கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்: எங்களது கண்ணீரைத் துடைக்கும் வழி!
தயா நெத்தசிங்க
சந்தேகிப்பதற்கும் நட்பை முறித்து தூரமாகுவதற்கும் பதிலாக எல்லா இனங்கள் மீதும் அன்பை பொழியுமாறு கடவுள் எமக்கு ஏவியுள்ளான். வன்முறைகளில் ஈடுபட்டு முரண்பாடுகளை தூண்டியவர்கள் அவர்களாகவே அவர்களது செயலுக்காக வெட்கி தலைகுனிய வேண்டும்…
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சேவையாற்றிவருபவர் ஹப்புத்தளையைச் சேர்ந்த சௌந்ததரராஜா. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலைமைகள் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் வழமையான வணக்க வழிபாடுகளை ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்காக அவர் நிறைவேற்றி வருகின்றார். தேவாலயத்திற்கு வருகை தந்துள்ள பக்தர்களின் முன்னிலையில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்த நிலையில் அந்த மக்களால் எவ்வாறு வழமை நிலைக்கு திரும்ப முடிந்தது என்பது தொடர்பாக அவர் எங்களோடு உரையாடினார். அந்த உரையாடல் வருமாறு :
“இந்த தேவாலயத்தில் எல்லா வைகயான பணிகளையும் செய்யும் வகையில் கடந்த 05 வருடங்களாக நான் இங்கு கடைமைகளை செய்து வருகின்றேன். இங்கு வருகின்ற சிங்களவர், தமிழர், கிறிஸ்தவர், முஸ்லிம் உட்பட மத வேறுபாடின்றி அனைவரையும் நான் சந்திக்கின்றேன். நான் கொழும்புக்கு வந்த பின்னர் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை பெற்றுள்ள ஒரே நபர் நான் மாத்திரமாவேன்”.தகட்டுமரன் : இந்த சம்பவம் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்ததா? உங்களது முஸ்லிம் நண்பர்கள் தொடர்பாக எவ்வாறான நிலையை நீங்கள் உணர்கின்றீர்கள்?
நாங்கள் வழமையாக சந்தித்து உரையாடுவது போன்ற வழக்கமான நிலைமைகளில் எந்தவிதமான மாற்றத்தையும் நான் காணவில்லை. அவர்கள் அனைவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மனவேதனை அடைந்துள்ளனர். கொச்சிக்கடை பிரதேசத்தில் எல்லா இனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு மிகவும் பலமான நிலையில் இருந்து வருவதால் இங்கு எங்களிடம் மனித நேயம் வெளிப்படுகின்றது என்பதை நான் உணர்கின்றேன்.தகட்டுமரன் : உங்களது குடும்பத்தின் பதில் நடவடிக்கை எவ்வாறானதாக இருந்தது?
குண்டு வெடித்த போது நான் தேவாலயத்தின் மெழுகுவர்த்தி ஏற்றும் மேடைக்கு அருகில் இருந்தேன். அந்த குண்டு வெடிப்பு தகவலை அறிந்தவுடன் எனது குடும்பத்தினர் பீதியில் உறைந்து போனதோடு என்னை அவசரமாக வீட்டுக்கு வருமாறு அழைத்தனர். அப்போதைய நிலையில் எனக்கு உடனடியாக வீடு திரும்ப முடியாது என்றும் நான் பின்னர் நேரம் கிடைக்கும் போது வீட்டுக்கு வருவேன் என்றும் அவர்களுக்கு உறுதி வழங்கினேன். அப்போதைய நிலையில் காயமடைந்த அனைவரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டி இருந்ததோடு அதற்காக எங்களது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அயலவர்கள் எங்களுக்கு உதவி செய்தனர். பாதுகாப்பு படையினர் அங்கு கடமைக்கு வந்த போது பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக என்ன செய்ய முடியும் என்பது தொடர்பாக நாங்கள் கலந்துரையாடினோம். அந்த சந்தர்ப்பத்தில் இன வேறுபாடுகள் காணப்படவில்லை.
ஒரு சிறு பயங்கரவாத குழுவினரால் செய்யப்பட்ட இந்த வேலைக்கு எல்லா முஸ்லிம்களும் பொறுப்பானவர்கள் அல்ல. பயங்கரவாதத்தின் பெயரால் நாங்கள் எங்களது முஸ்லிம் நண்பர்களை, அயலவர்களை புறம் தள்ளி ஒதுக்கிவிட முடியாது. இந்த யதார்த்த நிலைமைகளை நான் எனது குடும்பத்தினருக்கு விளக்கமாக எடுத்துக் கூறியதோடு தவறான தகவல்கள், வதந்திகள், செய்திகளால் பிழையான முடிவுகளுக்கு வந்து தவறான வழி நடத்தல்களுக்கு ஆளாக வேண்டாம் என்றும் எனது குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்கினேன். அவர்களுக்கு இந்த நிலைமைகளை எடுத்துக் கூறியவுடன் அவர்களால் மெதுவாகவாயினும் சரியான முறையில் உண்மைகளை புரிந்துகொள்ள முடிந்தது.தகட்டுமரன் : நாட்டில் பல பாகங்களிலும் நிகழ்ந்துள்ள பலவிதமான முரண்பாடுகள் மற்றும் மோதல் சம்பவங்கள் தொடர்டபாக உங்களது நிலைப்பாடு எத்தகையது என்று கூற முடியுமா?
கொச்சிக்கடை ஆலயத்தை சூழ சிங்களவர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்று எல்லா இனத்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர். பௌத்த ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயம், கோயில், பள்ளிகள் என்று பல்லினங்களதும் மத வழிபாட்டு தலங்களும் உள்ளன. எல்லாவகையான மக்களையும் நாங்கள் சந்தித்தோம். நாங்கள் இப்பிரதேசத்தை பாதுகாப்பதற்காக எல்லோரும் ஒன்றுமையாக தேவைiயான நடவடிக்கைகளை எடுத்ததோடு இப்பிரதேசத்தில் எந்தவிதமான வன்முறைகளும் ஏற்படவில்லை. வர்த்தக சம்மேளனங்கள், சமூக நல அமைப்புக்கள் போன்ற சமூக நல சேவை அமைப்புக்கள், கிறிஸ்தவ தேவாலயம், பௌத்த விரை, பள்ளிவாசல், கோவில் போன்ற மத வழிபாட்டு தலங்கள் அனைத்துமே இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கவலையை தெரிவித்ததோடு அனுதாபங்களையும் வெளிப்படுத்தினர். சந்தேகிப்பதற்கும் நட்பை முறித்து தூரமாகுவதற்கும் பதிலாக எல்லா இனங்கள் மீதும் அன்பை பொழியுமாறு கடவுள் எமக்கு ஏவியுள்ளான். வன்முறைகளில் ஈடுபட்டு முரண்பாடுகளை தூண்டியவர்கள் அவர்களாகவே அவர்களது செயலுக்காக வெட்கி தலைகுனிய வேண்டும்.தகட்டுமரன் : இந்த சம்பவத்திற்கு பின்னர் நீங்கள் உங்கள் ஊருக்கு போனீர்களா? உங்களது கிரமத்தில் வசிக்கும் உங்களது அயலவர்களது மன நிலை இந்த சம்பவத்தின் பின்னர் எத்தகையதாக இருந்தது.?
நான் ஊருக்கு போனபோது எனது அயலவர்கள் அந்த தற்கொலை தாக்குதல் நடந்த விதம் குறித்து என்னிடம் விசாரித்தனர். அதுவும் நான் எவ்வாறு உயிர் தப்பினேன் என்பது தொடர்பாக ஆச்சரியத்துடன் விசாரித்தனர். அவர்கள் இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் குறித்து கோபம் அடைந்ததோடு ஆத்திரமும் கொண்டனர். நான் அவர்களுக்கு ஒரு விசயத்தை தெளிவாக கூறினேன். பயங்கரவாதிகள் எங்களை தூரமாக்குவதற்கு திட்டமிட்டனர். ஆனால் நாங்கள் அவர்களது இலக்கை அடைய உதவி செய்யக் கூடாது. நாங்கள் பாதுகாப்பு படையினருக்கு இந்த விடயத்தில் அமைதி காக்க உதவி செய்ய வேண்டி இருப்பதோடு எங்களது அயலவர்களுடன் நாம் மேலும் நெருக்கமாக இருக்க வெண்டும் என்பதை அவர்களிடம் தெரிவித்தேன்.தகட்டுமரன் : இந்த தாக்குதலுக்கு மத தீவிவரவாத குழுவே பொறுப்பாகின்றதா? இந்த சம்பவத்துடன் சில மதவாத தீவிவரவாத குழு பொறுப்பானது என்ற விடயம் தொடர்பாக உங்களது நிலைப்பாடு எத்தகையதாக இருக்கின்றது?
இறைவனின் பெயரால் வன்முறைகளை மேற்கொள்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மதம் என்பது தனிப்பட்ட தெரிவாக இருக்கலாம். மாறாக ஒவ்வொரு மதமும் மனித வாழ்க்கைக்கான மேம்பாட்டையே போதிப்பதோடு மனிதர்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற நடத்தையை போதிப்பதில்லை என்று நான் நம்புகின்றேன். மதங்கள் எப்போதும் எவ்வாறு இனங்களுக்கிடையில் மனிதர்கள் மத்தியில் சமாதானத்தையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்புவது என்பதையே போதிப்பதாக இருக்கின்றது.
எனது நெருக்கமான உறவினர்கள் எனது மார்க்கத்தை பின்பற்றுவதில்லை. அத்துடன் நான் பின்பற்றும் அதே கடவுளை எனது குடும்பத்தினரும் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனது பிள்ளைகள் விளங்கிக் கொள்ளும் பருவத்தை அடைந்தவர்களாக வளர்ந்தவுடன் அவர்கள் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கு அவர்களுக்கு பூரண சுதந்திரம் இருப்பதோடு அவர்களாக சுதந்திரமான தெரிவை மேற்கொள்வார்கள். நாம் அனைவரும் கிரிஸ்தவ தேவாலயம், பௌத்த விகாரை, கோவில் மற்றும் பள்ளிவாசல்கள் அனைத்திற்கும் போகக் கூடியதாக இருக்க வேண்டும். சந்தேகங்களோ தடைகளோ இருக்கக் கூடாது. இந்தக் கருத்துக்களானது நான் கடவுளின் பெயரால் வைத்துள்ள நல்லெண்ணம், நட்புறவு, நல்லிணக்கம், சமாதானம் மற்றும் மனித நேயம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எனது நம்பிக்கைகளாகும்.
This article was originally published on the catamaran.com