொலைகளாக தோன்றின. BASL இன் முழு அறிக்கையையும் கீழே உள்ள இணைப்பு வழியாக அணுகலாம்.

https://basl.lk/statement-by-the-excoming-committee-of-the-bar-assademy-of-sri-lanka-on-killing-of-suspects-in-custody-of-the-police/

அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு என்பன சமூகத்தின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மற்றும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உறவுகளாகும். சட்டத்தின் ஆட்சி கட்டாயமாக அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்பதுடன், அது காட்டப்பட வேண்டும். நீதி எல்லாவற்றிற்கும் மேலானது என்ற எண்ணக்கரு அதனையே வெளிப்படுத்துகின்றது. இந்த எண்ணக்கருக்கள் இயல்பாகவே ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றைப் பிரிக்க முடியாது. ஒரு எண்ணக்கரு மற்றொன்றை வளர்க்கிறது என்பதுடன், சிதைந்த சட்ட அமைப்பினால் அமைதியை வழங்க முடியாது. இது நல்லிணக்கத்தின் முதன்மைக் கொள்கைகளில் ஒன்றாகும். 

ஐ.நா மனித உரிமைகள் பேரவை சூழல் மற்றும் போருக்குப் பின்னரான இலங்கையில் போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் என்பவற்றின் அடிப்படையில் இந்த சம்பவங்கள் கருதப்படும்போது நிலைமை கடுமையானதாகிவிடும். இந்த பிரச்சினை சர்வதேச சமூகத்தின் முன் ஒரு ஜனநாயக அரசாக இலங்கையின் பெயரைக் கெடுக்கும்.

Law And Order

නීතිය හා සාමය

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts