வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

கொவிட்-19 தொற்றால் இறந்தவர்களின் உடல்களை அகற்றுதல் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பு எழுதிய கடிதமொன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது. கொவிட்-19 தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டமைக்கு அந்த கடிதத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த கடிதம் தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்காக, பல்வேறு குழுக்கள் ஊடக சந்திப்புகளை நடத்தின. இப்பிரச்சினை பல பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியாக காணப்பட்டது. அரசியல்வாதிகள் பலர், இதுபற்றி தமது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லையென்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நவம்பர் 11ஆம் திகதி தெரிவித்தார். எனினும், சமூக ஊடக பயனர்களின் கருத்துக்கள் இந்த விடயங்களுடன் பொருந்தவில்லை. சமூக ஊடகங்களை நாம் ஆழமாக கண்காணிக்கும்போது வெறுப்புப் பேச்சு மற்றும் போலிச் செய்திகளுடன் ஏராளமான பதிவுகள் மற்றும் கருத்துக்களை அடையாளம் காணலாம். இவ்வாறான பதிவுகளை முகப்புத்தக பக்கங்களில் மிக அதிகளவானோர் பின்தொடர்கின்றனர்.

 gggg1

rrrrr3

கொவிட்-19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அகற்றுவது தொடர்பாக அரசாங்கம் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கி வருவதாக பௌத்தமத தலைவர்கள் பலர் குற்றஞ்சாட்டினர். கொவிட்-19 தொற்றினால் மரணித்த அனைவரது சடலங்களும் எந்தவொரு பிரிவைச் சேர்ந்தவர்களின் எதிர்ப்பும் இல்லாமல், இனம் அல்லது மதத்தை பொருட்படுத்தாமல் இதற்கு முன்னர் தகனம் செய்யப்பட்டதாக அவர்கள் வாதிட்டனர்.

எவ்வாறாயினும், கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது. சடலங்களை தொடுவது, அரவணைப்பது அல்லது முத்தமிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு, இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளலாம். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மீற்றர் இடைவெளியை பேணுவதோடு, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொவிட்-19 தொற்றில் இறந்தவர்களின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்கு, குழந்தைகள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த விதிமுறைகளின் நோக்கமானது, பங்கேற்பை குறைப்பதும் இறந்தவர்களின் உடலிலுள்ள அதிக செறிவுகொண்ட அபாயகரமான வைரஸினுடைய பரவலை தடுப்பதும் ஆகும்.

எனினும், சடலங்களை தகனம் செய்வது அவர்களின் கலாச்சார மற்றும் மத உரிமைகளை மீறும் செயலென சமூகத்தின் ஒரு பகுதியினர் கருதுகின்றனர். இறந்த ஒருவரின் இறுதிச் சடங்கின்போது  அவரது கலாச்சார மரபுகளுக்கு மதிப்பளிப்பது அவசியம். இது இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமன்றி அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானது. கொவிட்-19 காரணமாக மரணிப்பவர்களின் இறுதிச் சடங்குகள் தொடர்பாக, நாடு ஒரு பொதுவான நிலைப்பாட்டிற்கு வரவேண்டும். கலாச்சார வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் மக்கள் அந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். வெறுப்புப் பேச்சு மற்றும் போலிச் செய்திகளை பரப்புவதை மக்கள் தவிர்த்தால் பல முரண்பாடுகளை தவிர்த்துக்கொள்ளலாம். இதுவே, தற்கால சூழலில் சமூக ஊடக பயனர்களின் பொறுப்பாகும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts