கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

எமக்குப் புதிய அரசியலமைப்பொன்று ஏன் தேவை?

இந்த நாட்டில் எந்தவொரு அரசியலமைப்பினாலும் சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு நியாயமான சமுதாயத்திற்கு தேவையான அரசியலமைப்பு அனுபவத்தை வழங்க முடியவில்லை. அரசியலமைப்பின் 78 ஆம் ஆண்டு அரசியலமைப்பினால் உருவாக்கப்பட்ட இன்னும் தீர்க்கப்படாத சங்கடத்தை புதிய அரசியலமைப்பினால் தீர்ப்பது கடினமாக இருக்கும் என்பது தெளிவானதாகும். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாகச் சமூகத்தில் நம்பிக்கை இருந்தது. இந்த நோக்கத்திற்காகத் தற்போது  பொதுமக்கள் கருத்து கோரப்பட்டு வருகின்றது. இந்த சிறு கட்டுரை சில அடிப்படை விடயங்களினூடாக  எமக்குப் புதிய அரசியலமைப்பொன்று ஏன் தேவை?” எனக் கலந்துரையாடுகின்றது. அதன் மூலம்  தற்போது நடந்து கொண்டிருக்கும் புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயல்முறையை ஊக்குவிக்கும் முயற்சியை மேற்கொள்ளப்படுகின்றது. 

நீதியான சமுதாயத்திற்கு அரசியலமைப்பு அனுபவம்

சுதந்திரம் பெற்றதிலிருந்து நாடு இரண்டு அரசியலமைப்புகளை அனுபவித்திருந்தாலும், இரண்டிலும் ஒரே மாதிரியான  இடைவெளிகள் உள்ளன. அதே நேரத்தில், இந்த ஆவணங்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சித்தாந்தத்தை வலுவாக ஆதரித்தல், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை ஆதரித்தல், நிறைவேற்று அதிகாரத்தினைப் பாதுகாத்தல் ஆகியவற்றை மேற்கொள்ளும் மக்களுக்கு வளைந்து கொடுக்காத இரண்டு நெகிழ்வற்ற ஆவணங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

72 ஆம் ஆண்டின் அரசியலமைப்பானது “ சமகி (ஒருங்கிணைந்த) அரசாங்கத்தின் அரசியலமைப்பு” மற்றும் 78 ஆம் ஆண்டின் அரசியலமைப்பானது ஜே. ஆர்.ஜெயவர்த்தனவின் அரசியலமைப்பு ஆகும். எனவே, இரண்டையும் நாட்டின் அரசியலமைப்புகள் அல்லது மக்களின் அரசியலமைப்புகள் என்று ஆழ்ந்த அர்த்தத்தில் விளக்குவது நியாயமில்லை. குறைந்தபட்சம் இரண்டு ஆவணங்களும் மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தத் தவறிவிட்டதுடன் பெரும்பான்மை மக்களின் கருத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. 72 ஆம் ஆண்டின் அரசியலமப்பானது தமிழை இரண்டாவது இடத்தில் வைத்து சிங்களத்தை உயர்த்தியதுடன் 78  ஆம் ஆண்டின் அரசியலமைப்பானது அரசு மற்றும் சமயத்தை ஒன்றாகவிணைப்பதன் மூலம் பௌத்த மதத்திற்கு சமூகத்தில் உயர்ந்த இடமளிக்கின்றது.  . பிரதமர் பதவிக்கு அடித்தளம் அமைத்த 72 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தை வலுப்படுத்தியதில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவிருந்ததுடன் அதற்காக எளிய பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்தை அறிமுகப்படுத்தியது. அதே நேரத்தில், 78 ஆம் ஆண்டின் அரசியலமைப்பிற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதி முக்கியத்துவம் வாய்ந்தவராகவிருந்ததால்  மற்ற அனைத்து நிறுவனங்களையும் பலவீனப்படுத்தி நிறைவேற்றுத்துறைக்கு நேரடி அல்லது மறைமுகமாக அடிபணிந்த நிலைமைக்கு மாற்றியது. 

 

எனவே, சமூகத்தில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றப்பட்ட ஒரு அரசியலமைப்பின் கீழ், ஆட்சி இன்னும் நாட்டிற்கு அந்நியமாவதுடன், மேலும் அரசியலமைப்பிற்குத் தேவையானவாறு சமூகத்தை மாற்ற முயற்சிப்பதன் மூலம் சமூக முரண்பாடுகள்  ஏற்படுவதற்கு வழிவகுத்தது. எனவே, அரசியல் கட்சிகளுக்கும் நபர்களுக்குமேற்றவாறு அல்லாது  நாட்டு மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்தும், அவர்களுக்கு நெகிழ்வான அரசியலமைப்பைப் பயன்படுத்தும் அனுபவத்தை அவர்களுக்கு வழங்க புதிய அரசியலமைப்பொன்று அவசியமானதாகும். 

 

78 மற்றும் அடிப்படை குறைபாடுகள்

78 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத்துடன் எழுந்துள்ள சங்கடங்களைக் கருத்தில் கொண்டு, தற்போதைய அடிப்படைச் சட்டம் ஜனநாயகத்துடன் கைகோர்த்துக் கொள்வது கடினமானதாகும். மேலும், உலகில் எந்தவொரு அடிப்படை சட்டமும் நிறைவேற்றப்பட வேண்டிய அரசியலமைப்பின் அடிப்படைப் பண்புகள் பற்றிய ஆரம்பச் சோதனையில் 78 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு  தேர்ச்சியடையவில்லை. ஃபிரடெரிக்ஸ் ஹயக் (Friedrich Hayek) அரசியலமைப்புவாதத்தை இவ்வாறு  வரையறுக்கிறது:

 

“அரசியலமைப்பின் அதிகாரம் மக்களிடமிருந்து வருகிறது. மீண்டும் மீண்டும் வரும் முகவர்கள் அரசியலமைப்பை ஒழுங்கமைத்து நிறுவன கட்டமைப்பை உருவாக்குகிறார்கள். அரசியலமைப்பு என்பது சட்டமன்றம் மற்றும் பிற நிறுவனங்களின் அனைத்து தன்னிச்சையான செயல்களுக்கும் எதிரான பாதுகாப்பாகும்.”

இங்கு அரசியலமைப்பின் மூன்று அடிப்படை அம்சங்களை ஹயக் அடையாளம் காட்டுகின்றார்.

 

  1. அரசியலமைப்பு ஆளுகைக்கு தேவையான அரசியல் அல்லது அடிப்படை நிறுவனக் கட்டமைப்பை வகுக்கிறது.
  2. சிறுபான்மையினர் மற்றும் பெரும்பான்மையினiரின் பல்வகைமையை அடையாளம் கண்டு உறுதிப்படுத்துகின்றது.
  3. சமூகத்தை நிர்வகிக்கும் அடிப்படைக் கொள்கைகளைக் குறிப்பிடுகிறது.

 

தற்போதைய அரசியலமைப்பு இந்த மூன்று அம்சங்களில் முதல் அம்சத்தை மட்டுமே சரியாகக் கருத்திற் கொள்கின்றது. இது அரசியலமைப்பு வரைவு செய்யப்பட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு (13 வது திருத்தம்) தமிழ் மொழிக்கு சமத்துவத்தை வழங்குகிறது. 30  வருடங்கள் வரை தொடர்ந்த  யுத்தத்தின் ஆரம்க் கீற்றுக்கள் தோன்றிய போது அரசியலமைப்பு தனிச் சிங்களத்தில் உருவாகின்றது. எனினும், அதனால் ஆளப்படுவது சிங்களவர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய மூவினத்தவரும் ஆவர். ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைப் பேராசிரியர் யூஜின் ரோஸ்டோவ் (சமீபத்தில்) அரசியலமைப்பு பெரும்பான்மையினருக்கு எதிரான ஆவணமாக இருக்க வேண்டும் என்று கூறினார் (Counter Majoritarian Document) அப்போது தான் சட்டத்தின் ஆட்சி மிகவும் வெற்றிகரமாக இருக்கும். ஆனால் தற்போதைய அடிப்படை சட்டம் பெரும்பான்மையினரின் ஆவணம் மட்டுமேயாகும்.

மேலாதிக்கத்தின் கேள்வி

தென்னாபிரிக்க அரசியலமைப்பின் 1 ஆம் உறுப்புரை பின்வருமாறு கூறுகிறது: “தென்னாபிரிக்கா என்பது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விழுமியங்களை மதிக்கும் ஒரு குடியரசாகும்.” அவ்விழுமியங்களுள் மானுட கௌரவம், இனவாதமின்மை, பால்நிலைப் பாரடபட்சமின்மை, சட்ட ஆதிக்கம், பல கட்சி சனநாயகம், பொறுப்புக் கூறுதல், வெளிப்படைத்தன்மை ஆகிய அளவுகோல்களை உள்ளடக்கி அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை உயரிய மட்டத்தில்  உறுதிப்படுத்துகிறது. அதில் 2 ஆம் வாசகம் பின்வருமாறு கூறுகிறது: “குடியரசின் அரசியலமைப்பு மிக உயர்ந்ததாகும். அடிப்படை சட்டத்திற்கு முரணான அனைத்து சட்டங்களும் வெற்றானதும் வறிதானதும் ஆகும்.”

 

இலங்கையின் அரசியலமைப்பின்  16 (2) ஆம் உறுப்புரை இதற்கு மிகவும் எதிர்மாறான கருத்தைக் கூறுகிறது. அதாவது, தற்போதுள்ள எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானதாக அமையுமானாலும் அவையே மேலோங்கி நிற்கும் என்பதாகும். பல வழக்குத் தீர்ப்புகளில் அரசியலமைப்பே நாட்டின் பிரதான சட்டமாகும் எனக் குறிப்பிடப்பட்ட போதிலும், 84 (1) ஆம் உறுப்புரையின்படி  பிரதான  சட்டத்திற்கு முரணான எந்தவொரு சட்டத்தையும் விதிப்பதற்குப் பாராளுமன்றத்திற்கு அதிகாரமுள்ளது.  அதாவது நாட்டின் அடிப்படைச் சட்டத்தை மேலோங்கிச் செல்லக்கூடிய வேறு நிறுவன அமைப்புக்கள் உருவாக்கப்படலாம். பாராளுமன்றம் ஆட்சியிலுள்ள ஜனாதிபதியின் (Symbol of Power) அதிகாரத்தின் அடையாளமாகவிருப்பதால் கட்டளையிடும் அதிகாரியாகிய ஜனாதிபதி தன்னிச்சையின் அடிப்படையில்  பிரதான சட்டத்தைக் கருத்திற்கொள்ளாது சட்டமியற்ற முடியும்.  ஒரே நாளில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 18 ஆவது திருத்தத்தில் கட்டியெழுப்பப்பட்ட (Loyal Dictatorship)  இதற்குரிய உடனடி உதாரணம் ஆகும். அரசியலமைப்பானது பொதுமக்கள் சமூகத்தின் பிரநிதிதித்துவமாகும். ஒரு நாட்டின் அடிப்படை சட்டமானது உயரியதாகவில்லாத பட்சத்தில் அரசியலமைப்பு மட்டுமன்றி மக்களும் உயரிதல்லாத நிலை ஏற்பட்டு மக்களை விட நிறுவனவாதம் மேலோங்கும். அதுபோன்று அரசியலமைப்புரீதியான சனநாயகத்திற்கு ஆரொக்கியமற்ற நிலைமை சனநாயக சமூகத்தில் ஏற்படாது.  

 

இரண்டாவது இளைஞர் எழுச்சியின் பின்னர், 90 களின் இளைஞர்களின் பிரச்சினைகளை ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவானது மிக முக்கியமான முன்னுதாரணமான பரிந்துரையை வழங்கியது. அதாவது, இன்று ஒரு துப்பாக்கிக் குண்டிற்குச் செலவிடும் பணத்தை ஒதுக்கி இளையுர்களின் பிரச்சினைக்கு ஒதுக்கி இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் தவறினால், இன்னும் சில தசாப்தங்களில் பல துப்பாக்கிக் குண்டுகளை  இறக்குமதி செய்ய அரசாங்கம் நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். அதுதான் நடந்தது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை (LLRC) பரிந்துரைத்தபடி, இந்த நாட்டில் தேசிய பிரச்சினைக்கு  ஒரு அரசியல் தீர்வைக் கண்டறிவது போருக்குப் பிந்தைய சமூகத்தில் நம் நாடு எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவாலாகும், மேலும் அந்த சவாலை முறியடிக்கும் வரம்புகளை அடைய இப்போது எங்களுக்கு ஒரு புதிய அரசியலமைப்பு தேவைப்படுகின்றது .

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts