கண்டுபிடிப்புக் காப்புரிமை மற்றும் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை
பவித்ரானி திசாநாயக
அறிவுசார் சொத்து (Intellectual Property) என்பது இன்று உலகின் மிக முக்கியமான சட்ட பிரிவுகளில் ஒன்றாகும். இது சட்டபூர்வமான நியாயத்தன்மை, பொருளாதார நன்மை மற்றும் மனிதனின் அறிவினால் உண்டாக்கப்பட்ட புத்தாக்கங்களுக்கு பெறுமதி மற்றும் பாதுகாப்பை வழங்க முற்படுகிறது. சட்டத்தின் தனித்துவமான அம்சமான இது இப்போது உலகம் முழுவதும் பரவலாக விவாதிக்கப்படும் விடயமாக உள்ளது. தற்போது, முழு உலக பாரம்பரிய தளமும் அந்த அறிவுசார் சட்டத்தின் அடிப்படையில் அறிவு சார்ந்த, வளர்ந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்கிறது என்று கூறலாம்.
இத்தகைய உலக பொருளாதார முறையில், அறிவுசார் சொத்துக்களை வகைப்படுத்துவதில் அவற்றின் காப்புரிமை உரிமம் குறித்த சட்டம் மிக முக்கியமான பகுதியாக உள்ளது. தொழிலாளர் உரிமைச் சட்டத்தினால் பெற்றுக் கொள்ளக்கூடிய இந்த காப்புறுதிப்பத்திரத்தினால் உரிமதாரர்களுக்கு தமது நிர்மாணத்தின் மீது ஏக போக உரிமை வழங்க வாய்ப்பு ஏற்படுகிறது
அதாவது, உரிமைதாரர் தனது நிர்மாணத்திற்கான விண்ணப்பத்தை பதிவு செய்த திகதியிலிருந்து இருபது வருட காலத்திற்கு நிர்மாணத்தின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் விற்பனையிலிருந்து வரும் நன்மைகளை வேறு எவரும் பெற்றுக் கொள்வதை இந்த காப்புறுதிப்பத்திரம் தடுக்கிறது. ஒரு நிர்மாணத்தின் உண்மையான உரித்தாளர் மட்டுமே அந்த நிர்மாணத்தினைப் பயன்படுத்துவதோ, விற்கவோ அல்லது மாற்றவோ முடியும், இதனால் பொருளாதார நன்மைகளை அவர் பெற முடிகிறது.
காப்புரிமை பெற்ற நிர்மாணமானது அதன் பாதுகாப்பு மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கான ஊக்கத்தொகைகளைப் பெறவும் மற்றும் பிற நன்மைகளைப் பெறவும் சான்றளிக்கின்றது. நிர்மாணத்தின் மீதான முதலீட்டையும் ஊக்குவிக்கிறது. இது பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஆதரிக்கிறது. ஏற்கனவே வழங்கப்பட்ட காப்புரிமை உரிமங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்படும் தொழில்நுட்பங்கள் குறித்த விளக்கங்களையும் வழங்குகின்றன, மேலும் அவை மதிப்பாய்வுக்காக எவருக்கும் கிடைக்கின்றன.
நிர்மாணங்கள் குறித்து விழிப்புணர்வு உண்டாக்க அவை குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் அதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு இவை பெறுமதி மிக்க தகவல்களைக் கொண்டுள்ளன. மேலும் நிர்மாணத்தின் பொது உரிமைகள் மற்றும் படைப்பாளரின் உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பதை இது நமக்குக் எடுத்துக் காட்டுகிறது.
2003 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க அறிவுசார் சொத்துச் சட்டத்தின் 62 முதல் 100 பிரிவுகள் நிர்மாண காப்புரிமைகளின் சட்டபூர்வமான நிலையை உள்ளடக்கியுள்ளன. வழக்கமாக அது வழங்கப்பட்ட நாட்டில் மட்டுமே செல்லுபடியாகும். தொழில்துறை சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான பாரிஸ் ஒப்பந்தத்தில் எமது நாடு உறுப்பினராக உள்ளதால், நம் நாட்டுக் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பாரிஸ் ஒப்பந்தத்தின் எந்தவொரு உறுப்பினரிடமும் தொடர்புடைய தேசிய சட்டத்தின் கீழ் நமது நாட்டுக் கண்டுபிடிப்பாளர்கள் பெறலாம். உலகின் அனேகமாக ஒவ்வொரு நாடும் இந்த ஒப்பந்தத்தின் உறுப்பினராக உள்ளன. இதனால் ஒரு கண்டுபிடிப்பாளர் உறுப்பு நாடுகளில் தொழில்துறை சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தனது கண்டுபிடிப்பின் முன்னுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஜெனீவாவில் உள்ள உலக அறிவுசார் சொத்து அமைப்பால் நிர்வகிக்கப்படும் காப்புரிமை மற்றும் ஒதுக்கீட்டு ஒப்பந்தத்தின் (PCT) கீழ் அனைத்து இலங்கை பிரஜைகளும் தமது கண்டுபிடிப்புக்களின் காப்புறுதிக்காக விண்ணப்பிக்கலாம். ஒரு விண்ணப்பதாரர் உலக அறிவுசார் சொத்து அமைப்பிற்கு தமது புத்தாக்கம் குறித்து விண்ணப்பிக்க வேண்டுமாயின் தனித் தனி விண்ணப்பப்படிவங்களை தாம் விரும்பும் நாடுகளுக்கு (காப்புரிமை ஒப்பந்தத்தின் கீழ் கைச்சாத்திட்ட நாடுகள்) விண்ணப்பிக்க முடியும். அது போன்றே ஒரே தேசிய விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்க எதிர்பார்த்தால் காப்புரிமை மற்றும் ஒதுக்கீட்டு ஒப்பந்த விண்ணப்பபடிவத்தில் விண்ணப்பிக்கும் நாடுகளைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். இது பல விண்ணப்பங்களைத் தனித் தனியாகச் சமரப்பிப்பதை விட எளிமையான செயல்முறையாகும்.
பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, நமது நாட்டில் அறிவுசார் சொத்துச் சட்டத் துறையில் பெரும் அதிகரிப்பு காணப்படவில்லை என்பது உண்மையாகும். இதற்குக் காரணம், இந்த விடயம் எமது நாட்டிற்கு புதியது என்பதாகும். சட்ட கட்டமைப்பில் இந்த சட்டங்களைப் பற்றிய பொது விழிப்புணர்வு மிகக் குறைவு. இதன் விளைவாக, படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களின் பொருளாதார மற்றும் தார்மீக நன்மைகளை இழக்கக்கூடும்.
மேலும், அறிவுசார் சொத்துச் சட்டம் பிற சட்டத் துறைகளிலிருந்து சுயாதீனமாக இயங்கவில்லை என்பது உண்மை. மனித அறிவுசார் படைப்புக்களைப் பாதுகாக்க வேண்டிய இந்த அறிவுசார் உரிமைச் சட்டத்துடன் பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சட்டங்களும் பிணைக்கப்பட்டே உள்ளன.
அறிவுசார் சொத்து உரிமைகள் தவிர்க்க முடியாத (Inevitable Rights) சட்டங்களாகும். அத்தகைய உரிமைகளைத் தவிர்ப்பது எந்தவொரு படைப்பாளியையும் ஊக்கமிழக்கவே செய்கிறது. எனவே, படைப்பாளிகளை மேலும் ஊக்குவிப்பதற்கும், புதுமைகள் மற்றும் கண்டுபிடிப்புக்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த சட்டங்களை சரியாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒரு விடயமாகும்.