Uncategorized

இலங்கை இளைஞர்களின் புலம்பெயர்ந்த சோகம்

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்காக நீண்டுள்ள வரிசையானது நாடு என்ற ரீதியில் நாம் முகங்கொடுத்துள்ள அவலத்தை எடுத்துக்காட்டுகிறது. இலங்கை அண்மைகாலமாக எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி, திறமையானவர்களுக்கு உரிய அந்தஸ்த்து கிடைக்காத காரணத்தால் சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சமூக பிரச்சினைகளாக காணப்படுகின்றன. சமூக பொருளாதார நெருக்கடி தொடர்பில் நடைமுறையில் கருத்திற் கொள்ளப்பட்ட விடயங்கள் மற்றும் சவால்களை வெற்றிக் கொள்வதற்காக எடுக்க வேண்டிய மாற்று தீர்மானங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தரமான வாழ்வியல் அபிலாசைகளுக்காக இலங்கை இளைஞர்கள் புலம்பெயர்தல்

இன்றைய நிலையில் இலங்கையின் இளைஞர், யுவதிகள் புலம்பெயர்ந்து செல்கிறார்கள். புலம்பெயர்வுக்கு பல்வேறு காரணிகள் குறிப்பிடப்படுகின்றன. பொருளாதார மட்டத்தில் உயர் நிலையான அபிலாசைகள் இதற்கு பிரதான காரணியல்ல, தனிப்பட்ட மற்றும் தொழிற்றுறை தரமான வாழ்க்கைக்கான அபிலாசைகள் இதற்கு பிரதான காரணியாகும். அதற்காக குறிப்பாக கல்வி, தொழிற்றுறை அபிவிருத்தி மற்றும் சமூக அல்லது பொருளாதார மகிழ்ச்சி உள்ளிட்ட விடயங்கள் பிரதான காரணிகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.

(குணரத்ன 2023)

இலங்கையின் இளம் தலைமுறையினர் புலம்பெயர்தல் :

சமூக மற்றும் பொருளாதார பின்னடைவு

இலங்கை முழுமையான கலாச்சார பெருமையை கொண்ட நாடாக உள்ள நிலையில் அதன் சமூக அல்லது பொருளாதர பின்னடைவுக்குள்  பிரதிபலன்மிக்க பொருளாதாரம் மற்றும் சமூக மட்டத்தில் உள்ள வருமான வீழ்ச்சி மற்றும் தொழிற்றுறை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை அபிலாசைகள் ஆகியன சமூக கட்டமைப்பில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. (டயஸ் 2022)

ஒட்டுமொத்த புலம்பெயர்வில் இளைஞர்களின் புலம்பெயர்வு விகிதம் உயர்மட்டத்தில் காணப்படுகிறது. அவுஸ்ரேலியா, கனடா, மற்றும் மத்திய கிழக்கு  நாடுகளை நோக்கி இளைஞர்கள் அதிகளவில் செல்கிறார்கள். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிக்கைக்கமைய, 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 18-35 வயதுக்குட்பட்ட 40 சதவீதமானோர் புலம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புலம்பெயர்வுக்கான பிரதான காரணிகள்

இலங்கை இளைஞர், யுவதிகள் புலம்பெயர்வதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அவற்றில் பிரதான காரணிகள் வருமாறு குறிப்பிடப்படுகின்றன.

1-   வாழ்க்கைத் தரம் மற்றும் அபிலாசைகள்

இளைஞர்கள் குறிப்பாக நகர் புறங்களில் வாழ்பவர்கள், பூகோள  வாழ்க்கை தரம் மற்றும் முன்னேற்றகரமான நாடுகளில் வாழ்க்கைத் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தியுள்ளனர். தாம் உள்ள சமூக மற்றும் அரச சூழல் வாழ்க்கைத் தரத்துக்கு சாதகமாக அமையாது என்று இளைஞர்கள் கருதுவது வெளிப்படுகிறது. ( விக்கிரமசிங்க 2021)

2-  கல்வி மற்றும் தொழிற்றுறை அபிவிருத்தி

இலங்கையில் அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்வி கட்டமைப்பில்  சிறந்த செயற்திட்டம் மற்றும் எதிர்காலத்தை இலக்காகக் கொண்ட  சிறப்பு திட்டங்கள் இன்மையினால் வெளிநாட்டு கல்விக்காக இளைஞர்கள் அதிகளவில் ஈர்க்கப்படுகின்றனர். அநேகமாக வெளிநாடுகளின் கல்வி இலங்கையில் உள்ள தொழிற்றுறை அவசியம் அல்லது பொருத்தமான முன்னேற்றம் உள்ளிட்ட காரணிகளால் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் வீதம் உயர்வாக பதிவு செய்யப்பட்டுள்ளது. (டயஸ்-2022)

3- பொருளாதார ஸ்திரத்தன்மை  மற்றும் சமூக பாதுகாப்பு

இலங்கையில் நடைமுறையில் உள்ள வருமான வீழ்ச்சி மற்றும் சம்பளம் குறைப்பு ஆகிய காரணிகளால் அநேகமான இளைஞர் யுவதிகள்  வெளிநாடுகளின் பொருளாதார ஸ்தீரத்தன்மை மற்றும் வாழ்க்கை ஸ்திரத்தன்மை ஆகியவற்றை பெற்றுக் கொள்வதற்கு எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். குறிப்பாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் இளைஞர் யுவதிகள் வெளிநாட்டு வாழ்க்கைத் தரத்துக்கு அதிக ஈடுபாடு கொண்டுள்ளமை வெளிப்படுகிறது.

(குணசேகர – 2021)

இலங்கையில் தோற்றம் பெற்ற பொருளாதாரம் மற்றும் சமூக பின்னடைவு

இளைஞர் யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதால் பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பின் அபிவிருத்தி குறைவடைந்துள்ளது. அந்த பின்னடைவு மற்றும் பிரதிபலனை நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக நிலைமைகளில் பல துறைகளில்  அவதானிக்க முடிகிறது.

(குணரத்ன – 2023)

கொள்கை பரிந்துரை

இளம் தலைமுறையினர் புலம்பெயர்வதால் ஏற்படும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான அரச கொள்கையை தயாரிக்கும் போது பின்வரும் பரிந்துரைகளை கருத்திற் கொள்ள வேண்டும்.

1-  பொருளாதாரம் மற்றும் நகர அபிவிருத்தி செயற்திட்டத்துக்காக பங்களிப்பை ஊக்குவித்தல்

இளம் தலைமுறையினருக்காக  பிரதேச மற்றும் நகரமயமாக்கல் கைத்தொழில் மட்டத்தில் பொருத்தமான செயற்திட்டங்களை சமூகத்தின் பிரதான வாய்ப்பாக கருதுவதுடன், அதனூடாக இளைஞர்களுக்கு இலங்கைக்குள் பாதுகாப்பான எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க முடியும்.

2-  வெளிநாட்டு கல்வி மற்றும் சிறந்த செயற்திட்ட அபிவிருத்தி

வெளிநாட்டு கல்வி பாடத்திட்டத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதல்ல, இலங்கையில் பாடத்திட்டத்துக்கான செயற்திட்டத்துக்காக உயர் கல்வி கட்டமைப்புக்கு பொருத்தமான வகையில் மாற்றங்களை மேற்கொள்ள கல்வித்துறை கவனத்திற் கொள்ள வேண்டும்.அதனுடாக இளைஞர்களுக்கு சரியான வழிமுறைகள் காண்பிக்கப்படும் (ரணசிங்க -2022)

3-   மீண்டும் இலங்கைக்கு வருகைத் தரல் மற்றும் ஒத்துழைப்பு வழங்கும் செயற்திட்டங்கள்

 இவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருகைத் தருவதற்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்குவதற்காக சரியான மற்றும் சிறந்த ஆலோசனைகளை வழங்கும் இயலுமை காணப்படுவதுடன் பொருளாதாரம் ஸ்தீரத்தன்மைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தல்.

 மதிப்பீடு

 இளைஞர்கள் நாட்டை விட்டு செல்வது நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்த்திக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதேச பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை சிறந்த முறையில் வகுத்துக் கொண்டால் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு முன்னேற்றகரமாக அமையும்.

 மூலம்

1 – குணரத்ன ,சி. (2023) இளைஞர்களின் புலம்பெயர்வு மற்றும் பொருளாதார ஸ்தீரத்தன்மை தொடர்பான விசாரணைகள். இலங்கை சமூக அறிக்கை

 2- ரணசிங்க எம் (2022) இலங்கை வெளிநாட்டு கல்வி மற்றும் வெளிநாட்டு புலம்பெயர்வு , கல்வி மீளாய்வு

 3-விக்கிரமசிங்க ஐ.(2021)  வாழ்க்கை அபிலாசைகள் மற்றும் இளம் தலைமுறை புலம்பெயர்வு, இளம் தலைமுறை சமூக ஆராய்ச்சி

 4-SLBEF  (2023) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அறிக்கை

5 – குணசேகர, ஜி. (2021) இளம் தலைமுறை புலம்பெயர்வு மற்றும் பொருளாதார , தேசிய பொருளாதார விசாரணை

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts