கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொவிட் -19 தரும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடல்

சச்சினி டி பெரேரா

இந்த ஆண்டு பல மாதங்களாக தொடர்ச்சியாக கொவிட் -19 வைரஸ் பரவல் தொற்று நோயால் முடக்கம் ஏற்பட்டிருப்பதால் மில்லியன் கணக்கான மக்கள் மன அழுத்த பாதிப்பு பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பது இரகசியமல்ல. நாம் அறிந்தபடி உலகெங்கிலும் அமுல்படுத்தப்பட்ட திடீர் மற்றும் நீண்டகால பொது முடக்கத்தால் ஏற்படும் ஒரு விதமான பொதுவான கவலை அனைவருக்கும் உள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் வயோதிபர்கள் மத்தியில் மனச்சோர்வு, பதற்றம், நம்பிக்கையின்மை மற்றும் தனிமை உணர்வு போன்ற பாதிப்புக்களுடன்  வாழ நேர்ந்துள்ளது. விரக்தியடைந்த பெரியவர்கள் தயக்கத்துடன் அல்லது பயத்துடன் தங்கள் குழந்தைகள் மற்றும் உடன் பிறப்புகளுடன் வீட்டில் தங்க முயற்சிக்கும் போது, இளைஞர்கள் தங்கள் டிஜிட்டல் சாதனங்களை விட்டு விலகாது அதற்கு அடிமையாகி, நாளின் பல மணி நேரங்களை இந்த முறையில் செலவிடுகிறார்கள் என இந்த வருடம் நவம்பர் மாதம் வெளியாகிய கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஆய்வு அறிக்கையொன்று குறிப்பிடுகிறது. மக்களை வீட்டில் தங்கும்படி கட்டாயப்படுத்துவதன் மூலம் கோவிட் எவ்வாறு மக்களின் உள வள ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்திருக்கின்றது என்பது பற்றி இது வெளிப்படுத்துகின்றது. (https://rb.gy/pbctam

இந்த நிலைமைகள் காரணமாக மக்கள் தங்களுக்குள்ளேயே பேசிக்கொள்ள ஆரம்பித்துளள்னர்.

  • “என் தொண்டையில் புண் போல் உணர்கின்றேன், என் தலைவலிக்கிறது, எனக்கு சுவாசிப்பதற்கு கடினமாக இருக்கின்றது”
  • “நான் பெரும்பாலும் கவலையடைகிறேன்”
  • “நான் வெளியே செல்ல பயப்படுகிறேன்”
  • “இது ஒரு போதும் முடிவடையாதா?”

இந்த முறையில் மக்களின் சுய பேச்சு செல்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடர தங்கள் சொந்த உணர்வுகளையும் எண்ணங்களையும் எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி அறியாதவர்களாக உள்ளனர். சுய தனிமைப்படுத்தல் காலம் முடியும் வரை உணர்வு பூர்வமான ஆதரவிற்காக மக்கள் பெரும்பாலும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் திரும்புகின்றனர். ஒருவருக்கொருவர் இணைந்திருப்பதன் மூலம் மனித இயல்பு நிலைத்திருக்கிறது, மேலும் மக்கள் பெரும்பாலும் தனிமையாக வாழ முடியாது. எனவே சுய – தனிமைப்படுத்தல் அல்லது சமூக இடைவெளி பலருக்கு சுமாரான விளைவையே கொடுக்கும். நவம்பர் 1 ஆம் திகதி ஹோமகாமாவிலிருந்து 25 வயதான மாற்றுத் திறனாளி ஒருவர் தனது தாயை கொவிட் அறிகுறி காரணமாக மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்ற பின் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இந்த சூழ்நிலைகளைத்தவிர, பெரும்பாலும் வெளியில் தங்கி வாழ்வதை வழக்கமாகக் கொண்ட சில சமூகங்கள் வீட்டிலிருந்து வேலை செய்தல், தற்காலிக வேலையின்மை, குழந்தைகளுக்கான தொலைக் கற்றல் அல்லது வீட்டுப்பள்ளி போன்ற வரையறுக்கப்பட்ட சூழ்நிலையில் புதிய வாழ்க்கை முறைக்கும் மாற வேண்டி ஏற்பட்டது. வைரஸ் பாதிப்பு குறித்த பயத்தை போக்க ஒன்லைன் மூலம் (இணைய வசதியை பயன்படுத்தி) பணிபுரிபவர்களைத் தவிர வெளியில் வேலை செய்வதைப் பற்றி கவலைப்படுவதோடு உடல் ரீதியான உழைப்பு நடவடிக்கைகளை குறைக்கிறார்கள். வருமானம் ஈட்டும் வழிமுறைகள் மற்றும் உணவு உட்கொள்ளும் முறைகள் கூட வரையறுக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சில உழைக்கும் மக்களின் மாதாந்த வருமானம் அவர்களால் உழைத்து வாழ்ந்ததை விட அரைவாசியாக குறைந்திருக்கின்றது. மேலும் இந்த ஊழியர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை பராமரிக்க உணவளிக்க, மருந்து வகைகளை வாங்கிக் கொடுக்க போன்ற தேவைகளை ஈடு செய்ய வரவிருக்கும் மாதங்கள் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். தொற்று நோயால் உணவு பொருட்களை குறைவாக நுகர்வது, உணவுப் பொருட்களின் பற்றாக் குறை காரணமாகவும் உணவுப் பழக்க வழக்கங்களிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. மேலும் குறைந்த கல்வி மற்றும் மோசமான சுகாதார நடைமுறைகளைக் கொண்ட குறைந்த வருமானம் ஈட்டும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மன நலப்பிரச்சினைகள் மற்றும் கோவிட் -19 ஆகிய இரண்டு நிலைமைகளாலும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வாளர்கள்; தெரிவிக்கின்றனர்.

கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்ட ஐந்து பேரில் கிட்டத்தட்ட ஒருவருக்கு மனநலக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என “கார்டியன் பத்திரிகை (https://rb.gy/8ckql4 )” செய்தி வெளியிட்டுள்ளது. அவர்கள் கோவிட் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற உண்மையை அவர்கள் பயத்துடன் உணர்கிறார்கள் என்பதே இத்தகைய உளவியல் வீழ்ச்சிகளுக்கு காரணம் என மேலும் அவ்வறிக்கை விளக்குகிறது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இறந்து விடுவார்கள் என்று அஞ்சுகிறார்கள். ஆக்ஸ்போர்டு ஹெல்த் பயோ மெடிக்கல் ரிசர்ச் சென்டரின் தகவலின்படி கோவிட் நோயாளிகளில் 65% ஆனோர் முன்பே இருக்கும் மனநல நோய் அறியும் திறனை கொண்டுள்ளனர், முதுமை போன்றவை கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு மற்றவர்களை விட அதிகவாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. (https://rb.gy/pb7vco )

உண்மையாக இத்தகைய நெருக்கடியான மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத தருணத்தை கடக்க சில நாடுகள் ஏற்கனவே 247 தொழிற்படும் ரகசிய மற்றும் ஆதரவான ஆன்லைன் ஆலோசனை சேவைகளை கட்டணம் இல்லாமல் ஆரம்பித்துள்ளன. அவை பின்வருமாறு:-

  • இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் Crisis Text Line – (https://www.crisistextline.org/ )
  • Trevor Space (13 – 24 வயது இளம் பருவத்தினரை இலக்காகக் கொண்டது) – (https://www.trevorspace.org/ )
  • அமெரிக்கா மற்றும் கனடாவில் Trans Lifeline  (திரு நங்கைகளை இலக்காக கொண்டது) – (https://translifeline.org/ )
  • https://translifeline.org/
  • அமெரிக்காவில் தேசிய பாலியல் தாக்குதளுக்கான தொடர்பிலக்கங்கள் (National Sexual Assault Hotline in the USA) 
  • அமெரிக்காவில் தேசிய தற்கொலை தடுப்புபிரிவு (National Suicide Preventional Lifeline in the USA)
  • மன அழுத்தத்தின் போது முக்கியமான விடயங்கள் என்ன? உலகசுகாதார ஸ்தாபனத்தால் நடத்தப்பட்ட வழிகாட்டி மற்றும் ஓடியோ பயிற்சி வழிகாட்டல் (‘What Matters in Time of Stress’ guide and audio exercise conducted by the WHO)

நீங்களோ அல்லது உங்கள் அன்புக்கு பாத்திரமானவர்களோ தற்போது கடுமையான அழுத்தங்களை அனுபவித்து வருகிறீர்கள் அல்லது நடத்தையில் கடுமையான மாற்றங்களைக் கொண்டிருக்கின்றீர்கள் என்று நீங்கள் நினைத்தால், தயவு செய்து ஒரு உளவியலாளர் அல்லது மனநல மருத்துவரை உதவிக்கு தொடர்பு கொள்ளவும். இந்த கடினமான தருணங்களில் எந்தவொரு தனிநபருக்கும் உதவ அவர்கள் தயாராகஉள்ளனர். இலங்கையில், இந்த கடினமான காலங்களில் தொடர்பு கொள்ள சில பிரத்யேக மனநல சேவைகளும் உள்ளன. இலவச ஆலோசனை சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தொடர்பு இலக்கங்கள் பின்வருமாறு :-

CCC Foundation1333
Women’s Helpline1938
National Institute of Mental Health (NIMH) – Colombo1926
Professional Psychological Counselling Centre – Batticaloa0652226469
FPA Suwaseva Centre – Ampara   0634926664
National Council for Mental health – Sahanaya (Colombo)0112685960
Sri Lanka Sumithrayo Head Office (Suicide & All Type of Counselling Services)0112686666
Family Rehabilitation Centre (Family Counselling & Psycho-Social Support) – Colombo0112580166
Family Planning Association (Colombo)011280915/ 0112556611
Alokaya Youth Counselling Centre (Individual Counselling, Group Counselling, Awareness programs for the Public, Voluntary Counselling)0112584157
Sith Pahan Piyasa (Panadura)0382232307
Institute of Mental Health (IMH) – (Counselling services for children, youth, adults, couples, families and groups)0112506004/ 0714749625
Sahana Counselling Centre (Psychological, Family, Educational and Career Counselling) – Nuwara Eliya0714465582
Meta Mind International (Kandana)0112231861
Maruchi Coaching, Counselling and Training Centre (Moratuwa)0704550600
Colombo Healing Home & Institute (Family, Child & Relationship issues, Stress, Anxiety, Insomnia, Sexual Dysfunction, Depression, etc.) 0777851571
Life & Mind Wellness Centre (Malabe)0753633633
Heartwork (Colombo 10)0768830631
Sri Lanka Maha Bodhi Counselling Centre (Drug Counselling) – Maradana1984/ 0112677626
Psychology Life Centre (Kohuwala)0714890924

தனியாக, கைவிடப்பட்ட அல்லது மன அழுத்தத்திற்கு உட்பட்டால் ஒரு ஆலோசகருடன் பேச வேண்டிய அவசியம் குறித்து யாரும் வெட்கப்படக்கூடாது என உள வள ஆரோக்கிய நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். திடீர் முடக்கம் காரணமாக மரண வீதம் அதிகரித்தல், உணவு பற்றாக்குறை, மனச்சோர்வு அல்லது மன அழுத்தம், விரக்தி நிலை போன்ற பிரச்சினைகளுக்கு நீங்கள் மற்றவர்களைக் குறை கூற முடியாது என்றாலும், நீங்களே பழியை உங்கள் மீது சுமத்தவும் கூடாது. மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த நெருக்கடி மிக்க எதிர்த்து போரடி உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொண்டவர்களாக வாழ்க்கையை வெற்றிகொள்ள வலுவான மற்றும் உறுதியான மனநிலையுடன் இருங்கள்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts