குவேனி எப்போது தன் உண்மையான மகிமையைப் பெறுவாள்?
சர்வதேச மகளிர் தினம்
புராணங்களின்படி இலங்கையில் முதலில் குடியேறிய மக்கள் பெண்ணொருவராலேயே வரவேற்கப்பட்டனர். குவேனி என்ற அந்தப் பெண்> ஆரம்பத்தில் விஜய என்ற அந்த இளவரசனுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டாலும் பின்னர் அவருடன் நல்லுறவாகி> கப்பல் நிறைய மிகவும் களைப்புடன் இருந்த விஜயனின் தோழர்களுக்கு அபயமளித்தாள்.
இலங்கை பற்றி எழுதப்பட்டுள்ள புராணமானது குற்றம் புரிந்த ஆண் நாடோடிகள் உள்ளூர் பெண்ணின் வலிமையினாலும் சமூக சாமர்த்தியத்தினாலும் நன்மை பெறுவதாக காட்டுகின்றது. ஆனால் இங்கு துயரம் என்னவென்றால் இந்த புராணங்கள் தொடர்ந்தும் ஆதிக்கம் நிறைந்த இலங்கை ஆண்களின் நீண்ட இழிவுமிக்க காட்டிக்கொடுப்புகள் பாலியல் சுரண்டல் மற்றும் பாலின அடிமைத்தனம் நிறைந்த கதைகளையே கூறிச்செல்கின்றன.
இன்று> சர்வதேச மகளிர் தினத்தில் இந்த பெண்களின் புகழ்மிக்க ஆற்றல் எங்கு சென்றது அல்லது இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அது எவ்வாறு அடக்கப்பட்டு ஒரு புராணக்கதை அளவிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது என்று நாம் சிந்திக்கக்கூடும். எமது மக்கள் தொகையில் 51 சதவீதத்தை பெண்கள் கொண்டுள்ள போதும்> பிரதேச சபை முதல் பாராளுமன்றம் வரை எமது சட்டமன்ற அமைப்புகளில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே பெண்கள் அங்கம் வகிக்கின்றனர்.
நவீனமயப்பட்டுள்ள சமூகம் தந்த வாய்ப்புக்களை பெண்கள் சிறந்த முறையில் பயன்படுத்தியுள்ளமை> இலங்கைப் பெண்களுக்கு இந்த ஆற்றல் உள்ளது என்பதை தெளிவாக காட்டுகின்றது. இப்போது எமது பல்கலைக்கழகங்களில் பெண்களே பெரும்பான்மையான பட்டதாரிகளாக உள்ளனர். மருத்துவம்> வணிகம்> நிதி போன்ற தொழில்சார் துறைகளில் கணிசமான விகிதத்தினை பெற்றிருப்பதனைப் போன்றே விமான நிலைய வானூர்தி கட்டுப்பாட்டாளர்> துறைமுக கொள்கலன் தூக்கி கட்டுப்பாட்டாளர் போன்ற “வலிமையான”> ஆண்களுக்கு மாத்திரமே பொருத்தமானதாக முன்பு கருதப்பட்ட பணிகளிலும் அவர்கள் சப்தமின்றிப் பணியாற்றி வருகின்றனர்.
ஆனால்> மனித வரலாறு முழுவதும் குழந்தை பராமரிப்பாளர்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்களாக சித்தரிக்கப்படும் அவர்களின் அங்கீகரிக்கப்படாத> ஊதியமற்ற உழைப்பு பற்றி என்ன கூறுவது? மிகக்குறைந்த ஊதியம்> கடுமையாக நடத்தப்படல்> எமது நாட்டிற்கு மிகப்பெரிய அந்நிய செலாவணியை மீட்டுத்தரும் தேயிலை பறிப்பவர்களாக> ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களாக மற்றும் வீட்டுப் பணிப்பெண்களாக அவர்கள் உழைக்கின்றமை பற்றி என்ன கூறுவது?
இந்தப் பட்டியலில் கூறப்பட்டுள்ளவற்றின் பிரகாரம் பெண்கள் உண்மையில் தாக்கம் நிறைந்த> கடுமையான பாத்திரங்களை வகிக்கின்ற போதும்> அவர்கள் ஒருபோதும் பொறுப்புமிக்க தீர்மானம் எடுக்கும் பதவிகளில் நியமிக்கப்படவில்லை. அவர்கள் வகிக்கும் எந்தவொரு தலைமைத்துவமும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அல்லது மிகப்பெரிய செய்திக்குரியதாக அல்லது சர்ச்சைக்குரியதாக இருப்பது மிகவும் அரிதாகும். குவேனி எப்போது விஜயவுடன் சம பங்கினைப் பெறுவாள்?
இன்றைய நாளில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமானது செய்தித் துறை கூட தனது தீர்மானம் எடுக்கின்ற> கட்டுப்படுத்துகின்ற பொறுப்புக்களில் பெண்களை அதிகமாக உள்வாங்க மேற்கொள்ளும் முயற்சிகளை புதுப்பிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றது. இலங்கையின் தொழில்முறை ஊடகவியலாளர் சமூகமும் செய்தி தயாரிப்பில் பெண் வெறுப்பு உள்ளடக்கங்களை முற்றாக நீக்க முயற்சி செய்வதோடு சமூக ஊடகம் போன்ற ஏனைய பொதுமக்கள் தொடர்பாடல் மாதிரிகளில் இதுபோன்ற பெண் வெறுப்பினை ஏற்படுத்தும் விடயங்களை கட்டுப்படுத்தவும் முயல்கின்றது.