Uncategorized

கதலுவரன்வெல்லபுராதன விகாரையில் வரையப்பட்ட எமதுபுராணம்

தீபா  குமுது  பிரியதர்ஷினி

காலி கொக்கல நகரில் அமைந்துள்ள ரன்வெல்ல புராதன விகாரையானது இலங்கையின் கண்டி இராச்சியத்தின் சித்திரக்கலை அம்சங்களை கொண்ட தேசிய உரிமையாக கருதப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த விகாரை ,இலங்கையின் சமூக, கலாச்சாரம் மற்றும் பௌத்த  கோட்பாடுகள் தொடர்பில் தெளிவான சித்திரங்களை எமக்கு வழங்குகிறது.

கதலுவ  விகாரையானது  இலங்கையின் கண்டி இராச்சிய காலத்தில் (கி.பி.1592-1815) காலப்பகுதியில் சிறப்பான பௌத்த சித்திரக்கலை நிர்மாணிப்புக்களாக கருதப்பட்டன. அதனூடாக அக்காலப்பகுதிக்குரிய சமூக அரசியல், சமய பின்னணி ஆகியன வெளிப்படுத்தப்பட்டன. இந்த சித்திர நிர்மாணிப்புக்கள் ஊடாக தற்கால சிந்தனைகள், நம்பிக்கை ஆகியவற்றை ஓவியங்கள் ஊடாக வெளிப்படுத்த கலைஞர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். (ரேவ்.மஹிந்த யூ -2013)

இந்த காலக்கட்டத்தில் இலங்கை காலணித்துவ ஆட்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், கண்டி அரசர்கள் பௌத்த கலை மற்றும் கலாச்சாரங்களை முழுமையாக பாதுகாப்பதற்கு முயற்சித்துள்ளனர்.

கண்டி சித்திரக்கலையின் சமூக இலக்கு

தேசிய கலைஞர்கள் இடம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அமைய அவர்களின் ஒப்பற்ற கலை நிர்மாணிப்புக்களை மேற்கொண்டுள்ளதாக ஆனந்த குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.(ரேவ். மஹிந்த யூ -2013)

சமூக கட்டமைப்பு மற்றும் பாரம்பரியமான வாழ்க்கை முறைமை

இந்த சித்திரங்களின் தோற்றத்துக்கமைய சமூகத்துக்குள் காணப்பட்ட பல்வேறுப்பட்ட ,வகுப்புக்கள், குலம், சாதி, மற்றும் தொழில்கள் தொடர்பில் மிகவும் முக்கியமான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக விவாதத்தில் ஈடுபடும் அரசருக்கும், தளபதிக்கும் இடையிலான குல வேறுப்பாடு இந்த சித்திரங்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.( ரேவ். மஹிந்த யூ. 2018)

பரஸ்பர தொடர்புகள் மற்றும் சுற்றுச்சூழல்

கதலுவ விகாரையில் உள்ள சித்திரங்களில் சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையிலான பரஸ்பர தொடர்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மரங்கள், மிருகங்கள், பறவைகள், கிராமிய வாழ்க்கை முறைமை ஆகியவற்றை உள்ளடக்கி சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையிலான தொடர்பு அல்லது உறவுகளை எடுத்துக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. (வெல்லவகே எம்.1993)

அர்த்தமுள்ள மரபுகள் மற்றும் தேசிய பாரம்பரியம்

கதலுவ விகாரையின் ஓவியங்களில் உள்ள பாரம்பரிய மரபுகள் மற்றும் தேசிய அடையாளங்களை வெளிப்படுத்தும் கலை செயற்பாடுகள் சிறந்த வடிவமைப்பின் தன்மையை காட்டுகிறது. இந்த சித்திரங்கள் மற்றும் ஓவியங்கள் ஆரம்ப காலத்தில் சிங்கள சமூகத்தின் மத்தியில் காணப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் சமூக நிலைமைகளை தெளிவாக வெளிப்படுத்துகிறது. (சாள்ஸ். எஸ்.பி. 2001) கதலுவ விகாரை சித்திரங்களின் கூறுகள்

1கதையின் பகுப்பாய்வு – இந்த சித்திரங்கள் ஊடாக சோதிட கதைகளின் பல்வகைத்தன்மை வெளிப்படுத்தப்படுகிறது. இந்த கதைகள் பௌத்த மத நிகழ்வுகள் மற்றும் போதனைகளை நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. அக்காலச் சமூக அமைப்பை சித்தரித்தல், மாநில ஆட்சி, பொருளாதார அமைப்புக்கள், குடும்ப நிர்வாகம், விவசாயம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை அணுகுவதன் மூலம் பார்வைக்கு சமகால சமூகப் புரிதலை அளிப்பது இந்த சித்திரங்களின் சிறப்பம்சமாகும்.

2- சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்துக்கிடையிலான இடைத் தொடர்பு – ஓவியங்கள் ஊடாக வெளிப்படுத்தப்படும் சமூக வாழ்க்கை முறைமை,  சிறந்த கதாபாத்திரங்கள், மனநிலை மற்றும் சமூக கோட்பாடுகளின் பல்வகைமை ஆகியவை தெளிவாக வெளிப்படுத்தப்படும். ஓவியங்கள் அல்லது சித்திரங்களில் உள்ள ஐரோப்பிய ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் ஐரோப்பிய கலை, கலாச்சார்கள் காலணித்துவ ஆட்சியின் அழுத்தங்களை வெளிப்படுத்துகின்றன.

3- கண்டி சித்திரக்கலையின் பாரம்பரிய நிலைமை – பேராசிரியர் சிறி குணசிங்கவின் நிலைப்பாட்டுக்கமைய, கதலுவ விகாரையின் ஓவியங்கள் பிராந்திய கலை வடிவங்கள் ஊடாக தனித்துவமான அம்சங்களை வெளிக்காட்டுகின்றன.  மரங்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் சமூக வாழ்க்கை முறைமை, விவசாய நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையிலான உறவுகளை சுட்டுக்காட்டுகின்றன.  அவற்றைச் சித்தரிப்பதற்கு மலர் வடிவங்கள், நெய்தல் போன்ற உத்திகளை ஓவியர்கள் கையாண்டுக்களை சிறப்பம்சமாகும் (மல்லவகே எம்.1993)

4- கலாச்சார சமூக மதிப்புக்கள் – ஓவியங்கள் அக்காலச் சமூகத்தின் வகுப்புக்கள், குலம், சாதி மற்றும் தொழில் உள்ளிட்ட விடயங்களை வெளிப்படுத்தின. வணிகர், கிராமவாசி, கிராமத்துப் பெண், வீரர்கள், இராணுவ அதிகாரிகள், அமைச்சர்கள், ஆயர்கள், அரசன் உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டன. கடலுவ விகாரையின் ஓவியங்கள் பல்வேறு நிலைமைகளை குறிக்கும் பாத்திரங்களும் அவற்றின் வெளிப்படையான வெளிப்பாடுகளும் நன்கு புலப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

5- அடிப்படை கலை நுட்பம் மற்றும் பொருட்கள் – கதலுவ விகாரையில் உள்ள ஓவியங்களில் உள்ள சமகால படங்கள் மற்றும் வர்ண பயன்பாடுகள் கண்டி இராச்சியத்தின் பௌத்த கலை பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கதலுவ கலை தனிப்பயண மரபுக்கு சொந்தமானது.

கதலுவ  ரன்வெல்ல புராதன விகாரையின் ஓவியங்கள் கண்டி இராச்சியத்தின் பௌத்த கலையின் வெற்றி மற்றும் முழுமையான தன்மையை வெளிக்காட்டுகிறது. இது இலங்கையின் கண்டி யுகத்தின் சமூக, கலாச்சார மற்றும் மத, மோதல்கள் உட்பட வாழ்க்கை தொடர்பான உணர்வு மற்றும் பெறுமதியை சுட்டிக்காட்டுகிறது.

குறிப்புக்கள்

1- சாள்ஸ், எஸ்.பி (2001). ‘கண்டி  காலத்தின்  விகாரை  சித்திரங்களில் உள்ள வர்ண தெலிகுரு மற்றும் பதமா’ கலாச்சார திணைக்களம் – கொழும்பு

2- ரேவ். மஹிந்த ,யூ (2013). ‘ லக்திவ பௌத்த கலை வரலாறு’ கொடகே வெளியீடு –கொழும்பு

3- மல்லவகே. எம். (1993). ‘இலங்கை சித்திரக்கலையின் தாவர நிர்மாணிப்புக்கள்’ எஸ் கொடகே வெளியீடு –கொழும்பு

தீபா  குமுது  பிரியதர்ஷினி

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts