வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

இரண்டு சம்பவங்கள்! சமூக ஊடகங்களி;ல் பெண்கள் நின்று நிலைப்பதா? விலகுவதா?

பெண்களுக்கு எதிரான, பெண்களை இழிவுபடு;த்தும் அல்லது குடும்பத்தை, கணவனை, தந்தையை, எதிர்ப்பதற்காக அவர்கள் சார்ந்த குடும்பத்துப் பெண்ணை வசவு அல்லது இழிவு வார்த்தைகளால் பேசுதல் இன்று சமூக ஊடகங்களில் பரவலாக சர்வ சாதாரணமாக வெளிவருகிறது. பெண்களை பொது வெளியில் பாலியல் ரீதியாக இழிவுபடுத்துவது அந்த பெண்ணுக்கு எதிரான ஆயுதமாக கொள்கின்றனர். அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் சிலவேளை இனம், சமூகத்திற்கும் எதிரான ஆயுதமாக இழிவுபடுத்துவதை பாவிக்கப்படுகின்றனர். அந்த ஆயுதம் உளரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் நேரடி வன்முறைக்கான ஒரு தூண்டுதலாகவும் உள்ளது.

இலங்கையில் அண்மையில் நடந்த இரண்டு சம்பவங்கள் இவை.

1. பொது தளத்தில் தனது கருத்தை பதிவிட்ட சமூக செயற்பாட்டாளராக இருக்கும் பெண் ஒருவரை மிகவும் இழிவு படுத்தி ஒரு நபர் பதிவிட்டது.
2. தந்தையை மிரட்டுவதற்காக ‘பெண் குழந்தையை பாலியல் வல்லுறவு செய்வேன்’ என ருவிற்றரில் ஒருவர் பதிவிட்டமை.

முதல் விடயம் இலங்கையுடன் சம்பந்தப்பட்டது. இரண்டாவது இந்தியாவுடன் சம்பந்தப்பட்டது. ஆனாலும் இரண்டிலும் பெண்களுக்கு எதிரான இழிவு வர்த்தைகளைப் பயன்படுத்தி வெறுப்பூட்டியவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.

முதலாவது சம்பவம் – சமூக செயற்பாட்டாளர் இடதுசாரி சிந்தனை கொண்டு ஒடுக்கப்படும் மக்களுக்காக குரல் எழுப்பி செயற்பட்டு வரும் பெண். இவர் பெண் விடுதலை சிந்தனை அமைப்பின் செயலாளராகவும் இருப்பவர். இவர் ஈவேரா (பெரியார்) பற்றிய பதிவொன்றுக்கு பின்னூட்டம் இடுகிறார். அதற்கு வவுனியா பிரதேச சபை ஒன்றின் கிராம சேவகராக இருக்கும் ஒருவர் ‘பெரியார் உயிரோடு இருந்தால் இவள் பெரியாரையும் வைத்திருப்பாள்’ என்று கூறி பெண்ணிம் கதைப்பவர்களை மிக கேவலமான வார்த்தைகளால் பதிவிடுகிறார். இதை கண்டித்து எழுதுகின்றபோது மேலும் மேலும் கேவலப்படுத்தும் வார்த்தைகளை பொது வெளியில் பெண்ணியம் பேசும் அனைத்து பெண்களுக்கெதிராகவும் வைக்கிறார். அவரது வார்த்தைப் பிரயோகங்கள் பெண்கள் என்றால் எல்லா ஆண்களுக்குமான பாலியல் அடிமைகள் என்ற அளவுக்கு விமர்சிக்கிறார். இத்தனைக்கும் குறித்த நபர் போலிகணக்கிலோ அனாமதேய பெயரிலோ இல்லை. மிகத் தெளிவாக தனது படம், ஊர், வேலை என எல்லாவற்றையும் தெளிவாக தெரிவித்த முகநூல் கணக்கு அது. இவரது இந்த உரையாடலை பொது வெளிக்கு கொண்டுவந்தபோது அவர் போலிக்கணக்குகளை ஆரம்பித்து பெண் செயற்பாட்டாளரை மிக அவதூறுக்குள்ளாக்குகின்றார். போலிக் கணக்கொன்றை பெண்களை விளிக்கும் தூசண வார்தையைக்கொண்ட தலைப்பிட்டு ஆரம்பித்திருந்ததாகவும் நம்பப்படுகிறது.

இதனால் அந்தப் பெண் செயற்பாட்டாளர் இவர் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைக்காக சம்பந்தபட்ட அலுவலகத்திற்கு கடிதம் அனுப்புகிறார். ‘நீ என்ன செய்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது’ என திரும்பவும் பொதுவில் பதிவிடுகிறார் அந்த நபர். இவ்வாறான இவரது பதிவையெல்லாம் ஏனைய பொதுமக்களுக்காகவும் கேள்வியயெழுப்புவதற்காகவும் தனது சுவரில் படமாக பதிவேற்றுகிறார் சமூக செயற்பாட்டாளர். இதை காரணமாக  வைத்து முகநூலில் முறைப்பாடு செய்து பெண் செயற்பாட்டாளரின் கணக்கை குறித்த நாட்களுக்கு முடக்குகிறார் அந்த நபர். பல பெண்கள் இதைப்பற்றிய உரையாடல்களை தொடர்ந்து முகப்புத்தகத்தில் பதிவிட்டனர். கலந்துரையாடல்களை நிகழ்த்தினர். சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள் மக்கள் மத்தியில் பேசுபொருளாக்கினர்.
சம்பந்தப்பட்ட நபரோ தனது பதிவுகளை நகைச்சுவையாகவும் பெண்களுக்கு எதிரான இழிவுபடுத்தலாகவும் தொடர்கிறார். மெல்ல மெல்ல ஏனைய ஆண்களும் பங்கெடுத்து அவருடன் இணைந்து நகைப்புக்கிடமான பதிவுகளை அந்த பெண் செயற்பாட்டாளர் தொடர்பில் பதிவிடுகிறார்கள். அதில் ஆண் என்ற கர்வமும், அதிகாரம் கையில் உள்ளது என்ற இறுமாப்பும் அவர் பதிவுகளில் காணப்படுகிறது. இது நடந்து இரண்டு மாதங்களாகின்றன. எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை. தற்போது சட்ட ரீதியாக அணுகுவதற்கான ஏற்பாடுகளை அந்த பெண் செயற்பாட்டாளர் செய்துவருகிறார் என தெரியவருகிறது.

இவ்வாறு ஒரு பெண்ணுக்கு எதிரான பொது வெளி அவதூறு அல்லது இழிவுபடுத்தல் என்பது
இந்த இரு நபர்களுடன் சம்பந்தப்பட்டதல்ல. இந்த விடயத்தை சமூக, கலாசார, சட்ட, அரசியல், பால்நிலை, மதம், தொழில்நுட்பம் என பல்வேறு விடயங்களின் ஊடாக பார்க்கவேண்டும். அவ்வாறு பார்கின்றபோது பல்வேறு விடயங்கள் தென்படும்.

1. சமூகத்தில் உள்ள ஆண் பெண் அசமத்துவத்தின் வெளிப்பாடு.
2. அடிப்படை மனித உரிமையான பெண்களின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நிலைப்பாடு.
3. சமூக ஊடக பாவனையில் இருந்து  பெண்களை ஓரங்கட்டும்  நடவடிக்கை.
4. இலங்கையில் உள்ள பெண்களுக்கு சட்ட சமூக பாதுகாப்பின்மையின் வெளிப்பாடு.
5. ஆண் என்ற அடையாளம், பெண்களை கீழிறக்க போதுமானது என்கிற  மத கலாசார மனோபாவம்.
6. ஒரு பெண்ணை பொது வெளியில் இழிவுபடுத்துவது ஒரு பெரிய விசயமல்ல என்கிற சமூக கட்டமைப்பு.
7. எந்த ஒரு பெண்ணையும்- புலமைசார் தளத்தில் இருந்தால் கூட – அவளது ஒழுக்கத்தை விமர்சிப்பதனூடாக அவரது கருத்துக்களை 0 நிலைக்கு கொண்டுவரமுடியும் என்கிற ஆணாதிக்க சிந்தனை.
8. ஜனநாயக நடைமுறையில் இருந்து  பெண்களை ஓரம் கட்டுகிறது.
9. புதி;ய தொடர்பாடல் முறைகளில் இருந்து பெண்களை ஓரம் கட்டுகிறது.
10. பாலியல் சார்ந்து பெண்களை விமர்சிப்பது பொழுதுபோக்கானது என்கிறது.

இவ்வாறு பல விடயங்களை இந்த சம்பவம் எமக்கு கூறுகிறது. இவற்றை தடுப்பது எவ்வாறு?

சமூக வலைத்தளங்களில் நிகழும் இவ்வாறான சம்பவங்கள் பெண்களுக்கெதிரான மிக மோசமான வன்முறைகள். பொதுதளத்தில் உரையாட முற்படும் பெண்களுக்க எதிரான வன்முறைகள் இவை.

அடுத்த சம்பவம், இலங்கை கிறிக்கெட் வீரர் பற்றிய திரைப்படம் ஒன்றில் இந்தய நடிகர் நடிப்பதற்கான ஆயத்தங்கள் நடந்தன. இந்த நிலையில் அந்த நடிகர் அந்தப்படத்தில் நடிக்கக் கூடாது என்பதற்காக அவரின்; மகளை(குழந்தை) பாலியல் வன்புணர்வுசெய்வேன் என ஒருவர் வெளியிட்ட ருவிற்றர் பதிவு. இந்த பதிவைத் தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வருகிறது. பதிவிட்ட நபர் யார் என்பதை கண்டுபிடிக்க இந்திய ‘சைபர் குற்றத்தடுப்பு’ பிரிவினர் இறங்கினர். அந்த நபர் இலங்கையில் இருப்பதை அவர்கள் கண்டுபிடிக்கின்றனர். பின்னர் இலங்கையில் உள்ளவர் யார் என கண்டுபிடிக்க இன்ரபோலின் உதவி நாடப்பட்டுள்ளது என செய்திகள் வருகின்றன. இந்தச் செய்திகளைத் தொடர்ந்து ஒரு ஊடகத்தில் காணொளி வருகிறது.

ருவிற்றரை பதிவிட்ட நபர் தான் அப்போதிருந்த மனநிலையில் தெரியாமல் செய்துவிட்டேன் என்றும் தனக்கு கொவிட் காலத்தில் நடந்த வேலையிழப்பு தன் மனநிலையை மாற்றியிருந்தது என்றும் கூறுகிறார். தன்னை மன்னிக்கும் படியும் மன்றாடுகிறார். அந்த நபரின் தாயும் கதைக்கிறார். மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் இனி அவ்வாறு செய்யமாட்டார் என்பதையும் கூறுp அழுகிறார். இவர்களின் அடையாளம் மறைக்கப்பட்டு செய்தி வெளிவந்தது.

இந்த சம்பவமும் இந்த இருநபர்கள் சம்பந்தப்பட்டதல்ல.

1. சமூகத்தில் உள்ள ஆண் பெண் அசமத்துவத்தின் வெளிப்பாடு.
2. ஒரு ஆணை பழிதீர்க்க பெண் ஒரு ஆயுதம்
3. பாலியல் வல்லுறவு புரிதல் வீரம்.
4. பாலியல் வல்லுறவு வன்புணர்வு என்பது குற்றமல்ல.
5. குழந்தையைக்கூட பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம்.
6. பெண்ணின் பாலியல் விமர்சிப்பால் அவளது குடு;ம்பத்தை மிரட்ட முடியும்.

இவ்வாறு குழந்தைகள் முதல் வளர்ந்த பெண்கள் வரை அச்சத்திற்குள்ளாகும் வகையில் சமூக ஊடக பதிவுகள் வருகின்றன. இவற்றை எவ்வாறு நிறுத்துவது? அல்லது தடுப்பது?

இந்த இரண்டு சம்பவங்களிலும் முதலாவதில் சம்பந்தப்பட்ட நபர் தனது சொந்த பெயரில் இருந்து இது தவறு என்ற எந்த அருட்டுணர்வும் இன்றி தொடர்ந்தும் பதிவுகளை இடுகின்றார்.  சட்டத்தை நாடினாலும் என்னை எதுவும் செய்யமுடியாது என்று மிகத் தெளிவாக பதிவுகளை இடுகிறார்.

இரண்டாவது சம்பவத்தில் அந்த நபர், சட்டம் தன்மீது பாயப்போகின்றது என்றவுடன் உடனடியாக ஊடகத்தை நோக்கி வந்து மன்னிப்பு கேட்டு நிற்கின்றார்.

இங்கே பொதுமக்களுக்கான ஊடகமாக சமூக வலைதளங்கள் இருக்கின்றபோது பொதுமக்களுக்கு இருக்கவேண்டிய பொறுப்புடைமை கேள்விக்குறியாகின்றது. இவ்வாறு பதிவிடுபவர்கள் ஒருவகையில் தங்களை, தங்கள் குணஇயல்புகளை யார் என்று சமூகத்திற்கு தெரியப்படுத்துகிறார்கள். ஆனால் சமூகம்தான் கண்டுகொள்வதில்லை. மாறாக அவதூறுக்கு உள்ளாகும் பெண்ணைத் தேடுகிறது. அவருக்கு புத்திமதி சொல்கிறது. இதை தடைசெய், அல்லது முகப்புத்தகத்தில் இருந்து விலகி இரு என்கிறது சமூகம். இது ஒரு முரண்நகையானது.
எனவே இதை ஒன்றும் செய்முடியாது நாம் ஒதுங்குவோம் என பல பெண்கள் முகப்புதகப்பக்கமே வருவதில்லை. பால்நிலை சமத்துவத்தை, ஜனநாயகத்தை எல்லோரும் அனுபவிக்க வேண்டுமென்றால் தணிக்கை செய்வதை விட சட்டத்தினால் தடைசெய்வதே மேல். எனவே இவற்றை சட்டங்களால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.

“இலங்கையில் சமூக ஊடக குற்றங்களுக்கான சட்டங்களைக் கொண்டுவருவதற்கான ஏற்படுகள் நடந்தாலும் நிறைவடையவில்லை. இப்போதைக்கு (ஊலடிநச உசiஅந) இணையவெளி குற்றசட்டத்தின் கீழ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ப்படுகின்றன. ஆனாலும் இந்தமாதிரியான சில அவதூறுகளை செய்பவரை இனங்கண்டு கொடுப்பது மட்டுமே அவர்களது பொறுப்பாக உள்ளது.

“இவ்வாறான அவதூறுகளை ‘அவதூறுச் சட்டத்தின் கீழ் (னுநகயஅயவழைn டயற) பதிவுசெய்யமுடியும்.” என்கிறார் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம். ‘ஒருவரின் கௌரவத்தை பாதிக்கும் வகையில் அவரது சமூக அந்தஸ்தை பாதிக்கும் வகையில் பொய்யான தகவலொன்றை பொதுவெளியில் முன்வைப்பது குற்றமாகும். அதாவது ஒருவரின் நற்பெயருக்கு தீங்கு விளைவிப்பது  அல்லது இழப்பு உண்டாக்குவது குற்றமாகும்.’ ஏன்பதே சட்டத்தில் உள்ள ஏற்பாடு என்கிறார் அவர்.

பொதுவாக இதை மானஷ்ட வழக்கு என்றும் கூறுவர்.

இதில் ஒன்று, வெளிப்படையானது (டுiடிநட) மற்றையது, சொற்களால் உணரத்தக்கது(ளுடயனெநச). வெளிப்படையான தன்மையில் உள்ள (டுiடிநட) இழிவுபடுதலானது கண்களினால் பார்க்கக்கூடியதாய் இருக்கும். எழுத்தில், பட வடிவில் இருக்கும். ஆனால் சொற்களால் உணரத்தக்க (ளுடநனெநச) இழிவுபடுத்தல் என்பது பேசப்படும் வார்த்தைகளாக இருக்கும்.

இது பற்றி சட்டத்தரணி மங்களா சங்கர் குறிப்பிடுகையில்,  அவதூறு என நிருபிப்பதற்கான அத்தியாவசிய தேவைப்பாடுகள் பற்றி பின்வருமாறு உள்ளன என விளக்கினார்.

“ஒரு நபருடைய நன்மதிப்பைக் குறைப்பதாக அது இருக்க வேண்டும்.
அ) மற்றவர்களின் மதிப்பீட்டில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒருவரின் நன்மதிப்பைக் குறைப்பதாக அது இருக்கவேண்டும்.
ஆ) ஒரு நபருடைய ஒழுக்கம் மற்றும் அறிவு பற்றிக் கூறுவதன் மூலம் ஒருவரின் நன்மதிப்பை குறைப்பதாக இருக்க வேண்டும்.
இ) ஒருவரின் சாதியை குறைத்துக்கூறுவதாக இருக்க வேண்டும்.
ஈ) ஒரு பெண்ணின் தூய்மைக்கு தீங்கு விளைவிப்பதாக இருக்க வேண்டும்.
உ) ஒரு நபருடைய மதிப்பிற்குத் தீங்கு விளைவிப்பதாக இருக்க வேண்டும்.
மொத்தத்தில் ஒருவரது மதிப்புக்கு பங்கமேற்படுவதாக இருக்க வேண்டும்.
இலங்கையில் இதன் கீழ்வரும் வழக்குகளே அதிகம். சிலர் இதனை அறியாமல் மரியாதையைக் குறைக்கும் வகையில் பொய்களைக் கூறுவதுண்டு. பின்னர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்பதும் உண்டு. சில சமயங்களில் பெரும் தொகையான பணத்தை நஷ்டஈடாகச் செலுத்துவதும் உண்டு.” என்கிறார் சட்டத்தரணி மங்களா சங்கர்.

அடுத்ததாக முகப்புத்தக நிர்வாகத்திடமும் பெண்கள் தொடர்பில் சரியான அணுகுமுறை இல்லை என்பதும் உணரப்படுகிறது. இந்தியாவில் பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு எதிரான இழிவுபடுத்தலின்போது முகப்புத்தக நிர்வாகம் குறித் இழிவுபடுத்தும் விடயம் தமது சமூக ஏற்றுக்கொள்ளல் அல்லது சமூக நிலைப்பாட்டின்படி (ஊழஅஅரnவைல ளவயனெநன ) தவறல்ல என பதில் அளித்ததாம். அதன்பின்னர் பொலீஸ்முறைப்பாடுகளும் சமூகப்போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு முகப்புத்தக நிர்வாகம் ஏற்றுக்கொண்டது நீக்கியது. பொலீசும் கவனம் எடுத்தது. ஆனால் பின்னணியில் பத்திரிகையாளருக்கு எதிராக அரசியல் அதிகாரம் எல்லாவற்றையும் நெறிப்படுத்தியதையும் அந்த பெண் பத்திரிகையாளர் வெளிப்படுத்தியிருந்தார்.

சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான இழிவுபடுத்தல்கள் ஒருவகையான பெண் ஒடுக்கமுறை. அதுமட்டுமல்லாமல் சமூகத்தின் ஒரு பகுதியினரை பொது தளத்தில் இருந்து ஜனநாயக முறைமைகளில் இருந்து அகற்றும் பொறிமுறை. இவற்றை சமூகமாக மக்கள் எதிர்கொள்வதும் சட்ட ஒழுங்குகளை ஏற்படுத்துவதும் இன்றைய அவசியமாகும்.

 

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts