Uncategorized

இலங்கையில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள், தனிபெற்றோர்குடும்பங்கள்அதிகரிக்கும்போக்கு

வசந்தி சதுராணி

நகர்புறம் மற்றும் கிராம புறங்களில் சமூக கட்டமைப்பு மாற்றமடையும் முறைமையை ஆராய்கையில்,  பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் மற்றும் ஒற்றை குடும்பங்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர மதிப்பீட்டு அறிக்கைக்கு அமைய, இலங்கையில் 66 சதவீதமான குடும்பஙகள் பெண் தலைமைத்துவத்தை கொண்டதாக காணப்படுகிறது (தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள அறிக்கை -2023) இந்த நிலைமை நகர் மற்றும் கிராமிய சமூக கட்டமைப்பில் குடும்ப அலகில் பாரியதொரு வேறுப்பாட்டை கொண்டுள்ளதை காண முடிகிறது.குறிப்பாக பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் பிரத்தியேகமாக பல சவால்களை எதிர்கொள்வதை இலங்கையின் சமூக கட்டமைப்பை ஆராய்வதன் ஊடாக அறிந்துக் கொள்ள முடியும். ஏதேனும் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு திருமணம் விவாகரத்தாகியிருந்தால் நிலைமை பாரதூரனமானதாக அமையும். இலங்கையின் சமூக கட்டடமைப்பின் நிலைமை முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகிறது. இருப்பினும் உத்தியோகபூர்வ புள்ளிவிபர ஆவணங்களுக்கமைய விவாகரத்து என்பது இலங்கை சமூகத்தின் மனப்பான்மையை பாதித்துள்ளது.

இலங்கையின் அறிக்கைக்கு அமைய, 2022ஆம் ஆண்டு 45 சதவீதமான திருமணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், பிள்ளைகளுடன் தனிமையான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகரித்துள்ளன. ( நீதிமன்ற அறிக்கை, 2022) ,இலங்கை பெண்கள் தற்போது அடைந்துள்ள பொருளாதார சுதந்திரம் இதற்கு பிரதான காரணியாக இனங்காணப்பட்டுள்ளது.

பெண்கள் பெருமளவில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடல் மற்றும் பொருளாதார தேவைகளை சுயமாக நிறைவேற்றிக் கொள்ளும் போக்கு அதிகரித்துள்ள நிலைமை இதற்;கு தாக்கம் செலுத்தியுள்ளது. குறிப்பாக அரச சேவை, வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கள், மற்றும்   தொழில் முயற்சியாண்மையில் பெண்களின் பங்களிப்பு நகர்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.

இலங்கையில் ஒரு தசாப்தத்துக்கு முன்னர் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்காகச் செல்லும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயரளவில் காணப்பட்டாலும், தற்போது அந்த நிலைமை மாற்றமடைந்து;ளது. தற்போதைய நிலையில் வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆண் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. குடும்ப பொருளாதாரத்தின் பொறுப்பு பெண்களிடம் பொறுப்பாக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளிநாடுகளுக்குச் சென்ற இலங்கையர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஆண்கள் என்று உத்தியோகபூர்வ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒற்றை பெற்றோர் தலைமைத்துவ 

குடும்பங்கள் தோற்றம் பெறுவதற்கான காரணிகள்

1-முறைசாரா பெற்றோர் திருமணம்

ஓற்றைப் பெற்றோர் குடும்பங்கள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக புதிய நாகரீகங்கள் மற்றும் முறைசார நடைமுறைகள் காணப்படுகிறது .நகர்புறங்களில் சுமார் 25 சதவீதமான ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் காணப்படுகின்றன.

2- தனிப்பட்ட தேர்வுகள் மற்றும் பொருளாதார தாக்கங்கள்

பெண்களின் தரப்பில் குறிப்பாக கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களை தேடிச் செல்லும் பெண்கள், குடும்ப வாழ்க்கையின் போது புதிய திசையை நோக்கிச் செல்ல முடிவு செய்கிறார்கள்.

3- யுத்த சூழலின் தாக்கங்கள்

இலங்கையில் 30 ஆண்டுகாலமாக காணப்பட்ட யுத்தம்  பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் தோற்றம் பெறுவதற்கு பிரதான காரணியாக அமைந்தது. வடக்கு மாகாணத்திலும், பாதுகாப்பு சேவையில் ஈடுபட்ட குடும்பங்களிலும் இந்த நிலைமை அதிகளவில் காணப்படுவதை அவதானிக்கலாம்.

நகர் மற்றும் கிராமிய பின்னணி

நகர்புற பிரதேசம்

பெண்களின் பொருளாதார நிலைமையை அடிப்படையாகக் கொண்டு நகர்புற பிரதேசங்களில்  72 சதவீதமான பெண் தலைமைத்துவத்திலான குடும்பங்கள் காணப்படுகின்றன. விசேடமான தொழில் முயற்சியாண்மை துறை மற்றும் நிறுவன மட்டத்திலான தொழில் முரண்பாடுகள் இதற்கு பிரதான காரணிகளாக அமைந்துள்ளன.

கிராமிய பிரதேசம்

கிராம புறங்களில் பெண் தலைமைத்துவத்திலான குடும்பங்கள் 60 சதவீதமளவில் காணப்படுவதாக அறிக்கையிடப்பட்டுள்ளன. குறிப்பாக ஆண்கள் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லல், குடும்ப வருமானம் ஆகிய காரணிகள் இதற்கு நேரடியாக செல்வாக்கு செலுத்துகின்றன.

சமூக, பொருளாதாரம் மற்றும் உளவியல் தாக்கங்கள்

1-சமூக  தாக்கம்

பெண் தலைமைத்தவத்திலான குடும்பங்களில், குடும்ப நிர்வாகம் திட்டமிட்ட வகையில் மாற்றமடைவதால் பிள்ளைகளின் பாதுகாப்பு குறைவடையும்.

2-பொருளாதார தாக்கம்

பெண்கள் அதிகளவில் தொழில் வாய்ப்புக்களை தேடல் மற்றும் வருமானம் உயர்வடைவதுடன்  கிராமிய பொருளாதாரம் ஸ்திரமான நிலையடைதல்.

3-உளவியல் தாக்கம் 

பெண்களின் உளவியல் சுகாதாரம் தொடர்பில் சிக்கல்கள் தோற்றம் பெற கூடும்.தனி பெற்றோர் குடும்பங்களில் பெண்களுக்கு அதிகளவில் பொறுப்புக்கள் காணப்படுவதால் உளவியல் ரீதியில் பாதிப்புக்கள் ஏற்படும்.

பரிந்துரைகள் மற்றும் கொள்கை யோசனைகள்

1-பெண் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்தல்

நிதி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் பெண் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு பயிற்சிகளை வழங்க வேண்டும்.

2-உளவியல் ஆலோசனை சேவை

கிராமிய மற்றும் நகர் புறங்களில் உளவியல் சுகாதார சேவை வசதிகளை விரிவுப்படுத்த வேண்டும்.

3-சமூக பாதுகாப்பு மற்றும் உதவி

பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்காக சமூக பாதுகாப்பு தொடர்பில் விசேட செயற்திட்டங்களை முன்னெடுத்தல் வேண்டும்.

மதிப்பீடு

 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் ஒற்றை பெற்றோர் குடும்பங்கள் இலங்கை சமூக கட்டமைப்பில் பாரியதொரு மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பாதுகாப்பு மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்காக சிறந்த கொள்கைகள், நிவாரணம் மற்றும் அடிப்படை உதவிகளை வழங்குவதன் ஊடாக இந்த போக்கினை கட்டியெழுப்ப முடியும்.

உசாத்துணை நூல்கள்

1-தேசிய புள்ளிவிபரத் திணைக்களம் .(2023) 2023 சனத்தொகை மற்றும் வீட்டு மதிப்பீட்டு அறிக்கை

2-நீதிமன்ற அறிக்கை. (2022).திருமணம் மற்றும் திருமணமல்லாத நிலை

3-உலக வங்கி. (2021) இலங்கையில் பெண்களின் பொருளாதார பங்களிப்பு
வசந்தி சதுராணி

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts