வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

வெறுப்பூட்டும் பேச்சையும் புனைவுச் செய்தியையும் கையாளுதல்.

‘Viral” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு வேறு வகையில் எவ்விதமான கருத்து இருந்தாலும் இன்றைய சமூகத்தில் இது பலவிதமான தாக்கங்களை உண்டு பண்ணுகிறது. 21ம் நூற்றாண்டின்  தொழில்நுட்ப அறிவியல் காலப்பகுதியில் நாம் எல்லோரும் கண்ணாடி வீடுகளில் வசிக்கிறோம். இங்கு நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வழியில் “இணையவழி”யுடனும் “பிரபலமான”வற்றுடனும் தொடர்புபட்டிருக்கிறோம்.  அவ்வாறான சமூகம் ஒன்றில் வெறுப்புப் பேச்சுகளும் புனைவுச் செய்திகளும் நடப்புக் காலத்தில்  கடுந்தொல்லையாகிவிட்டதுடன் பல வேளைகளில் உயிர்ப் பலியும் எடுக்கின்றன. இந்தச் செயல்களுக்குப் பற்சக்கரங்களைப் போல் பின்னாலிருந்து இயக்குபவர்கள் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டியதும் இப் பிரச்சனைகளைத் திறமையாகக் கையாளும் வழிமுறைகளை கண்டுபிடிப்பதும் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது.

 

புனைவுச் செய்தி மற்றும் / அல்லது வெறுப்பூட்டும் பேச்சு இவற்றில் மூன்று தரப்பினர் உண்டு.  உருவாக்குவோர், பலியாவோர் / ஆட்படுவோர் மற்றும் உள் நோக்கத்துடன் ஒருவர் செய்தாலோ அன்றியோ வெறுப்பூட்டும் பேச்சும் புனைவுச் செய்தியும், அவைகளில் உள்ளவற்றுடன் ஒத்து இசையும் அல்லது எதிரான, கேட்போர் மத்தியில் வலம்வரும். இந்த மூன்று பகுதிகளும் முக்கோண வடிவில் வரும்போது அவர்கள் தீங்கான உள்ளடக்கத்தினை உருவாக்குவர். விமர்சனங்கள் சதுரக் குறியீட்டுடன் பெருக்கெடுத்து வருவதுடன் ஒரு நொடிப் பொழுதுக்குள் 360 பாகையில் மாற்றமடையும் 

 

நாங்கள் கண்ணாடி வீடுகளில் வசிப்பவர்களாயிருப்பினும் இது பெயர் மறைந்த நிலையும் மாறிமாறத் தோன்றும் ஆளுமைகளும் உருவாகும் சாத்தியத்தை அனுமதிக்கிறது.  அநேக மக்கள் மத்தியில் வெறுப்பூட்டும் பேச்சுகளும் புனைவுச் செய்திகளும் பரவுவதற்கு இதுவே பிரதான காரணமாகிறது. மக்கள் தங்கள் உண்மையான உருவத்தில் இருந்து கொண்டு கூறமுடியாதவற்றை இணைய வழி ஆள்மாறாட்டங்களுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டு கூறுகிறார்கள். மில்லியன் கணக்கான “போலி” ஆளுமைகள் இருக்கும் சமூக ஊடக மேடைகளின் மூலமே வெறுப்பூட்டும் பேச்சுகளும் புனைவுச் செய்திகளும் பிரதானமாகப் பரவுகின்றன. மேலும் சமூக ஊடக மேடைகள் வெறுப்பூட்டும் பேச்சுகளையும் புனைவுச் செய்திகளையும் கையாள்வதற்கு மட்டுப்படுத்தப்பட்ட வசதிகள் உடையனவாய் இருக்கின்றன.  ஆகவே குதிரைகள் வெளியே சென்றபின்னர் லாயத்தைப் பூட்டுவது எவ்வாறு என யோசிப்பதுபோல சம்பவங்கள் நடந்த பின்னர் அழுத்தங்களைப் பிரயோகிப்பதிலும் பார்க்கத் தடுப்பு நடவடிக்கைகள்தான் சிறந்தவை என்பது தெளிவாகத் தெரிகிறது.

 

வெறுப்பூட்டும் பேச்சுகளையும் புனைவுச் செய்திகளையும் கையாள்வதற்கு சமூக-உளவியல் ரீதியான மற்றும் சட்ட ரீதியான முயற்சி தேவைப்படுகிறது.  இந்த விடயத்தில் சுய விழிப்புணர்வையும் புறம் தள்ளிவிட முடியாது. இணையவழி மேடைகளில், ஒருவர் எதையாவது பதிவேற்றஞ் செய்வது, பகிர்வது அல்லது கருத்து வெளியிடுவது அவருக்குள்ள சுதந்திரமாக இருக்கும் பொழுது அவன் / அவள் எதையாவது வெளியிடும் பொழுது தான் எந்த ஸ்தானத்திலிருந்து வெளியிட்டார் என்பது பற்றிய எச்சரிக்கையும் புரிதலும் அவசியமாகும். இறுதியில் ஒருவருக்குப் எதிர்ப்பாற்றலற்ற மற்றும் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது. குறிப்பாக வெறுப்பூட்டும் பேச்சு விடயத்தில் ஒரு எளிமையான கருத்துரை எவ்வளவு விரைவாகச் சுழன்று சுழன்று வருகிறதென்பதைப் பார்க்கும்போது ஒரு சிறிய அளவு சுயகட்டுப்பாடும் விழிப்புணர்வும் தேவையற்ற சங்கடங்களைத் தவிர்ப்பதற்கு உதவிபுரியும்.

 

நீங்கள் வெறுப்பூட்டும் பேச்சொன்று வந்துசேரும் தரப்பினராயிருப்பின் உங்களுக்கு உளவியல் வலுவும் ஆதரவும் மிகவும் முக்கியம்.  கருத்துரை வெளியிடும் மக்களிற் பாதிக்கும் மேலானவர்கள் எதுவித உறவுகளுமற்ற அந்நியர்கள் என்பதை ஒருவர் விளங்கிக் கொள்ள வேண்டும்.  அத்துடன் வெறுப்பூட்டும் பேச்சிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகைகள் உள்ளன என்பதையும் ஒருவர் அறிந்திருக்க வேண்டும்.  நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கருத்துரைப் பகுதியை மூடிவிடலாம். அத்துடன் பெரும்பாலான  சூழ்நிலைகளில் உங்கள் மனநிம்மதிக்குப் பாதகம் விளைவிக்கும் உணர்வுபூர்வமான உள்ளடக்கம் பற்றிப் புகார் அளிக்கலாம் / நிறுத்தச் செய்யலாம்;. மிகவும் முக்கியமான விடயம் யாதெனில் வெறுப்பேற்றும்; பேச்சு சம்பந்தமான விமர்சனம் பற்றி நீஙகள் அதிகாரத்துடன் பேசும்போது அல்லது விடையளிக்கும்போது நிலைமை மோசமடையலாம்.; ஆதலால் இதனைச் செய்வதெனத் தீர்மானிக்கும் பொழுது மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.

 

செய்தியின் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு பிரயோகிக்ககூடிய மென்பொருட்கள் பல உள்ளன. உதாரணத்திற்கு ஸ்னொப்ஸ், IFCN; ஏனையவைகளும்.

 

நீங்கள் எப்பொழுதும் “இது எங்கிருந்து தோற்றம் பெற்றது’? என்ற ஏற்புடைய கேள்வியைக் கேட்க முடியும். உங்களால் அதன் பிறப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியாதிருந்தால் அது பொய்யானதாக இருக்கக் கூடும். அதிகாரபூர்வமான செய்தித் தளங்களிலிருந்து தகவல்களை உறுதிப்படுத்த முடியும்.  முடியுமாக இருந்தால் குறிப்பிட்ட செய்தியைப் பொய்யென இலேசான முத்திரை குத்துவதன் மூலமும் அது பொய்யென நீங்கள் எவ்வாறு கண்டுபிடித்தீர்கள் என்பதன் மூலமும் விழிப்புணர்வைப் பரப்புவது எப்பொழுதும் நல்லது.  மோசமான விடயங்களாயின் நீங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும். எதிர்த்து நிற்றல் பெறுமதியானதாயிருக்கும். ஏனெனில் புனைவுச் செய்திகளுடன் இணக்கமற்று இருப்பது இவ்வாறான உள்ளடக்கங்களை அனுப்புபவர்களை ஆழ்ந்து சிந்தித்து நடக்கும்படி கட்டாயப்படுத்தும். விழிப்புடனும் விவேகத்துடனும் நடத்தல் மூலம் வெறுப்பூட்டும் பேச்சையும் புனைவுச் செய்தியையும் வினைத்திறனுடன் எதிர்த்து நிற்கமுடியும்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts