Uncategorized

 இலங்கையின்  இயற்கையை அழிக்கும்  அமைதி  கொலையாளி

ஜூடி ரோஸன் முதுகுட

அக்காலப்பகுதியில் கிராமவாசிகள்  தமது விளைநில விளைச்சலின் ஒரு பகுதியை பறவைகளுக்கு  ஒதுக்குவார்கள். இருப்பினும் நடைமுறையில் சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தொடர்பு இல்லாமல் போயுள்ளது. உலகம் முன்னேற்றமடைந்ததைத் தொடர்ந்து மனிதர்கள் சுற்றுச்சூழலை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னர்  வயோதிபர்கள் கடைகளுக்கு செல்லும் போது கையில் ஓலையிலான பை (உமல் பை) கொண்டு செல்வார்கள். அல்லது கையில் குடை ஒன்றை கொண்டுச் செல்வார்கள். அன்று சொபின் பை இருக்கவில்லை. பெரும்பாலும் சீனி , மா உள்ளிட்ட உணவு பொருட்கள் பத்திரிகை கடதாசிகளில்  பொதியிடப்பட்டன. அதேபோல் அரிசி உள்ளிட்ட தானியங்கள்  அக்காலப்பகுதியில் பிரபல்யமான சீமெந்து பைகளில்  பொதியிடப்பட்டன.

இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சேம்பு குலைகள் இறைச்சி,  மீன்களை பொதியிடுவதற்கு பயன்படுத்தப்பட்டன.70 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திறந்த பொருளாதார முறைமையுடன்  இந்த நாட்டில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை அறிமுகமானது. சிறப்பு கடைத் தெருக்களின் வருகையுடன் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை அதிகளவானது. பொலித்தீன் பாவனையின் பின்னர் அவற்றை சுற்றுச்சூழலில்   விடும்   முறைமைக்கு மக்கள் பழக்கமாகினர். போலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை முறையற்ற வகையில் சுற்றுச்சூழலில் சேர்ப்பதால் சுற்றுச்சூலுக்கும் ,  மனித ஆரோக்கியத்துக்கும் பல  பாதிப்புக்கள் ஏற்படும். இலங்கையில் தற்போது சுற்றுச்சூழலில் சேரும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புக்கள் தீவிரமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

இன்று பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்  பாவனை இலங்கையை போன்று முழு உலகுக்கும் பாரிய பிரச்சினையாக மாற்றமடைந்துள்ளது.உலகளாயிவ ரீதியில் வருடாந்தம்  400 மில்லியன் தொன் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுப் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு சேர்வதுடன் ,  2080 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 1100 மில்லியன் தொன் பொலித்தீன் கழிவாக  மாற்றமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் நாளாந்தம் 938 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் சூழலில் விடப்படுவதுடன் ,  அவற்றில் 300 மெற்றிக் தொன் (32 சதவீதம்) உள்ளுராட்சிமன்றங்களினால் சேர்க்கப்படுவதுடன் ,  மிகுதி 638 மெற்றிக் தொன் முறையாக சேர்க்கப்படுவதில்லை.திறந்த வெளியில் 261 மெற்றிக் தொன் குப்பை கொட்டப்படுவதுடன் ,  சட்டவிரோதமான முறையில் 139  மெற்றிக் தொன் குப்பை கொட்டப்படுகிறது.

8 மெற்றிக்தொன் குப்பைகள் நீரில் கொட்டப்படுகிறது. இதற்கமைய தினசரி 18 மில்லியன் லன்சீட் ,  10 மில்லியன் பொலித்தீன் பைகள் சுற்றுச்சூழலில் சேர்க்கப்படுகின்றன. அத்துடன்  மாதாந்தம் 45 மில்லியன் வரையான யோகட் கோப்பைகள் சுற்றுச்சூழலுக்கு சேர்க்கப்படுகின்றன. 2024-2030 பிளாஸ்டிக் கழிவு  முகாமைத்துவம்  தொடர்பான தேசிய கொள்கையில் ,  மனித செயற்பாடுகளினால் சுற்றுச்சூழலுக்கு விடப்படும் கழிவுகளில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் ஆகியன  பிரதான இடம் பிடிக்கின்றன. நடைமுறையில் இலங்கையின் சுற்றுச்சூழல் அழிவின் பிரதான எதிரியாக பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் காணப்படுகிறது.

இலகுவாக  பயன்படுத்தக் கூடியதாகவும் ,  விலைக்குறைந்ததாகவும் காணப்படுவதால் இலங்கை மக்கள் பொலித்தீன் பை மற்றும் பொலித்தீன் ஊடான பொருட்களை பிரதான நுகர்வாக பயன்படுத்துகின்றனர். இலங்கையில் தினசரி 900 மெற்றிக் தொன் முதல் 950 மெற்றிக்தொன் வரையிலான பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றில் 300 மெற்றிக் முதல் 350 மெற்றிக்தொன் வரையிலான கழிவுகள் மாத்திரமே மீள் சேர்க்கப்படுகின்றன.இவ்வாறு சேர்க்கப்படும் பிளாஸ்டிக் தொகையில் 40 முதல் 50 மெற்றிக்தொன் வரையான பிளாஸ்டிக் மாத்திரமே மீள்சுழற்சி செய்யப்படுகின்றன.ஆகவே தினசரி உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் கழிவுகளில் 80 சதவீதமானவை முறையான வழிமுறைகள் ஏதுமின்றி சுற்றுச்சூழலில் சேர்க்கப்படுகின்றன.

இவ்வாறான  நிலைமை  இயற்கைக்கு முன்னுரிமையளித்து செல்வந்த நாடாக எழுச்சிப் பெறுவதற்கு தாக்கம் செலுத்தும். பிளாஸ்டிக் பாவனை சுற்றுச்சூழலின் அழகுக்கு கேடு விளைவிப்பதுடன் ,   நீர் உற்பத்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் திரவங்களால் வெளியாகும் இரசாயன பதார்த்தங்கள் சூழலில் கலப்பதால் குடிநீர் பாவனைக்கும் ,  விவசாய உற்பத்திகளுக்கும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

இயற்கை மற்றும் உயிர்பல்வகைமை உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை உலகளாவிய ரீதியில் பெயர் பெற்றுள்ளதால்  தேசிய மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை மீது அதிக ஈர்ப்புக் கொண்டுள்ளார்கள் .பிளாஸ்டிக் பாவனையால் சுற்றுச்சூழலும் ,   நீர்நிலைகளும் மாசடைந்துள்ளதால் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.சுற்றுச்சூழலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் நதி ஊடாக கடலை சேர்வதால் கடற்கரை வலயம் மாசடைகிறது.  அதேபோல் இலங்கையை அண்மித்த கடற்பிரதேசத்தில் கப்பல்களில் இருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகளினால் கடல் வலயமும் மாசடைகிறது.

இந்தியா ,  மியன்மார்  மற்றும்  பங்களாதேஸ் ஆகிய நாடுகளில் இருந்து வெளியிடப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் கடல் மார்க்கமாக இலங்கை கடல் வலயத்துக்குள் உள்வருகிறது.இலங்கையில் சமுத்திரத்தை மாத்திரமல்ல ,   நிலம் மற்றும் ஈரநிலங்களையும் பிளாஸ்டிக் ஆக்கிரமித்துள்ளது. தற்போது கழிவுகளை திறந்த வெளியில் அகற்றும் 349 திறந்த வெளி நிலப்பரப்புக்கள் தோற்றம் பெற்றுள்ளன. அதிகளவில் பயன்படுத்தப்படும் 50 சதவீதமான பிளாஸ்டிக் கழிவுகள் முறையற்ற  வகையில் இந்த நிலப்பகுதிகளில் கொட்டப்படுகின்றன.பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் உக்கலடைவதற்கு 500 ஆண்டுகளேனும் செல்லும் என்று ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதர்களின் செயற்பாடுகளினால் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படும் மாசடைவில் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்பு உயரளவில் காணப்படுகிறது. உற்பத்தி இலாபம் ,  இலகுவாக பெற்றுக்கொள்ளல் ,   அத்துடன் இலகுவில் கொண்டு செல்லல் ,  மற்றும் பாவனையின் பின்னர் இலகுவாக வெளியேற்றல் ஆகிய காரணிகளால் நடைமுறையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனை உயர்வடைந்துள்ளது.  பிளாஸ்டிக் பாவனைக்கான திரவியங்களினால் வளி மாசடைகிறது.மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும்  டயொக்சின் ,    பியுருன் உள்ளிட்ட இரசாயன பதார்த்தங்கள் சூழலுக்கு வெளியேற்றப்படுவதால்  வாயு மண்டலம் மாசடைகிறது.சுற்றுச்சூழலில் சேரும் பிளாஸ்டிக் மனித செயற்பாடுகள் ஊடாக வெளியேற்றுவது சவால்மிக்கதாக காணப்படுகிறது. துணி உற்பத்தி  ஊடாகவும் தினசரி பெருமளவிலான பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு சேர்க்கப்படுகிறது. 1 மீற்றருக்கு குறைவான மைக்ரோ பிளாஸ்டிக் பகுதி நெனோ பிளாஸ்டிக் என்று அடையாளப்படுத்தப்படுகிறது.

பிளாஸ்டிக் உற்பத்தியின் போது பகுதியாக உடைத்தல் மற்றும்  வர்ணம் பூசுதல்  ஆகிய செயற்பாடுகளினால் சுற்றுச்சூழலுக்கு தீங்கான பதார்த்தங்கள் வெளியேற்றப்படுகின்றன.இதனால்  பாரியளவில்  சுற்றுச்சூழல் மாசடைகிறது.வெளிப்படையான வடிவம் , வெப்ப எதிர்ப்பு ,   இலகுவில் வடிவமைத்தல் போன்ற காரணிகளுக்காக இரசாயன பதார்த்தங்கள் சேர்க்கப்படுகின்றன.மேலும் இரசாயன பதார்த்தங்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் அமிலங்கள் மற்றும் கன உலோகங்கள் அடங்குகின்றன.  சுற்றுச்சூழல் கட்டமைப்பில் முறையற்ற கழிவுகள் சேர்வதால் நச்சு பதார்த்தங்கள் நிலத்தடி  நீர்  மற்றும் மண்ணில் கசிந்து விடுகின்றன. முறையான முகாமைத்துவமின்றி கொட்டப்படும் குப்பைகள் ,  மனிதர்கள் வசிக்கும் பகுதிகள்இ  மற்றும் வனபகுதிகளில் முறையற்ற வகையில் கொட்டப்படும் கழிவுகளை உணவு தேடி வரும் யானைகள் மற்றும் வன விலங்குகள் உட்கொண்டு உயிரிழக்கும் சம்பவங்கள் ஊடகங்களில் தொடர்ச்சியாக அறிக்கையிடப்படுகின்றன.

 மேற்குறிப்பிடப்பட்ட காரணிகளை காட்டிலும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அகற்றாத காரணத்தால் அவை வடிகால்,   கால்வாய்களில் தேக்கமடையும். இதனால் மழை காலங்களில் நீர் வழிந்தோடுவதற்கு தடையேற்படும்.ஆறு பெருக்கெடுப்பதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் சாத்தியம் காணப்படுகிறது. அதேபோல் நீர்வாழ் பறவைகள் ,  உயிரினங்கள் ,  கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக்கை உணவாக உட்கொள்வதால் உயிரினங்களின் வாழ்வாதாரத்துக்கும் பாரிய அச்சுறுத்தல் தோற்றம் பெற்றுள்ளன .அதேபோல் இலங்கையின் சுற்றுச்சூழல் கட்டமைப்பில் உயிர்பல்வகைமையை பாதுகாக்கும்  சதுப்பு நிலங்கள் சூழலியல் சமநிலையை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சதுப்பு நிலங்களை அண்மித்த பகுதிகளில் முறையற்ற வகையில் கொட்டப்படும் பிளாஸ்டிக ,  பொலித்தீன்,  மீன்பிடி வலைகள்,  நைலோன் கயிறு உள்ளிட்டவை தாவரங்களினதும்,   சதுப்பு நில உயிரிணங்களின் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.இந்த நாட்டின் பல்லுயிர் பெருக்கத்துக்கு ஏற்பட்ட மிக மோசமான அச்சுறுத்தலாகவே இதனை கருத முடியும்.அத்துடன் நீர் மீன்களின் உற்பத்திகளுக்கும் பாதிப்பை  ஏற்படுத்தும். இலங்கையின் உயிர்பல்ககைமையை பாதுகாக்கும் சதுப்பு நில கட்டமைப்புக்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையால் வரையறையற்ற பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.

பிளாஸ்டிக்கில் உள்ள  BPA (Bispphenol A) –  Poly  Chiorinated biphenyl (PCK)   போன்ற இரசாயன பதார்த்தங்கள் உணவு மற்றும் நீரில் கலக்கப்படுவதால் மனித ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் இனப்பெருக்க பிரச்சினைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் , புற்றுநோய் போன்ற  நோய்களையும் உருவாக்கும்.

பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கான நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்துக்காக  கழிவுகள் உற்பத்திகளை குறைத்தல் ,   மீள்சூழற்சி ,   மற்றும்  மறுசீரமைத்தல் உள்ளிட்ட முப்பரிமாண கொள்கை  (3 ஆர்)  முக்கியமானது. பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை முழுமையாக குறைப்பது அவசியமதானது. பிளாஸ்டிக் பாவனையை குறைத்து அதற்கு பதிலாக சூழலுக்கு பாதிப்பற்ற பொருட்களை குறைக்க வேண்டும்.மீள்சுழற்சி முறையில் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்துவது நமது பொறுப்பாகும்.அதிகளவான நுகர்வை தவிர்த்துக் கொள்வது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அமையும். எதிர்கால  சந்ததியினருக்கு தூய்மையான சூழலை வழங்குவதை நோக்காகக் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை குறைக்க பல்வேறு வழிமுறைகளை முன்னெடுக்கலாம்.

நுகர்வோரின் அணுகுமுறை மற்றும் பழக்கவழக்கங்களை மாற்றுவது முக்கிய காரணிகளில் ஒன்றாகும். நுகர்வுக்கான கேள்வி குறைவடையும் போது உற்பத்தி குறைவடையும்.அத்துடன் நிலையான மாற்று பயன்பாடுகளை அறிமுகப்படுத்துவதன் ஊடாக பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை குறைக்க முடியும்.அத்துடன்  பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் ஊடாக சுற்றுச்சூழலுக்கு இயைவான பாடசாலை செயற்திட்டங்கள் ,   வானொலி ஊடாக நிகழ்ச்சிகளை முன்னெடுக்க முடியும்.அத்துடன் சுற்றுச்சூழல் தொடர்பில் புதிய சட்டங்களை இயற்ற வேண்டும்.

பிளாஸ்டிக் தொடர்பான அனைத்து தொழிற்சாலைகளும்  சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில்  செயற்பட  தேவையான உத்திகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் கீழ் ,  மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை  ,  சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்ய தொழில்துறையினரை ஊக்குவிக்கும் வகையில் ,   அந்த தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமம் வழங்கி ,   மனித இனத்தையும் ,   பிளாஸ்டிக் மாசுபாட்டிலிருந்து பூமியையும் பாதுகாக்க வேண்டும்  என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts