கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொவிட் காலப்பகுதியில் பிரேத பரிசோதனை

சந்தலி அமாயா 

இந்த நாட்களில் தற்போதைய மற்றும் முக்கியமான கலந்துரையாடல் தலைப்பு கொவிட்-19 அல்லது கொரோனா வைரஸ் ஆகும். சமூகத்தில் உள்ள பல நபர்கள் இந்த வைரஸைத் தவிர்ப்பதற்கும் அவர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும் பல்வேறு உத்திகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பயன்படுத்துகின்றனர். எவ்வாறாயினும், பிரேத பரிசோதனைக்கான விடயம் மிகவும் விவாதத்திற்குரிய விடயமாகவே உள்ளது. பிரேத பரிசோதனை செய்யும் போது வைரஸ் ஒரு தனிநபருக்கு  தொற்றுமா என்பது கேள்விக்குரிய விடயமாகும். 

இந்த விடயத்தில், கண்டி மருத்துவமனையின் வழக்கறிஞர் பாலித பண்டாரா சுபசிங்க, இவ்வாறு கருத்துத் தெரிவிக்கின்றார். 

“இந்த வைரஸ் பாதித்த 18% நோயாளிகள் அறிகுறிகளைக் காட்டவில்லை. இந்த நோயாளிகள் சில சமயங்களில் மற்ற நோய்களால் பாதிக்கப்படலாம் அல்லது இந்த வைரஸ் பாதித்த பின்னரும் சம்பவங்களை எதிர்கொள்ளலாம். ஒரு மருத்துவமனை வளாகத்திற்குள் நுழையும் ஒவ்வொரு நபரும் சோதிக்கப்படுவதற்கு யதார்த்தமான வழி இல்லை. இதேபோல், ஒரு மருத்துவமனையில் உள்ள மருத்துவ ஊழியர்கள் எப்போதும் முழுமையான பாதுகாப்பு உடைகள் மற்றும் சீருடைகளை அணிவதும் நடைமுறைக்குச் சாத்தியமானதல்ல. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது அவர்களால் ஒரு மீற்றர் தூரத்தை வைத்திருக்க முடியாது. எனவே, மருத்துவத்துறையில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற நபர்களிடமிருந்து வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.”

அத்தகைய ஒரு நோயாளி இறந்தால், பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் எழும். இதன் பொருள், உடல் சிதைந்துவிடுவதுடன் குறிப்பாக சுவாச அமைப்பு சிதைந்தவுடன்  வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. இறந்த நபரின் சுவாச அமைப்பிலிருந்து இந்த வான்வழி அசுத்தங்கள் உடலிலிருந்து வெளியேறி காற்றில் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் பிரேத அறைகளில் அதிகம் காணப்படுகின்றது. இந்த முறைகள் மூலம் வைரஸ் பரவலாம். மேலும், இந்த வைரஸ் மனித உடலின் பல்வேறு உறுப்புகள் மற்றும் அமைப்புகளில் இருப்பதாக புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இந்த வைரஸ் மூளை, சமிபாட்டுத் தொகுதி, சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் தொகுதி ஆகியவற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பாகங்கள் துண்டிக்கப்படும்போது, வைரஸ் காற்றில் கலக்க வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. 

இதேபோல், பாதிக்கப்பட்ட உடலை எம்போம் செய்ய எடுத்தவுடன், இறுதி சடங்கு மலர்ச்சாலைகளில் பணிபுரிவோரும்  கிருமித் தொற்றிற்குள்ளாக  நேரிடும். 

இந்தோனேசியாவில் பாதிக்கப்பட்ட இறந்தவர்களை அடக்கம் செய்யும் நபர்கள் இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் புதியதாகவும் இதற்கு முன்பு உலகம் காணாததாகவும் உள்ளது. இந்த வைரஸ் எவ்வாறு இயங்குகிறது என்பதை விஞ்ஞானிகள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனவே இந்த வைரஸ் உடலில் எவ்வாறு நுழைகிறது என்பது சரியாகத் தெரியவில்லை. இந்த வைரஸ் நீரில் எவ்வளவு காலம் வாழ முடியும்? அல்லது மண்ணில் கலக்க வேண்டுமா? வைரஸ் நீர் ஆதாரங்களை மாசுபடுத்தும் வரை எவ்வளவு காலம் இருக்கும்? எனவே, தகனம் என்பது இந்த நிகழ்வில் எடுக்க வேண்டிய சிறந்த நடவடிக்கையாகும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts