அரசியல்

கலாநிதி அஜந்த பெரேரா பெண்களுக்கு போதுமான அளவு கௌரவமளிக்க இன்னும் நாம் கற்றுக் கொள்ளவில்லை!

மெலனி மேனல் பெரேரா
தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னைய தினம் ஒரு மனிதர் தொலைபேசியில் என்னை அழைத்து கட்டுப்பணம் செலுத்த வேண்டாம் என்றும் அந்த முயற்சியை நிறுத்தி அவருக்கு அந்த வாய்ப்பை வழங்குமாறும் கேட்டார். இந்த விடயம் தொடர்பாக அவர் தேர்தல் ஆணையாளருடன் கலந்துரையாடியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்…

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரே பெண் வேட்பாளராக போட்யிட்டவர் சூழலியலாளரான கலாநிதி அஜந்த பெரேரா.  இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் 20 வருடங்களின் பின்னரே இவ்வாறு பெண் ஒருவர் அபேட்சகராக களம் இறங்கி போட்டியிட்டார். பெண்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்காகவும் ஆர்வம் ஊட்டுவதற்காகவுமே இவ்வாறு போட்டியிட்டதாக கலாநிதி அஜந்த பெரேரா தெரிவிக்கின்றார். அவருடனான நேர்காணல் வருமாறு : –

த கட்டுமரன்:  ஜனாதிபதித் தேர்தல் முடிந்துவிட்டது. பெறுபேற்றை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
எனது முன்னேற்றம் குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். வடக்கு கிழக்கை உள்ளடக் கியதாக எனது பிரதேசத்தில் நான் நான்காவது அல்லது ஐந்தாவது இடத்திற்கு வர முடிந்தது. எனக்கு வாக்களித்த ஒவ்வவொருவரதும் செய்தியாக அமைவது என்னில் அவர்கள் ஒரு எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர் என்பதையாகும். அவர்களால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பை நான் மிகவும் வரவேற்பதோடு பாராட்டுகின்றேன். நான் பிரச்சாரத்தில் ஈடுபடாத பகுதிகளைச் சேர்ந்த மக்களும் எனக்கு வாக்களித்தனர். நான் ஒரு படித்த அதுவும் சுற்றாடலுக்காக போராடும் ஒரு பெண் என்ற காரணத்திற்காக எனக்கு வாக்களித்தனர். அத்துடன் பாதிக்கப் பட்டுள்ள பெண்களுக்கான குரல் அவசியம் என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
மொனராகலை மாவட்டத்தில் இருந்து எனக்கு வாக்களித்தவர்கள் மிகவும் வறிய விவசாய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் நீர் பற்றாக்குறையாலும் மனித மற்றும் யானைகளுக்கிடையிலான முரண்பாடுகளாலும் பாதிக்கப்பட்டவர்களாவர். நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களால் இதுவரையில் அவர்கள் முகம் கொடுத்து வருகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க முடியவில்லை. அவர்களுக்கு மிகவும் உயர்ந்த 
எதிர்பார்ப்புக்கள் உள்ளன. எனது பொறுப்பாக அமைவது அவர்களது முன்னேற்றத்திற்காக ஒத்துழைப்பதாகும்.
20 வருடங்களின் பின்னர் தேர்தலில் போட்டியிட்ட ஒரு பெண் என்ற முறையில் எனக்கு கிடைத்த வாக்குகளையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். மக்கள் இந்த நாட்டை மாற்றத்தை நோக்கி முன்னே கொண்டு செல்ல விரும்புகின்றனர் என்பதை நான் உணர்கின்றேன். அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற ஒத்துழைப்பது எனது கடமையாக நான் கருதுகின்றேன்.

த கட்டுமரன்: அந்த எதிர்பார்ப்புடனான உங்களது எதிர்கால திட்டங்கள் யாவை?
நான் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் எனது எதிர்கால திட்டங்களை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். அதன்படி நான் உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதோடு அவர்களுகாக நான் பாடுபட வேண்டும் என்று நினைக்கின்றேன். அந்த கொள்கைக்கமைவாக நான் மாற்றம் ஒன்றிற்காக பாடுபட வேண்டும். இந்த கொள்கைகளில் இலங்கைக்குள் பெண்களுக்கு தொழில் வாய்ப்பபுக்களை ஏற்படுத்துதல், வெளிநாடுகளுக்கு பெண்கள் அடிமைத் தொழிலாளர்களாக இடம்பெயர்வதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், அதனால் பெண்கள் அவர்களது குடும்பங்களில் இருந்து தூரமாகி குழந்தைகளை விட்டு பிரிந்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் போது சுற்றாடல் சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக கவனம் செலுத்துதல் மற்றும் இனங்களுக்கிடையிலான உறவை பலப்படுத்துதல் என்பன எனது கௌ;கைக்குள் உள்ளடங்குகின்றன.

சஜித் பிரேமதாசா 375 மில்லியன் ரூபாய், கோதாபய ராஜபக்ஷ 500 மில்லியன் ரூபாய்,
நான் வெறுமனே 25 இலட்சம் ரூபாய்களை மாத்திரம் செலவு செய்தேன்.
நிதானமான முறையில் தேர்தல் பிரச்சாரம் செய்த வேட்பாளர்களில் நான் முக்கியமான உதாரணமாவேன். எனது முழுமையான தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் நான் 25 இலட்சம் ரூபாதான் செலவு செய்தேன். எவ்வாறாயினும் அதிகமான தொகுதிகிளல் நான் நான்காவதும் ஐந்தாவதுமான இடத்தில் வாக்குகளை பெறுவதற்கு முடிந்தமை பெரிய வெற்றியாகும். ஆனாலும் எனது வரவு செயலவுத் திட்டமானது மிகவும் சிறியதாகவே இருந்தது. அதனால் தேவையற்ற விதமாக செலவு செய்வதை தடுக்க முடியும் என்பதை சுட்டிக்காட்ட நான் இதன் மூலம் விரும்புகின்றேன். நான் முதல் முறையாகவே தேர்தல் ஒன்றில் போட்டியிட களம் இறங்கினேன். நாட்டில் பெரும்பான்மையானவர்களுக்கு என்னை யார் என்று தெரியாது. ஆனாலும் இந்த தேர்தலில் என்னால் குறிப்பிட்ட ஒரு இடத்தை பிடிக்க முடிந்தது. அதில் இருந்து தெரியவருவதாவது, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பணத்தை விட என்போன்றவர்களது அறிமுகமும் பங்களிப்பும் அவசியமானது என்பதாகும். அவர்களுடன் உரையாடல்களை நடத்துவதும் அவர்களது பிரச்சினைகளை புரிந்துகொள்வதும் முக்கியமானதாகும்.
எனது எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக அடையும் வரையில் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் தொடர்ந்து என்னுடைய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க விரும்புகின்றேன். நாட்டின் முக்கியமான அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட திட்டங்களை முன்னெடுக்கும் போது அவற்றிற்கு எனது பங்களிப்பை வழங்க விரும்புவதோடு அரசாங்கத்தின் செலவினங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் வழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றை கண்காணிகக்வும் செய்வேன். நாட்டை சரியான திசைக்கு இட்டுச் செல்வதற்கான முயற்சியாக நான் இந்த பங்களிப்பை செய்வதற்கு தயாராக உள்ளேன். நாட்டின் இதற்கு மேலும் இனவாதத்தையும் மத வாதத்தையும் அனுமதிக்க முடியாது. நான் பெண்களுக்கு எதிரான எல்லாவிதமான அடக்குமுறைகளுக்கும் எதிராக போராட வேண்டி இருப்பதோடு ஏழை விவசாயிகளுக்காகவும் குரல்கொடுக்க வேண்டும். ஏகாதிபத்தியம் சார்ந்ததும் ஒருபக்க சார்பான தாராள பொருளாதாரக் கொள்கைக்கும் எதிராகவும் நாம் போராட வேண்டும். இந்த போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பானது மிகவும் அவசியமானதாகும்.

த கட்டுமரன்: நீங்கள் முன்வைத்துள்ள திட்டத்திற்காக உங்களுக்கு வாக்களித்து உங்களது பங்களிப்பை எதிர்பார்க்கும் தனிப்பட்ட முறையில் பெண்களையும் பெண்கள் சார்பான அமைப்புக்களையும் எவ்வாறு ஒன்று திரட்டுவீர்கள்?
இது எனது கடமை. 20 வருடங்களாக ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் போட்டியிட பெண்கள் முன்வரும் வகையில் ஊக்கமளிக்கப்படவில்லை. அதனால் எதிர்வரும் தேர்தல்களில் என்னால் ஊக்கமளிக்கப் படுத்தப்பட்ட அதிகமான பெண்கள் போட்டியிட முன்வருவார்கள் என்று நான் கருதுகின்றேன். அடுத்து வரும் வாரங்களில் பெண்களை ஊக்கப்படுத்தி அறிவூட்டல் செய்து அவர்களை பயிற்சியளிக்கும் நடவடிக்கைகளை எனது பொறுப்பு என்ற முறையில் நான் முன்னெடுக்க உள்ளேன். எனக்கு திட்ட அறிக்கைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி இருக்கின்ற பெண்களை சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் உட்பட அனைவரையும் ஒன்று திரட்டி பயிற்சி வழங்கும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளேன்.
பெண்கள் தனியாக உள்ளனர் என்பது முக்கியமானதல்ல. ஆனால் ஒவ்வொரு பெண்ணுக்கும் நாட்டிற்கான பங்களிப்பு இருக்கின்றது என்பதை அவர்கள் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும். அடிமட்ட நிலையில் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை புரிந்து கொண்டு அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுக்கின்ற போது அவர்களை முன்னேற்றத்தை நோக்கி வழி நடத்த முடியும். நாட்டிற்காக எதனை செய்ய முடியும் என்பது தொடர்பாக அவர்களிடம் சரியாக ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அத்துடன் அவர்கள் இந்த இலக்கை அடைவதற்காக உதவி செய்யப்பட வேண்டும். இலக்கை அடைவதற்கான முயற்சிகளை நாம் அவசரமாக அரம்பிக்க வேண்டும்.

த கட்டுமரன்:  இந்த திட்டங்களை இதனோடு நிறுத்துவதால் காலம் விரயாமகின்றது என்று நினைக்கின்றீர்களா?
அது ஒரு மிகவும் பிரதானமான தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய இலக்காகும். இந்த திட்டம் தொடர்பாக எதிர்காலத்தில் மேலும் விரிவாக கருத்துக்களை முன்வைக்க நான் விரும்புகின்றேன். அருவக்காலு பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கழிவு முகாமைத்துவ திட்டம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த திட்டம் தொடர்பாக புதிய ஜனாதிபதி என்ன வகையான நடவடிக்கையை எடுப்பார் என்று எனக்கு தெரியாது. இந்த விடயம் தொடர்பாக நான் மத்தியஸ்தம் வகிக்க விரும்புகின்றேன். சேதனப் பசளைக்கு பாரிய தேவை இருந்து வருகின்றது. இலங்கையில் எங்களாலும் சேதனப் பசளையை உற்பத்தி செய்ய முடியும். நாங்கள் எமது நாட்டிற்கு தேவையான சேதன மற்றும் அசேதனப் பசளையை இறக்கு மதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது. அத்துடன் இரசாயன பசளைக்கு சலுகை வழங்கவும் முடியும். நாங்கள் நாட்டில் விவசாயத்தை முன்னேற்றுவதற்காக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விடயங்களை நான் அமைச்சுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளேன்.

த கட்டுமரன்: உங்களது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் எவ்வாறு நடைபெற்றது என்பதை விளக்க முடியுமா?
தேர்தல் பிரச்சாரங்களுக்காக சஜித் பிரேமதாசா 375 மில்லியன் ரூபாய்களை செலவு செய்துள்ளார். கோதாபய ராஜபக்ஷ 500 மில்லியன் ரூபாய்களை செலவு செய்துள்ளார். நான் வெறுமனே 25 இலட்சம் ரூபாய்களை மாத்திரம் செயலவு செய்தேன். நான் எளிமையான முறையில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு நான் பெற்றுக்கொண்ட வெற்றி குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.
நான் நாட்டின் பல பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தியதாலும் என்னிடம் இருந்த பண வசதி குறித்து சிந்திக்காமலுமே போட்டியிட முன்வந்தேன். எனது கதையானது ஒரு தாய் அவளது குழந்தை இறந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் டிக்கட் எடுப்பதற்காக கையில் இருக்கும் பணம் குறித்து சிந்திக்காது ஒரு பஸ்சில் ஏறி பயணம் செய்வது போன்றதாகும். எனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் அதுபோன்றுதான் அமைந்தது.


நான் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப் பணம் செலுத்திய நாளில் இருந்து என்னை சந்தித்த பலர் என்னால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்து எனக்கு போட்டியிடுவதை நிறுத்தி வாபஸ் வாங்குமாறு தெரிவித்தனர். அதற்கு பதிலாக பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக வர முயற்சி செய்யுமாறு ஆலோசனை வழங்கினர். இன்னும் சிலர் எனக்கு போட்டியிட வேண்டாம் என்றும் அந்த வாய்ப்பை ஒரு ஆணுக்கு வழங்குமாறும் கேட்டுக் கொண்டனர். நான் வேட்பு மனுவை தாக்கல் செய்ய சென்ற போது அந்த மனிதர் என்னை தொடர்ந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்யும் முயற்சியை கைவிட்டு விட்டு பதிலாக அவரை அதற்காக அனுமதிக்குமாறும் என்னை கேட்டார். அவரால் வெற்றி பெற முடியும் என்றும் என்னால் முடியாததற்காக நான் எதற்காக முயற்சி செய்ய வேண்டும் என்றும் என்னை வலியுறுத்தினார். அவ்வாறாக பலர் என்னை பலவீனப்படுத்த முயற்சி செய்தனர். நான் யாருக்கும் சந்தர்ப்பத்தை வழங்க முன்வரவில்லை. நான் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் என்னை பலர் பேஸ்புக் வாயிலாக தாக்க ஆரம்பித்தனர். அதிகமானவர்கள் நான் ஒரு பெண் என்ற காரணத்தாலே என்னை முகப்பு புத்தகம் மூலம் தாக்கினர். ஆனாலும் அவ்வாறான முயற்சிகளின் முன்னால் நான் வெட்கப்படுகின்றேன். எனது முன்னோக்கிய முயற்சியை ஊக்கப்படுத்தாமல் எனது முயற்சியை பலவீனப்படுத்தி தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நான் ஒருவகையில் மன விரக்தி அடைந்தவளாக இருந்தேன்.
த கட்டுமரன்: பெண்களுக்கான அரசியல் சந்தர்ப்பம் மிகவும் கஷ்டமானது என்று நீங்கள் கருதுகின்றீர்களா?நான் ஒரு பலமான பெண்ணாக இருந்த போதும் நானும் கூட சில கஷ்டங்களை சந்திக்க நேரிட்டது. பெண்கள் அரசியலில் ஈடுபடுவதென்பது ஒருவகையில் எமது நாட்டில் கஷ்டமானதும் சிரமமானதுமான செயல் என்பதாக நான் கருதுகின்றேன். எமது சமூகம் இன்னும் பெண்களை அரசியலில் அனுமதித்து அவர்களை பலப்படுத்தும் அளவிற்கு முன்னேறவில்லை என்பதோடு அவர்களை அறிவியல் ரீதியாக சிந்திக்கச் செய்வதற்கும் வழிகாட்டவில்லை. மொத்தமாக எமது சமூகம் பெண்களை போதுமான அளவு கௌரவமளிக்க இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. பெண்களுக்கு சமூகத்தில் உரிய அந்தஸ்து வழங்கப்படாமலும் வேறுபாடு காட்டப்படும் நிலைமைகளே தொடர்கின்றன.
நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் ஒரு மாற்றத்தை செய்தேன் என்பதாக நான் உணர்கின்றேன். அடுத்து வரும் பொதுத் தேர்தலில் அதிகமான பெண்கள் போட்டியிட்டு பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்ற வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும். சிறந்த கல்வி கற்ற, நல்ல தூர நோக்கம் கொண்ட பெண்கள் இவ்வாறு தேர்தலில் போட்டியிட முன்வருவதன் மூலம் நாட்டில் ஊழல் இல்லாத அரசியலுக்காக போராட முடியும் என்று நான் கருதுகின்றேன். அரசியல்வாதிகளது மணைவிமார், மகள்மார், தாய்மார் வருவதை நாம் அனுமதிக்க முடியாது. இப்போது நடந்துகொண்டிருப்பது அதுதான்.
அரசியலில் ஈடுபடும் ஆர்வம் உள்ள மற்றும் தூர நோக்கம் கொண்ட பெண்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்வருமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். வெற்றி மாத்திரம் இலக்காக அமையக் கூடாது. அவர்கள் பெண்களின் குரலாக வெளிப்பட்டு அதற்கான பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வர வேண்டும். நான் நினைக்கின்றேன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெண்களுக்கான ஆசீர்வாதமாக அமையலாம் என்று.
This article was originally published on the catamaran.com
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts