கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கோவிட் தொற்றுநோயின் போது அனுஷ்டிக்கப்படும் மாற்றுத்திறனாளிக்களுக்கான தினம் டிசம்பர் 03

லசந்த டி சில்வா

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் திகதியை ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அறிவித்துள்ளது. மனித உரிமைகள், நிலையான வளர்ச்சி, அமைதி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் பிற உலகளாவிய குடிமக்கள் சம்மந்தப்பட்ட விடயங்கள் போன்று குறைபாடுகள் உள்ளவர்களுக்கு சமமான அணுகலை உறுதி செய்வதற்கான முக்கியத்துவத்துடன் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

டிசம்பர் 3 ம் தேதி என்பது மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தினம் மட்டுமல்ல, அனுஷ்டானங்களுக்கு முன்னதாக, இது ஒரு பொதுவான எதிர்கால முதலீட்டுக்கான தினம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இப்போதைய கோவிட் 19 காலகட்டத்தில் சமூகத்தில் குழப்பம், புறக்கணிப்பு மற்றும் துன்புறுத்தல் ஆகியன இடம்பெறும் மிகவும் நெருக்கடி நிறைந்த ஒரு நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒரு மோசமான சூழலையே எதிர்கொள்கிறார்கள் என்று கருதும் நிலையில் உள்ளனர்.

“இலங்கை சமுதாயத்தில் இன்னமுமே பெண்கள் இரண்டாம் தர பிரஜைகளாக கருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில், இது போன்ற ஒரு தொற்றுநோய் காலத்தில் எங்களைப் போன்றவர்கள் மீது குறைந்த கவனமே செலுத்தப்படுகிறது. “எங்களைப் போன்றவர்கள்” என்ற தனது மேற்கோளில் அவர் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை குறிப்பிடுகின்றார்.. ஷியாமலீ தில்ருக்ஷி ஊவா மாகாணத்தில் வெல்லவாய அருகே மிகவும் பின்தங்கிய கிராமமான சியாம்பலாகுனயாவில் வசிப்பவர். அவர் தற்போது சியம்பலலாகுனய பாடசாலையில் கல்விசாரா ஊழியர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான வெல்லஸ அமைப்பு சார்பாக டிசம்பர் 03 திகதி அன்று அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். தில்ருக்ஷி இந்த குழுவின் செயலாளராக உள்ளார். சுத்தமான குடிநீர், சுத்தம், சுகாதாரம், அத்துடன் உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் திருப்தி அற்ற ஒரு பிராந்தியத்தில் வாழ்ந்து வரும் அவர் குடிமக்கள் பொதுவாக அனுபவிக்கும் சில பிரச்சினைகள், தொற்றுநோய் காலத்தில் எவ்வளவு கடுமையானவை என்பதை சோகமாக விவரிக்கிறார். “நான் பெண்கள் மற்றும் யுவதிகளுக்காக பேசுகிறேன். அறிவார்ந்த வளர்ச்சி என்பது இளம் பெண்களுடன் தாய்மார்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றியது என்று வைத்துக்கொள்வோம், குறிப்பாக இது போன்ற நேரத்தில். அத்தகைய யுவதிகளுக்கு மாதவிடாய் காலத்தில் தங்கள் சுகாதாரத்தை எவ்வாறு பராமரிப்பது என்று கூட தெரியாது என்பது எங்களுக்குத் தெரியும். எனவே ஒரு தொற்றுநோய்க்கு மத்தியில் ஒரு துடைப்பைப் பெறுவதில் கட்டுப்பாடுகள் இருக்கும்போது, மகள்களுடன் தாய்மார்கள் எதிர்கொள்ளும் சிரமத்தை பொதுசமூகம் புரிந்து கொள்வதில்லை. என்னைப் போன்ற ஊனமுற்ற ஒருவருக்கு பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது அசாதாரண பிரச்சினைகள் உள்ளன. பஸ்ஸில் ஏற எனக்கு யாராவது உதவுவது எளிதல்ல,” என்றார். பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள பெண்கள் முகபாவங்கள் மூலம் தொடர்பு கொள்ளும்போது மற்றும் பெண்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு அரசின் தலையீடு மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து விடை தேடுவது நாகரிக சமுதாயத்தின் பணியாக இருக்க வேண்டும் என்று தில்ருக்ஷி கூறுகிறார்.

மாற்றுத்திறன், தயவு மற்றும் மரியாதை

ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3 ஆம் திகதியை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக 1992 ஆம் ஆண்டில் அறிவித்தது. அதன் நோக்கம் அனைத்து தரப்பிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதும், அவர்களை வளர்ச்சியின் பயனாளிகளாக்குவதும் ஆகும். அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்க்கையில் அவர்கள் மற்ற குடிமக்களுக்கு மாற்றமானவர்கள் அல்ல என்பதை அவர்களுக்கு உணர்த்துவதே அதன் நோக்கம் ஆகும். இந்த முறை “கொரோனாவுக்கு பிந்தைய உலகில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஈடுபாட்டுடன் அணுகக்கூடிய மற்றும் நிலையான சிறந்த வருவாயை உருவாக்குதல்” என்ற கருப்பொருளின் அடிப்படையில், டிசம்பர் 3 முதல் அவற்றைப் பற்றி பேச ஒரு வார  காலத்தை யுனெஸ்கோ பிரகடனப்படுத்தியுள்ளது. ஆனால் அதைவிட முக்கியமான விடயம் என்னவென்றால், இது போன்ற உலகளாவிய தலைப்பொன்றில் இலங்கையின் அணுகுமுறை என்ன? என்பதாகும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான வெல்லஸ அமைப்பின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணியாற்றும் மாற்றுத்திறனாளியான துலீப் சம்பத்  “இலங்கை சமுதாயத்தில் நிலவும் வரையறுக்கப்பட்ட கலாச்சார காரணிகள் இது போன்ற  உலகளாவிய தலைப்பொன்றின் அணுகலை மோசமாக பாதிக்கின்றன” என்று கூறுகிறார். “இருப்பினும், இலங்கையில் மத மற்றும் கலாச்சார அடிப்படையில் மக்கள் ஊனமுற்றவர்களை சபிக்கப்பட்டவர்களாக பார்க்கிறார்கள். எனவே மக்கள் ஊனமுற்றோருக்கு இரக்கம் காட்டி கௌரவப்படுத்துவதற்கு பதிலாக அவர்களை பாவிகள் என்று கருதுகிறார்கள். மற்றவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பாத ஊனமுற்ற ஒருவரை வீதியில் பார்க்கையில் எங்கள் மக்கள் சோற்றுப் பொதி ஒன்றை அல்லது 20 ரூபாயை நீட்டுகிறார்கள்,” இது தவறல்ல; என்றாலும் அவர்களின் நிலை சமூகத்தில் கௌரவத்துக்குரிய சம அந்தஸ்துடையோராக ஏற்றுக்கொள்ளப்படும் நிலைக்கு மாற்றப்பட வேண்டும் என்று கூறுகின்றார். எமது  நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரம்பரிய அணுகுமுறைகளை மாற்றுவதற்கான முறையான திட்டம் எதுவும் இல்லை என்பதுவும் தற்போதைய கோவிட் அதிகரிப்புக்கு ஒரு காரணம் என்று அவர் கூறுகிறார். இலங்கையில் கட்டப்பட்டு வரும் அனைத்து பொது கட்டிடங்களும் இப்போது ஊனமுற்றோருக்கான அணுகலைக் கொண்டிருக்க வேண்டும் என்று சட்டங்கள் உள்ளன. என்றாலும் பொதுவான நிலைமை என்னவென்றால், இந்த விஷயங்களைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. கோவிட் காலத்தில் அங்க குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இருக்கும் சிறப்பு சிக்கல்களைக் நோக்குங்கள்: ஒருவருக்கொருவர் உறவில் நாம் சராசரி மனிதனைத் போலன்றி மற்றவரைச் சார்ந்து இருக்கிறோம். கோவிட் உடன் தொடர்புடைய மூன்று அடிப்படை சுகாதார நடைமுறைகளிலும், சமூகம் நம்மைப் பற்றி சிந்திக்காமல் செயல்படுகிறது. கை கழுவுவதற்கு வசதியான இடங்களில், தண்ணீர் பெற காலால் அமுக்க வேண்டியுள்ளது. கால்களில் குறைபாடு இருந்தால், அந்த வசதியை பெற முடியாது. முகமூடிகள் பயன்படுத்தப்படும்போது, முகபாவங்கள் குறைவாகவே இருக்கும். கண் தெரியாதோர், நடக்க முடியாதோர் அநேகமாக  இன்னொருவரின் உதவியில் தங்கியே இருப்பர். அவ்வாறானோரின் நிலை எப்படி இருக்கும் என்று ஒரு நொடி கற்பனை செய்து பாருங்கள். அவர்களால் சமூக இடைவெளியை பராமரிப்பது கடினம் என்பது புரியும்.” இந்த சிக்கல்களைத் தீர்ப்பது எளிதல்ல என்று சிலர் நினைக்கிறார்கள், ஆனால் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவற்றைத் தீர்க்க இலகுவான வழிகள் உள்ளன. உடல் ரீதியான ஈடுபாடு இல்லாமல் ஆன்லைன் உறவுகளை ஊக்குவிப்பது போன்ற, நீர்குழாய்களுக்கு சென்ஸர்களை பொருத்துவதன் மூலம் இதனை இலகுவாக செய்து முடிக்கலாம் என்றும் துலீப் கூறுகின்றார். “சமூகம் இந்த விஷயங்களைப் பற்றி கூட்டாக சிந்திக்க வேண்டுமென்றால், நான் சொன்னது போல் அனுதாபத்திற்குப் பதிலாக, மரியாதை மற்றும் சம வாய்ப்புகளை வழங்க முடியும். காலினால் அழுத்தும் கேட்ஜட்டுக்கு பதிலாக சென்ஸர் குழாய்களை வாங்கி பொருத்தினால் எங்களைப் போன்றவர்கள் விரக்தியடைய அவசியமில்லை. எல்லா இடங்களிலும் என்றில்லாவிட்டாலும், முக்கிய இடங்களிலாவது இவ்வாறான வசதிகளை மேம்படுத்த வேண்டும். எப்படியாவது இவ்வாறானோர் அந்நியப்படுவதைத் தடுக்க வேண்டியுள்ளது.”

சேவைகளை விரிவுபடுத்துதல் ஒரு வழிமுறை

சேவை பெற வரும் அனைவரும் தெளிவான பார்வைக்கொண்டோராக இருக்க மாட்டார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மாறுத்திறனாளிகளை அணுகி சேவை வழங்கும் அதிகாரிகள் பாராட்டப்படவேண்டும் என்றும்  துலீப் கூறுகிறார். கோவிட் தொற்றின்போது போது தமது சமூகத்திற்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொண்டுவர வேண்டிய அவசியத்தைக் உணரும் டிக்கிரி குமார ஜயவர்தனவும் துலீப் கூறுவதை ஒப்புக்கொள்கிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான வெல்லஸ  அமைப்பின் தலைவரும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சேவையாற்றுபவருமான டிக்கிரி குமார “இவர்கள் போன்றோர் குறைபாடுகள் உள்ளவர்களாக அல்லாமல், சமூக பன்முகத்தன்மையில் வேறுபாடுகள் உள்ளவர்களாக பார்க்கப்பட வேண்டும்,  குறிப்பிட்ட வேறுபாடுகள் அவர்களின் தனி சிறப்பு” என்று கருதப்பட வேண்டும் என்று கூறுகிறார். “நான் சக்கர நாற்காலியில் முழுநேர தொழில்பார்க்கும் ஒருவன். இருந்தாலும் எனது அலுவலகத்தில் பணிபுரியும் பாக்கியம் எனக்கு கிடைத்து இருப்பதால், பிறர் தயவில் இருக்க வேண்டிய அவசியமில்லை, எனினும் கோவிட் தொற்று நோய்க்கு மத்தியில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு உலகம் போதுமானதாக இருக்க வேண்டும்” என்று டிக்கிரி  குமார கூறுகிறார். சத்துணவு மற்றும் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் ஆகியவற்றில் கூடிய கவனம் செலுத்த அவர் வலியுறுத்துகிறார். “உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலக மக்கள் தொகையில் மாற்றுத்திறனாளிகளாக குறைந்தது 15 சதவீதத்தினர் உள்ளனர். பொருளாதார ரீதியாக வறிய நாடுகளில், மாற்றுத்திறனாளிகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறைவாகவே கவனிக்கப்படுகிறது. மொனராகலை போன்ற மாவட்டத்தின் நிலைமை மோசமாக உள்ளது. சாதாரண நபருடன் இருக்கும் ஒரு குடும்பத்தை விட ஊனமுற்ற நபருடன் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு அதிக வாழ்க்கைச் செலவு உள்ளது. ”அத்தகைய குடும்பத்திற்கான போக்குவரத்து செலவு கூட ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதை அவர் உதாரணங்களுடன் சுட்டிக்காட்டுகிறார். “கோவிட் தொற்றுள்ள ஒரு குடும்ப பின்னணியில் இருந்து அவர் வருகிறார். எனினும் நிவாரணம் வழங்கப்பட்டபோது, அத்தகைய குடும்பங்கள் எதுவும் விசேட கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. முதுகெலும்பு பிரச்சினை உள்ள குழந்தைகளின் சிகிச்சைக்காக பயன்படுத்தும் மருந்துகளை பெறுவதில் இப்போது சிக்கல்கள் அதிகரித்துள்ளன. கொரோனாவின் காரணமாக அவற்றின் விலை இரட்டிப்பாகியுள்ளது. வயதுவந்த பெண் பிள்ளைகளின் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளின் சுகாதாரத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள்,” என்கிறார் டிக்கிரி குமார.  இலங்கையில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்கள் மீது அரசாங்கம் கூட சிறப்பு கவனம் செலுத்தவில்லை என்று டிக்கிரி குமார கவலையுடன் தெரிவிக்கின்றார்.

ஜீவன் கொடித்துவக்கு என்பர் நியூக்ளியஸ் அறக்கட்டளையின் ஒரு சமூக ஆர்வலர். குறைபாடுகள் உள்ளவர்களைப் பற்றி பேசும்போது அவர் “இம்முறை டிசம்பர் 3, ஒரு தனித்துவமான சமூக சூழலில் வருவது குறிப்பிடத்தக்கது என்று கூறுகிறார். “மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க இலங்கை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டம் உள்ளது. இந்த சட்டத்தில் குறைபாடுகள் உள்ளவர்கள் யார் என்பது பற்றிய வரைவிலக்கணம் உள்ளது. இது தொடர்பாக ஐ.நா. அமைப்புகளிலும் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. ஆனால் எமது அணுகுமுறைகள் அவற்றுக்கு உடன்பட்டதாக இல்லை. தற்போதைய கோவிட் விடயத்திலும் நாம் அதைக் காணலாம், உண்மையான ஊனம் குறைபாடுகள் உள்ளவர்களில் அல்ல, மற்றவர்களிடம்தான் உள்ளது.” என்று ஜீவன் கொடித்துவக்கு சுட்டிக்காட்டுகிறார். “எனவே, இதுபோன்ற தினங்களில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஊன்றுகோல் மற்றும் உணவு பாக்கெட்டுகளை வழங்குவதோடு நின்றுவிடாமல் சமமான வாய்ப்புகளுக்கான கொள்கைகளை, திட்டங்களை வகுத்தல் வேண்டும். கோவிட் காலத்தில் சுத்தமான நீர், உணவு மற்றும் சத்துணவு, மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார வாழ்க்கையில் அவர்களுக்கு நிலையான எதிர்காலத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்,” என்றும் ஜீவன் கொடித்துவக்கு சுட்டிக்காட்டினார்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts