வீட்டு வன்முறையின் தன்மையையும் அதைத் தடுப்பதற்கான சட்டத்தையும் அடையாளம் காண்போம்
மனித சமுதாயத்தின் நிலைபேறினை உறுதிப்படுத்தும் மிக முக்கியமான காரணி குடும்பமாகும். வீட்டு உறுப்பினர்களிடையே அமைதியும் சகவாழ்வும் இல்லை என்றால், அது ஒரு வீடு எனும் புனைப்பெயர் கொண்டதாக மட்டுமே இருக்கும். சமூகத்தின் அடிப்படை கட்டுமானத் தொகுதியான குடும்ப உறுப்பினர்கள் ஒரு பிரிவாக செயல்பட்டாலும், அவர்கள் உளவியல் மற்றும் பௌதீகக் காரணங்களினடிப்படையில் வன்முறையை நாடுகிறார்கள். வீட்டு வன்முறை என்பது உடல் ரீதியான துஷ்பிரயோகம் மட்டுமல்ல. ஒரு மனைவி அல்லது குடும்ப உறுப்பினர் மீது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் பெறுவதே இதன் நோக்கம். பொதுவாக, வீட்டு வன்முறையைப் பற்றி மக்கள் சிந்திக்கும் போது, உடல் ரீதியான தாக்குதலால் ஏற்படும் வன்முறை வீட்டு வன்முறை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் வீட்டு வன்முறை என்பது உடல், பாலியல், உணர்ச்சி, பொருளாதார அல்லது உளவியல் ரீதியாக மற்றொரு நபரை பாதிக்கும் செயற்பாடுகளாகும். இது வேறொரு வகையிலான துஷ்பிரயோகமொன்றாவதுடன் பல வகையான துஷ்பிரயோக நடத்தைகள் உள்ளன. அவையாவன,
கட்டுப்பாடு
துன்புறுத்தல் – உடல் ரீதியான துன்புறுத்தல்
பாலியல் துஷ்பிரயோகம்
உணர்வு ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல்
வாய்மொழி ரீதியான துன்புறுத்தல் பலாத்காரம், அச்சுறுத்தல்கள் மற்றும் குற்றச்சாட்டுகள்
ஆண் சலுகைகளைப் பயன்படுத்துதல்
பொருளாதார துஷ்பிரயோகம்
திருமணமான தம்பதியர் ஒன்றாக வாழ்வது அல்லது உலாவச் செல்லல் உள்ளடங்கலான பரப்பெல்லையினுள் அனைத்து சமூக பொருளாதார பின்னணியையும் கல்வி மட்டங்களையும் கொண்ட நபர்களையும் வன்முறை பாதிக்கிறது. வயது, இனம், பாலினம், பாலியல் நோக்குநிலை, நம்பிக்கை அல்லது வகுப்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் வீட்டு வன்முறை யாரையும் பாதிக்கலாம்.
தேசிய புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் தமக்கு நெருக்கமான துணைவரால் ஒரு நிமிடத்திற்கு சுமார் இருபது பேர் உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர். இது ஆண்டுக்கு 10 மில்லியன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடக்கிறது. 4 பெண்களில் ஒருவர் மற்றும் 9 ஆண்களில் ஒருவர் கடுமையான உடல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம், அதிர்ச்சி, மிரட்டல் மற்றும் பிந்தைய மனஉளைச்சல் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
https://assets.speakcdn.com/assets/2497/domestic_violence-2020080709350855.pdf?1596828650457
2019 ஆம் ஆண்டு தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, 15 வயதுக்குட்பட்ட திருமணமாகாத சிறுமிகளில் 7.2% மற்றும் திருமணமான பெண்களில் 17.4% பெண்கள் வீட்டு வன்முறைக்கு ஆளாகின்றனர்.
https://reliefweb.int/report/sri-lanka/women-s-wellbeing-survey-2019-findings-sri-lankas-first-dedicated-national-survey இலங்கையில் ஊரடங்கு உத்தரவின் போது வீட்டு வன்முறை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவங்களின் எண்ணிக்கை 33% இனால் அதிகரித்துள்ளது என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்தார்.
2005 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க, வீட்டு வன்முறைத் தடுப்புச் சட்டம் வீட்டு வன்முறையால் பாதிக்கப்படுபவர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பை வழங்குகிறது. உள்நாட்டு வன்முறை தொடர்பாக பெண்களின் உரிமைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பரந்த பகுதியை இந்த சட்டம் உள்ளடக்கியுள்ளது. இந்த சட்டம் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை இரண்டு வழிகளில் பாதுகாக்கிறது. அவையாவன,
இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவு
பாதுகாப்பு உத்தரவு
இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவு
இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவு ஒரு தற்காலிக ஏற்பாடாகும். இந்த உத்தரவு மூலம், வன்முறையைப் பிரயோகித்தவர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு மேலும் அவ்வாறு செய்வதற்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு உத்தரவு
வன்முறை நடத்தையால் பாதிக்கப்பட்டவர் அளித்த முறைப்பாட்டினை முழுமையாக விசாரணை செய்த பின்னர், வன்முறையைப் பிரயோகித்த நபரிடமிருந்து பாதிக்கப்பட்ட நபருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென நீதிமன்றம் முடிவு செய்தால், பாதுகாப்பு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவு அல்லது பாதுகாப்பு உத்தரவின் மீறல்கள் பற்றி உடனடியாக பொலிஸிற்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதுடன் உத்தரவு மீறப்பட்டிருக்குமாயின் குற்றவாளிக்கு ஒரு லட்சம் ரூபாயை விஞ்சாத தண்டப்பணம் அல்லது ஒரு வருடகால சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. வீட்டு வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதுபோன்ற வழக்கு விசாரணைகள் குறித்த தகவல்களை அச்சிட்டு வெளியிடுவதை தடைசெய்கிறது. பாதிக்கப்பட்டவர் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தியவருக்கிடையிலான தனிப்பட்ட தொடர்பு காரணமாக எழும் வீட்டில், வீட்டுச் சூழலில் அல்லது வீட்டிற்கு வெளியே மேற்கொள்ளப்படும் தண்டனைச் சட்டக் கோவை குற்றங்களாகிய படுகொலை, தற்கொலைக்கு உந்துதல், கருக்கலைப்பு, தாக்குதல், காயத்தை ஏற்படுத்தல், பாலினரீதியான குற்றங்கள் மற்றும் ஆவேசமாக வசைபாடல் உள்ளடங்கலான மேலும் பல குற்றங்கள் இந்தச் சட்டத்தில் வன்முறை நடவடிக்கைகள் என வரையறுக்கப்பட்டுள்ளன.
உடல், பாலியல் மற்றும் உளவியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களும் இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வன்முறை நடவடிக்கைகளில் அடங்கும். அந்த சட்டத்தின் கீழ் பெண்கள், ஆண்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் அதுபோன்றே, சிறுவர்கள் மற்றும் எந்தவொரு பெரியவர்களுக்கும் நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளலாம். வீட்டு வன்முறைச் சம்பவங்கள் நடக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 1923 மற்றும் 1929 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணைக்குழு கூறுகிறது.
வீட்டு வன்முறை ஒரு பெண்ணின் உடல் மற்றும் மன நலனுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. மேலும், இந்த கொடூரமான கொடுமைப்படுத்துதலைக் காணும் பிள்ளை தனிமைப்படுத்தப்படலாம் அல்லது தனது சகாக்கள் மற்றும் சமுதாயத்தை நோக்கி வன்முறையில் நடந்து கொள்ளும் போக்கைக் கொண்டிருக்கலாம். சிறிய பிள்ளை கூட சிறு வயதிலிருந்தே தனது உடன்பிறப்புகளுடன் வன்முறைரீதியாக நடந்துகொள்ள உந்தப்படுவார். எனவே, வீட்டு வன்முறை கடுமையான சமூக பேரழிவுகளுக்கு வழிவகுப்பதற்குக் காரணமாக அமைகின்றது. பல சந்தர்ப்பங்களில், இந்த வன்முறை நடவடிக்கைகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பெண்களின் உரிமைகளையும் சிறுவர்களின் உரிமைகளையும் கடுமையாக மீறியுள்ளது.
வீட்டில் அமைதி மற்றும் சகவாழ்வை முகாமை செய்வது அதன் அனைத்து உறுப்பினர்களின் கூட்டுப் பொறுப்பாவதுடன்; வீட்டினுள் அமைதி மற்றும் சகவாழ்வை நிர்வகிப்பதற்கான முதன்மைப் பொறுப்பு பெற்றோர்களிடமும் துணைப்பொறுப்பு பிள்ளைகளிடமும் இருப்பதால் அவர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இலங்கையில் வீட்டினுள் அமைதி மற்றும் சகவாழ்வு உள்நாட்டுக் கலாசாரத்தினால் எதிர்பார்க்கப்படும் ஒரு முக்கிய அம்சமாகும்.