Transparency கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

இந்நாட்டிற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் வளர்ச்சி பற்றிய பரிசீலனை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் 1978 ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பு மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஆகியவற்றின் தந்தை என்று கருதப்படுகின்ற  முன்னாள் ஜனாதிபதி  ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் 114 ஆவது பிறந்த தினமும் 24 ஆவது சிரார்த்த தினமும் அனுஷ்டிக்கப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பான கலந்துரை யாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

1978 ஆம் ஆண்டின் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பாக ஒரே ஒரு சந்தர்பதப்தைத் தவிர ஏனைய எல்லா சந்மதர்ப்பங்களிலும் இந்த முறையை ஒழித்துக் கட்ட வேண்டும் அல்லது ஜனாதிபதியின் அதிகாரங்களை ஏதோ ஓரளவிற்கு கட்டுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலே கலந்துரையாடல்களும் வாத விவாதங்களும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. அத்துடன் தற்போதைய கலந்துறையாடல்கள் இடம்பெற்று வருவது மீண்டும் பலமான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை பலமடையச் செய்வதை இலக்காககக் கொண்டு ஆகும்.

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அறிமுகம் செய்யப்பட்டது 1978 ஆம் ஆண்டு ஆறிமுகம் செய்து வைக்கப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பின் ஊடாகவாகும். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜே.ஆர்.ஜெயவர்தனா வின் தலைமையிலான ஐ.தே.க. ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் புதிய அரசியல் யாப்பை வரைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.க. இந்தளவு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொண்டதால் எதிர்க்கட்சி அரசியலும் முற்றாக இல்லாமல் போன ஒரு சூழ்நிலையை அவதானிக்க முடிந்தது. இந்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளுள் ஒன்றாக இருந்து வந்த ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு அந்த தேர்தலில் பெற்றுக்கொள்ள முடிந்தது 08 ஆசனங்களை மாத்திரமாகும்.

அந்த தேர்தலில் வடக்கை பிரதிநிதித்துவம் செய்த தமிழர் விடுதலைக் கூட்டணி 09 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதால் சுதந்திரத்தின் பின்னர் முதல் முறையாக பாராளுமன்றத்தில்  பிரதான எதிர்க் கட்சி என்ற ஸ்தானத்தை ஒரு தமிழ் கட்சி பெற்றுக் கொண்டது. அக் கட்சியின் தலைவர் ஏ. அமிர்தலிங்கம் எதிர்கக்ட்சித் தலைவரானார். இவ்வாறு பாராளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சி என்ற ஒன்று முழுமையாக பலவீனமடைந்திருந்த நிலையிலே 1978 ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு யாப்பை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் மொத்த அசன எண்ணிக்கை 17 ஆக இருந்தது. ஆளும் கட்சி வெற்றிக் கழிப்பின் உச்ச கட்டத்தை அனுபவித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பமாகும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றிய அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனா தெரிவிக்கையில் இந்த ஜனாதிபதி முறை மூலம் செய்ய முடியாதது ஒரு பெண்ணை ஆணாகவும் ஆணை பெண்ணாகவும் மாற்ற முடியாதது மாத்திரமாகும். அது தவிர தோவைப்பட்ட எதையும் இந்த அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டில் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார். இந்த முறை அறிமுகப்படுத்தப் பட்டதன் நோக்கம் நாட்டை துரிதமான அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும் என்ற இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு ஆகும். எவ்வாறாயினும் அந்த சந்தர்ப்பமானது இந்நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏதோ ஒருவகையில் சாவு மணி அடித்து ஏகாதிபத்தி அதிகாரத்தை கொண்ட ஆட்சியை ஏற்படுத்துவதாக அமைகின்றது என்பது அப்போது எதிர்க்கட்சி தரப்பில் அங்கம் வகித்த ஸ்ரீ.ல.சு.கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஏனைய இடதுசாரி அரசியல் கட்சிகளது கருத்தாக அமைந்தன.

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொது ஜன ஐக்கிய முன்னணி வெற்றி பெற்றதோடு அதுவரையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் கீழ் 17 வருடங்களாக தொடர்ச்சியாக நாட்டை ஆட்சி செய்து வந்த ஐக்கிய Nதுசிய கட்சி தோள்வியைத் தழுவியது. அதில் இருந்து இன்று வரையில் ஸ்ரீ.ல.சு. கட்சியின் தலைமையிலான கூட்டணி; அதே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைக் கொண்டு 21 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்திருக்கின்றது. மைத்திரிபால சிரிசேனா ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலாளராகவும் தலைவராகவும் பதவிகளை வகித்த நிலையில் பிரதான கட்சியாக ஐ.தே.க. வுடன் இணைந்து நான்கரை வருடங்களாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட நிலையில்  ஆட்சி முன்னெடுக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் தேசிய அரசாங்கமாக அந்த ஆட்சியை முன்னெடுக்க ஸ்ரீ.ல.சு.கட்சியினர் ஆதரவு வழங்கினர். எவ்வாறாயினும் இந்நாடு பலவேறு ஜனாதிபதிகளின் கீழ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைப் பயன்படுத்தி இதுவரையில் 42 வருடங்களாக ஆட்சி செய்யப்பட்டு வந்திருக்கின்றது. ஜே.ஆர். ஜெயவர்தன, ரணசிங்ஹ பிரேதமதாச, டி.பி. விஜேதுங்க, சந்திரிகா பண்டார நாயக்கா குமாரணதுங்கா, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிரிசேனா ஆகியோர் ஏற்கனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளாக ஆட்சி செய்துள்ளனர். தற்போதைய ஜனாதிபதியாக இருக்கின்ற கோதபபய ராஜபக்ஷ அதே ஜனாதிபதிகளுள் ஒருவராக தற்போது இருந்து வருகின்றார்.

புதிய ஜனாதிபதிப் பதவியில் இருந்து வந்த ஆபத்தை அறிந்த அன்றைய இடதுசாரி அரசியல்வாதிகளான என்.எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற அரசியல் தலைவர்கள் மற்றும் ஸ்ரீ;;.ல.சு. கட்சியின் தலைவர்கள் ஆகியோர் இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை எதிர்த்து வந்தனர். ஸ்ரீ.ல.சு.கட்சி மற்றும் பொ,ஐ.மு. யின் இன்றைய தலைவராக இருந்து வருகின்ற மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல தலைவர்கள் கூட அன்றைய எதிர்ப்பை வெளியிட்டவர்களுள் அடங்குகின்றார். இடதுசாரி அரசியல் வாதிகளான வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸவிதாரண போன்வர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை எதிர்த்ததோடு சில சந்தர்பப்ங்களில் அதற்கு எதிராக போரடியதால் சிறைவாசம் அனுபவித்த வர்களாகவும் உள்ளனர். எவ்வாறாக இருந்தாலும் இந்நாட்டிற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது அறிமுகம் செய்யப்பட்ட போது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி மிகவும் பலவீனமான நிலையில் இருந்த காலகட்டத்திலாகும். அவர்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஊர்வலங்கள், கருப்புக் கொடி தூக்கிய சந்தர்ப்பங்கள் போன்ற எதிர்ப்புக்களையும் சமாளித்து இந்த முறை நாட்டிற்கு அறிமுகபப்டுத்தப்பட்டது.

அதில் இருந்து நாட்டில் புதிய அரசியல் அத்தியாயம் ஆரம்பமாகியது. அதன் பின்னர் நடைபெற்று வந்துள்ள எல்லா பொதுத் தேர்தல்களிலும் ஐ.தே.க. தவிர்ந்த ஏனைய ஸ்ரீ.ல.சு. கட்சி தலைமையிலான அரசியல் கட்சிகளது தேர்தல் கொள்கைப் பிரகடனங்களில் பிரதான இடத்தை பிடித்த விடயமாக அமைந்தது இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்துக் கட்டுவோம் என்பதாகும். அதற்கான உறுதிமொழிகளையும் சபதங்களையும் வழங்கி உள்ளனர். ஸ்ரீ.ல.சு.கட்சி தலைமையிலான கூட்டணி இரண்டு சந்தர்ப்பங்களில் மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி.) இரண்டு உடன்படிக்கைகளை செய்து வாக்குறுதி வழங்கி இருக்கின்றன. 1999 ஆம் அண்டு சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கா மற்றும் 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நிறiவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்குறுதி வழங்கி உடன்படிக்கை செய்து கொண்டவர்களாவர்.

இந்த சந்தர்ப்பத்தில் ஐ.தே.க. யும் படிப்படியாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பாக அதன் போக்கில் ஒருவிதமான மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐ.தே.க. வால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதன் அபேட்சகர் ரனில் விக்கிரமசிங்காவால்  முதல் முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை ஓரளவிற்காவது குறைப்பது அல்லது பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறக்கூடிய பிதமரைக் கொண்ட ஆட்சியை ஏற்படுத்துவது என்ற விடயம் முன்வைக்கப்பட்டது.

அதன்படி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையான எமது நாட்டில் நீண்ட காலமாக பினை வைக்கப்பட்டு பேரம் பேசப்பட்டு வந்த ஒன்றாக இருந்து வந்திருக்கின்றது.

சிவில் யுத்த காலப்பகுதியில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை பாதுகாக்க வேண்டும், அது நாட்டிற்கு அவசியமான ஒன்று என்ற அடிப்படையில் பலவிதமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வந்திருப்பதையும் நாம் மறந்து விட முடியாது.

ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க அல்லது போட்டியிட முடியாது என்று அரசியல் அமைப்பில் இருந்து வந்த பிரிவை அரசியல் அமைப்பிற்கான 18 ஆவது திருத்தம் மூலம் ஒருவர் விரும்பிய எத்தனை முறையும் ஜனாதிபதியாக போட்டியிடலாம் என்ற அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்தில் மாற்றம் செய்து கொள்ளப்பட்டது. இரண்டு முறைக்கு மேல் போட்டியிட்டு ஜனாதிபதியாக வரமுடியாது என்றிருந்த தடை நீக்கப்பட்டது. அவ்வாறிருந்தாலும் 2010 ஆம் அண்டு மற்றும் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தகளுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாப னங்களில் பிரதம மந்திரிக்கும் அதிகாரங்கள் கிடைக்கும் வகையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அத்தகைய கலந்துரையாடல் இடம்பெறவில்லை. மாறாக நாட்டின் நிர்வாக மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தடையாக அமைந்திருக்கின்ற அரசியல் அமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தை நீக்குவதாக அப்போதைய ஜனாதிபதி அபேட்சகரான கோதாபய ராஜபக்ஷ உட்பட ஸ்ரீ.ல.பொ.பெ. கட்சியின் முக்கிய தலைவர்கள் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினர். ஆனாலும் மீண்டும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நோக்கி நகர்வதாக எந்தவொரு இடத்திலும் சொல்லப்பட்டு இருக்கவில்லை.

அதே நேரம் அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போதைய நிலையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலத்திற்கு அண்மித்த பலத்தை அரசாங்கம் பெற்றுள்ள நிலையில் ஆகும். பாராளுமன்றத்திற்குள் எந்த சந்தர்ப்பத்திலும் நினைக்கின்ற எந்த மாற்றத்தையும் செய்ய தேவையான பலம் இருக்கின்றது என்ற மனநிலை அராசங்கத்திற்கு இருந்து வருகின்றது. அத்துடன் அரசாங்கத்திற்குள் கூட போதுமான அளவில் கலந்துரையாடல்கள் நடைபெறாத நிலையில் இறுதி முடிவு இவ்வாறு அமையலாம் என்று சொல்லுமளவிற்கு காலம் கணியவில்லை என்றே கூற வேண்டும். இருந்தாலும் அதிகமான ஜனாதிபதிகளின் தலைமையில் இந்நாட்டின் ஜனநாயகத்திற்கு பாதிப்பும் அச்சுறுத்தலும் ஏற்பட்டே வந்திருக்கின்றது. இன்றும் கூட அதிகமானவர்கள் எதிர்பாhத்துக் கொண்டிருப்பது அந்த விவாதங்கள் இதில் இருந்து முன்னெடுக்கப்படுகின்ற முறையை ஆகும்.

 

 

 

 

 

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts