சமூகம்

கடின உழைப்பை மக்களுக்கு செலவிட்ட ஹாஜியார்! கண்டி வைத்தியசாலைக்கு காணியை அன்பளிப்பு செய்தவர்!

உபேக்ஷா உடுவரல்லா
ரபீக் ஹாஜியாரின் ஒரே குழந்தையாக இருந்த மகன் குழந்தைப் பருவம் முதலே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு 20ஆவது வயதில் மரணமானார். குழந்தையுடன் கண்டி வைத்திய சாலைக்கு தொடர்ச்சியாக சிகிச்சைக்கு செல்வது ரபீக் ஹாஜியாரிள் வழக்கமாக இருந்தது. அந்த சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குமார் சிறுநீரகங்களை எந்தளவு தியாகத்துடன் அன்பளிப்பு செய்கின்றனர் என்பதை கண்டார்…

மனிதர்கள் எவ்வளவுதான் இனம், மதம், சாதி என்று போரடினாலும் ஒரு சந்தர்ப்பத்தில் நோய் வாய்ப்பட்டுவிட்டால் அனைத்தும் முடிவுக்கு வந்து விடுகின்றது. அப்போது உதவியற்ற நிலைக்கு உள்ளாகி தனிமைப்படும் நிலை ஏற்படுகின்றது. ரபீக் ஹாஜியார் அவரது ஒரே குழந்தையை இளம் பராயத்தில் இழந்து விடுகின்றார். அதன் மூலம் வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலையை உணர்கின்றார். அதன் காரணமாக அவர் எப்போதும் அவரது கடின உழைப்பை ஏனைய மனிதர்களது நலன்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்காக செலவிட்டு வந்துள்ளார்.
அவரது இறப்புடன் அவரின் பெயரை முழு உலகமுமே அறிந்து கொண்டது. கண்டி பெரிய ஆஸ்பத்தரிக்கு கண்டி பிரதேசத்தில் மிகவும் முக்கியமான இடத்தில் அமைந்திருந்த பெறுமதி வாய்ந்த சொத்தாக கருதப்பட்ட ஒரு ஏக்கர் மற்றும் 43 பேர்ச் காணியை தர்மம் செய்தார். அதன் பெறுமதி பல நூறு மில்லியன் ரூபாய்களாகும்.
கௌதம புத்தர் கூட தர்மத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தி இருக்கின்றார். நபி முஹம்மத் ஸல்லல்லாஹ_ அலைஹிவ ஸல்லம் அவர்கள் மனிதர்களின் கீழ் தங்கி வாழுகின்ற மக்கள் மீது எவ்வாறு இரக்கமும் அன்பையும் காட்ட வேண்டும் என்பதை அழகாக போதித்துள்ளார். ரபீக் ஹாஜியார் அவர்கள் இந்த இரண்டு போதனைகளுக்கும் ஏற்ப வாழ்ந்த ஒரு உயர்வான மனிதராக இருந்திருக்கிறார். அவர் இலங்கை வாழ் எல்லா சமூகங்களையும் அன்பு செலுத்தி நேசிக்கும் ஒரு மனிதராக வாழ்ந்து இறந்தார்.
மக்களது பெறுமதிமிக்க வாழ்க்கையானது அவர்களைச் சூழ இருப்பவர்களது பொறுப்பற்ற நடத்தை காரணமாக நோய்வாய்ப்பட்டு சிரமங்களை அனுபவிக்கும் நிலைக்குள் தள்ளுவதாக அமைகின்றது. அதிகமான மக்களால் இந்த மிக இலகுவான உண்மையை புரிந்துகொள்ள முடிவதில்லை. மத்திய மாகாணம், ஊவா, வடமேல், வட மத்திய மற்றும் சபரகமுவ ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த மக்களது உயிர்களை பாதுகாத்து சுகமான வாழக்கையை உறுதிப் படுத்துவதில் கண்டி பெரிய ஆஸ்பத்திரி பாரிய பணியைச் செய்து வருகின்றது. வருடாந்தம் 400,000 நோயாளிகள் உள்ளக சிகிச்சைகளைப் பெறுகின்றனர். அதற்கு மேலதிகமாக ஒவ்வொரு மருத்துவ சிகிச்சை பிரிவுகளாலும் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கு வருடாந்தம் கண்டி ஆஸ்பத்திரி மூலம் சிகிச்சை வழங்கப்படுகின்றது.

“கண்டி பெரிய ஆஸ்பத்திரி தேசிய வைத்தியசாலையாக அண்மையில் தரம் உயர்த்தப்பட்டது.” என்று அதன் பணிப்பாளர் சமரநாயக்கா கூறினார். “எங்களது சேவையை விஸ்தரிப்பதற்காக எங்களுக்கு மேலும் காணி தேவைப்படுகின்றது. ஆஸ்பத்திரிக்கு சொந்தமான வாகன தரிப்பிடம் அமைந்துள்ள காணி ரபீக் ஹாஜியாரின் பாட்டனாருக்கு சொந்தமானதாகும். அதே நேரம் ரபீக் ஹரிஜியார் அவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் மற்றும் 43 பேர்சர்ஸ் காணியை அதற்கான காணி உறுதியை எழுதி ஒப்படைத்ததன் மூலம் கண்டி ஆஸ்பத்திரிக்கு அன்பளிப்பு செய்துள்ளார். அதே வைத்தியசாலைக்கு சொந்தமான காணியை இன்னும் சிலர் பலவந்தமாகவும் சட்விரோதமான முறையிலும் பொதுச் சொத்தை தனிப்பட்ட சொத்தாக பிடித்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இப்படியான ஒரு காலகட்டத்தில் ரபீக் ஹாஜியார் தனது சொந்த சொத்தான இந்த காணியை அவராக முன்வந்து அன்பளிப்பு செய்துள்ளார்.”
ரபீக் அவர்கள் கண்டியில் பிறந்து மரணிக்கும் வரையில் அதே நகரத்தில் வாழ்ந்த ஒருவராவார். அவரது தந்தை சேக் தாவூத் அனைவராலும் நன்கு அறியப்பட்ட பிரபல்யமான வர்த்தகர். கண்டி அந்த வர்த்தகரின் மகனான ரபீக் ஹாஜியார் திரித்துவக் கல்லூரியில் கல்வி கற்று பாட்டனுக்கும் தந்தைக்கும் சொந்தமான வியாபாரத்தை நடத்தி வந்தார்.

நாங்கள் ரபீக்கிடம் எந்த உதவியையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் குறைபாடுகளைக் கண்டாலே சுயமாகவே உதவி செய்யக்கூடிய ஒருவராக இருந்தார்.
ரபீக் ஹாஜியாரின் ஒரே குழந்தையாக இருந்த மகன் குழந்தைப் பருவம் முதலே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு 20ஆவது வயதில் மரணமானார். குழந்தையுடன் கண்டி வைத்திய சாலைக்கு தொடர்ச்சியாக சிகிச்சைக்கு செல்வது ரபீக் ஹாஜியாரிள் வழக்கமாக இருந்தது. அந்த சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குமார் சிறுநீரகங்களை எந்தளவு தியாகத்துடன் அன்பளிப்பு செய்கின்றனர் என்பதை கண்டார். மரணத்தின் முன்னிலையில் மதமும் இனமும் மதிப்பற்றவைகளாகும். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்தால் அனைவரும் சமமாகவே மதிக்கப் படுகின்றார்கள். அவர் வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் அனுபவித்த துரயரங்கள் மற்றும் அனுபவங்கள் அனைத்தும் அவரிடம் இருந்த பெறுமதியான சொத்துக்களை மக்களுக்காக தியாகம் செய்யும் அளவிற்கு அவருக்கு மனப் பக்குவத்தை வழங்கியது எனலாம்.
ரபீக் அவர்களின் மூத்த சகோதரரான ஹபீஸ் என்பவர் அவரது சகோதரரின் இந்த உயர்வான பணி குறித்து பெருமைப்படுகின்றார். “அவர் எப்போதும் துயரப்படும் மக்களுக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் பாடுபட்ட ஒருவராவார். அடிக்கடி அவரிடம் இருந்த அனைத்தையும் மக்களுக்காக தர்மம் செய்துவிட்டு வீட்டிற்கு வரும்போது வெறும் கையோடு வருவதை வழக்கமாக கொண்டி ருந்தார்.”
ரபீக் ஹாஜியாரின் பலவிதமான சமூகப் பணிகளில் ஒன்றாக இருந்து செயல்பட்ட ஒருவரே சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண அபேசிங்க ஆவார். “நாங்கள் ரபீக்கிடம் எந்த உதவியையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் குறைபாடுகளைக் கண்டாலே சுயமாகவே உதவி செய்யக்கூடிய ஒருவராக இருந்தார். எங்களது சிகிச்சை பிரிவுக்கு வந்து பார்த்த அவர் அங்கிருந்த குறைகளைக் கண்டதால் நிலத்திற்கு தரையோடுகள் பதித்து, வர்ணம் பூச நடவடிக்கை எடுத்தார். அவர் உண்மையாகவே கண்டி பெரிய ஆஸ்பத்திரிக்கு எந்நேரமும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றக் கூடிய சிறந்த மனிதர்களுள் ஒருவராக இருந்தார். என்று டாக்டர் அபேசிங்க தெரிவிக்கின்றார்.

This article was originally published on the catamaran.com
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts