Transparency

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கையில் சவாலை ஏற்படுத்தியுள்ள கொவிட் 19

ஐ.கே.பிரபா

கோவிட் -19 தொற்று நோய்க்கு மத்தியில் மக்களின் வாழ்க்கை தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் எழுந்துள்ளன. தினசரி வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்களை வாங்க ஒருமுறையான திட்டம் உள்ளதா? வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கான சரியான வழிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தி இருக்கின்றதா? வீடுகளில் இறக்கும் கோவிட் 19 நோயாளிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கசரியான திட்டம் இருக்கின்றதா? அப்படியானால், அது எவ்வளவு வெளிப்படையானது? இத் தகவல்களை அறிக்கையிடுவதற்கான சவால்கள் தொடர்பில், சமூக ஊடகங்களில் அண்மைக்காலமாக விவாதங்கள் இடம்பெற்று வந்துள்ளன. கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள் கட்டமைப்பு போன்ற சேவைகளை சமூகத்திற்கு வழங்குவதன் மூலம் நாட்டு மக்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பிற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு உத்தரவை தளர்த்திய பின்னரும் ஊரடங்கு உத்தரவு காலத்திலும், உணவு, மருந்து போன்ற மக்களின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் முறையான திட்டங்களை அமுல்படுத்தியுள்ளதா என பல சந்தேகங்கள் உள்ளன. அனைத்து இலங்கையர்களுக்கும் அவர்களின் உணவு மற்றும் பானங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இணைய தள அறிவு அல்லது உணவை முன்பதிவு செய்வதற்கான நிதி திறன் இல்லை. இவ்வாறான நிலையில் தனியார் முதலீடுகளைஅதிகரிப்பதற்காக வட்டி விகிதங்கள் மற்றும் வரிகள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், பண விநியோகத்தை குறைக்க நேரடி மற்றும் மறைமுக தாக்கங்களாக அமைகின்றன. இந்த செயல்பாட்டில், அரசியல் நடு நிலைமை, போதுமான அரசியல் ஒழுக்கம் இல்லாமை, நடைமுறைக்கு மாறான அரசியல் முடிவுகள் மற்றும் உயர் மட்ட வரிக் கொள்கையின் பற்றாக்குறை ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் உண்மைகளாக கருதப்படுகின்றன. நாட்டின் மொத்த இறக்குமதி செலவில் சுமார் 20% வீதமானவை  உணவு இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது.

மூலம் – https://divaina.com/daily/index.php/visheshanga3/49249-2020-10-21-13-49-4

உள்  நாட்டில் என்ன வகையான உணவுகளை உற்பத்தி செய்ய முடியும்? அதே நேரம் உணவு இறக்குமதியை நிறுத்த அல்லது குறைக்க முடியுமா போன்றவை நாம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளாகும். உணவுப் பற்றாக்குறைக்கான தீர்வாக வீட்டு தோட்டக் கலை ஊக்குவித்தல் மற்றும் விவசாயம் சார்ந்த திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப் பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், அதிக கவனம் உள்ளூர் உணவுகளில் தன்னிறைவு பெற வேண்டும். கொரோனா வைரஸின் விளைவுகள் காரணமாக பொருளாதார வளர்ச்சி மிகவும் எதிர்மறையாக இருக்கும் என இலங்கையின் மத்திய வங்கி கணித்துள்ளது. இதை எதிர்த்து, நாட்டின் தொழில் துறை மற்றும் விவசாயத் துறைகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில் கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் இலங்கை நாட்டின் பொருளாதாரத்தை பலமடையச் செய்து மீள கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

அதே நேரம் மகக்ளுக்கான சுகாதார சேவையை  வழங்கவேண்டிய முதன்மை பொறுப்பு அரசாங்கத்திற்குரியதாகும். சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் பொது சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான திட்டங்களாக வீட்டில் தனிமைப்படுத்தல் என்ன?, தனிமைப்படுத்தல் எவ்வளவு காலம் நீடிக்க வேண்டும்?, வீட்டு தனிமைப்படுத்தலின் முக்கியத்துவம் மற்றும் தனிமைப்படுத்தும் போது வீட்டில் எந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்? போன்றவை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தகவல் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றது. வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்ட முறைகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் நிகழ்ந்துள்ள கோவிட் மரணங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார அமைச்சின் பிரதான தொற்று நோயியல் வைத்திய நிபுணர் சுதாத் சமரவீர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கiயில் கூறினார். அக்டோபர் 3 ஆம் திகதி மினுவாங்கொடை பிராண்டிக்ஸ் கொத்தணி கொவிட் தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து  15 பேர் வீடுகளுக்குள்ளேயே மரணித்துள்ளதாக சுகாதார துறை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். சிலர் தங்கள் வீடுகளில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் அதே வேளை மற்றவர்கள் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் தங்கியிருந்தனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

  • வயது வந்தவர்கள்
  • சுவாச பிரச்சினைகள் உள்ளவர்கள்
  • நீரிழிவு நோயாளர்கள் 
  • இதய நோய் போன்ற பல்வேறுவிதமான நோய்கள் உள்ளவர்கள்
  • வேறு சிக்கல்கள் உள்ளவர்கள்
  • தங்கள் நோய்களை வெளிப்படுத்தாமல் அச்சத்தால் மறைத்து வைத்திருப்பவர்கள்
  • தங்கள் நோய்களை சரியான முறையில் அடையாளம் காணாதவர்கள்

(https://www.bbc.com/sinhala/sri-lanka-51879125)

“வீடுகள் மற்றும் தெருக்களில் கடந்த காலங்களில் ஏற்பட்ட இறப்புகள் குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய முக்கிய ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளி வந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட ஆபத்தில் உள்ளவர்கள் ஏன் இப்படி இறக்கிறார்கள் என்று கேள்வி வரும்போது, குறிப்பாக பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் வயதானவர்கள் திடீரென இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றது. இருதய நோய் அல்லது பிற கடுமையான உடல் கோளாறுகள் உள்ளவர்கள் கோவிட் -19 காரணமாக இறக்கின்றனர். கோவிட் -19 நோய்த் தொற்றோடு பல் உறுப்பு செயலிழப்பு உள்ளவர்களும் இறக்கின்றனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு தான் இதை துல்லியமாக உறுதிப்படுத்த முடியும். சுமார் 600 முதல் 700 வரையானோர் பல்வேறு பக்க விளைவுகள் உள்ளவர்களும், இதய நோயால் இறப்பவர்களில் பெரும்பாலோர் முறையான சிகிச்சைகளை பெறுபவர்களும் இறக்கின்றனர். கோவிட் தொற்று நோய் பயத்தின் காரணமாக யாரும் உதவ முன்வராத காரணத்தால் தம்புள்ளவைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.” ஏன ஆயுர்வேத மருத்துவர் டேனிஸ்டர் எல். பெரேரா கூறினார்.

மேலும், கோவிட் தொற்று நோய் பற்றி ஊடகங்கள் என்ன தெரிவிக்கின, எவ்வாறான செய்திகளை பரப்புகின்றன் என்ற அடிப்படையில் அத்தகைய தகவல்களின் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக மக்கள் தங்கள் உண்மையான நோயை வெளிப்படுத்துவதற்கு பதிலாக சுதேச மருத்துவ முறைகளை நாடி அதன் மூலம் கொவிட் பரிசோதனை உட்பட ஏனைய நோய்களுக்கான நிவாரண வழி முறைகளையும் பின்பற்று கின்றனர். நிமோனியா அல்லது வேறு நோய்கள் அதிகரிப்பதால் தொடர்புடைய மரணங்களுக்கு நேரடியாகவோ அல்லது மறை முகமாகவோ கோவிட் -19 வைரஸ் தொடர்பு பட்டுள்ளது. கொழும்பின் ஜம்பட்டா வீதியில் வசிக்கும் 68 வயதான ஒரு பெண் கொரோனா வைரஸ் தொற்றிற்கு ஆளாகியதோடு நவம்பர் 03 ஆம் திகதி அவர் வீட்டில் இறந்தார். அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளார் எனவும்  அவரது மரணத்திற்கு உடனடி காரணம் நிமோனியா எனவும் அரச புலனாய்வுத் துறையால் வெளியிடப்பட்ட தகவலின்படி உறுதிப்படுத்தப்பட்டது.

சிலர் வைரஸ் பாதிப்புக்கு  ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனினும் வெளியில் செல்வது கட்டுப்படுத்துவதன் மூலம், வீட்டில் தங்குவதன் மூலமும் அல்லது உங்களுக்கு ஏதேனும் நோய், அசௌகரியம் காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவ மனைக்குச் செல்வதன் மூலமும் இதனை தவிர்க்க முடியும். நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மறுக்கும் மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகளை திசைதிருப்பும் மருத்துவ மனைகள் தொடர்பான புகார்கள் பலவற்றை தாம் பெற்றுள்ளதாகவும், அத்தகைய சம்பவமொன்று அவிஸ்ஸாவெல்ல ஆதார வைத்தியசாலையில் இருந்து பதிவாகியுள்ளது என்றும் சுகாதார அமைச்சு கூறுகின்றது. கொரோனா தொற்று நோயின் விரைவான பரவலுடன் இலங்கையில் இச்சூழ்நிலையை சமாளிக்க எங்கள் சுகாதாரத் துறையை விரிவுபடுத்த இயலாமை எதிர்காலத்தில் கடுமையான நெருக்கடிக்கு வழி வகுக்கும், இது எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க கொரோனா மரணங்களின் அதிகரிப்புக்கு வழி வகுக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கிறது.

சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்கள், மீனவர்கள் போன்ற உழைக்கும் சமூகத்தினர், நகர்ப்புற தோட்டங்கள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிப்பது, தொற்று நோயால் வெளிப்படும் தாக்கம் தொடர்பில் விழிப்புடன் இருக்கும் சமூகங்களாக கருதப்படுகிறது. இந்த வைரஸ் ஏற்கன வேசுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் துறைமுகங்கள், மற்றும் மீன்பிடி சமூகம் மற்றும் கொழும்பு நகர்ப்புற தோட்டங்கள் உட்பட பல பகுதிகளுக்கும் பரவியுள்ளன.

இங்கே அடுத்த இலக்கு தோட்டத் தொழிலாளர் சமூகமாக இருக்கலாம்.  இந்த வைரஸிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் மற்றும் அரசாங்கம் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும். மேல் மாகாணத்தை அண்மித்ததாக அமைந்துள்ள தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களில் பெருமளவானோர் இப்போது மீண்டும் தோட்டப் பகுதிகளுக்கு குடிபெயரத் தொடங்கியுள்ளனர் என தோட்ட கண் காணிப்பாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.இலங்கை ஒரு சிறிய நிலப்பரப்பு என்ற  காரணத்தால், விரும்பிய முடிவுகளை அதே வழியில் அடைவது கடினமானதாக இருந்து வருகின்றது.. ஒரு வெப்ப மண்டல வானிலை கொண்ட நாடாக இலங்கையில் இத் தொற்று நோயின் தாக்கம்  வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து வேறு பட்டிருக்கலாம். இறப்புகளுக்கு காரணமான தொற்று நோயியல் அல்லது சுகாதார காரணங்கள் உள்நாட்டு மரணங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். உள்நாட்டு தனிமைப் படுத்தப்பட்ட முறைகள் குறித்த துல்லியமான தரவு மற்றும் தகவல்கள் பாரம்பரிய மற்றும் புதிய ஊடகங்கள் மூலம் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும். மக்களின் வாழ்க்கைக்கு அவசியமான உணவு மற்றும் பான விநியோக சங்கிலியின் விரிவாக்கம் கட்டாயமாகும். நிதர்சனத்தின் உண்மைகளை அறிய மக்களுக்கு உரிமை உண்டு என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். மேற்கண்ட பிரச்சினைகள் தொடர்பாக நம் நாட்டிற்கான கொள்கைகள் தொடர்பில் அரசாங்கம் குறிப்பிட்ட குறிக்கோள்களைப் பின்பற்றுகிறது என்று பொது மக்கள் உணரும் போது, அரசாங்கத்தால் நாடு மக்களின் நம்பிக்கை மற்றும் அதிக பட்ச ஆதரவினை பெற முடியும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts