கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

ஒரு தேசத்தின் சுதந்திரத்தை அடக்க விரும்பும் எவரும் பேச்சு சுதந்திரத்தை அடக்குவதன் மூலம் அதனை தொடங்க வேண்டும்.” பெஞ்சமின் பிராங்க்ளின்

பேச்சு மற்றும் வெளிப்பாட்டுக்கான உரிமை என்பது மனிதனின் கருத்துக்களை வாய்வழியாகவோ அல்லது வேறு எந்த வழியிலோ தொடர்புகொள்வதற்கான உரிமையாகும். மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை உட்பட பல சர்வதேச மற்றும் பிராந்திய மனித உரிமை ஆவணங்களில் இந்த உரிமை குறிப்பிடப்பட்டுள்ளது, ஏனெனில் ஜனநாயக பொறிமுறையிலும் பிற உரிமைகளை அனுபவிப்பதிலும் வெளிப்பாட்டுக்கான உரிமை அவசியம். அதனை பாதுகாப்பது கட்டாயமாகும். 

மனித உரிமைகள் தொடர்பான இந்த சர்வதேச உடன்படிக்கைக்கு கையொப்பமிட்டுள்ள இலங்கை, 1978 அரசியலமைப்பின் 14 (1) வது பிரிவில் அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமையாக இவ்வுரிமையை ஏற்றுக்கொண்டுள்ளது. (அரசியலைப்பு 17வது  திருத்தத்துடன் இணைந்து படிக்க வேண்டிய பிரிவு 126) ஒர் அடிப்படை உரிமை மீறப்பட்டால் அல்லது ஒரு நிர்வாக அல்லது நிர்வாக நடவடிக்கையால் உரிமை மீறப்படவிருந்தால், நபர் அல்லது அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வழக்கறிஞர் மீறப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்து ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறுகிறது. தற்போது நிலைமை இன்னும் தளர்த்தப்பட்டுள்ளது., பிரதம நீதியரசருக்கு விடயத்தை கடிதம் எழுதி விளக்கப்படுத்துவதன் மூலம் கூட நடவடிக்கைகளைத் தொடங்க வாய்ப்பு உள்ளது.

இன்று, நீதி விளக்கங்கள் மூலம் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் வரம்புகள் விரிவடைந்துள்ளன. அதாவது, கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையில், தகவல் அறியும் உரிமை (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எதிர் விமல் பெர்னாண்டோ (1996) 1 ஸ்ரீ எல்ஆர் 157) மற்றும் வாக்களிக்கும் உரிமைசேர்க்க ஒப்புக்கொள்ளப்பட்டது (சட்டமா அதிபர் மற்றும் பிறர் எதிர் ஜனதா விமுக்தி பெரமுன (எஸ்சி / எஃப்ஆர் / 768/2009). கூடுதலாக, கருத்து சுதந்திரம் வாய்மொழி தொடர்பு மட்டுமல்லாமல் ஆர்ப்பாட்டங்கள், கருப்பு பட்டி/கையுறைகளை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தல், விளம்பர பதாதைகள் போன்றவற்றையும் உள்ளடக்கியது. (அமரதுங்க எதிர் சிரிமல் (1993 1 ஸ்ரீ எல். ஆர். 264).

கருத்து சுதந்திரம் என்பது ஒரு கட்டுப்பாடற்ற முழுமையான உரிமை அல்ல என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். அதை சில கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்த முடியும். அரசியலமைப்பின் 15 வது அத்தியாயம் இந்த கட்டுப்பாடுகளை எந்த விடயங்களில் விதிக்க முடியும் என்பதை குறிப்பிடுகிறது. அதாவது, இன மற்றும் மத ஒற்றுமையை உறுதி செய்ய, நீதிமன்ற அவமதிப்பு, அத்துடன் சமூக அவமதிப்பு அல்லது தூண்டுதல் தொடர்பாக, தேசிய பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் சட்டம்  ஒழுங்கை பாதுகாத்தல், உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு மற்றும் ஒரு ஜனநாயக சமுதாயத்தின் பொதுவான நன்மைக்காக, சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு, பேச்சு சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. 

ஒரு குடிமகனின் பேச்சு சுதந்திரத்தை அரசாங்கத்தால் கட்டுப்படுத்துவதில் பேச்சு சுதந்திரம் எப்போது மீறப்படுகிறது என்பதை தீர்மானிக்க நீதிமன்றம் மூன்று நீடித்த சோதனையைப் (Three Prolonged Test) பயன்படுத்துகிறது.

அதாவது, பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்துதல்,

  1. இது சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டபடி செய்யப்பட வேண்டும், அந்த விதிகள் தெளிவாகவும் விளக்கமாகவும் இருக்க வேண்டும்.
  2. ஒரு குறிப்பிட்ட சட்டபூர்வ நோக்கத்தை அடைவதற்கு என்பதைக் உறுதிசெய்ய வேண்டும்.
  3. ஒரு ஜனநாயக சமுதாயத்தின் இருப்புக்கு இது அவசியம், அதாவது, அந்த குறிப்பிட்ட கட்டுப்பாட்டிற்கும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் ஒரு நியாயமான தொடர்பு இருக்க வேண்டும்.

இந்த மூன்று விடயங்களில் ஏதேனும் ஒன்று மீறப்பட்டால், பேச்சு சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாக சட்டம் கருதுகிறது.

ஊடகங்களை தணிக்கை செய்வதன் மூலமும், ஊடகவியலாளர்களை சித்திரவதை செய்வதிலும், கொலை செய்வதிலும், சமூக ஊடகங்களை தடை செய்வதன் மூலமும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அரசாங்கம் சில சமயங்களில் மீறிய நிகழ்வுகளின் வரலாற்று உதாரணங்கள் உள்ளன. அதே நேரத்தில், வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் தவறான தகவல்களை பரப்புதல் போன்ற முறைகள் மூலம் குடிமக்கள் கூட கருத்து சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யலாம். எனவே, கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதை உறுதிசெய்வதும், கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்த குடிமகனுக்கு பொறுப்பு உண்டு என்பதையும் உறுதி செய்வது இரு தரப்பினரின் பொறுப்பாகும்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts