வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

குற்றவியல் உணர்வை மேலிடச் செய்யும் வகையிலான குற்றச் செயல்கள் பற்றிய உணர்ச்சி பூர்வமான அறிக்கையிடல்கள்

நாட்டில் குற்றச் செயல்களை ஒழிப்பதற்காக பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்டு வருகின்ற கடுமையான முயற்சிகள் காரணமாக ஊடகங்களில் குற்றச் செயல்கள் தொடர்பான அறிக்கையிடலுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டு வருகின்றன. இன்றைய தினசரி பத்திரிகைகளை கையில் எடுத்தால் அதிகமாக காணப்படுவது கொலை, கொல்லை, போதைப் பொருள் கடத்தல் பற்றிய செய்திகளாகும். போதைப் பொருள் கடத்தல் அல்லது குற்றச் செயல்களோடு சம்பந்தப்பட்டவர்களை தேடி வலை விரிப்பது 30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தின் பிரதிபலனாக ஏற்பட்டுள்ள விளைவா என்று கூட சந்திக்க தோன்றுகின்றது. பத்திரிகைகளில் பிரதான தலைப்பை தேர்ந்தெடுப்பதும் அறிக்கை இடுவதும் பத்திரிகையின் ஆசிரியரின் சுதந்திரமான தெரிவின் அடிப்படையிலாகும் என்பது உண்மை. இருந்தாலும் கொலைகள், குற்றச் செயல்கள் பற்றிய அறிக்கையிடலானது மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தாலும் அவற்றால் மக்கள் அடைகின்ற நன்மைகள் என்ன? அவை ஏன் முக்கியத்துவம் பெறுகின்றன என்ற அடிப்படையிலான கரிசனைகளை கவனத்தில் கொண்டு இத்தகைய அறிக்கையிடல்கள் அமைய வேண்டும் என்ற ஊடகங்களின் பொறுப்புணர்வானது மிகவும் முக்கியமானதாகும். ஆனாலும் இத்தகைய அவதானம் செலுத்தப்படுவதை விட இன்றைய ஊடகங்கள் வெறுமனே  சுவாரஷ்யமான தகவல்களை வழங்குவதை மாத்திரமே இலக்காக கொண்டு இயங்குகின்றன. இத்தகைய சாகசமான நிகழ்வுகள் தொடர்பாக சிங்கள பத்திரிகைகள் உச்ச நிலையில் இருந்து அறிக்கையிடலை செய்கின்ற அதே நேரம் அவை தொடர்பாக ஆங்கிலப் பத்திரிகைகளின் போக்கில் வேறுபட்ட நிலையை காண முடிகின்றது.

குற்றச் செயல்கள் தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரியின் தகவல்களை அல்லது மாஜிஸ்ரேட் நீதிவானின் விசாரணைகளை அறிக்கையிட எல்லா ஊடகங்களுக்கும் சுதந்திரம் இருக்கின்றன. இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் அதிகமான ஊடகங்கள் ஊடக ஒழுக்கக்கோவையை உதாசீனம் செய்த நிலையில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் வழங்குகின்ற வாக்குமூலங்கள் அனைத்தையும் அப்படியே பிரசுரம் செய்கின்றன அல்லது வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. கவலையை அல்லது மனத்தாக்கல்களை வெளிப்படுத்தும் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற் கொள்ளப்படும் போது அத்தகையவர்களால் வெளிப்படுத்தும் விடயங்கள் தொடர்பாக ஊடகங்கள் மிகவும் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டி இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையில் குறிப்பிட்ட ஒருவரை குற்றவாளியாக சித்தரிப்பதற்கு ஊடகங்கள் ஒருபோதும் முயற்சி செய்யக் கூடாது. குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கப்பட வேண்டும். ஊடகவியலாளர்களின் பொறுப்பாக அமைய வேண்டியது தமது நிலைப்பாட்டையும் கருத்தையும் மக்களுக்கு வழங்காமல் தம்மால் அறிக்கையிடப்படுகின்ற விடயங்களை மக்கள் சரியாக பார்த்து அல்லது படித்த பின்னர் ஒரு நிலைப்பாட்டுக்கு வருவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது சட்டத்தின் ஆட்சி மூலம் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்ட பின்னர் ஆகும். அவ்வாறே குற்றவியல் விடயங்களை அறிக்கையிடும் போது சில சந்தர்ப்பங்களில் சாட்சிகள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தும் போது அல்லது அவர்களை ஊடகங்கள் வாயிலாக அடையாளப்படுத்தும் போது அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைகின்றது.

 

  1. தகாத உறவு மனைவியை கோடாரியால் வெட்டி சடலத்தை துண்டுகளாக்கி தீயிட்டு எரித்து எலும்புகளை மஹா ஒயாவில் போட்டு : (28.09.2020 லங்காதீப)

a1

ஒரே பத்திரிகை நிறுவனத்தின் சிங்கள பத்திரிகை இவ்வாறு அதிகபட்ச விறுவிறுப்பை வெளிப்படுத்திய அதே நேரம் அதன் ஆங்கில பத்திரிகை (டெய்லி மிரர்) மிகவும் சிறிய அளவிலே குற்றச் செயல் சம்பந்தமான செய்திக்கு முக்கியத்துவம் வழங்கி இருந்ததையும் காணலாம்.

a2

 

அதே போன்று பாலியல் துன்புறுத்தல்கள் அல்லது குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய அடையாளங்களை காட்டும் வகையிலான தகவல்களை வெளிப்படுத்துவதும் ஊடக ஒழுக்கநெறிக்கு உட்பட்ட விடயம் அல்ல. மிகவும் பரபரப்பான முறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சேயா என்ற சிறுமியின் மரணம் தொடர்பான செய்திகள் இந்நாட்டின் குற்றச் செயல்கள் தொடர்பான அறிக்கையிடலில் அதிக கவனத்தை ஈர்த்த விடயமாகும். பாலியல் குற்றச் செயல்கள் தொடர்பான அறிக்கையிடலின் போது கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் போன்ற சொற்பதங்களை ஊடகங்கள் வாயிலாக அடிக்கடி காண முடிகின்றது. கற்பழிப்பு அல்லது பாலியல் துன்புறுத்தல் என்பதன் அர்த்தமாக அமைவது குறித்த பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு தூய்மையை இழந்துள்ளார் என்பதாகும். அதன் ஊடாக பாதிக்கப்பட்ட பெண் அல்லது சிறுமி சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படும் நிலை ஏற்படுகின்றது. சமூகத்தில் அவமானத்திற்கு உள்ளாகின்றாள். அவ்வாறு நடக்கக்கூடாது. இத்தகைய அறிக்கையிடலின் போது இள வயதினர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு அல்லது துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பான அறிக்கையிடலின் போது பாரதூரமான சொற்களை பயன்படுத்தாமல் இருப்பது ஊடகத்தின் பொறுப்பாகும். மக்களைக் கொண்ட சமூகத்தில் அவர்களது சிந்தனை வளர்ச்சியில் மொழியின் பங்களிப்பு அளப்பரியதாக அமைகின்றது. அதனால் மிகவும் சிறந்த மொழிப் பயன்பாட்டை கையாள்வது காலத்தின் தேவையாகும். குறிப்பாக குற்றச் செயல்கள் பற்றிய அறிக்கையிடல்களின் போது மக்கள் ஊடகங்கள் வாயிலாக மிக உயர்வான நடத்தையை எதிர்பார்க்கின்றனர்.

  1. மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறை (மவ்பிம – 25.09.2020)

a3

ஊடக அறிக்கையிடலின் போது சுவைநயம், சுவாரஷ்யம் போன்ற காரணங்களை அடிப்படையாக வைத்து குற்றச் செயல்கள் தொடர்பான அல்லது பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்கள் பற்றிய விடயங்களை அதே சுவை நயம்பட பிரசுரிக்கும் போது அல்லது அறிக்கையிடல் செய்யும் போது மறைமுகமாக சமூகத்தில் அதே குற்றத்தை புரிய தூண்டுதல் அளிப்பவதாக அமைகின்றது. அனுபவம் குறைவான எப்போதும் விறுவிறுப்பை எதிர்பார்த்திருக்கும் இளம் தலைமுறையினர் மத்தியில் குற்றச் செயல்களின்பால் தள்ளப்படும் நிலை ஏற்பட இடமிருக்கின்றது. குற்றச் செயல்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் அல்லது பிரசுரிக்கும் ஊடக நிறுவனங்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள  வேண்டியது மிகவும் முக்கியமான தேவையாகும்.

 

  1. முழு நாட்டையும் ஆட்டிப் படைத்த கொனா கோவில் ரொஹா துப்பாக்கிச் சூட்டில் பலி (மவ்பிம – 25.09.2020)

a4

ஓவ்வொரு உணர்ச்சி பூர்வமான செய்தியும் ஊடகத்தின் தவறால் நிகழ்ந்ததா? அல்லது மக்கள் மத்தியில் காணப்பட்ட உணர்வற்ற நிலைமை காரணமாகவா? இந்த விடயங்கள் விரிவாக விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவைகளாகும். ஓட்டு மொத்த சமூகத்தினதும் ஒழுக்க மாண்புகள் வீழ்ச்சி கண்டு வருகின்ற இன்றைய நிலையில் ஊடகங்களாலும் அந்த தவறை செய்த குற்றச்சாட்டில் இருந்து மீள முடியாது. சமூகத்தை பாதுகாக்கும் பொறுப்பு முன்பை விட இப்போது அதிகமாக இருந்து வருவது ஊடகவியலாளர் மூலமாகும்.

“சரியானது என்று கருதுவதை மாத்திரம் செய்யுங்கள்” என்று மார்க் டேவன் குறிப்பிட்டுள்ளார். ஆனால்; தான் சரியானது என்று கருதும் விடயத்தை வெளிப்படுத்துவதன் ஊடாக மானிட வர்க்கத்தின் யதார்த்த ரீதியான உண்மைகள் வெளிப்படுத்தவும் ஊடகவியலாளர்கள் கடமைப்பட்டுள்ளனர். அதுவே ஊடகவியலாளனின் தலையாய பொறுப்பாகும்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts