கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை பாதுகாத்து உறுதிப்படுத்தல்

கமந்தி விக்கிரமசிங்க

2021 பெப்ரவரி 21 ஆம் திகதி இலங்கையின் ஊடக வரலாற்றில் ஒரு முக்கியமான நாளாக கருதப்படுகின்றது. அது கிரிக்கெட் போட்டி ஒன்றை வெற்றி கொண்ட நாளாக அன்றி நீண்ட ஒரு கனவு நனவான நாளாகும். விருது பெற்ற எழுத்தாளரான சக்திகா சத்குமாரா என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபர் விளக்கிக் கொண்டதை குறிக்கின்றது.

சத்குமாரவின் போராட்டமானது நீண்ட கால போராட்டமாவதோடு உறுதியானதாகவும் இருந்து வந்த ஒன்றாகும்.  அவரால் திரட்டப்பட்ட தகவல்களுக்கிணங்க அவர் முன்னெடுத்த செயற்பாடுகளானது தவறானதாக இருக்கவில்லை. எவ்வாறு நாட்டில் பிளவை ஏற்படுத்தும் வகையில் ஒரு மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தி இழுக்கை உண்டுபண்ணும் வகையில் முத்திரை குத்த முடியும்? இந்த விடயமே அவரது மனதை உறுத்திய வினாவாக இருந்தது. ஆனாலும் என்ன நடந்தது என்றால் சக்திகாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகும். கதை இவ்வாறு விபரிக்கின்றது.

சில சந்தர்ப்பங்களில் அவரது பேனாவை சரியான முறையில் பயன்படுத்தியவராக அவரால் எழுதப்பட்ட சிறுகதைகளை குறிப்பாக “அர்தா” என்ற சிறுகதையை சமூக ஊடகம் வாயிலாக பதிவேற்ற முற்பட்டார். ஆனாலும் பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் இந்த கதையை பௌத்த மதத்தை இழிவுபடுத்துவதாகவும் பௌத்தத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் அவதூறு ஏற்படுத்தி அவமதிப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதன் விளைவாக சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாசன அடிப்படையில் (ICCPR) 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்படி பிணை வழங்க முடியாத அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் 130 நாட்களாக அவருக்காக மட்டுமல்லாது ஏனையவர்களது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தையும் அடிப்படையாக வைத்து சட்டத்துறையோடு சத்குமார அவராக போராட்டம் நடத்தினார்.

ஆனாலும் அவர் பிணையில் விடுவிக்கப்பட்ட அதே நேரம் வழக்கு தொடர்ந்து கொண்டிருந்தது. கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் பற்றிய விடயம் அந்த நாட்களில் உரத்த குரலில் பேசப்பட்ட விடயமாகும். அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையும் பொலீஸ் நிலையத்திற்கு சென்று கையொப்பம் போட வேண்டி இருந்தது. ஆனாலும் விசாரணை துரிதமாக நடைபெறாத நிலையில் தகுந்த காரணம் இன்றி விசாரணை தாமதமடைந்து கொண்டிருந்தது.  அமைதியான முறையில் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக பாடுபட்டு வந்த ஒருவர் என்ற முறையில் சத்குமாரவின் தகுந்த காரணமின்றி தடுத்து வைப்பானது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்றும் அதனால் அவரது அடிப்படை உரிமை மற்றும் சுதந்திரம் மீறப்பட்டு வருவதாக நீதி நியாத்திற்கான ஐ.நா. வின் செயற்பாட்டாளர்கள் குழு 2020 மே மாதத்தில் மனு செய்தது.

22 மாதங்களின் பின்னர் சத்குமாரா விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் ஏனைய சில சந்தர்ப்பங்களில் (ICCPR) அரசியல் மற்றும் சிவில் உரிமைகளுக்கான சர்வதேச சாசன சட்டம் தொடர்பாக தவறான அர்த்தம் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றது. மறுபுரமாக சமூக ஊடகங்களின் குரலானது முன்பை விட மிகவும் பலமானதாக மாறி இருக்கின்றது. அதன் விளைவாக இந்தியா போன்ற சர்வதேச நாடுகள் பல சீனாவின் தயாரிப்பான டுவிட்டர் கணக்கின் ஊடாக அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் அல்லது குரல் எழுப்பும் விடயங்களை இரகசியமான முறையில் ஒட்டுக் கேட்கும் சொப்ட்வெயாரான TikTok போன்வற்றை தடை செய்ய முன்வந்துள்ளன. ஆனாலும் மியன்மாரில் சைபர் பாதுகாப்பு என்ற முறையில் இத்தகைய கட்டுப்பாடு மற்றும் எதிர் முரண் நடவடிக்கைகள் மோசமான நிலையை அடைந்திருக்கின்றது.

இவ்வாறாக உலகம் நிச்சயமற்ற தன்மைகளால் ஆக்கிரமிக்கப்படுகின்ற போதும் புதிதாக கொண்டு வரப்படுகின்ற சட்ட கட்டுப்பாடுகள் காரணமாகவும் ஊடகவியலாளர்கள் தகவல்களை திரட்டுவது, சேகரிப்பது மற்றும் அறிக்கை இடுவது என்ற விடயங்களில் மிகுந்த சவால்களை சந்தித்து வருகின்றனர். அதனால் ஊடகவியலாளர்கள் பொதுமக்களில் தங்கி கட்டுப்பாடுகளுக்கு மத்தியலான வரையறுக்கப்பட்ட தகவல்களை நாட வேண்டிய நிலை உருவாகி இருக்கின்றது. அதே நேரம் சமூக ஊடகங்கள் அவர்களது சிந்தனைகளின் அடிப்படையில் குரல் எழுப்புவதற்கான வாய்ப்பை பெற்றிருந்தாலும் அவர்களின் விமர்சனங்களுக்காக அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்து வந்துள்ளனர். சமூக ஊடகங்களுக்கு நன்றி கூற அதிகமான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டு இருப்பதோடு அவற்றுள் சில “ஒரு துளி உப்பிட்டது” போன்று தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளன. எவ்வாறாயினும் சத்குமாரவின் விடுதலைக்கான சமூக ஊடகங்களின் கோரிக்கை பலமானதாக அமைந்ததோடு அத்தகைய கோரிக்கையானது நாட்டில் எல்லாத் தரப்பினருக்கும் சொந்தமான கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை பாதுகாத்து உறுதிப்படுத்துவதற்காக கூட்டாக எழுப்பப்பட்ட ஒத்துழைப்பாகவும் அமைந்தது எனலாம்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts