கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கல்வியின் அரசியலமைப்பு வடிவம் மற்றும் சிக்கல்களை அடையாளம் காணுதல்

கல்வி உரிமையைப் பாதுகாப்பது மற்றும் அதை எதிர்கால  தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது தங்கள் தலையாய பொறுப்பாக இலங்கை அரச பல்கலைகழகங்களில் கல்வி பயிலும் மாணவ தோழர்கள் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, தனியார் பல்கலைக்கழக கருத்தியலுக்கு எதிராக “ கல்வி உரிமையை வர்த்தக பண்டமாக விற்பனை செய்வதனை நிறுத்து” “ கல்வி உரிமையை பாதுகாப்போம்” போன்ற சுலோகங்கள் உருவாக்கபடுதல் மற்றும் போராட்டங்களில் ஈடுபடுதல் போன்றவையே மாணவ இயக்கங்களின் அடையாள சின்னமாக கருதப்படுகின்றது.

பொதுவாக, ஒரு நாட்டில் (சர்வதேச அளவில் அல்ல) உரிமைகள் என்பது அந்நாட்டு அடிப்படை சட்டத்தின் ஏற்பாட்டு விதிகளுக்கு  உட்பட்டதாகும்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட இந்த நாட்டில் வசிக்கும் சிவில் மக்களிடத்தில் கல்விகற்றல் ஒரு உரிமையா? என கேள்வி கேட்கும் பட்சத்தில் பெரும்பான்மையான மக்களிடம் இருந்து  கிடைக்கப்பெறும் பதில் ஆனது “ஆம், அது ஒரு உரிமையாகும்” அல்லது இதை சார்ந்த பதில் ஒன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், இந்நாட்டு  உச்ச சட்டமான அரசியலமைப்பின் பிரகாரம் கல்வி அடிப்படை உரிமையாக  அங்கீகரிக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பல்கலைக்கழக சகோதரர்களில் மத்தியில் காணப்படும்  “கல்வி உரிமையை பாதுகாப்போம்” சுலோகங்கள்  போன்ற பிரபலமான முழக்கங்களின் மதிப்பு கல்வியை ஒரு உரிமையாக அங்கீகரிக்காத அரசியலமைப்பின் முன்னிலையில் குறைத்து மதிப்பிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் தொடர்பான யுனெஸ்கோ மாநாட்டு அறிக்கைக்கு (1974) அமைய, கல்வி என்பது தேசிய மற்றும் சர்வதேச அளவில் மக்களிடம் மற்றும் சமூக மட்டங்களுக்கு இடையில் பரந்துபட்டு காணப்படும் அறிவு, அணுகுமுறை மற்றும் திறன்களை முன்னோக்கி செல்வதற்கான பரந்த செயல்முறை ஆகும். இந்த வரையறையானது கல்வியை ஒரு தசாப்தத்தில் இருந்து  இன்னொரு தசாப்தத்திற்கு சமூக மற்றும் கலாச்சார அமைப்பு தொடர்பான அறிவு, அணுகுமுறைகள் மற்றும் திறன்களை கடத்துவதில் ஒரு முன்னோடி பங்கை வகிக்கும் ஒரு பிரதான கருவியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விசேடமாக, மிகவும் ஒழுக்கமான, முற்போக்கான சமுதாயத்தை உருவாக்குவதில் கல்வியானது பரந்து செயற்படுவதுடன் மக்கள் பெற்றுக்கொள்ளும் சமூக உறுதி மற்றும் அனுபவம் போன்றவைகள் கல்வியின் தரத்தை மெருகூட்டும் காரணியாக திகழ்வது குறிப்பிடத்தக்கது. ஒரு முறை புதிய கம்யூனிச சீனாவின் நிறுவரான மாவோ சேதுங் குறிப்பிட்டதாவது, நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பரந்த பணி உங்களிடம் வழங்கப்பட்டால், நீங்கள் செய்ய வேண்டிய முதல் பணி அந்நாட்டு  மக்களின் பெருமளவானவர்களுக்கு சிறந்த கல்வி அறிவை பெற்றுகொடுங்கள் என்பதாகும். மாவோவின் குறித்த கூற்றானது கல்வியுடன் பிணைக்கப்பட்டுள்ள சமூக பொறுப்பை ஆழமாக விளக்க கூடியதாக  கூற்றாக காணப்படுகின்றது.

 

அரசியலமைப்பின் அணுகுமுறை

இலங்கையானது மனித உரிமைகள் சட்டத்தின் விதிகளை அமுல்படுத்துவதற்கும் பொறுப்பு கூறுவதற்கும் கடப்பாடு கொண்ட நாடாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்தின் (1947) பிரிவு 26 இல் கல்வி மற்றும் கல்வியைத் தேர்ந்தெடுப்பதற்கான அனைத்து நபர்களிற்கும் காணப்படும்  உரிமை தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (1966) 13வது பிரிவு உடன்படிக்கையில் உள்ளடக்கப்படும் அனைத்து நாடுகளும் கல்வியை ஒரு உரிமையாக அங்கீகரிக்கவும், அதன் அடிப்படைகளை நிறைவேற்றவும் கடமைப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான சர்வதேச உடன்படிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ள மனித சுதந்திர மற்றும் கௌரவ சுதந்திரங்களை அடைந்து கொள்வதற்கான முன்மாதிரி தத்துவங்களாக காணப்படும்  கல்வி பெறுவதற்கான  உரிமையை சட்டரீதியாக மக்களுக்கு பெற்று கொடுப்பதற்கான சிறந்த முறையாக திகழ்வது  தாய் சட்டமான (ground norm) கல்வி கற்கும் அடிப்படை உரிமையை சட்டரீதியாக உறுதிசெய்வதாகும். தென்னாபிரிக்க அரசியலமைப்பானது இது தொடர்பில்  உலகிற்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்கின்றது.

இந்த கலந்துரையாடலில், தமது அரசியலமைப்பின் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் அடிப்படை வரையறைகள் 02 அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுள்ளது.

அடிப்படை உரிமைகளின் பரப்பை சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்குள் வரையறுத்தல்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளில் உள்ளடக்கப்பட வேண்டிய  வாழ்வதற்கான உரிமை, சுயமரியாதை  தொடர்பான உரிமை, கல்வி கற்பதற்கான உரிமை, சுகாதாரம் தொடர்பான உரிமை போன்ற மிக முக்கிய  உரிமைகள் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே கல்வியை அடிப்படை உரிமையாக (அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் இருந்து) அங்கீகரிக்க மறுக்கும் 78 அரசியலமைப்பு அரச கொள்கைகளை செயற்படுத்தும் அடிப்படை அத்தியாயத்தில் (6ஆவது அத்தியாயம்) கல்வி தொடர்பில் சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு 27(ஈ) சட்டபிரிவுக்கு அமைய அரசாங்கமானது கல்விக்காக பின்வரும் மூன்று பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு கடமைப்பட்டுள்ளது.

  • அறியாமையை முற்றிலுமாக நீக்குதல்
  • கல்வியில் சம வாய்ப்புகளை உருவாக்குதல்
  • இலகுவில் அனைவருக்கும் கல்வியை பெற்றுக்கொள்ளவதற்கான வசதியை  பெற்றுக்கொடுத்தல்.

ஆனாலும் அரசுக்கு மேலே குறிப்பிட்ட பொறுப்புக்களை   நிறைவேற்றுவதற்கும் எந்தவொரு சட்டரீதியான கடமைப்பாடும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே மேலே குறிப்பிட்ட பொறுப்புக்களை அரசாங்கம் புறக்கணிக்கும் சந்தர்ப்பங்களில்   கல்வி உரிமை மீறப்படுதல் என்பதின்  கீழ் எவருக்கும் சட்டரீதியாக தீர்வை பெறமுடியாது. ஏனென்றால், 6ஆம் அத்தியாயம் ஆனது அடிப்படை உரிமை அத்தியாயத்தில் உள்ளடக்கபடுவதில்லை மற்றும் 06 ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள்  மேற்கொள்ள முடியாது என்பதும் ஆகும். 

மேற்கத்திய கல்வியாளரான கேதரின் டோமொஸ்வகி கல்வி ஒரு அடிப்படை உரிமையாக செயல்பட வேண்டுமாயின் அரசாங்கத்தினால்  நிறைவேற்ற பட வேண்டிய 04 பிரதான குணாதிசயங்களை (A4 அணுகுமுறை) குறிப்பிடுகின்றார் அவையாவன  எளிதில் கிடைக்க கூடிய தன்மை (Availability), அணுகக்கூடிய தன்மை (யுஉஉநளளயடிடைவைல), ஒத்துப்போகும் தன்மை (Adabtability) மற்றும் ஏற்றுக்கோள்ளகூடிய தன்மை (Acceptability). இதில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் மூன்று தத்துவங்களை பார்க்கிலும் ஒரு நாட்டின் காணப்படும் அரசியலமைப்பில் கல்வியை அடிப்படை உரிமையாக ஏற்று அதனை மீறும் சந்தர்ப்பங்களில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமாக இயலுமை காணப்படுதல் அல்லது நாட்டு அரசியலமைப்பில் கல்வியை அடிப்படை உரிமையாக அங்கீகரித்து பொறுப்புக்கூறும் ஆவணமாக காணப்படுவது கல்வி உரிமை செயல்திறனாக செயல்படுவதற்கு இன்றியமையாத காரணியாகும் என கேதரின் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவான சிக்கல்களை அடையாளம் காணவும்

இலங்கை நாடானது இலவச கல்வியை வழங்கும்  நாடாக திகழும் போதும், அதன் அடிப்படையில் பிரச்சினைகள் காணப்படுவதை தற்போது அடையாளம் கண்டுகொள்ள முடியுமாக உள்ளது. இலவச கல்விக்கு அவசியமான வளங்கள் சமத்துவம் இன்றி பகிரப்படுதல், கல்விற்கான உரிமை விரைவாக மேற்கத்தியமயமாதல், அரச வரிவருமானத்தில் பராமரிக்கப்படும் இலவச கல்வியை தனியார்துறையானது வர்த்தக பொருளாக சந்தையில் விற்பனை செய்தல் மற்றும் சமூகத்தில் காணப்படும் சகல தரப்பினரும் கல்வி சுதந்திரத்தை சமமாக பெற்றுகொள்வதில் சிக்கல்  போன்றவை பிரதானமாவையாக காணப்படுகின்றன. தற்போது காணப்படும் கல்வியை உரிமையாக கருதாத அரசியலமைப்பு ஆனது   புலன்களுக்கு உணரமுடியாத ஆனாலும் நீண்டகாலங்களாக நடைபெற்றுவரும் குழப்பங்களுக்கு உரிய முறையில் பதிலளிக்க தவறிவிட்டது. சர்வதேச அளவில் கல்வியை உரிமையாக அங்கீகாரம் அளிப்பதற்காக  நாடு என்ற ரீதியல் பிரகடனங்கள் கைச்சாத்திடப்பட்ட போதிலும், இலங்கையின் அடிப்படை சட்டமான அரசியலமைப்பில் அச்செயற்பாடு தொடர்பில் எவ்விதமான ஏற்பாடுகளும் உரியமுறையில் செயற்படுத்தப்படுவதில்லை என்பது மிக தெளிவாகின்றது.

முன்னறிவிப்புக்களின்  நம்பகத்தன்மை

மேலே குறிப்பிடப்பட்டுள்ள  சிக்கல்களை தீர்த்துகொள்ளுதல் தொடர்பில் 90 ஆண்டுகளில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டதுடன்  அதற்கு காரணமாக காணப்பட்ட விடயமாவது,  கல்வியை அரசியலமைப்பில்  உரிமையாக அங்கீகரிப்பது தொடர்பில் நாட்டு மக்களிடம் எழுந்த கருத்துக்கள் மற்றும் அரசியலமைப்பு திருத்த செயற்பாட்டு நடவடிக்கை ஆகும். 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு வரைபு (செயற்படுத்தப்படவில்லை), நிபுணத்துவ குழுக்களின் பங்களிப்புடன் எழுதப்பட்ட மாதிரி அடிப்படை உரிமைகள் அறிக்கை (2009), அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் ஆலோசனைக்குழுவின் அறிக்கை(2016), மற்றும் அடிப்படை உரிமை தொடர்பாக துணை குழு அறிக்கை(2016) , போன்ற  சகல ஆவண பத்திரங்களிலும் கல்வியை அடிப்படை உரிமையாக அங்கீகரிப்பதின் தேவைபாட்டை கவனத்தில்கொண்டு உள்ளது. இந்த சூழலில், கல்வியை உரிமையாக புதிய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் உள்வாங்கபடுவது கல்வி தொடர்பாக காணப்படும் நிகழ்கால சிக்கல்களில் இருந்து விடுதலை பெறுவதற்கான உகந்த செயற்பாடாக காணப்படுகின்றது.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts