அரசியல் பழிவாங்கல்களை ஈடுசெய்யும் ஆணைக்குழு மற்றும் நல்லிணக்கத்தின் எதிர்காலம்
பிரியந்த கருணாரத்ன
ஜனவரி 8, 2015 முதல் 2019 நவம்பர் 16 வரையிலான காலகட்டத்தில் அரச ஊழியர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கலுக்கு ஆளானமை குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார்.
இந்த ஆணைக்குழுவிற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தலைமை தாங்கியதுடன், ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா சந்திரசிறி ஜெயதிக மற்றும் ஓய்வு பெற்ற பொலிஸ்மா அதிபரான சந்திர பெர்னாண்டோ ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த ஆணைக்குழுவிற்கான முறைப்பாடுகள் 20 பிப்ரவரி 2020 தொடக்கம் பெற்றுக்கொள்ள ஆரம்பித்ததுடன், 305 முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆணைக்குழுவின் அறிக்கை 2021 ஏப்ரல் 23 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 40 வழக்குகளை வாபஸ் பெற ஆணைக்குழு பரிந்துரைத்தது, ஏனெனில் அவை நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் எதிரிகளை வேட்டையாடுவதற்கான நடவடிக்கைகளாக இருந்தன.
இந்த கட்டுரை அரச ஊழியர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கியவர்களை ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளால் நல்லிணக்க செயல்முறை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை விவாதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அரசியலமைப்பின் கீழ், ஒரு குறிப்பிட்ட விடயத்தை நன்கு புரிந்துகொள்வதற்காக விசேட ஆணைக்குழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் உள்ளன. இருப்பினும், அத்தகைய ஆணைக்குழுவை நியமிப்பது நீதித்துறை செயன்முறையை தடுக்கின்றதென்றால், அது ஒரு பயங்கரமான சூழ்நிலையாகும். போலி ஆதாரங்களின் அடிப்படையில் தவறான வழக்குகள் என்பதால் வழக்குகளை வாபஸ் பெற ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினரான சி.வி. விக்கினேஸ்வரன், அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவர்கள் என்று நம்பப்படும் நபர்கள் நிவாரணம் பெறுவதற்கு மூன்று நீதித்துறை நடவடிக்கைகளை பின்பற்றலாம் என்று கூறினார். முதலாவது விசாரணையில் ஒரு அடிப்படை ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்வதாகும். இரண்டாவது உச்சநீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்வதுடன், மூன்றாவது அரசியலமைப்பின் பிரிவு 140 ன் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து ஒரு ரிட் மனுவை கோருவதாகும். மேலே குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகளைத் தவிர்த்து ஒரு குழு அல்லது ஆணைக்குழு மூலம் அரசியல் பழிவாங்கலை விசாரிப்பது சட்டத்தின் ஆட்சிக்கு தீங்கு விளைவிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார். “ என்னைப் பொறுத்தவரையில், அரச அதிகாரிகள், அரச நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் மற்றும் முப்படைகளின் உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிரான பழிவாங்கல்களை விசாரிப்பதற்கு ஒரு ஆணைக்குழுவை நியமிப்பது ஒட்டுமொத்தமாக தவறான யோசனையாகும். அரச ஊழியர்கள் தங்கள் கடமைகளை முறையாக செய்ய அனுமதிக்க வேண்டும். அவர்கள் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்த முயற்சிக்கக்கூடாது” என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவால் ஆராயப்பட்ட பல வழக்குகள் ஏற்கனவே நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி ஆணைக்குழு என்பது நீதி வழங்கும் நீதித்துறை அல்ல. நீதிமன்றங்களால் ஆராயப்படும் எந்தவொரு வழக்குகள் குறித்தும் பரிந்துரைகளை வழங்க ஜனாதிபதி ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் ஒரு வழக்கு தொடர்பாக இந்த ஆணைக்குழுவால் மேறகொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் நீதி விவகாரங்களில் தலையிடுவதாக அமைவதாக சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2020 ஜனவரி 9 திகதியிட்ட 2157/144 என்ற வர்த்தமானியின் முன்னுரையின் படி நியமிக்கப்பட்ட சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு, ஏற்கனவே எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எந்தவிதமான பாரபட்சத்தையும் ஏற்படுத்தாமல் செயற்பட வேண்டும். அதாவது, ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்ப்புகளில் அல்லது நீதிமன்ற சட்டத்தால் எடுக்கப்படும் தீர்ப்புகளில் ஆணைக்குழு தலையிட முடியாது. இருப்பினும், இந்த கொள்கையை மீறி, நீதிமன்றங்கள் விசாரித்த பல வழக்குகளை திரும்பப் பெற ஆணைக்குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்தபடி வழக்குகள் வாபாஸ் பெறப்பட்டால், அது ஜனநாயகம், சட்ட ஆட்சி மற்றும் பொது சேவை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு கடுமையான அடியாக இருக்கும். இத்தகைய நிலைமை அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்த நாட்டின் தமிழ் மக்கள் தங்களது நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று போராடுகின்றனர். போரின் போது மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், அடுத்துவந்த அரசாங்கங்கள் அவற்றை விசாரிக்கத் தவறிவிட்டன.
நீதிக் கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களைத் தீர்க்கும் என்ற நம்பிக்கை இல்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முடிவு செய்தது. மனித உரிமை அமைப்புகள், ஐ.நா மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இணைந்து நடத்தும் சர்வதேச விசாரணையில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டுகளையும் சர்வதேச விசாரணைகளுக்கான நகர்வுகளையும் நிராகரிக்கிறதுடன் இந்தப் பிரச்சினைக்கு ஒரு உள்ளூர் பொறிமுறையின் மூலம் தீர்வு காண முடியும் என்று வாதிடுகின்றது. இலங்கைக்கு முறையான நீதி அமைப்பு உள்ளது என்பதை அவர்கள் காட்ட விரும்புகிறார்கள், ஆனால் கண்ணோட்டம் இதற்கு முரணானது.
குற்றம் மற்றும் ஊழலுக்காக குற்றம் சாட்டப்பட்ட மற்றும் தண்டிக்கப்பட்ட நபர்களை விடுவிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் பரிந்துரைக்கும்போது இலங்கை தமிழ் மக்கள் நீதித்துறையை எவ்வாறு நம்ப முடியும்? இத்தகைய சூழலில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு நீதி வழங்க முடியும்? இந்த நிலைமை நிச்சயமாக நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும்.
Commission For Compensating Political Reprisal And The Future Of Reconciliation
දේශපාලන පලිගැනීම් කොමිසම හා සංහිදියාවේ අනාගතය