கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றிற்கு இடையிலான நூலிழை இடைவெளி

கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையானது, 1948 இல் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் அது கருத்தாக்கம் செய்யப்பட்டதிலிருந்து, ஒரு ஜனநாயக சமூகத்தின் ஒரு அம்சமாக உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சமுதாயத்தில் முக்கியமான மற்றும் அவசியமான மாற்றத்தைக் கொண்டுவந்த உலகின் மிக முற்போக்கான இயக்கங்களின் செயல்பாட்டு மையத்தில் மனித உரிமைகள் இருந்தன என்று வாதிடலாம். சிலர் இதை ஓர் ஆயுதம் என்று விவரித்திருக்கிறார்கள் என்பதில் ஆச்சர்யமில்லை. தனியுரிமை மற்றும் தனிநபர் கௌரவம் போன்றன, வழக்குகளில்,  கருத்துச் சுதந்திரம் போன்ற பிற அடிப்படை உரிமைகளுடன் முட்டிமோதுவது அபூர்வமானதல்ல. இலங்கையர்களைப் பொறுத்தவரை, நமது அரசியலமைப்பின் மூன்றாம் அத்தியாயத்தில் கருத்துச் சுதந்திரம் ஒரு அடிப்படை உரிமையாக உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. ஆயினும் தனியுரிமைக்கு அவ்வாறான ஒன்று இல்லை. தனியுரிமையை ஒழுங்குபடுத்தும் சட்டங்களின் பற்றாக்குறை குறித்து நீண்டகாலமாக விவாதங்கள் உள்ளன, இது தென்னாப்பிரிக்க சட்டத்தின் கோட்பாடுகளை நெருக்கமாக பின்பற்றும் எங்கள் நீதிமன்றங்களை பாதிக்கவில்லை. இலங்கை நீதிமன்றங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நுணுக்கமான பொறுப்பு குறித்து, தென்னாப்பிரிக்காவின் அதிகார வரம்பால் நிர்ணயிக்கப்பட்ட முன்மாதிரிகளைப் பின்பற்றுவதே இதற்குக் காரணம். கருத்து சுதந்திரம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றுக்கு இடையிலான குழப்பமான குறுக்குவெட்டுகளை தென்னாப்பிரிக்க நீதிமன்றங்கள் எவ்வாறு முறியடித்தன என்பதையும், இலங்கையர்கள் அதை எவ்வாறு கற்றுக் கொள்ளலாம் என்பதையும் இந்த கட்டுரை ஆராய்கிறது.

எவர் ஒருவரைப் பற்றியும் ஏதாவது சொல்ல உரிமை உண்டு என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா? அல்லது பொதுமக்களிடமிருந்து மறைக்க விரும்பிய ஒருவரது முக்கியமான விடயம் ஒன்றை வெளிப்படுத்துவதை பற்றி  நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா? இதுபோன்ற சூழ்நிலைகளில், உங்கள் செயல்கள் தனி ஒருவரின் நன்மையைவிட அதிக மக்கள் நன்மைக்காக என்று நீங்கள் கருதும் பட்சத்தில், உங்கள் கருத்துரிமையை பாதுகாத்துக்கொண்டு நீங்கள் அதை செய்யலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் கருத்துச் சுதந்திரம் மற்றவரின் தனியுரிமை அல்லது கௌரவத்தை விட முக்கியமானது என்று நீங்கள் உணரும் பட்சத்தில் அவ்வாறு செய்யலாம்.

ஜனநாயக சமூகங்களில் கருத்துச் சுதந்திரம், அவதூறு சட்டம் (அல்லது ஒருவரின் நற்பெயரை பாதுகாக்கும் சட்டம்) மற்றும் நற்பெயரைப் பாதுகாக்கும் இடத்தில் சந்திக்கிறது என்பதை தென்னாப்பிரிக்க நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. முக்கியத்துவத்தின் படி அடிப்படை உரிமைகள் தொடர்பாக உத்தியோகபூர்வ தரவரிசை இல்லாததன் காரணமாக இது ஒரு வகையான குறுக்குவெட்டு ஆகும், இதன் விளைவாக எட்டப்படும் தீர்ப்பு ஒரு அடிப்படை உரிமையை மற்றொன்றுக்கு மேலோங்கச் செய்யலாம், இது ஒரு சிக்கலான பிரச்சினை. எனவே, நீதிமன்றங்கள் இந்த உரிமைகளை செயல்படுத்துவதற்கான எல்லைகளை உருவாக்கியுள்ளன, குறிப்பாக அவதூறு பாதுகாப்பதில். உண்மையான அவதூறுகளிலிருந்து பொது நலனுக்காக பேச்சு எல்லையை அறிந்து கொள்வதற்கான போதுமான கட்டமைப்பை இலங்கை கொண்டிருக்கவில்லை என்பதால், தென்னாப்பிரிக்க நீதிமன்றங்கள் சமீபத்தில் வழங்கிய பின்வரும் வழிகாட்டுதல்கள் நமது குற்றச் சட்டத்தில் இடைவெளிகளை நிரப்ப பெரிதும் உதவுகின்றன.

அவதூறுக்கான பல வழக்குகளில், ஒன்று சமூக நலன் அடிப்படையிலான நியாயமான கருத்தாயின் அது ஒரு நபரின் நற்பெயரைக் காயப்படுத்துவதோ அல்லது அவர்களின் அந்தரங்கத்தில் ஊடுருவுவதாகவோ அமைந்தாலும். இந்த வழக்கில் கருத்துச் சுதந்திரம் வலிமையானது. பொது நலன் சார்ந்த விஷயத்தில் எந்தவொரு குடிமகனும் தனது நேர்மையான கருத்தை வழங்குவதற்கான உரிமையை இது பாதுகாக்கிறது, அது எவ்வளவு தவறானதாக இருந்தாலும், மிகைப்படுத்தப்பட்டதாகவோ அல்லது பக்கச்சார்பாகவோ இருந்தாலும் கூட. எது நியாயமான கருத்தை உள்ளடக்கியது என்பதை ரோமன் டச்சு சட்டத்தின் கீழ் தென்னாப்பிரிக்க நீதிமன்றங்களால் வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும் இது பின்னூட்டம் அல்லது கருத்துகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் உண்மை அறிக்கை அல்ல. இந்த வேறுபாட்டை தீர்மானிக்க, நீதிமன்றங்கள் நியாயமான மனிதனின் சோதனையை (the test of the reasonable man) நாடுகின்றன. ஆகவே இதன் பொருள் சாதாரண வாசகரின் பார்வைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுகிறது, மேலும் “எனது பார்வையில்” அல்லது “என் கருத்தில்” போன்ற சொற்றொடர்கள் வர்ணனையின் குறிகாட்டிகளாக இருக்கலாம், ஆனால் உண்மைகளின் அறிக்கை அல்ல என்று கொள்ளப்பட வேண்டும். எவ்வாறாயினும், கருத்து பெரும்பாலான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும், மேலும் அது பொது நலன் சார்ந்த விஷயத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். கடைசியாக, கருத்து தீங்கிழைக்கும் நோக்கங்களுடன் செய்யப்படக்கூடாது என்பதில் நியாயமாக இருக்க வேண்டும். பல இலங்கை அவதூறு வழக்குகள் கடைசித் தேவையை உன்னிப்பாக ஆராய்ந்தன, குறிப்பாக வெளியீடு அரசாங்கத்துடன் உறவுகளைக் கொண்ட ஒரு நபரைப் பற்றியதாய் இருப்பின்.

மேற்கண்ட வழிகாட்டுதல்களை இலங்கை தனிப்பட்ட மட்டத்திலும் நீதி மட்டத்திலும் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வழக்கினதும் அனைத்து உண்மைகளையும் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம், மேலும் ஒரு அடிப்படை உரிமையை நோக்கி மற்றொன்றுக்கு எதிரான தப்பெண்ணத்தைத் தூண்டும் தீர்ப்புகளைத் தவிர்ப்பதற்காக, அவற்றின் பாதுகாப்புகள் ஆராயப்பட வேண்டும். இலங்கையில் தனியுரிமைச் சட்டங்களின் பற்றாக்குறை பேச்சு சுதந்திரத்தின் சக்தியை துஷ்பிரயோகம் செய்யும் பலிகடாவாக பார்க்கக்கூடாது. மறுபக்கத்தில், சட்டங்களின் போதாமை அவதூறு வழக்குத் தொடரப்படும் என்ற அச்சத்தின் காரணமாக பொதுமக்கள் நியாயமான கருத்துக்களை வெளியிடுவதைத் தடுப்பதாக இருக்கவும் கூடாது. தென்னாப்பிரிக்க நீதிமன்றங்களிலிருந்து பெறப்பட்ட வழிகாட்டுதல்கள், பிரதிவாதியின் நியாயப்படுத்தல் நிர்ணயிக்கப்பட்ட நான்கு வரம்புகளுக்கு உட்பட்டதா என்பதைக் கவனிக்க அனுமதிக்க முயல்கிறது, இதன் மூலம் இலங்கையின் அவதூறு சட்டத்தில் தற்போதுள்ள ஓட்டைகளை அடைக்க உதவுகிறது.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts