கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் கசப்பான உண்மை

இந்த ஆண்டு மார்ச் கடைசி மற்றும் பெப்ரவரி மாதத்தில் நடைபெறும் ஐ.நா  மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரிக்கும் என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்  குறிப்பிடுகின்றனர். மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் ஏற்கனவேயுள்ள தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் விவாதிக்கப்பட்டும் கலந்துரையாடப்பட்டும் வருவதால் இந்த முழு செயல்முறை முன்மொழிவுகளானது வட பிராந்திய மக்களிடத்தில் மற்றும் அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளிடம் அது தொடர்பான செயற்பாடுகள் எத்தகையது என்பதை கேட்டறிந்து கவனம் செலுத்தவேண்டியுள்ளது.  இத்தருணத்தில் இலங்கையில்  காணப்படும் சர்வதிகார அரசியல் நீரோட்டத்தால் நிராகரிக்கப்பட்ட வடக்கு மக்களின் அபிலாசைகள்  தற்போதைய அரசாங்க  நிகழ்ச்சி நிரலில் எங்கும் குறிப்பிடப்படாத வடக்கு தமிழ் மக்கள்  மற்றும் அவர்களின் பிரதிநிதிப்படுத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இத்தருணத்தில் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதனையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. வடமாகாண பிரதிநிதிகளின் கடந்தகால செயற்பாடுகளை அவதானிக்கும் போது அவர்கள்  மத்தியில்  பல்வேறுபட்ட ஒற்றுமைகள் மற்றும்  வேற்றுமைகள்  காணப்படுவதை தெளிவாக அவதானிக்க கூடியதாக உள்ளது. தெற்கில் போலவே வடக்கிலும் வளர்ச்சி அடையும் பல்வேறுபட்ட அரசியல் போக்குகள் மற்றும் தனித்துவ சமூக அமைப்புகளின் முன்னேற்றத்தை தடைபோடும் விதமாக அரச செயற்பாடுகள்  காணப்படுகின்றது என்பதை மிக ஆழமாக அவதானிக்கும் போது எம்மால் கண்டுகொள்ள முடியுமாக உள்ளது. எவ்வாறாயினும், ஏகாதிபத்திய அரசியல் நீரோட்டத்தினால் தமிழ் மக்களின்  கோரிக்கைகளை  தொடர்ந்து நிராகரித்தும் அக்கோரிக்கைகளை தனிமையாக்கியும் மேற்கொள்ளப்படும்  செயல்பாடுகளினால்  வடக்கு மக்கள்  சகலரும் ஒரு கொடியின் கீழ் ஒன்றுசேர்க்கும் விதமாக   கட்டாயப்படுத்தப்படுகின்றனர். 

 

பல்வேறுபட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக பிரிந்து வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருக்கும்  தமிழரசு கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும்  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சீ. வீ. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய அனைவராலும் இணைந்து எழுத்தப்பட்ட கடிதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் அங்கத்துவம் பெறும் 47 நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தின் சுருக்கம் பின்வருமாறு, “போரின்போது நடந்ததாக கூறப்படும் யுத்த குற்றங்களை ஆராய்ந்து குற்றவாளிகளை தண்டிப்பதற்கான பொறிமுறையானது இலங்கை அரசாங்கத்தால்  இன்னும் நிறுவப்படவில்லை  என்பதுடன், எந்த ஒரு வழக்கு தொடர்தலும் இன்றி இலங்கை முப்படைகளை காப்பாற்றுவதாக இந்த நாட்டு அரசியல் தலைவர்கள் குறிப்பிடுவதாக” அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டிற்குள் மனித உரிமைகளை நீதியாகவும் பக்கச்சார்பற்ற முறையிலும் நடைமுறைப்படுத்துவதற்கு உள்நாட்டு செயல்முறைக்கு இடமில்லை என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் கிட்டியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு இலங்கையை அழைப்பு விடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

போரின்போது நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டு பொறிமுறை ஊடாக  விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறி 2009 மே மாதம் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது “இராணுவமயமாக்கல் உள்ளடங்கலாக தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுத்தப்படும் தீவிர அடக்குமுறை செயற்பாடுகள், அரசியல் கைதிகளை காலவரையறையின்றி சிறையில் தடுத்துவைத்தல், தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் நிலங்களை அபகரித்தல், மாடுகளுக்கு புல் மேய்ச்சல் நிலங்கள் என்று கூறி நிலங்களை அபகரித்தல், அரசியல் மற்றும் சிவில்  சமூக செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து வேட்டையாடுதல், கொவிட் தொற்றுக்குள்ளாகி இறக்கும் முஸ்லிம் மக்களின் உடலங்களை (ஜனாசாக்களை) அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுதல், நினைவு கூறும் உரிமை பறிக்கப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு அளிக்கப்படுவது இன்றியமையாததாக காணப்படுவதாக  தமிழ் அரசியல் கட்சிகள் அக்கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளது.

 

இந்நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளரான   ஹனா சிங்கரை சந்தித்து ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு அப்பால் உள்ள சர்வதேச போர்க்குற்ற  நீதிமன்றத்திற்கு போர்குற்றம் தொடர்பாக  பொறுப்புகூற வேண்டியவர்களை முன் கொண்டுவரவேண்டும் என்பதின் அவசியத்தன்மையை விளக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இதேபோல் அரசு எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய அரசியலமைப்பு மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்ற எந்தவொரு நம்பிக்கையும் தமிழ் மக்களிடம் காணப்படுவதில்லை என்பதும் அக்கடிதத்தில் உள்வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் மக்கள் மற்றும் பிற இனக்குழுக்களின் நாடித்துடிப்பை அறிந்த தெற்கு அரசியல் இயக்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் போர் முடிவை தொடர்ந்து நடந்தேறிய அநாகரிகமான பேரினவாத அரசியல் நிகழ்வுகளால் படுகொலை செய்யப்பட்டு வாய் மூடப்பட்டதுடன், எப்போதாவது மெல்லியதொனியில் ஒலிக்கும் சில குரல்களை  தவிர இனங்களுக்கு இடையில் சகவாழ்வு தேவையை உணர்த்திய சமூக குழுக்கள் தூங்கிக்கொண்டு இருக்கின்றன. ஆகவே தமிழ் மக்களின் குரல் இன்று தெற்கில் ஒலிக்கப்படுவதில்லை என்பது போலவே பெரும்பான்மை சிங்கள மக்களின் குரலும் வடக்குக்கு கேட்பதில்லை. ஏகாதிபத்திய  ஊடகங்களினால் மக்களின்  வாய்களை பூட்டுப்போட்டு மூடியதுடன் தகவல் தொடர்பையும் தடுத்துள்ளது. வடக்கு மற்றும் தெற்கு  பேரினவாத வளர்ச்சிபோக்குகளின் குரல்களுக்கு மாத்திரம் தமது ஊடகங்களில் இடம்கொடுத்து அதை நாட்டுமக்கள் அனைவரும் செவிமடுப்பதற்கு இடமளித்துள்ளதுடன், அவர்கள் மோதிக்கொள்வதற்கும் சந்தர்ப்பம் அளித்துள்ளது. நவீன அரசியல்வாதிகள் வடக்கில் மற்றும் தெற்கில் உள்ள இனவெறி போக்குகளை தமது அரசியல் பயணத்தின் ஒரு கருவியாக  பயன்படுத்துகின்றனர். உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக தீர்த்துக்கொள்ள முடியுமான உள்நாட்டு பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்தல் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற போதிலும் அச்செயற்பாடு  பேரினவாத அரசியல் நீரோட்டத்திற்கு சிறந்ததொரு எதிர்கால முதலீட்டு நடவடிக்கையாகவே அரசியல்வாதிகள் கருதுகின்றனர். அதுதான் இன்று நாம் எதிர்கொள்ளும் கசப்பான உண்மையும் கூட.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts