கோபுரம் போன்று உயர்ந்துள்ள அம்புலுவாவ நல்லிணக்கம்

அம்புலுவாவ கோபுரம் மத்திய மாகாணத்தில் மேற்கு சரிவுகளில் கம்பளை நகருக்கு அருகில் கம்பீரமாக அமைந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருகைத் தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான இடங்கள் காணப்படுகின்றன.பல சமூக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் இயற்கைக்கு அப்பாற்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
அம்புலுவாவ கோபுரத்துடனான இந்த இடம் திசாநாயக்க முதியன்சலாகே ஜயரத்ன ( முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்ன) மத மத்திய நிலையம் மற்றும் உயிர் பல்வகைமை கட்டிடம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 3567 அடி உயரத்தில் இந்த கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கம்பளை நகரில் இருந்து 2017 அடி உயரத்தில் அம்புலுவாவ என்ற பெயரில் தூபி ஒன்று உள்ளது.அம்புலுவாவ கல் என்ற பதத்தின் பொருளானது அப – நீர் ஊற்று – உல்பத்லவ என்று குறிப்பிடப்படுகிறது.400 ஏக்கர் நிலத்தை உரித்தாக்கி வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. கம்பளை யுகத்தில் இயற்றப்பட்ட இலங்கையில் முதலாவது கவிதையான மயுர கவிதை 26 தொகுப்பு அம்புலுவாவகட ஊடாக குறிப்பிடப்பட்டுள்ளது.நாட்டுப்புறக் கதைகளில் குறிப்பிடுவதற்கமைய 4 ஆம் புவனேகபாகுவின் ஆட்சியில் இங்கு மூலிகை தோட்டம் இருந்ததாக நம்பப்படுகிறது. அத்துடன் பல்வேறு வகையான மூலிகை பொருட்கள் அம்புலுவாவ பூமியில் கிடைக்கப் பெற்றதாக நாட்டுபுற கதைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அம்புலுவாவ பூகோள மட்டத்தில் மிக முக்கியமானதொரு இடமாகும். இது மத்திய மலைநாட்டின் அமைந்துள்ள ஒரே தனித்த மலையாகும்.அத்துடன் இது பிரதான மலைகளில் ஒன்றாகும்.இலங்கையின் நிலப்பரப்பில் மூன்றில் ஒருபங்கிற்கு அதிகளவான பகுதி அம்புலுவா தொடக்கம் காணக்கூடியது விசேட அம்சமாகும். நீர்கொழும்பு -கொச்சிக்கடை தொடக்கம் மாத்தறை வெலிகம வரை இலங்கையின் கடற்கரை பகுதியில் காண முடியும். அம்புலுவாவ எல்லை 4 பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏனமில சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்தை பிரித்து மாகாண எல்லையில் கண்டி மற்றும் கேகாலை மாவட்டத்தை பிரித்துஇ மாவட்ட எல்லையில் மேல் பகுதி எல்லை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மாவனெல்ல பிரதேச செயலாளர் பிரிவு பிரிக்கப்பட்டு , பிரதேச செயலக பிரிவு எல்லை கம்பளை ஆசனம் மற்றும் மாவனெல்ல ஆசனம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் தொகுதி எல்லைகளும் இதனுள் உள்ளடங்கும்.
அம்புலுவாவ தொடர்பில் குறிப்பிட வேண்டிய பிறிதொரு சிறப்பம்சம் யாதெனில்இ அம்புலுவாவ மழையில் இருந்து கடலுக்கு செல்லும் மழைநீரானது மேல்பகுதி நோக்கி ஓடும் பகுதி இலங்கையில் நீளமாக மாஓயாவில் ஒன்றிணைந்து நீர்கொழும்பு,கொச்சிக்கடை பகுதியில் கடலில் சங்கமிப்பதுடன், கிழக்கு பக்கம் ஓடும் நீரானது இலங்கையில் நீளமான நதியான மகாவலி ஊடாக சென்று திருகோணமலை கடலில் சங்கமிக்கிறது. இலங்கையில் இவ்வாறான இரண்டு இடங்கள் காணப்படுகின்ற நிலையில் கினிகத்தேன பொலிஸ் நிலையத்தின் கூரை மீது விழும் மழை நீர் பிறிதொரு இடமாக காணப்படுகிறது. அது மகாவலி மற்றும் களனி கங்கையில் ஒன்றிணைவதால் பூகோள காரணிகளில் அம்புலுவா மிகவும் இன்றியமையாத இடமாக கருதப்படுகிறது.
1997 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி முதல் அம்புலுவாவ மத மத்திய நிலையம் மற்றும் உயிர்பல்வகைமை நிலையம் என்ற அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர். டி.எம். ஜயரத்ன இதன் ஸ்தாபகராக கருதப்படுகிறார்.ஏனைய நிர்மாணிப்புக்கள் மதிப்பீட்டு கருத்திட்ட அறிக்கைகள் இல்லாமல் பணிகளை ஆரம்பித்து தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேபோல் கருங்கற்களினால் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், மத தலம் உட்பட ஏனைய கட்டிடங்கள் அனைத்தும் சிரதமானம் மற்றும் அன்பளிப்புக்கள் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.இங்கு மதம் மற்றும் இன பேதமற்ற வகையில் சகலரும் ஒன்றிணைந்து ஒருமித்த இலக்குடன் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை விசேட அம்சமாகும்.
கம்பளை நகரில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய இனத்தவர்கள் வாழ்கின்ற நிலையில் இந்நாட்டில் பிரதான நான்கு மதங்களை பின்பற்றுபவர்கள் இந்த நகரில் வசிக்கின்றனர்.அதேபோல் பல்வகைமைத்துவத்துடன் இலங்கையராக ஒன்றிணைந்துள்ள இவர்களின் உழைப்பினால் அம்புலுவாவ உயர்வடைந்துள்ளமை சகலரினது ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.மத நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக அம்புலுவாவ கோபுரத்துக்கு அருகில் விகாரை, கோயில், தேவாலயம் மற்றும் பள்ளிவாசல் என்பன நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆகவே அம்புலுவாவ இலங்கையின் சர்வமத வழிபாட்டு இடம் என்று குறிப்பிடலாம். உலகில் இவ்வாறான சர்வமத சகவாழ்வினை வெளிப்படுத்தும் இடங்கள் குறைந்தளவில் காணப்படுகின்றன. எமது நாட்டில் இவ்வாறான இடம் இருப்பது இலங்கையர்களாகிய நாம் பெற்றுக் கொண்ட வெற்றியாகும்.அனைத்து பிரஜைகளும் அம்புலுவாவவுக்கு சென்று தமது மத வழிபாடுகளையும், மத நிகழ்வுகளிலும் ஈடுபட முடியும்.
உயிர்பல்வகைமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அம்புலுவாவவின் பங்களிப்பு இன்றியமையாதது. மிகவும் நீளமாக கொம்பு ஓணான் அம்புலுவாவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் 14 வகையான கழுகுகளை இப்பகுதியிலேயே காண முடியும். புராதன, பெரியளவிலான தாவரங்களின் பல்வகைமைகளை இங்கு காண முடியும். அத்துடன் 14 வகையான பாறைகளை அம்புலுவாவலில் ஒரே இடத்தில் காண முடியும்.
அம்புலுவாவ மலையில் உள்ள அம்புலுவாவ கோபுரம் ஆரம்ப காலத்தில் திதபந்தன் என்று அழைக்கப்பட்டது. நெல் ஒற்iறைப்படை விவசாய சமூகம் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. இது 179 அடி உயரமும், 35 அடி அகன்றதாகவும் காணப்படுவதுடன்இ 160 அடி உயரத்துக்கு சென்று சுற்றுச்சூழலை பார்வையிட முடியும். இதன் சூடாமணியின் உயரம்.11.2 அடியாகும். இதற்கு அன்று முதல் இன்று வரை விவசாய சமூகத்தினர் ஒத்துழைப்பு வழங்குவதால் நெல் ஒற்றைப்படை தூபி என்று பெயர் பெற்றுள்ளது. இந்த கோபுரத்தில் கீழ் முதல் பகுதியில் நெல் நாற்றுகளின் உருவபடங்களும்இ இரண்டாவது பகுதியில் வட்டக்காயின் உருவங்களும், மூன்றாவது பகுதியில் கொக்கோவின் உருவங்களும் மற்றும் தானியங்கள், மரகறிகள் மற்றும் பழங்களின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அம்புலுவாவ மலையில் இரண்டு வாவிகள் நிர்மாணிக்கப்பட்டு நீர் நிலை பாதுகாக்கப்பட்டுள்ளன. இதனால் மலையடிவாரத்தில் வாழும் மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தேவையான நீர் வருடம் முழுவதும் கிடைக்கப் பெறுகிறது.
நடைமுறையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அம்புலுவால மீது அதிகளவில் கவனம் செலுத்தியுள்ளார்கள்.அதேபோல் சுற்றுலா கைத்தொழிலை மேம்படுத்துவதற்காக பல்வேறு மறுசீரமைப்புக்களை முன்னெடுப்பதற்கு புதிய பகுதிகள் இணைக்கப்பட்டு அபிவிருத்தி பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் நூற்றுக்கு 8 சதவீதமானோர் அம்புலுவாவ பகுதியை பார்வையிடுவதற்கு வருகை தருவதுடன், அடுத்த ஆண்டு 15 சதவீதமானோர் வருகை தருவார்கள் என்பது பொதுமுகாமையாளரின் இலக்காகும். அதேபோல் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அம்புலுவாவ மலையை அண்மித்த பகுதிகளில் உள்ள வாவிகளில் படகு சவாரி சேவைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் அம்புலுவாவைக்கு இணையாக இலங்கையில் முதலாவது மற்றும் நீளமான கேபிள் கார் கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் நிர்வாக பராமறிப்பு மற்றும் நிதி விவகாரம் ஆகியவற்றை கண்காணிப்பதற்கு 2009 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க ‘ அம்புலுவாவ திசாநாயக்க முதியன்சலாகே ஜனரத்ன மத மத்திய நிலையம் மற்றும் உயிர் பல்வகைமை கட்டிட பொறுப்பு நிதிய சட்டம்’ என்ற பெயரில் சட்டம் உருவாக்கப்பட்டது. சட்டத்தின் பிரகாரம் அம்புலுவாவவின் நிர்வாக பணிகளை முன்னெடுப்பதற்கு அம்புலுவாவ நிர்வாக சபை செயற்பாட்டில் உள்ள நிலையில் அவர்கள் தன்னிச்சையான முறையில் சேவையில் ஈடுபடுகிறார்கள். இதற்கு மேலதிகமாக 36 பணிக்குழாமினர் சேவையில் உள்ளார்கள்.
கீழ் குறிப்பிடப்படும் சட்டத்துக்கமைய அம்புலுவாவ ஊடாக செயற்படுத்தப்படும் நிதியத்தின் நோக்கம் பல்வேறாக காணப்படுகின்ற நிலையில் அவற்றின் பிரதானவையாக…
-அம்புலுவாவ மத மத்திய நிலையம் மற்றும் உயிர்பல்வகைமையை பாதுகாப்பு அபிவிருத்தி செய்தல்.
-அம்புலுவாவ மலையை சூழ்ந்துள்ள பகுதிகளை மேம்படுத்தல்.
-சமூகத்தின் மத்தியில் அமைதி மற்றும் புரிந்துணர்பு மற்றும் ஒழ்துழைப்பை மேம்படுத்தல்.
-ஏனைய மத கலாச்சாரங்கள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்தல்.
– இலங்கையரின் மத அடையாளங்களை மேம்படுத்தல்.
-மத விவகாரங்கள் தொடர்பில் இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல் மற்றும் தெளிவுப்படுத்தல்.
-இலங்கைக்குள் மற்றும் வெளிநாட்டு மத களம் தொடர்பில் மாநாடு மற்றும் பயிற்சி செயற்திட்டங்களை ஏற்பாடு செய்தல்.
-மனித உரிமைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவுப்படுத்தல்.
– விளையாட்டு மற்றும் பொழுது போக்கான செயற்பாடுகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
-இலங்கைக்கே உரித்தான மருந்து மற்றும் மூலிகைகளை பாதுகாத்தல்.
ஆகிய நோக்கங்களுக்காக ஒத்துழைப்பு வழங்குகிறது.
அதேபோல் அம்புலுவாவ கோபுரம் வெறும் சீமெந்தினால் மாத்திரம் நிர்மாணிக்கப்பட்டதல்ல என்பது தெளிவாகுகிறது.இதனூடாக தேசிய நல்லிணக்கம் மற்றும் அமைதி என்பன ஒன்றிணைந்துள்ளன.அனைத்து இனத்தவர்களும், மதத்தவர்களும் இலங்கை பிரஜைகள் என்று அமைதியான முறையில் கைகோர்ப்பதற்கு புனிதமான இடமாக அம்புலுவாவ மத மத்திய நிலையம் மற்றும் உயிர் பல்வகைமை கட்டிடம் இன்றியமையாததாக உள்ளது.இதனை மேம்படுத்தி பாதுகாத்து தேசிய நல்லிணக்கத்தை பலமுடையதாக்குவதன் ஊடாக அம்புலுவாவ கோபுரம் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு பிரதான பங்கு வகிக்கிறது. நாட்டின் அபிவிருத்திக்காக அம்புலுவாவ கோபுரம் உயர்வடைவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
: தகவல்
-அம்புலுவாவ நிர்மாணிப்பு ஆலோசகர் விஜேசிங்க
-2009 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க அம்புலுவாவ திசாநாயக்க முதியன்சலாகே ஜயரத்ன மத மத்திய நிலையம் மற்றும் உயிர் பல்வகைமை கட்டிட நிதிய சட்டம்.