கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொவிட்-19 என்பது ஒரு தொற்றுநோய் மாத்திரமா?

“வைத்தியரே, முடக்கல் நிலையின்போது (லொக்டவுன்) என் கணவருடன் வீட்டில் இருக்க முடியாது. அவர் என்னை ஏற்கனவே கொன்றுவிட்டார்” வானொலி நிகழ்ச்சியொன்றிற்கு அழைப்பை ஏற்படுத்திய பெண்ணொருவர் இவ்வாறு குறிப்பிட்டார். கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில் மற்றொரு தொற்றுநோயும் பரவுகின்றது என்பது சிலருக்குத் தெரியும். அநேகமாக அனைத்து ஊடகங்களும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான எண்ணிக்கையில் கவனம் செலுத்துகின்றன. வீட்டு வன்முறை தொடர்பான எண்ணிக்கை மூடி மறைக்கப்பட்டுள்ளன. 

கொரோனா முடக்கல்நிலை காலத்தில் இலங்கையில் நாளாந்தம் சராசரியாக 10 முதல் 15 வரையான வீட்டு வன்முறை குறித்த முறைப்பாடுகள் பதிவாகின என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்போது தினமும் பதிவாகும் முறைப்பாடுகளின் சராசரியானது, முன்னர் மாதாந்தம் பதிவாகும் முறைப்பாடுகளின் சராசரிக்கு சமமானதென, பொலிஸ் துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் குறிப்பிடுகின்றது.

வீட்டு வன்முறை என்பதில், தாக்குதல் மற்றும் மனரீதியான வன்முறை, கூச்சலிடுதல் மற்றும் பாலியல் வன்முறை போன்ற உடல் ரீதியான வன்முறைகள் உள்ளடங்கும். உடல் ரீதியான வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஆண்களாகவும் அதில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாகவும் உள்ளனர். எனினும், பெண்களும் வீட்டு வன்முறையில் ஈடுபட்ட சம்பவங்களும் உள்ளன. எவ்வாறெனினும், 90 வீதமான வீட்டு வன்முறை சம்பவங்களுக்கு ஆண்களே காரணம். 

கொவிட்-19 முடக்கல் நிலையின்போது வீட்டு வன்முறை அதிகரிப்பதற்கான காரணம் என்ன? கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடக்கல்நிலைகள் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் வன்முறை நிறைந்த துணையுடன் ஒரு வீட்டில் முடங்கியுள்ள ஒருவர், தொற்றுநோயை விட மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளக்கூடும்.

மனிதர்கள் சுதந்திரத்தை விரும்புகின்றனர். நான்கு சுவர்களுக்குள் முடங்கிக்கிடக்க யாரும் விரும்புவதில்லை. எனினும், கடந்த காலங்களில் செய்ததைப் போல நாம் சுதந்திரமாக சுற்றித்திரிந்து எமது அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எம்மில் பலரது அன்றாட வாழ்க்கையை கொவிட்-19 மாற்றிவிட்டது. சிலர் மனச்சோர்வுடன் இருக்கின்ற அதேவேளை, நாம் அனைவரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளோம். இவ்வாறான மனச்சோர்வை எதிர்கொண்டுள்ள நபர்கள், தமக்கு நெருக்கமானவர்களிடம் அந்த அழுத்தத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஒரு சிறிய சிந்தனை மட்டுமே போதுமானது. இசை, ஓவியம், திரைப்படங்களைப் பார்ப்பது மற்றும் விளையாட்டு ஆகியவை மக்களின் மனநிலையை சமநிலைப்படுத்த உதவுகின்றன. மன அழுத்தத்தை தாங்க முடியாதபோது, மக்கள் 1926 என்ற எண்ணிற்கு அழைத்து அரசின் ஆலோசனை சேவையை பெற்றுக்கொள்ளலாம். உளவியல் ஆலோசகர்களின் இந்த சேவை முற்றிலும் இலவசமாகும்.

எனினும், தாம் வன்முறைக்கு உள்ளானதை வெளிப்படுத்துவதற்கு பெரும்பாலான பெண்கள் தயங்குகின்றனர். முறைப்பாடு செய்வதானது, மேலும் பழிவாங்கலுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். வீட்டு வன்முறைக்கு எதிரான அவர்களின் நடவடிக்கைகள் தமது குழந்தைகளையும் ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் சங்கடப்படுத்தக்கூடும் என்று வேறு சில பெண்கள் நினைக்கின்றனர். எனினும், துஷ்பிரயோகம் தொடர்பாக முறைப்பாடு செய்ய அவர்கள் அஞ்சக்கூடாது. அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தமக்கும் தமது குழந்தைகளுக்கும் மட்டுமன்றி, சமூகத்திலுள்ள ஏனையோருக்கும் உதவியாக அமையும். இதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.

 

ஆண்களை விட பெண்கள் உடல் ரீதியாக வலிமை குறைந்தவர்கள்  என யாரேனும் வாதிடலாம். ஆனால் அவள் ஆணை விட மனரீதியாக அதிக பலம் கொண்டவள். எனவே அவளுடைய உரிமைகளுக்காக போராடுவது அவளுக்கு கடினமான விடயமல்ல. 

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts