அனைவருக்கும் பாதுகாப்பான இன்டர்நெட் (சர்வதேச வலைப்பின்னல்) வசதிக்கான சைபர் பாதுகாப்பு
தில்ஹானி தந்திரி முதலிகே
சர்வதேச இன்டர்நெட் பாதுகாப்பு தினம் (Safer Internet Day) 2021 பெப்ரவரி 09 ஆம் திகதி அதன் 18 ஆவது வருட நிறைவை சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கின்றது. இவ்வாண்டு சர்வதேச இன்டர்நெட் பாதுகாப்பு தினத்தின் தொனிப்பொருள் “சிறப்பான இன்டர் நெட்டை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைவோம்” என்பதாகும். இணையத்தளத்தை விஷேடமாக சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு மிக்கதாக மாற்றியமைப்பதற்காக அதன் பங்களார்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்ற செய்தி உலகம் பூராவும் சர்வதேச வலைப்பின்னலை (இன்டர்நெட்) பயன்படுத்துபவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.
நீங்கள் ஒரு தந்தை, ஆசிரியர், கொள்கை வகுப்பாளர், குழந்தை அல்லது இளைஞர் ஆகிய யாராக இருந்தாலும் இன்டர்நெட் பாவனையை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றியமைக்க வேண்டி இருக்கின்றது. உலகம் முழுவதிலும் 170 நாடுகளில் உள்ள அனைவரும் இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி அறிவூட்டல் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்றைய உலகில் புதிய சர்வசாதாரண வேலைகள் அனைத்திற்கும் இன்டர்நெட் இல்லாமல் முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. எங்களது வீடுகள் மற்றும் எல்லா அலுவலகங்கள் என்ற பாகுபாடு இன்றி கற்றல் மற்றும் வாழ்க்கையை கொண்டு நடத்த இன்டர்நெட் வசதி அவசியமாகின்றது. இருந்தாலும் இந்த இன்டர்நெட் பாவனை வசதியை பயன்படுத்தி பலவிதமான மோசடிகள், ஏமாற்று வித்தைகள், பொய்யான செய்திகள், வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மற்றும் ஒருவரை ஒருவர் அச்சுறுத்தும் அல்லது மோசடி வலையில் விழச் செய்யும் அனைத்துவிதமான மோசமான செயற்பாடுகளும் தினமும் நடைபெற்று வருகின்றன. குழந்தைகள், இளைஞர்கள், திருமணம் முடிக்காத பெண்கள் போன்றவர்கள் இத்தகைய இணையவழி மோசடி குற்றச் செயல்களால் அதிகமாக பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். சர்வதேச சிறுவர் நலன்புரி அமைப்பு, மற்றும் சிறுவர் பாதுகாப்பு என்ற சேவ் த சில்ரன் அமைப்பு ஆகிய மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் சிறுவர்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமான 45 மில்லியன் (4 கோடி 50 இலட்சம்) வீடியோக்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட 164 கம்பனிகள் மூலம் தயாரிக்கப்பட்டு இணையத்தளங்கள் வாயிலாக புழக்கத்திற்கு விடப்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டிருக்கின்றன. போலியான அடையாளங்கள் ஊடாக தயாரிக்கப்பட்ட பெயர்கள் மற்றும் மோசடிப் பேர்வழிகளின் நிர்ப்பந்தங்கள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகளால் வயது வந்தவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறான இணைய வழியிலான குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் யுவதிகள் பலர் வாழ்க்கைக்கு முகம் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் ஏராளம் இடம்பெற்றுள்ளன.
சைபர் வன்முறைகள் அமைதியான முறையில் நடைபெற்று வருவதற்கான காரணம் யாரையும் அறியாத விதமாக பௌதீக பாதிப்பை வெளிக்காட்டாத மற்றும் பாதிப்பின் தாக்கம் உடனடியாக பகிரங்கமாக காண முடியாததாக இருந்து வருவதானால் ஆகும்.
2021 ஆம் ஆண்டின் இன்டர்நெட் பாதுகாப்பு தினத்தை இலங்கையில் நினைவுபடுத்தும் வகையில் புத்தாக்க துறைகளில் ஆர்வம் கொண்ட இளம் தலைமுறையினர் ஐ.நா. அமைப்பின் அபிவிருத்தி திட்ட (UNDP) நடவடிக்கைக்கு ஒத்துழைக்கும் வகையில் அது தொடர்பான பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து சைபர் மோசடிகள் மற்றும் வன்முறைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதோடு அதுபற்றிய தகவல்களை எல்லா கோணங்களுக்கும் வழங்க வேண்டும் என்று சைபர் வோடர் மற்றும் ஹக்கர் டேவ் ஆகியோர் கோரிக்கை விடுத்தள்ளனர்.
புதிதாக அறிமுகமாகி இருக்கின்ற பாதுகாப்பு வழிமுறையானது (app) அவசர நிலைமைகளில் உதவும் வகையில் பொலீஸ், வைத்தியசாலை, சைபர் மோசடிகளால் அல்லது வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை (NCPA) பெண்களின் தேவை அமைப்பு (WIN) மற்றும் அடிமட்ட நிலையிலான நம்பிக்கை மற்றும் சிறுவர் பாதுகாப்பு போன்ற நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வழங்கக் கூடியதாக இருக்கின்றது. இத்தகைய நிறுவனங்களானது சைபர் குற்றச் செயல்களை தடுப்பதில் கடுமையாக பாடுபட்டு வரும் அமைப்புக்கள் என்பதை பலரும் அறிவார்கள். இந்த சொப்ட்வெயாரின் மற்றுமொரு நன்மையாக அமைவது சைபர் வன்முறைகள் மற்றும் குற்றச் செயல்கள் பற்றிய தகவல்களை உள்ளடக்கி களஞ்சியமாக கொண்ட நூல்நிலையம் போன்று ஒன்லைன் பாதுகாப்புக்கு உதவி வருகின்றமையாகும். யாராவது இவ்வாறான இன்டர்நெட் மைய குற்றச் செயல்களால் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும் பயனுடையதாக அமைகின்றது. அத்தோடு குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் எவ்வளவு நேரம் சமூக ஊடகங்களிலும் எந்தெந்த திசைகளில் இணையத்தளங்களுக்குள் பிரவேசித்து நேரத்தை செலவிட்டார்கள் போன்ற விடயங்களை கண்காணிக்கவும் பெற்றோர்களுக்கு வழிகாட்டுவதாகவும் இந்த அப்ஸ் அமைந்திருக்கின்றது. இந்த செலவில்லாத கண்காணிப்பு வழிமுறையானது சிறுவர்கள் மற்றும் உங்கள் குழந்தைகளை பாதுகாப்பதற்கான வரப்பிரசாதமாகும். அத்துடன் இந்த அப்ஸ் குழந்தைகளை கவரும் வகையிலான (கேம்ஸ்) விளையாட்டுக்கள் மூலம் எவ்வாறாக சைபர் வன்முறைகள், மோசடிகள், குற்றச் செயல்கள் இடம் பெறுகின்றன, அவற்றில் இருந்து எவ்வாறு பாதுகாப்பை பெறுவது போன்ற நன்மையான விடயங்களையும் கொண்டிருக்கின்றது.
ஐ.நா. அபிவிருத்தி திட்ட பிரிவானது 2019 ஆம் ஆண்டு முதல் சைபர் வன்முறைகள், பெண்கள் சிறுவர்களை அடிப்படையாக கொண்ட பாலியல் வன்முறைகள் போன்ற குற்றச் செயல்களை எவ்வாறு தடுப்பது என்ற முயற்சியின் அடிப்படையில் மேற்கொண்ட சவாலுக்கு பதிலாக இந்த பங்களிப்பு வெற்றியாக அமைகின்றது. சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் ஆலோசனைக்கமையாவக ஐ.நா. அபிவிருத்தி திட்ட பிரிவு பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. தற்போதைய நிலையில் நாளுக்கு நாள் இணைய வழிமுறை பாவனை அதிகரித்து வருகின்ற நிலையில் பாதுகாப்பு செயற்பாடுகளும் பலமடைய வேண்டும். இத்தகைய வன்முறைகளில் இளம் தலைமுறையினர் சிக்காத வகையில் மாற்றமானதும் முன்னேற்ற கரமானதுமான வழிகள் காட்டப்பட வேண்டும். சைபர் பாதுகாப்புக்கான கையடக்க தொலைபேசி அப்ஸ்களானது கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக ஸூம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு வசதியாக வடிவமை க்கப்பட்டிருக்கின்றது. அதன் தொடர் https://play.google.com/store/apps/details?id];uP co.cyberwarders.cybercare .