வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

உணவின் வண்ணத்திற்காக பயன்படுத்தப்படும் சுவையூட்டிகள் ஆரோக்கியமற்றவையா?

ஐ.கே.பிரபா

கல்வி கற்கும் மாணவர்களும், தொழில் புரியும் பணியாளர்களும் பாதுகாப்பான மற்றும் துரித உணவை நோக்கி அதிகளவில் நாட்டம் காட்டி வருகின்றார்கள். வீட்டிலோ அல்லது தங்குமிடங்களிலோ தயாரிக்கும்

உணவு வகைகளுக்கு மேலதிகமாக வெளியிடங்களில் உணவினை நுகர்வு செய்பவர்களாகவும் பலர் காணப்படுகின்றனர்.

 துரதிஷ்டவசமாக அவர்களில் பலர்

  • உணவின் தரம் 
  • உணவின் புத்துணர்ச்சி 
  • சுவை 
  • காலாவதி திகதி 
  • உண்ணும் தயாரிக்கப்பட்ட விரைவு உணவகைகளில் உள்ள பலவிதமான சுவையூட்டிகள் மற்றும் இரசாயன பதார்த்தங்கள் பற்றி போதுமான அறிவற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், உடனடியாக பசியை தணிக்க உண்ணும் சிறிய அளவிலான தயாரிக்கப்பட்ட விரைவு உணவு போதுமானதா என்பது குறித்து யாரும் சிந்தித்கிருக்க மாட்டார்கள் என்பதில் ஆச்சரியமில்லை. உள்ளூரில் பிரபலமான பிஸ்கட் விநியோக நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட பிஸ்கட் பாக்கெட்டின் லேபளில் காணப்பட்ட கீழ்வரும் சொற்தொடரானது வெளிநாட்டில் அதே லேபளினை கொண்ட பிஸ்கட் காணப்படுகிறது என்று சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வந்தது.

அந்த செய்தியின் துல்லியம் குறித்து எந்த ஆய்வும் இல்லாமல், இத்தகைய பொய்யான செய்திகளை பரப்புவதற்கு தங்கள் விலைமதிப்பற்ற நேரத்தை ஒதுக்குவது எவ்வளவு திருப்ப்தியற்றது? இந்த செய்தியில் சம்பந்தப்பட்ட இலங்கை பிஸ்கட் நிறுவனம் மற்றும் அதன் தர அடையாளக் குறியையோ நான் சுட்டிக்காட்ட மாட்டேன் அனால் அதில் பயன்படுத்தப்பட்ட இரண்டு நிறமிகள் மேலே அதன் சிட்டையில் (label) குறிப்பிடப்பட்டுள்ளன.  ஒருநபர் இயற்கையாகவே அன்றாட வாழ்க்கையில் சுவையான உணவுப் பழக்கத்தில் ஈடுபடுகிறார். ஒவ்வொரு நபரின் உணவுப் பழக்கமும் மற்றொருவரிடமிருந்து முற்றிலும் மாறுபட்டது. அனுபவத்தின் ஈர்ப்பு, வாழ்க்கை முறை மற்றும் சமூக சூழலைப் பொறுத்து, ஒருவரின் உணவில் மாற்றங்களைக் காணலாம். இலங்கையர்கள் மட்டுமல்லாது பலஆசிய நாட்டுமக்களும் தங்களது பிரதான உணவில் அதிகளவு அரிசி, மா மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்கின்றனர் என்றும்,  பெரியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் தங்களது பிரதான உணவுக்கு கூடுதலாக துரித உணவை சாப்பிடுவதில் அதிக விருப்பம் காட்டுவதாகவும் ஆராய்ச்சி கூறுகிறது. “கோர் தார்” என்பது உணவின் சுவைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து செயற்கை சாயங்களையும் தயாரிக்க பயன்படும் இரசாயன கலவையாகும். மேலும் உணவு சந்தையில் 2000 க்கும் மேற்பட்ட செயற்கை உணவுசாயங்கள் இருந்தாலும், தற்போது அங்கீகரிக்கப்பட்ட உணவுசாயங்கள் 10 மட்டுமே உள்ளன.

(Source;https://www.science.gov/topicpages/d/dye+sunset+yellow.html)

  • சிவப்பு – கார்மோசின் E, ஃபாஸ்ட் ரெட் E, போன்சியோ 4 ஆர் 
  • நீலம் – இண்டிகோ கார்மைன், பிரில்லியண்ட் நீலம், 
  • மஞ்சள் – டெட்ராசின், அமராந்த், சூரிய அஸ்தமனம் மஞ்சள்
  • பச்சை – பச்சை S, பச்சை FCF

(Source;https://www.sciencedirect.com/topics/agricultural-and-biological-sciences/sunset-yellow-fcf)

இந்த நிறமிகள் அதிகளவில் புற்று நோயை உண்டாக்கக்கூடியவை, இந்த இரசாயன கலவைகளை அதிகளவு பிரகாசமான, அதிகளவு மணமுடைய, அதிக சுவை கொண்ட உணவுப் பொருட்களில் உள்ளடக்கியிருக்கும். இதன் காரணமாக,  இறைச்சி, மீன், பழங்கள், காய்கறிகள், கோப்பி, தேநீர், வெண்ணெய், ரொட்டி, ஐஸ்கிரீம், பால், உலர்ந்த பால் பவுடர், சீஸ் மற்றும் குழந்தை உணவு ஆகியவற்றில் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. 

(source; https://www.megha-international.com/carmoisine.html)

  • E 100 Curcumin& – மார்கரின் 
  • E 101 Eiboflavin& – சாஸ் 
  • E 102 Tatracine& – குளிர்பானங்கள் 
  • E 110 Sunset Yellow FCF& – பிஸ்கட் 
  • E 120 Cochineal& –  ஆல்கஹால்(மதுசாரம்)
  • E 122 Carmosine& – ஜாம் 
  • E 155 Chocolate Brown – சாக்லேட் கேக்

(Source; http://vidathanet.blogspot.com.2016.07.blog-post_31.html)

சமீப காலங்களில் இலங்கையில் விவாதிக்கப்பட்ட இரண்டு நிறமிகளின் சர்வதேச நிலை பின்வருமாறு;

Sunset Yellow – E 110

Sunset Yellow – E 110 என்பது ஐஸ்கிரீம், கேட்பரி கிரீம், முட்டை,  ஜெல்லி, பீன்ஸ், குளிர்பானம், மிட்டாய் மற்றும் வேகவைத்த பொருட்களில் காணப்படும் மஞ்சள் நிறமி ஆகும். பெட்ரோலியத்தில் இருந்து பிரித்தெடுக்கும் ஆரஞ்சு அசோசாயம் “Sunset Yellow – E 110” என்றும் அழைக்கப்படுகிறது.  pH1 இல் அதிக பட்சமாக 480nm உறிஞ்சுதலைப் பொறுத்து pH மதிப்பை pH13 இல் மாற்றுகிறது. அமெரிக்காவில் இந்தசுவையை “FD & C Yellow 6” என்றும் ஐரோப்பாவில் இது “E No. E 110” என்றும் குறிக்கப்படுகிறது.

இந்த இரசாயனப் பொருட்களைக் கொண்ட தயாரிப்புகளை சாப்பிடுவது இளம் குழந்தைகளின் திறன் விருத்தி மற்றும் அவர்களின் வளர்ச்சியை மோசமாக பாதிக்கும், அத்துடன் வயிற்றுவலி, தோல் அழற்சி மற்றும் குழந்தைகளில் மனவளர்ச்சி கட்டுப்பாடு, குழந்தைகளில் மற்றும் பெரியவர்களுக்கு பரவும் பாலியல் நோய்த் தொற்றுகள் (S.T.I)  போன்றவற்றுக்கு காரணமாக அமையுமென்ற தகவல்களை 2007 ஆம் ஆண்டில் லான்செட்டில் வெளிவரும் ஒரு பத்திரிகை தகவலாக வெளியிட்டிருந்தது. இது தீர்மானமெடுத்தல், ஆக்கிரமிப்பு நடத்தை மற்றும் மோசமான நடத்தைக்கான போக்கு ஆகியவற்றை பாதிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் (EU) இந்த வகையான சேர்வைகளைக் கொண்ட உணவுப் பொருட்கள் குழந்தைகளின் செயல்பாடுகளையும் கவனத்தையும் பாதிப்பதாகவும் அமையலாம் என்பதால் அதுபற்றி உணவு பொதியிடப்படும் போதே குறிப்பிடப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

(Source;http://www.fao.org/fileadmin/user_upload/jecfa_additives/docs/monograph5/additive-450-m5.pdf

Carmoisine – E112

செயற்கை சிவப்பு(Carmoisine, Azorubine Synthetic Red 920)- உணவின் சுவைக்காக பயன்படுத்தப்

படுகிறது. செயற்கை சிவப்பு அசோ நிறமி (Blancmange, Marzipan, Swiss Roll, James & Preserves, Sweets Brown Sauce Flavored) உணவுக்கு பிந்தைய நொதித்தலுக்கு பயன்படுத்தப்படும். மேலும் தயிர், கெட்டியான சூப்கள், ஜெல்லிகள், லவ் டோஸ்ட், கேட்பரி, மினி முட்டை, லொலி பொப், சீஸ் மற்றும் கேக் கலவைகளிலும் இது காணப்படுகிறது. 

இது ஒவ்வாமை நோயாளிகளுக்கு நீர் தக்கவைப்பை ஏற்படுத்துகிறது. இந்த இரசாயனப் பொருள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய உணவு தரநிர்ணய நிறுவனம் 2009 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஆறு செயற்கை நிறமிகளை அகற்றுமாறு உற்பத்தியாளர்களைக் கேட்டுள்ளது. 06 நிறமிகள் பின்வருமாறு 

1.  Tartrazine (E102)

2.  Quinoline Yellow (E104)

3.  Sunset Yellow (E110)

4.  Carmisine (E112)

5.  Sunset Yellow (E110)

6.  Ponceau 4R (E124) and Allura red (E 129)  

 (Source;http://www.fao.org/fao-who-codexalimentarius/en/?id=124)

இருப்பினும் “நுகர்வோரின் தேவைக்கு முன்னுரிமை அளிப்பது எமது கடமையாகும், மேலும் அந்த நிறமிகள்

உணவுக்கு வண்ணம் சேர்ப்பதைத் தவிர வேறுஎந்த விளைவும் இல்லை, எனவே இது ஆய்வுகளின்படி அகற்றப்படலாம்.” என லண்டன் FSA உணவு தரநிர்ணய நிறுவனத்தின் தலைவர் டெம் டியர்டே ஹட்டன் கூறுகிறார். 

(Source;http://www.ukfoodguide.net/e122.htm)

ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் மனித உடலின் மார்பக மற்றும் பெருங் குடல் பகுதியில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. (உடலில் உள்ள அசாதாரண மற்றும் கட்டுப்பாடற்ற செல்கள் காரணமாக உடல் முழுவதும் பரவும் வீரியம் மிக்க செல்கள்) பல்வேறு உணவுகளில் வளரும் நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் நச்சுகள் புற்றுநோய் காரணிகளாகவும் செயல்படுகின்றன. இது பல்வேறு ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகளால் ஏற்படுகிறது. விட்டமின் A,C மற்றும் E ஆகிய ஆக்ஸிஜனேற்ற விட்டமின்களின் குறைந்த நுகர்வு, துத்தநாகம், செலினியம், தாதுக்கள் மற்றும் காய்கறிகள், பழங்கள், பச்சை இலைகள் ஆகியவை புற்றுநோய்களுக்கு காரணமான ப்ரீரேடிக்கல்களின் வளர்ச்சியை நிறுத்துவதன் மூலம் புற்று நோயைதடுக்க உதவுகின்றது எனஆய்வுகள் கூறுகின்றன. 

இலங்கையர்களாகிய நாம் நமது உணவுப் பழக்கத்தைப் பற்றியும், நமது உணவு தேர்வுகளில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். 

  1. Gazette Notification No. 1688/28 dated on Friday 14/01/2011
  1. Consumer Affairs Authority – Act No. 09 of 2003
  1. Consumer Ordinance No. 01 of 1979
  1. Fair Trade Commission Act No. 01 of 1987
  1. 173rd Authorized Price Control Act

(Source;http://www.documents.gov.lk/si/gazette/php)

1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு ஒழுங்குமுறைச் சட்டம்  அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து Sunset Yellow (E110) மற்றும்  Carmisine (E122) ஆகிய உணவு வண்ண சுவையூட்டிகள், 2006 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமாணி அறிவிப்பின்படி,  இல1, 472/19 (ஜூலை 25,1980) இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

(Souece;http://eohfs.health.gov.lk/food/images/pdf/regulations/food_colouring_substances_regulations_2006_si.pdf)

மேலும்,

1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவு ஒழுங்குமுறை சட்டத்தின் பிரிவு 2 (1) இன் கீழ், இயற்கை அல்லது செயற்கை சேர்வைகள் கொண்ட ஆரோக்கியமற்ற உணவுகள்

  • மனித பாவனைக்கு பொருத்தமற்ற சேர்வைகளை உள்ளடக்கிய உணவுகள்
  • மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவு வகைகள்
  • உணவு ஒழுங்குபடுத்தல் சட்டம்/ உணவுச் சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத சேர்வைகளை உள்ளடக்கிய உணவு பொருட்கள்

ஆகியவற்றை தனிநபர்கள் உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ, விற்கவோ அல்லது விநியோகிக்கவோ அனுமதி வழங்கப்படுவதில்லை என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வகை 2 (2) இன் கீழ்

  • உணவு வகைகளை உற்பத்தி செய்வது, பதப்படுத்துவது, சேமித்தல், கையாளவது அல்லது பாதுகாப்பற்ற முறையில் கையாள்வது உட்பட அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டிருக்கின்றது என்று கூறுகின்றது. 

வகை 3 இன் கீழ்,

தீங்கு விளைவிக்கும் விற்பனை, பெயர் குறித்தல், பொதியிடல், கொண்டு செல்லல் அல்லது உணவின் தரம் மற்றும் மதிப்பை தவறாக காட்டக்கூடிய நடவடிக்கைகள் ஆகியவை செய்யக்கூடாது. மேற்கண்ட சட்டங்கள் மற்றும் மசோதாக்களைக் அவதானிக்கும் போது “ உணவுக்கு பாதுகாப்பற்ற இரசாயன பதார்த்தத்தை பயன்படுத்த வேண்டிய அளவு என்ன?” , “இது மனித ஆரோக்கியத்திற்கு தீங்கை ஏற்படுத்துமா?” , “மேலே குறிப்பிடப்பட்ட இரசாயனங்களின் பயன்பாட்டிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்பது தொடர்பாக பொதுமக்கள் உரிய கவனம் செலுத்தவில்லை, பொதுமக்களுக்கு சரியான அறிவூட்டல் செய்யப்படவில்லை” என்ற உண்மையை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts