ஆன்மிக எண்ணம் கொண்ட மனிதர்கள் பெத்தகான ஈரநிலத்தை காக்க வேண்டும்

இலங்கையின் நிர்வாக தலைநகரமான கோட்டை பகுதியில் உள்ள பெத்தகான ஈரநில பூங்காவானது கட்டிடங்களால் சூழ்ந்த நகர சூழலுக்கு நடுவில் உள்ள உயிர்பல்வகைமையான சுற்றுச்சூழல் வலயமாகும். பெத்தகான ஈரநில பூங்கா 40 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. பெத்தகான ஈரநிலம் இலங்கைக்கே உரித்தானதுடன் அருகிவரும் நிலையில் உள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களை கொண்டுள்ளது. 80 வகையான விசேட குருவி வகைகளையும், 50 வகையான வண்ணாத்திபூச்சி இனங்களையும், 35 வகையான பூச்சி இனங்களையும், 20 வகையான மீன் இனங்களையும், 10 வகையான பிராணி இனங்களையும், 05 வகையான ஊர்வன இனங்களையும், 100 வகையான தாவர வகைகளையும் இந்த ஈரநிலம் தன்னகத்தே கொண்டுள்ளது. வருடத்தில் ஒருசில காலப்பகுதியில் வேடன்தாங்கல் பறவைகள் பெத்தகான ஈரநிலங்களில் தங்கியிருக்கும். மீன்பிடிப் பூனை (Fisher Cat) போன்ற நகர்புறச் சுற்றுச்சூழலில் காணக்கூடிய மிகவும் அரிதான உயிரினங்களை பெத்தகான ஈரநிலங்கள் கொண்டுள்ளது.
சூழலியலாளர் மற்றும் சட்டத்தரணியுமான கலாநிதி ஜகத் குணவர்தனவின் கருத்துப்படி ‘ பெத்தகான ஈரநில பூங்கா என்பது ஸ்ரீ ஜயவர்தனபுர சரணாலய நிலத்துக் சொந்தமான பகுதியாகும். இந்த நிலப்பகுதி ஆரம்பக் காலத்தில் இருந்து ஈரநிலமாகவே காணப்பட்டது. இருப்பினும் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியை நிர்மாணிக்கையில் அங்கிருந்த ஏரி பகுதிகளை விரிவுப்படுத்த நிரப்பப்பட்ட சேறுகளினால் கணிசமான அளவு இந்த பகுதி சேற்றுநிலமானது. ஆகவே இந்த பகுதியில் விசாலமான சேற்று நிலமே ஆரம்பத்தில் இருந்தது. சேற்று நிலமாக மாற்றமடைந்தால் இப்பகுதிக்கு அதிகளான பறவைகள் வருகைத் தந்தன. 2014 ஆம் ஆண்டு பெத்தகான ஈரநிலம் பூங்காவாக மாற்றியமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது இந்த பூமியில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்புக்கும், இயற்கையான சூழல் கட்டமைப்புக்கும் இடையிலான சூழல் கட்டமைப்பே காணப்படுகிறது:’
பெத்தகான ஈரநிலம் இயற்கை பூங்காவாக நகர அபிவிருத்தி அதிகார சபையால் பாதுகாக்கப்படுவதுடன், தேசிய மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் சுற்றுலா தலமாகவும் காணப்படுகிறது. பலகைகளினால் நிர்மாணிக்கப்பட்ட நடக்கும் மேடை, ஈரநில பகுதியில் வாழும் பறவைகளை பார்க்க கூடியவாறான கோபுரம் மற்றும் ஈரநிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு இடையூறு விளைவிக்காமல் அவற்றை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு மேடை என்று சுற்றுலா பயணிகளுக்கு பல வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு நகரத்தின் வெப்பத்தை குறைத்தல், வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட பிற சூழல் சேவைகள் பல ஈரநிலத்தில் இருந்து கிடைக்கப் பெறுகின்றன. கல்வி செயற்பாடுகளை மேம்படுத்தல்;, உயிர்பல்வகைமையை பேணல்; , சுற்றுச்சூழல் பாதிப்புக்களை தடுத்தல், ஈரநிலங்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தல் மற்றும் தெளிவுப்படுத்தல் ஆகியன பெத்தகான ஈரநில பூங்காவின் பிரதான இலக்காகும்.
பெத்தகான ஈரநில பூங்கா வாரத்தில் 7 நாட்களும் காலை 06 மணிமுதல் மாலை 06 மணிவரை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். முற்பகல் 5 மணிவரை மாத்திரமே அனுமதிச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும்.
பாராளுமன்றத்தை சூழ்ந்துள்ள தியவன்னா நதி நீரில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் ஈரநிலத்தில் வாழும் மீன்கள் மற்றும் ஏனைய நீர்வாழ் உயிரினங்களின் உயிர்பல்வகைமையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை பிறிதொரு சிக்கலாகும். உப்புத்தன்மை அதிகரிப்பு முதலைகளின் வருகைக்கு பிரதான காரணியாகும்.
பெத்தகான ஈரநில பூங்கா என்பது ஈரநில கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். தியசரு பூங்கா, தியவன்னா நதி உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில் உள்ள மாதிரி நிலங்களுடன் பெத்தகான ஈரநில பூங்கா நீருடன் தொடர்புப்பட்டுள்ளது. அரச உத்தியோகஸ்தர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டாலும் ஒருசில நபர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் கட்டமைப்பும் பல சிக்கல்களை எதிர்கொள்கிறன. நகர சபையின் குப்பை வண்டிகள் நாளாந்தம் வீடுகளுக்கு அனுப்பப்பட்டாலும், தியவன்னா நதி மற்றும் பெத்தகான ஈரவலயங்களை அண்மித்த பகுதிகளிலும், கரையோரங்களிலும் குப்பைகளை கொட்டும் மனித செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன. சுற்றுச்சூழலுக்கு எதிரான இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எதிர்கால சந்ததியினருக்காக பூங்காவை பாதுகாப்பதுடன் உயிரினங்களின் இயற்கை வாழிடத்தை பாதுகாப்பதும் பொதுமக்களின் பொறுப்பாகும்.
இதற்கமைய பெத்தகான பிரதேசவாசிகளுடன் , நகர அபிவிருத்தி அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம் ஒன்றிணைந்து பெத்தகான ஈரநிலத்தை பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன. 2024.10.06 ஆம் திகதி (Wetland Clean Up ) என்ற பெயரில் நடைப்பெற்ற சிரமதான பணிகள் இதற்கு சிறந்த உதாரணமாகும். பெத்தகான ஈரநிலத்தை அண்மித்த பகுதியில் மனிதர்களால் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டு அப்பிரதேசம் துப்பரவு செய்யப்பட்டது. இதற்காக பிரதேசவாதிகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது.
பெத்தகான ஈரநில பூங்கா இயற்கையான அழகான பூமி மாத்திரமல்ல, நகர பாதுகாப்பின் இலட்சினையாகும். அது பூகோள வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றம் உயர்வடைதலை கருத்திற் கொண்டு பூகோள நன்மைகளுக்கு பங்களிப்பு செய்யும் மிகவும் பெறுமதியான சுற்றுச்சூழல் கட்டமைப்பாகும்.
பூங்காக்களுக்கு செல்லும் போது பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஈர நிலங்களுக்குள் செல்லும் போது உயிரினங்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் அமைதியாக நடந்துக் கொள்ளுங்கள். பெத்தகான ஈரவலய நிலத்தை பாதுகாப்பது சகலரினதும் பொறுப்பாகும்.
1 –Photo
பறவைகளை பார்வையிடும் கோபுரம்
பறவைகள் மற்றும் அவைகளின் இயல்பான செயற்பாடுகளை கண்காணிக்க கூடிய இடமாக ஈரவலயம் காணப்படுகிறது. இவ்விடத்தில் இருந்து பூங்காவின் முழு பகுதியையும் தெளிவாக பார்வையிட முடியும்.
தியவன்னா நதியின் மருங்கில் கொட்டப்பட்டுள்ள
பிளாஸ்டிக் போத்தல்கள், பைகள்
4 -Photo
பெத்தகான ஈரநில பூங்காவுக்கு செல்லும் வீதியில் தியவன்னா நதியின் மருங்கில் வீதிக்கு அருகில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.