கல்முனை சுபத்ரா ராமய முன்பள்ளி “எனது பிள்ளை தேவாரம் மட்டும் படிக்கவில்லை..! குர்ஆனும் ஓதுது..!ஜெபமும் சொல்லுது..!”
ஏ. எம். பாயிஸ்
“2005 ஆம் ஆண்டு இந்த முன்பள்ளியை ஆரம்பிக்கும் போது மூவினங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டே ஆரம்பித்தோம். தற்பொழுது முப்பதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இங்கே கற்கிறார்கள். இங்கு கல்வி கற்று வரும் மாணவர்களினது மத விழாக்களை இங்கு கொண்டாடி மகிழ்விப்போம். சரஸ்வதி பூஜைஇ வெசாக்இ ரமழான்இ கிறிஸ்மஸ் என எல்லா மத நிகழ்வுகளையும் கொண்டாடி குழந்தைகளுக்கு அதைப்பற்றி தெரிந்துகொள்ள சந்தர்ப்பத்தை வழங்குகிறோம்.” என்கிறார் முன்பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயகுமார் ராதிகா. இந்த முன்பள்ளி அமைந்திருப்பது கல்முனை சுபத்ரா ராமய விகாரையின் பகுதியில்தான்.
“இந்த பாலர் பாடசாலை 2005 ஆம் ஆண்டு எமது விகாரையின் வளாகத்தில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் அதற்கென கட்டிடம் ஒன்று நிர்மாணித்து தரப்பட்டு அதில் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலையில் தற்பொழுது 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தமிழ் மொழிமூலமான இப்பாடசாலையில் சகல மதத்தினரும் கல்வி கற்கின்றனர்.” என்கிறார் கல்முனை சுபத்ரா ராமய விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்னதேரர்.
கல்முனை பிரதேசம் பல்லினங்கள் வாழ்கின்ற பிரதேசமாகும். முஸ்லிம்கள்இ தமிழர்கள்இ கிறிஸ்த்தவர்கள்இ பௌத்தர்கள் என பல்லினத்தைச் சார்ந்தவர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். கடந்த ஆயுதப்போராட்ட காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கல்முனையும் ஒன்றாகும். அவ்வாறு பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் அம் மக்கள் தங்களிடையே ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டிய தேவையிருக்கிறது. இந்நிலையில் இவ்வாறானதொரு முன்பள்ளி தேவையானதும்கூட.
“எதிர்கால சந்ததியினர் இனம்இ மதம்இ சாதிஇமொழி பேதமில்லாமல் நாட்டில் பொதுவான சமாதானத்தை ஒற்றுமையை பலப்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்வதற்காகத்தான் இப் பாடசாலையை ஆரம்பித்தோம்” என்று கூறுகிறார் கல்முனை சுபத்ரா ராமய விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்.
கல்முனைப் பிரதேசத்தில் இருக்கும் அனேகமான பாடசாலைகள் இனரீதியான அடையாளங்களுடனயே இயங்குகின்றன. அவற்றில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது இன மக்களுடனயே மட்டும் இணைந்துவாழ பழக்கப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் ஏனைய இனஇ மத கலாசாரங்ளை அறிந்துகொள்வதற்கும் பழகுவதற்குமான சந்தர்ப்பங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றன. இந்த நிலையில் இவ்வாறானதொரு முன்பள்ளியை உருவாக்கியிருப்பது மக்களால் வரவேற்கப்படுகிறது.
“ஒவ்வொருநாள் காலையிலும் சமய அநுஷ்டானம் நடைபெறும். அதில் தேவாரம்இ குர்ஆன்இ பைபில்இ என ஓதப்பட்டு பாடசாலை ஆரம்பிக்கப்படுகின்றது. அப்போது எல்லா மாணவர்களும் எல்லா மத அநுஷ்டானங்களையும் கற்றுக் கொள்வதுடன் ஏனைய மதங்களை மதிக்கவும் கற்றுக்கொள்கின்றனர்.” என்கிறார் அங்கு கல்வி பயிலும் ஒரு குழந்தையின் தாய்.
இந்தப்ப பாடசாலையின் பொறுப்பாளராக செயற்படும் ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தமிழ் மொழியில் நன்கு உரையாடக் கூடிய ஒருவராவார். இங்கே 3 ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் கூட்டங்ளை வைத்து பிரச்சினைகளை ஆய்வு செய்து தீர்வுகளைக் கண்டு பாலர் பாடசாலையை முன்கொண்டு செல்கின்றார்கள்.
“ஒரு நாட்டில் ஒரு சூழலில் நாம் இருந்து கொண்டு வேறுபாடுகளோடு வாழ முடியாது. அதற்கேற்றாற்போல் எமது பிள்ளைகளின் கல்விச் சூழலும் அமைய வேண்டும். அதற்கு இவ்வாறான பாலர் பாடசாலை ஒன்றை அமைத்துத் தந்தமைக்கு விகாராதிபதிக்கு நாம் நன்றி சொல்லவேண்டும்” என்கிறார் இங்கு கல்விகற்கும் மாணவி ஒருவரின் தாயாரான ஏ.றிப்கா
இந்தப் பாடசாலையில் இன்னுமொரு சிறப்பம்சமும் உண்டு. பாடசாலை நாட்களில் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு பெற்றார் அனைத்துப் பிள்ளைகளுக்கு காலை ஆகாரம் வழங்குகிறார்கள். அவர்கள் தங்களது வீடுகளில் சமைத்த சத்துணவைக் கொண்டு வந்து பிள்ளைகளுக்கு பரிமாறுகிறார்கள். அதேபோன்று மாதாந்தம் இப் பாடசாலையை சிரமதானம் செய்வதற்கும் எல்லாப் பெற்றோரும் வந்து பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். பெற்றாரின் ஒத்துழைப்பு இல்லாவிடின் இவ்வாறான பல்லின பாலர் பாடசாலையை கொண்டுசெல்வது கடினம்தான். அதற்கு பொதுநோக்கமுடைய சமாதான விரும்பியான பெற்றோர்களும் அவசியம்.
“இந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் போன்று அவர்களது பெற்றோர்களிடையேயும் நல்ல புரிந்துணர்வும் ஒற்றுமையும் காணப்படுகிறது. இங்கு கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் எம்மிடம் வந்து எங்களது பிள்ளைகள் தமிழ் பிள்ளைகள் போன்று தேவாரம் படித்துக் காட்டுகிறார்கள்இ சிங்களப் பிள்ளைகள் போன்று புத்தம் சரணம் சொல்லிக் காட்டுகிறார்கள்இ முஸ்லிம் பிள்ளைகள் போன்று தொழுது காட்டுகிறார்கள். எங்களுக்கு பார்ப்பதற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது என்று அவர்கள் எம்மிடம் கூறுகிறார்கள்.” என்று பெருமையுடன் தெரிவித்தார் இப் பாடசாலையில் கற்பிக்கும் இன்னுமொரு ஆசிரியையான பெனிஸ்டா ரொஸைரோ. இவர் கிறிஸ்த்தவ மதத்தை பின்பற்றும் ஒரு ஆசிரியை. உண்மையில் இங்குள்ள ஆசிரியர் குழாத்தை எடுத்து நோக்கினால் அவர்களிடையேயும் ஒரு மத பல்லினத்துவத்தையே காணமுடிகிறது.
“எங்களுடைய சின்ன காலத்தில் பிற மதத்தைப் பற்றி எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை. இப்போது கோவில்இ பன்சலை போன்ற வணக்கஸ்த்தலங்களில் இருக்கும் சாமியைப் பற்றி எங்களுடைய பிள்ளைகள் எங்களுக்கு வந்து சொல்லித் தருகிறார்கள். முன்னர் எங்களுடைய பெற்றோர் அவ்வாறு பிற மதஸ்த்தலங்களுக்கெல்லாம் செல்ல அனுமதிக்கவில்லை. எமக்கும் பிற வணக்க ஸ்தலங்களில் எவ்வாறு நடந்துகொள்வது என்பதும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் நம்குழந்தைக்களுக்கு தெரிகிறதுஇ பிற வணக்கஸ்த்தலங்களில் எப்படி நடந்துகொள்வது? ஏன்ன சொல்லவேண்டும் என்பதெல்லாம்…” என்று தனது பிள்ளையின் நடவடிக்கை பற்றி பெருமைப்படுகிறார் ரூபபாலன் சச்சு.
“இந்த பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் பிள்ளைகளைப் போன்று பெற்றோர்களுக் கிடையேயும் நல்ல புரிந்துணர்வும் ஒற்றுமையும் வளர்ந்துவருகிறது. அந்தக் காலத்தில் நாங்கள் எப்படி ஒற்றுமையாக இருந்தோமோ அவ்வாறான ஒரு நிலையை இந்தப் பாடசாலையினூடாக நான் காண்கின்றேன். முஸ்லிம்இ இந்துப் பெற்றோர்கள் எங்களுடைய வீட்டுக்கு வருகிறார்கள். நாங்கள் அவர்களுடைய வீட்டுக்கு போவதுமான ஒரு சூழல் இந்த சாதுவால் உருவாக்கப்பட்ட இந்தப் பாடசாலையினூடாக ஏற்பட்டிருக்கின்றது.” என்று தனது பேரக் குழந்தையை பாடசாலை விட்டபோது அழைத்துச் செல்வதற்காக வந்த எஸ். ஆசீர்வாதம் கூறுகிறார்.
இன நல்லிணக்கம் சிதைந்து கிடக்கின்ற போது அதை மீண்டும் இலகுவில் கட்டியெழுப்பி விட முடியாது. அழிவடைந்த கட்டிடங்களை விரைவில் நிர்மாணிப்பது போன்று மனிதர்களுடைய உள்ளங்களில்இ நடத்தையில் மாற்றங்ளை கொண்டு வந்துவிட முடியாது. அதனை நீடித்து நிலைத்திருக்கக் கூடிய சமாதானமாக மாற்ற அடிப்படையிலிருந்து கட்டயெழுப்பப் படவேண்டியிருக்கிறது. அதற்கு இளம் தலைமுறையினர் முக்கியமானவர்கள். அந்த வகையில் இது வரவேற்கத்தக்கதொன்றே. இவ்வாறான முன்பள்ளிகள் நகரத்தில் இருப்பது புதியவிடயமல்ல. ஆனால் கிராமங்களில் இது இருப்பது தான் நல்லிணக்கதை ஏற்படு;த்த திடமான அடித்தளமாகிறது.
“இந்த முன்பள்ளி சிறந்த முன்பள்ளியாக எம் மத்தியில் எல்லோராலும் பேசப்படுகின்ற ஒன்று. தேசிய ஒருமைப்பாடுஇ தேசிய நல்லிணக்கம் என்பவற்றை பாடசாலைகளினூடாக கட்டியெழுப்பவேண்டும் என்கின்ற திட்டத்தின் கீழ் ஒருங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகிறது. இது பாடசாலைகளுக்கும் பொருத்தமானதாக வரவேண்டும். அதேபோல் இந்த முறையில் ஒரு பாடசாலையாக இது முன்னேற்றம் காண வேண்டும்.” என்று கல்முனை சிறீ மாமாங்க வித்தியாலய அதிபர் திருமதி சுகன்யா தெரிவிக்கிறார்.
“எமது முன்பள்ளியில் கல்வி கற்ற மாணவர்கள் தமது அடுத்த கல்வியை இன ரீதியான பாடசாலைக்குச்சென்று கற்கின்றபோது அவர்கள் மீண்டும் குறித்த ஒரு இனக் கலாசாரத்துக்குள் முடக்கப்படுவார்கள் என்பதுதான் எனக்கிருக்கிற கவலையாகும். இதற்கு முழுக் காரணமும் இங்கிருக்கின்ற இனரீதியான பாடசாலைகளாகும். எமதுநோக்கம் வெற்றியடையும் வரைக்கும் எமது இந்தப் பணிதொடரும். சமாதானத்தைஇ நல்லிணக்கத்தை விரும்புகின்ற அனைவரும் இந்தப் பாடசாலையை விஸ்த்தரிப்பதற்கு பங்களிப்புச் செய்ய முன் வருமாறு அன்புடன் அழைக்கின்றேன்.” என்று இந் நாட்டின் கல்விமுறை மீதான தனது கவலையையும் தளராத தனது நம்பிக்கையையும் இவ்வாறு வெளிப்படுத்தினார் கல்முனை சுபத்ரா ராமய விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்.
This article was originally published on the catamaran.com