Transparency

கொவிட் தொற்று உள்ளவர்களைக் கண்டறிய QR குறியீட்டு தொழில்நுட்பம் அறிமுகம்

ஐ.கே.பிரபா

ட்ரோன் கெமரா (பறக்கும் கண்காணிப்பு கெமரா) தொழில் நுட்பத்தின் மூலம் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் அது தொடர்பான  சட்டங்களை மீறுபவர்களை அடையாளம் காணவும் மற்றும் கண்காணிக்க இலங்கை இராணுவத்தில் ட்ரோன் ரெஜிமென்ட் என்ற பெயரில் அதற்கான கமரா பிரிவாக கண்காணிப்பு அமைப்பு 2020 நவம்பர் 12 அன்று ஸ்தாபிக்கப்பட்டது. கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரண்டைன தனிமைப்படுத்தல் மற்றுமு; லொக்டவுன் பன்னப்பட்ட நிலையில் உள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் வகையில் வெளியில் நடமாடுபவர் விரைவாகவும் துல்லியமாகவும் கண்டறிய புதிய வழியில் வின்னில் பறந்து திரிந்து அந்த தகவலை சேமிக்க ஞசு குறியீட்டு அமைப்பு நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. வெவ்வேறு சமூக மட்டங்களின்; ஊடக இலங்கையில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது ஒரு புதிய அணுகுமுறையாகும். இந்தகட்டுரையின் நோக்கம் ஞசு குறியீட்டு முறை தொடர்பாக கவனம் செலுத்துவதாகும்.

QR குறியீட்டு முறை, டிஜிட்டல் திட்டம் “ஆரோக்கியமாக இருப்போம்” எனும் தொனிப் பொருளில் பெயரிடப்பட்டுள்ளது. ஒருநபர் குறிப்பிட்ட இடத்திற்குள் நுழையும் போது, அந்த தரவு தகவல் தொடர்பு தொழில்நுட்பம் வழியாக அரசாங்க தரவுத் தளத்தில் பதிவு செய்யப்படுகிறது. இந்த QR குறியீட்டைப் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள் முதலில் “www.staysafe.gov.lk” (இணைய)வலைத்தளத்தைப் பார்வையிட்டு அதன் ஊடாக தங்களைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல் அனுப்பப்படும். பின்னர் இரகசிய குறியீட்டை பதிவு செய்வதன் மூலம் இந்த தொழில்நுட்பத்திற்குள் நுழைவதன் மூலம் இந்த சட்டத்தை மீறுபவர்களை கண்டறிய குறித்த தொழில்நுட்ப உதவியை பெற முடியும்.

https://lh4.googleusercontent.com/gtIvODHPlk3LB9a7UBWDaX-V2eAANcLyoU93lJBuGpDfGL3P25lFkVwwVlxT7i1M0yvG6cF8bo-oXMzBvI4DD4lB2A1dVmrgtjeWGud4zMcMsqifhTqw4OUhhEl4jesrmaX1bwMh
https://www.ox.ac.uk/news/2020-08-14-latest-version-covid-19-contact-tracing-app-ready-testing-isle-wight-and-newham

“இந்த தொழில் நுட்பம் கொரோனா வைரஸைக் கட்டுப் படுத்தக்கூடிய ஒரு மந்திர புல்லட் அல்ல. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கிறிஸ்டோப் ப்ரேசர் செய்த ஆராய்சியின் ஊடாக இந்த QR குறியீடு தொழில் நுட்பத்தைக் கண்டறிந்தார். மக்கள் சமூக இடைவெளி, சுகாதாரம், முககக் கவசம் அணிவது போன்ற பல விடயங்களை கடைபிடிக்கின்றார்களா போன் தகவல்களை கண்டறிவதற்கான ஒரு இலகுவான தொழில்நுட்ப வசதியாக இதனை கருதுகின்றார். மொத்த சனத்தொகையில் சுமார் 60% மான மக்கள் அளவிலாவது  உரிய வழிகாட்டல்களை சரியாகப் பின்பற்ற தவறினால் அது நாட்டை ஆபத்திற்குள் தள்ளி விடலாம் என்ற அபாயம் இருக்கின்றது” என்று அவர் தெரிவிக்கின்றார்.

அளிப்பதற்கான செலவு, தொற்று அடையாளம் காணப்பட்ட நபர்களின் தகவல்களை போன்றவற்றை QR முறை மூலம் அறிய முடிந்தால் அது எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகிறது என்பது தொடர்பில் சில முக்கிய கேள்விகள் எழுகின்றன. மேலும், சிறியளவிலான வர்த்தகர்கள், QR குறியீட்டை பயன்படுத்துவது பற்றிய அடிப்படை அறிவு இன்மை, தினசரி வருமான அடிப்படையில் வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறும் சுய தொழிலகளில் ஈடுபடுபவர்கள், பயணம் செய்யும் போது கையடக்க தொலை பேசிகளை மறந்து செல்பவர்கள், கையடக்க தொலை பேசிகளை பயன்படுத்தாத நபர்கள், தொழில்நுட்ப பயன்பாடுகளில் எந்த அறிவும் இல்லாத வயதானவர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் இத் திட்டத்தில் வரம்புகளை உருவாக்கும் சமூகங்களாக அடையாளம் காணப்படுகிறார்கள்.

கோவிட் -19 உடன் தொடர்புடைய வயதானவர்கள் மற்றும் நீரிழிவு நோய், ஆஸ்துமா மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. உயர் இரத்த அழுத்தம், நுரையீரல் பலவீனம் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் வைரஸால் அதிகம் பாதிக்கப்படக்கூடும். எனினும், கொரோனா வைரஸுக்கு வெளிப்பாடு நிலை குழந்தைகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. யுனெஸ்கோவின் (UNESCO) தகவலின் படி உலகளாவிய ரீதியில் 91% குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை கொரோனா வைரஸ் சேதப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு எவ்வாறு பரவுகிறது என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கொரோனா வைரஸை ஒத்த வைரஸ் இருமல், சலி, மற்றும் தும்மல் மூலம் பரவல் நிகழ்கிறது. பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து வெளியேறும் எச்சில் மற்றும் சலி மேற் பரப்பில் வைரஸ் பலநாட்கள் உயிருடன் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கோவிட் நோய்த் தொற்றின் அறிகுறிகள் தோன்றுவதற்கான நேரம் 14 நாட்கள் வரை ஆகலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.  சில ஆராய்ச்சியாளர்கள் கோவிட் அறிகுறிகள் தோன்றுவதற்கு 24 நாட்கள் வரை ஆகலாம் என்று கூறுகிறார்கள். இந்த அறிகுறிகளில் ஏதாவது வெளிப்பட்டால் அந்த நபரை உடனடியாக ஒரு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு கூறுகிறது.

QR குறியீடு முறையை அறிமுகப்படுத்தும் நிறுவனங்கள் விரைவாகவும் எளிதாகவும் பொதுமக்களுக்கு எவ்வாறு அவை கிடைக்கும் வகையில் அதை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதில் முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும். இதே போன்று தொழில் நுட்பத்தின் துல்லியமான புரிதலும் கல்வியறிவும் இல்லாதவர்களும் பயன்படுத்தக்கூடிய முறைகளைஅறிமுகப்படுத்தவும் முடியும். மேலும், இம்முறை தொடர்பில் இணையம் மற்றும் பாரம்பரிய ஊடகங்களைப் பயன்படுத்தி பரவலாக விளம்பரப்படுத்தப்பட வேண்டும். தொழில் நுட்பரீதியாக கல்வியறிவு இல்லாத மக்களுக்கு சமூக பொலிஸ் அல்லது சமூக சுகாதார அதிகாரிகள் மூலம் கைரேகை மற்றும் கண் ஸ்கேனிங் நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், கோவிட் தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அடையாளம் காணப்பட்ட துல்லியமான மற்றும் சம்பந்தப்பட்ட தகவல்களை வெளியிடுவதன் மூலம் அரசாங்கம் குறித்த  பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்.

2020 ஆம் ஆண்டின் டிஜிட்டல் தரவுகளின் படி உலக சனத் தொகையில் 67% வீத மானவர்கள் கையடக்க தொலை பேசியை பயன்படுத்துகின்றனர். இதில் 59% இணைய வசதியை பயன்படுத்தக்கூடியவர்கள் மற்றும் 49% பேர் இணையத்துடன் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் 49% இலங்கை மக்கள் கையடக்கத் தொலை பேசிகளைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில், 47% வீதமானவர்கள் இணையத்தைப் பயனபடுத்துகின்றார்கள், மேலும் 30% இணையத்துடன் தொடர்புபட்டிருக்கிறார்கள் என்று அறிக்கை கூறுகின்றது. மேலே உள்ள தரவுகளிலிருந்து, இன்னும் இலங்கை சமுதாயத்தில் இணைய பயன்பாடு குறைந்த மட்டத்தில் உள்ளது என்று முடிவுக்கு வரலாம். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இத்தகைய நடவடிக்கைகளை மேலும் வெற்றிகரமானதாக மாற்றியமைக்க தொடர்ந்து பரிசீலனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

https://lh4.googleusercontent.com/9FMHydig5CiG1qNVVKeZiyoY-lbG11IWEzKuUtBpwLvHHU9VYhjFz0gzYVCeNvQltPt_KkbC-orXjWRq5bVr7a2dhtr58icuqs3nHE_rJYrT3TrXCxtfCQcP8VMeVay9V08Cb6HK
https://datareportal.com/reports/digital-2020-sri-lanka

பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் நீங்கள் இருந்திருந்தால் உங்களை தனிமைப்படுத்த வேண்டும் என இங்கிலாந்தின் பொது சுகாதார நிறுவனம் கூறுகிறது. சுவாச நோய்கள் தொடர்பில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு முறைகளை கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாகவும் பின்பற்றலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்படும் அளவு கோல்கள் பின்வருமாறு:-

  • நீங்கள் பொது இடத்தில் இருந்தால் அடிக்கடி கைகளை சவற்காரமிட்டு கழுவ வேண்டும். சவற்காரத்திற்கு பதிலாக கை சுத்திகரிப்பு திரவத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
  • இருமல் மற்றும் தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மறைக்க ஒரு கைக்குட்டை அல்லது டிசு பயன்படுத்தப்பட வேண்டும். பயன்படுத்தப்பட்ட டிசு காகிதத்தை பயன்பாட்டிற்கு பிறகு வீசிவிட வேண்டும். இருமல் மற்றும் தும்மும் போது உங்கள் கைகளை அலல்து வேறும் மறைப்பு மூலம் உங்கள் வாய் மற்றும் மூக்கை மூடிக்கை கொள்ளவேண்டும்.
  • எப்போதும் சுவாச நோயாளிகளிடமிருந்து விலகி இருப்பதோடு பொது இடங்களில் அலைவதைத் தவிர்க்கவும்.
  • சுவாச நோய் அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியைப் பெறுங்கள்.

இத்தகைய நல்ல சுகாதாரப் பழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடிப்பது கொரோனா வைரஸ் மற்றும் தொற்று நோய்கலிலிருந்து பாதுகாப்பு பெறுவது மாத்திரமன்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழவும் உதவுகிறது. எனவே, இத்தகவலை சமூக மயப்படுத்துவதன்; மூலம் அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த ஒத்துழைக்க முடியும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts