கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வைரசாக மாறி வரும் பொய் செய்திகளுக்கு இலங்கை முடிவு கட்ட வேண்டும்

“அவர் பாதிக்கப்பட்ட ஒருவரின் நலனுக்காக பேசுகின்றார். அவர்களது முகமும் வாதிடலும் நீண்ட காலம் நீடித்து நிலைக்காத அரசியல் நடத்தையின் விளைவாகும்” 2000 வருடங்களுக்கு முன்னர் பொய்ச் செய்திகைள ஒழித்துக்கட்ட வேண்டும் என்று சிசேரோ”  

ஊடகவியலில் கூறப்படும் ஒரு கதைதான் நாய்கள் நாய்களை கடிப்பதில்லை என்ற விடயம். இதன் பொருள் ஊடகவியலாளர்கள் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதில்லை. ஆனாலும் நாய்கள் எமக்குள்ளேயே குறைக்கின்றனவா? நாம் அதனை தொடர விடுவதா அல்லது எங்களை நாங்களே பாதுகாத்துக்கொள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதா? 

இலங்கையில் முதலாவது நிகழ்வை நாம் காணக்கூடியதாக இருப்பது கவலையாக இருக்கின்றது. எங்களுக்கிடையில் உலா வருகின்ற மோசமான நடத்தை செயற்பாடுகளை அடையாளம் கண்டு அதனை ஒழித்துக்கட்ட நாங்கள் முன்வருவது அவசியமாகின்றது. ஊடகவியலின் அடிப்படை பங்களிப்பாக இந்த வேலை அமைகின்றது. ஊடகவியலை பயன்படுத்தி உண்மைக்கு புறம்பானதும் ஆதரமற்றதுமான பொய் செய்திகளை பரப்புவதானது இன அடிப்படையிலான வெறுப்பை தூண்டுவதாக இருக்கின்றது. இது சமூகத்தில பாதகமான விளைவை கொண்டு வருகின்றது. சில சந்தர்பப்ங்களில் இலங்கையின் முன்னணி பத்திரிகைகளில் கூட அத்தகைய செய்திகள் முன்பக்க செய்திகளாக பிரசுரமாவது கவலை தருகின்றது. முஸ்லிம் டாக்டர் ஒருவர் சிங்கள பெண்களை மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் என்ற செய்தி அத்தகைய நோக்கத்தில் பிரசுரிக்கப்பட்டதை நாம் அறிவோம்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை அடிப்படையாக வைத்து இந்த செய்தியானது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏனைய சமூகத்தினரை தூண்டுவதற்காக திட்டமிடப்பட்ட அடிப்படையில் ஊடக நோக்கத்தை பயன்படுத்தி பிரசுரிக்கப்பட்ட ஆதாரமற்றதும் பொய்யானதுமான செய்திகளாகும். அந்த செய்தி பிரசுரமானது ஊடக துறையினரின் அதிருப்திக்கு காரணமாக அமைந்ததோடு ஒரு தரப்பினரால் கண்டிக்கப்பட்டது. சிவில் சமூக பிரதிநிதிகளும் சுதந்திர ஊடக அமைப்பினரும் இத்தகைய செய்தி பிரசுரத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். 

இலங்கையின் ஊடகத்துறை வரலாற்றில் இருண்ட யுகத்தில் நாம் காணக்கூடிய பொதுப்படையான விடயமாக அமைவது பொய்யானதும் ஆதரமற்றதுமான தகவல்களின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற செய்திகள் தொடர்பாக முறையான பரிசீலனை மற்றும் மூலாதாரத்தை பரீட்சித்து அவற்றை ஏற்றுக் கொள்ளும் நிலை வளர வேண்டும் என்பதாகும்.

அதே போன்று ஒரு தொழில்நுட்ப முறையாக இலங்கை ஏற்படுத்தி இருக்கின்ற மைக்ரோ சொப்ட் வலைப் பின்னலானது காலத்தின் தேவை கருதியதாகும். அதன் மூலம் இத்தகைய போலி செய்திகளை அடையாளம் கண்டு உடனுக்குடன் வாசகர்களுக்கு அறிவிக்கக்கூடிய திட்டம் பயனுள்ளதாகும். 

அதனால் எங்களுக்கு அவசியமாக தேவைப்படுவது இத்தகைய போலியான ஆதாரமற்ற செய்திகள் வாயிலாக ஏற்படும் பாதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts