கொவிட் 19 உணவு பற்றாக்குறைக்கு முகம் கொடுத்தலும் தன்னிறைவு அடைவதும்
சச்சினி டி பெரேரா
கோவிட் -19 தொற்று நோயின் இரண்டாவது அலையை இப்போது எதிர் கொள்வதால் நம் நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2018 அரசியலமைப்பு நெருக்கடி, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல், மற்றும் இப்போது கொவிட்டின் முதல் மற்றும் இரண்டாவது அலைகள் போன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் 3.5%இல் இருந்த 0.5% வரை தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்துவருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. (https://economynext.com/sri-lanka-2020-gdp-to-contract-0-5-pct-imf-says-amid-coronavirus-hit-66040/ ) மருந்து, சுகாதாரம், உணவு மற்றும் வங்கி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே தற்போதைய நிலையில் மக்கள் முன்னுரிமை வழங்கி செலவுகளை செய்து வரும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதில் உணவுத் தேவையிலான நுகர்வு குறைவடைந்தாலும் போசாக்கு பொருட்களின் நுகர்வில் வீழ்சியை காட்டும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அவை தொடர்கின்றன. மேலும் சந்தை நடவடிக்கைகளிலான முடக்கம் உணவு பொருட்களின் பரிகரணத்தில் ஏற்பட்டுள்ள ஸ்தம்பித நிலை, வசதிகளிலான குறைவு காரணமாக உணவு பயன்பாட்டிலான குறைவு மற்றும் வீன்விரயம் என்பவற்றிலும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை உணர முடிகின்றது. குறிப்பாக நுகர்வோர் தேவை குறைவு போன்ற காரணங்களால் தொடரும் பணி நீக்கம் மற்றும் உணவு வீணானது ஊடகங்களில் அடையாளம் காணப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை மக்கள் வெளிப்புற சூழல் மற்றும் போசாக்குத்தேவை போன்ற விடயங்களில் உலகளாவிய ஒத்துழைப்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது. கோவிட் -19 காரணமாக உணவு கலாச்சாரத்தில் இப்போது முற்றிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது.
கோவிட் -19 இரண்டாவது அலையின் போது (அக்டோபரில்) வைரஸ் வேகமாக பரவியதால் இலங்கையின் முக்கிய மீன் சந்தையில் 49 வர்த்தகர்களுக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு பிரச்சினைகள் வெளிவரத் தொடங்கின. தலைநகரிலிருந்து வெளிப்புற பகுதிகளுக்கு வைரஸ் பரவுவதற்கு காரணமாக அமைந்த கொத்தணிகளில் வைரஸ் தொற்றும் ஒரு காரணமாகும். நகர்ப்புறங்களின் சில பகுதிகளிலும், கொழும்புக்கு வெளியே குறிப்பிட்ட பகுதிகளிலும் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை விதித்தது. இந்த சம்பவம் கோவிட் தொற்றினால் பிற சவால்களை எதிர்கொள்ளும் வேளையில் உணவின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களின் விழிப்புணர்வை ஈர்த்தது.
இலங்கை உலகளாவிய உணவு விநியோக சங்கிலியுடன் குறைவாக ஒருங்கிணைக்கப் பட்டுள்ளதால, மொத்தமக்கள் தொகையில் 30% அடங்கிய விவசாயத் துறை கொவிட் -19 பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான உணவு போக்குவரத்தை குறைப்பதன் மூலம், உள்நாட்டு உணவு உற்பத்தியைக் குறைப்பதன் மூலம், அத்தியாவசிய உணவு சேவைகளை வழங்காத அனைத்து கடைகளையும் மூடுவது, விலை மாற்றங்கள், தற்காலிக உணவு இறக்குமதி கட்டுப்பாடுகள் போன்றவை மூலம் கோவிட் காரணமாக ஏற்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு பிரச்சினையை சமாளிக்க அரசாங்கம் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தது. விவசாயிகள், கால் நடை வளர்ப்பாளர்கள் மற்றும் மீனவர்கள் இந்த திடீர் நடவடிக்கைகளால் அவர்கள் உழைத்த வருமானத்தை விட இழந்தவை அதிகம் என்று தெரிவித்தனர். அந்த வகையில் இரண்டாவது அலை முதல் அலையை விட ஆபத்தானது. எனவே, கோவிட் -19 இன் விரைவான பரவலால் மக்களை அதிகம் கவரும் இடங்களிலிருந்து காய்கறிகள், பேக்கரி தயாரிப்பு பொருட்கள் (பான், பனிஸ் போன்ற), இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றை வாங்க வெளியே செல்வது குறித்து பொது மக்களுக்கு தயக்கம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த காலகட்டத்தில் எழுந்த பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக மக்கள் இப்போது சமைத்த பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பதிலாக தங்கள் வீட்டுத் தோட்டங்களில் தேவையான பயிர்களை பயிரிட்டு வருகிறார்கள்.
விவசாய சமூகங்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பினரையும் சமநிலைப்படுத்த, காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான அறுவடை மற்றும் உற்பத்தி செயல்முறைகளுக்குள் குறைந்தபட்ச திறனை வலுப்படுத்தவும் அரசாங்கம் தொடர்ந்தும் போராடுகிறது. எனினும், உரங்களின் பற்றாக்குறை மற்றும் மீள் அறுவடை செய்யும் தரம் வாய்ந்த விதைகளை அறுவடை செய்தல் என்பன சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி செய்வது தொடர்பில் விவசாயிகளிடமிருந்து பல புகார்கள் வந்தன. மற்றைய சிக்கல் என்னவென்றால், எதிர்கால உணவுப் பற்றாக்குறை குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சங்களைக் கொண்டுள்ளனர் ,எனவே கூடிய விரைவில் அதிகமான உணவுப் பொருட்களை வாங்க முயற்சி செய்கிறார்கள். இது மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படும் சுகாதார முன்னெச்சரிக்கைகளுக்கு ஏற்ப குறைந்தபட்ச உழைப்புடனான உற்பத்தி செயல் முறைகளைப் பாதுகாப்பது குறித்த குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களை கடுமையாக பாதிக்கும் என்பதால் தன்னிறைவுள்ள உணவு நுகர்வை பராமரிப்பது மிக முக்கியம். மேலும், இலவச விதைகளை விநியோகிப்பதன் மூலம் வீட்டு தோட்டக்கலைகளில் ஈடுபட மக்களை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பிரச்சாரங்களைத் தொடங்கியது. தொற்று நோய்களின் போது உணவு பாதுகாப்பு மற்றும் தரமான ஊட்டச்சத்து நடைமுறைகள் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக இது செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகள் உள்ளூர் உணவுச் சங்கிலிகளுக்குள் நிலவும் கேள்வியை சமாளிப்பதற்கு ஓரளவு உதவியாக அமையலாம்.
இறக்குமதி செய்யப்பட்ட உணவுகளை ‘சாப்பிட /சமைக்க பாதுகாப்பானதா அல்லது பாதுகாப்பற்றதா’ என்ற தெளிவான முடிவை எடுப்பது சிக்கலான நிலைமையில் காணப்படுவதால் வெளிநாட்டு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது கடினம். இலங்கையின் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு உதவுவதற்காக தொற்று மற்றும் காலநிலை காரணமாக விவசாய நிலைமைகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் உலக உணவு திட்டத்தின் (WFP) அண்மைக்கால கண்காணிப்பு மற்றும் உணவு பாதுகாப்பு நிலையம் கவனம் செலுத்தியுள்ளது. (https://www.wfp.org/publications/sri-lanka-climate-and-food-security-monitoring-bulletin-maha-primary-harvest-season ) கோவிட் காரணமாக மோசமான சுகாதார நடைமுறைகளின் விளைவாக போசாக்கு குறைபாடு காணப்படுகின்ற பற்றியும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மக்கள் கிரமப்புறங்களிலும், ஒட்டுமொத்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இருந்து தொலைவில் இருப்பதாலும், வைரஸ் தொற்று நோய்களுக்கு வழிவகுக்கும் மோசமான உணவு பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக அந்த மக்கள் நோயால் பாதிக்கப்படலாம். உணவு இல்லாமல் வாழ்வது சாத்தியமற்றது என்பதால் தொற்று நோயுடன் நாம் தற்போது எதிர்கொள்ளும் மற்றொரு கணிசமான சவால் இதுவாகும்.
போதுமான விலங்கு உணவு இன்மை, தளபாட தடைகள், அத்தியாவசிய கால்நடை மருந்துகள் (இறக்குமதி செய்யப்பட்டவை, திடீர் தொழிலாளர் பற்றாக்குறை, உணவு பதப்படுத்துவதில் சிரமங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட திறன்கள், சந்தைகளை மூடுவது, நாட்டில் கால்நடைகளை பராமரிக்க குறைந்த வருமானம் போன்றவை காரணமாக கால்நடைகளும் இதே பிரச்சினைகளை எதிர் கொண்டன. அவசரகால நிலைமை காரணமாக கிட்டத்தட்ட 5,000 கோழிப் பண்ணைகளிள் 12000 இறைச்சி கோழி மற்றும் முட்டைகள் என்பன் காலாவதியாகி விட்டன. ஆனால் பால் பண்ணைகள் மற்றும் மாட்டுப் பண்ணைகள் பொது முடக்கத்தின் போதும் தூய பாலினை விநியோகிக்க வாய்ப்பு கிடைத்தமையால் குறைந்தளவு பாதிப்பையே எதிர்கொண்டன. கால்நடை வளர்ப்பு, உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் மார்ச் 2020 முதல் நேரடியாக விலங்குகள், விலங்கு உற்பத்தி பொருட்கள் மற்றும் விலங்குகளின் தயாரிப்புகளை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது போன்ற விடயங்கள் தொடர்பாக சரியான நேரத்தில் முடிவுகளை மேற்கொண்டமை, அது தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்தமை காரணமாக ஒருவகையில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையாக அமைந்தன. தொற்று நோய்களின் போது உணவுப் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், இது பொது மக்களின் ஒட்டுமொத்த பசி மற்றும் வருமானம் என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தன.
விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்களை விவசாய உணவுகள் வகைகள் மற்றும் கால் நடைகளை அவ்வப்போது கொண்டு செல்லவும் வழங்கவும் அரசாங்கம் அனுமதித்ததால், பொதுமக்களின் உணவு மற்றும் பொருளாதார பிரச்சினைகள் சார்பாக தீர்வுகாண முற்படும் போது உணவு குறைப்பு மற்றும் உணவு வீணாகுதல் போன்ற விடயங்கள் நன்மையாக அமைந்தன. நியாயமற்ற மாற்றீடுகளுடன் கலப்படம் செய்யப்பட்ட மஞ்சள் தூள் தவிர ஏனைய வீட்டுத்துறை சார்ந்த உணவுப் பொருட்களான அரிசி, தானியங்கள், தேங்காய் மற்றும் தேங்காய்ப்பூ, சமையல் எண்ணெய், சர்க்கரை மற்றும் பிற மசாலாப் பொருட்கள் போன்றவை ஆபத்தானவையாக இல்லை. ஏப்ரல் 2020 முதல் இறக்குமதி தடை செய்யப்பட்ட பொருட்களின் அதிகரித்து வரும் வரி காரணமாக மீதமுள்ள இறக்குமதிகள் பாதுகாக்கப்பட வேண்டியிருந்தது. இதன் விளைவாக, அத்தகைய பாதுகாப்பற்ற நேரத்தில் கூட கடைகள் மற்றும் உணவகங்களில் உணவு மோசடிகளை விசாரிப்பதில் பொது சுகாதார பரிசோதகர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.
கோவிட் -19 இன் தாக்கம் காரணமாக தற்போதைய உணவு நெருக்கடியை சமாளிக்க இலங்கை தொடர்ந்தும் போராடுகிறது. நெருக்கமான கண்காணிப்பு, சுகாதார முன்னெச்சரிக்கைகளின் கீழ் விவசாய நடவடிக்கைகள் தொடர்வது, இயந்திரங்கள் உணவு பதப்படுத்தும் நடவடிக்கைகள், பாதுகாப்பான உணவு போக்குவரத்து மற்றும் விநியோக சேவை போன்ற நடவடிக்கைகளை சரி செய்தல் உண்மையாக இத்தருணத்தில் திட்டமிடலின் அடிப்படையில் கையாளப்பட வேண்டும்.