வன்முறைகளுக்குள் வாழும் குழந்தைகள் சமூகத்திற்கு சொல்லும் சில செய்திகள்!
சம்பத் தேசப்பிரிய
கொவிட் -19 காரணமாக இளைய தலைமுறை இன்று எதிர்கொள்ளும் நெருக்கடியைப் பற்றி சமூகம் விவாதிக்கத் தொடங்கியிருக்கின்றது. சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் மட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டம், பாடசாலைகள் பூட்டப்பட்ட நிலை மற்றும் இணையவழிக் கல்வியால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவை உள்ளடங்கும். பெருந்தொற்றுக்களின் போது சிறுவர் துஷ்பிரயோகம் 40% சதவிகிதத்தால் அதிகரித்துள்ளது என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் 20% சதவிகித சிறுவர்களும், 10% சதவிகித சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். சிறுவர் துஷ்பிரயோகம் என்பது பாலியல் சுரண்டல் மட்டுமா? இல்லை. குழந்தைகளின் உள துஷ்பிரயோகம் குறித்து பொறுப்பான உத்தியோகத்தர்கள் கணக்கெடுப்புகளை நடத்துவதாகத் தெரியவில்லை. கொவிட் -19 கட்டுப்பாட்டுப் பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மற்றும் தெற்கிலுள்ள நகரங்களில் வெளிச்சமான பகல் நேரத்தில் விளக்குகள் ஒளிர இராணுவ மோட்டார் சைக்கிள்களில் படையினர் ரோந்து செல்கின்றனர். தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் நபர்கள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த எல்லா நிகழ்வுகளாலும் சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட செய்தி என்ன? ஒரு தமிழ் அல்லது முஸ்லீம் சிறுவன் எழுப்பிய கேள்விகளுக்கு பெற்றோர் அளிக்கும் பதில்கள் என்னவாக இருக்கும்?
சிங்கள பௌத்த, தமிழ் ,முஸ்லீம் பாடசாலைகளில் சில இனவெறியான ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு தீவிரப்போக்கான கருத்துக்களை போதிக்கின்றார்கள் என்பது இரகசியமானதல்ல. பாதுகாப்புப் படையினர் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளை அடக்குவதில் ஈடுபட்டுள்ளனர். தென்னிலங்கையில் சில தனிப்பட்ட மோதல்கள் சமுதாய மோதல்கள் என்று விபரிக்கப்பட்டன, முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். முஸ்லீம் தீவிரவாதிகள் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்களின் மூலமாக நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றதுடன் காயப்படுத்தினர். இந்த சம்பவங்களால் சிறுவர்கள் உடல் மற்றும் உள உளைச்சலுக்கு ஆளானார்கள். இருப்பினும், அவை பிரதான உரையாடலில் இருக்கவில்லை. இந்த குழப்பமான சூழ்நிலைக்கு மத்தியில் வளர்க்கப்படும் சிறுவர்கள் நாளைய குடிமக்களாக இருப்பார்கள். அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? இதைப் பற்றி நாம் கலந்துரையாடும்போது, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் சிறுவர்களின் உரிமைகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சமவாயம் (UNCRC) ஒவ்வொரு குழந்தையின் இனம், மதம் அல்லது திறன்களைப் பொருட்படுத்தாமல் அவர்களின் சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளை வகுக்கிறது. குழந்தைக்கு சுதந்திரத்திற்காக குரல் கொடுக்க உரிமை உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும் பிறப்பிலிருந்து ஒரு பெயரும் தேசிய அடையாளமும் உண்டு. பெற்றோரை அறிந்து கொள்வதற்கும் அவர்களிடமிருந்து அன்பைப் பெறுவதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. அதை யாராவது தடுத்தால், எதிர்ப்பதற்கு குழந்தைக்கு உரிமை உண்டு. ஒரு கருத்தை வெளிப்படுதுவதற்கான குழந்தையின் உரிமையை நாம் மதிக்க வேண்டும். சிறுபான்மை சமூகங்களின் குழந்தைகளுக்கு அவர்களின் கலாச்சாரம், மதம் மற்றும் மொழிக்கான உரிமைகள் உள்ளன. மோதல்களின் போது, யுத்தம் மற்றும் மோதல்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு குழந்தைக்கு உரிமை உண்டு. குழந்தைகளை இராணுவச் சேவையில் ஈடுபடுத்துவதும் சட்டத்திற்கு எதிரானது. குழந்தைகளுக்கு அரச பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு சித்திரவதை இல்லாத மற்றும் பராமரிப்புள்ள சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான ஐ.நா. சமவாயத்தின் படி, குழந்தைக்கு ஏற்படும் உளவியல் தாக்கத்தை குறைப்பதற்கு அனைத்து நாடுகளும் பொறுப்பாகும். யுனிசெப் பதிவுகளின்படி, போரினால் பாதிக்கப்பட்டவர்களில் 80% க்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.
வடக்கு மற்றும் தெற்கின் சிறுவர்கள் 30 ஆண்டுகால யுத்தத்தால் ஏற்பட்ட விரக்திக்கு ஆளானார்கள், இது நடத்தை தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது. மோதல்கள் ஏற்படும் நாடுகளில் உள்ள சிறுவர்களும் உளநல அபாயங்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலைமைகளை யாரும் கணக்கெடுத்து மதிப்பீடு செய்வதாக தெரியவில்லை. பிரதான ஊடகங்கள் மேலும் பரவச்செய்யும் சிங்கள இனவெறி மற்றும் மத தீவிரவாதமும் சிறுவர்களை மேலும் பாதிக்கின்றன. ஊடகம், சமூகம் மற்றும் பெற்றோர்களால் எதிர்காலத்திற்காக உருவாக்கப்படும் குழந்தை வெறுப்பு நிறைந்த ஒரு குழந்தை அத்துடன் அது, நல்லிணக்கத்தின் மத்தியில் வளர்க்கப்பட்ட ஒரு நபரல்ல.
ருவாண்டா, மொசாம்பிக் மற்றும் கம்பூசியா போன்ற மோதல்களில் உள்ள நாடுகளிலிருந்தான அறிக்கைகளின்படி, கொடூரங்களுக்கு ஆளான குழந்தைகள் பிந்திய மனஉளைச்சல் சீர்கேட்டிற்கு (PTSD) ஆளாகியிருப்பது இருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. இலங்கை குழந்தைகளும் விரக்தியின் அறிகுறிகளைக் காட்டுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். 1983 ஆம் ஆண்டில் வன்முறையை எதிர்கொண்ட சில குழந்தைகள் தற்போது பெரியவர்களாக வெளிநாடுகளில் வாழ்கின்றன. தாங்கள் இன்னமும் பயத்தால் பாதிக்கப்படுகிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
வன்முறைக்கு ஆளான சிறுவர்கள் கற்றல் பலவீனங்களைக் காட்டியுள்ளனர். மோதல் பிராந்தியங்களில் வாழ்ந்த சிறுவர்கள் படுக்கையில் சிறுநீர் கழித்தல், விரல்களை சூப்புதல், இருள் பற்றிய பயம் போன்ற அறிகுறிகளைக் காட்டியுள்ளனர். முன்னாள் குழந்தைப் போர்வீரர்கள் கோபம், தற்கொலைக்கான போக்கு, தனிமைப்படுத்தப்படுவதற்கான பயம் போன்றவற்றைக் காட்டியுள்ளனர். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் குழந்தைகள் மனச்சோர்வின் அறிகுறிகளைக் காட்டியுள்ளதுடன், அவர்களில் சிலர் பெரியவர்களானதும் போதைக்கு அடிமையாகியுள்ளனர், என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. இவை அனைத்தும் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையை உருவாக்குவதற்கு, இனம் மற்றும் மதத்தின் அடிப்படையிலான அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் விடுபட்ட ஒரு சமூக முன்னிலை நமக்குத் தேவை என்று இவை அனைத்தும் ஆலோசனை வழங்குகின்றன.
වාර්ගික ප්රචන්ඩත්වයෙන් බැට කන ළමා මනස
Child Mind Affected By Communal Violence